10/03/2009

அகந்தைய அடக்கி, நீ மனுசனா இரு போ!

முக்கணர்தண் டலைநாட்டிற் கற்புடைமங்
கையர்மகி மைமொழியப் போமோ
ஒக்குமெரி குளிரவைத்தாள் ஒருத்திவில்வே
டனைஎரித்தாள் ஒருத்தி மூவர்
பக்கமுற அமுதளித்தாள் ஒருத்திஎழு
பரிதடுத்தாள் ஒரத்தி பண்டு
கொக்கெனவே நினைத்தனையோ கொங்கணவா
என்றொருத்தி கூறி னாளே!

இந்தப் பாடலை, தண்டலையார் சதகம் எனும் செய்யுள் தொகையில படிக்காசுப் புலவர் பாடியிருக்கார். இதை, பழமொழி விளக்கம் என்றும் சொல்வார்கள். சரி, புலவர் இந்தச் செய்யுளில் என்ன சொல்லி இருக்கிறார் எனக் காண்போம்!

கற்புடைய மங்கையர் பெருமையை விளக்கும் பாடல்தான் இது. கடத்திச் சென்ற அனுமனை நெருப்பில் இட இருப்பது தெரிந்ததும், சீதா தேவியின் கற்பின் மாண்புணர்ந்து அக்னி பகவான் அனுமனைச் சுடாது எட்ட நின்றான்.

காட்டில் நளனை விட்டுப் பிரிந்த தமயந்தி, பிரிந்து தவிக்கையில் வேடனொருவன் அவளைக் கற்பழிக்க நெருங்கியதுதான் தாமதம், கற்புக் கண் கொண்டு உற்று நோக்கியதில் அவன் எரிந்து கீழே விழுந்தான்.

அனுசூயையினுடைய கற்பின் மாண்பைச் சோதிக்க விரும்பிய முக்கடவுள்களான, பிரம்மா, திருமால் மற்றும் சிவனும் அவளிடத்தே துறவி வேடத்தில் சென்று, தமக்கு ஆடையின்று வந்து உணவளிக்க வேண்டினர். அவர்கள் மூவரையும் அதிதிகளாக(விருந்தினராக) வரவேற்று, மூவரையும் தன் கற்பினுடைய சக்தியால் சிறு குழந்தைகளாக்கிக் கிடத்தி, பின் ஆடையின்றி வந்து பாலூட்டினாள். பின்னர் அவர்கள், அவளது கற்பின் மாண்பை வியந்து பாராட்டினர்.

நளன் மகளான நளாயினி, தன் கணவனை கூடையில் வைத்து அவன் விரும்பிய தாசி வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கையில், உயரத்தில் இருந்த மாண்டவியரின் காலில் அக்கூடை இடித்துவிட, விடிவதற்குள் நளாயினி தாலி இழப்பாள் எனச் சாபமிட்டாள். நளாயினியோ, விடியவே கூடாது என எண்ணினாள். அவளது கற்பின் மகிமையால், எழுபரி (எழுகதிரவன்)யானது தோன்றவே இல்லை. பின்னர், தேவர்கள் தலையிட்டு மாண்டவியரின் சாபத்தை திரும்பப் பெறச் செய்தனர்.

கொங்கணவன் என்பவன் தவம் புரிந்து கொண்டிருந்தான். நண்பகலிலே ஊருக்குள் சென்று உணவு வாங்கி உண்பது அவன் வழக்கம். அப்படியாக, அவன் ஊருக்குள் சென்று கொண்டிருக்கும் போது மரத்தின் மேலிருந்த கொக்கு ஒன்றின் எச்சம் இவனது மேலே விழவும், இவன் அதை உற்று நோக்கவும், இவனது தவச்சிறப்பால் அந்தக் கொக்கானது எரிந்து விழுந்தது.
இச்செருக்கில் ஊருக்குள் சென்ற இவன், திருவள்ளுவர் வீட்டிலே யாசகம் கேட்கவும், ஆனாலும் வாசுகி அம்மையார் வீட்டில் தன் எம்பெருமானுக்கு உணவளித்த பின்னரே வெளியில் வந்தார். வழமை போலவே கொங்கணன் சினமுற்று இரத்த விழிகளோடு உற்றுப் பார்த்தான். அது கண்ட கற்புடைப் பிராட்டியான வாசுகி அம்மையார், நீர் எம்மை கொக்கென்று நினைத்தனையோ என எள்ளியபடி வினவினார்.

ஆகவே, ”அவரு எங்கண்ணனா, அல்லது கொக்கா?” என வினவும் போது, அண்ணன் ஆனவன் கொக்கைப் போன்ற அற்பன் அல்லாது, வாசுகியின் கற்பைப் போன்ற வலியவன் எனும் உயர்வு நவிற்சி வெளிப்படுகிறது. இதுவே புழக்கத்தில் வல்லமையைக் குறிக்கும் சொலவடையாக ஆகிப் போனது.

“நீ என்ன பெரிய கொக்கா?” என வினவும் போது, நான் உம்மைக் கடிந்து சினந்து உற்று நோக்கக் கூடிய அளவிற்கு, நீர் பெரிய ஆளா? எனும் வினா வெளிப்படுகிறது.

---------------

கொக்கென நினைத்தாயோ கொங்கணவா” எனும் கதை மஹா பாரதத்திலே வன பர்வத்திலே வருகிறது

தர்மர் மார்க்கண்டேய மஹரிஷியிடம் பதிவிரதைகளின் பெருமையைக் குறித்து வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கூறிய கதை. இந்தக் கதையில் வரும் கொக்கை எரித்த அந்தணனின் பெயர் கௌசிகன்.. அவனை கொக்கென நினைத்தாயோ கொங்கணவா என வினவிய இல்லத்தரசி அவரை ஒரு கசாப்புக் கடை வைத்திருப்பவரிடம் அனுப்பிளாள் தர்மம் என்னவென அறிந்து கொள்ள போதனைகள் பெற்.. அந்தக் கசாப்பு கடைக்காரரி பெயர் தர்மவியாதர்

அவர் வாழ்ந்த ஊர் மிதிலாபுரி

நபெ

=========================


The following is different and added here for interest only:

’நீ என்ன பெரிய கொக்கா?’ என்ற கேள்விக்கு மட்டுமே இங்கே இடம்.

‘நாங்க என்ன கொக்கா?’ என்றும் சொல்லிச் சண்டை இடுவதுண்டு. இதில், இக்கதை பொருந்தாது.

இங்கே பொருந்துவது கொக்கு as a symbol of naivety. கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடித்தல் என்பதிலிருந்து வந்தது.

ஒருவன் கொக்கு பிடிக்க போனான. கொக்கு வந்து உடகார்ந்தது. ஆனால் பிடிக்கவில்லை. துணைக்குச் சென்றவன்: ‘ஏன்னே பிடிக்காமல் இருக்கிறீர்கள்? என்று கேடக, இவன், ‘அட மடையா.. கொக்கு பறந்தோடி விடும்’ ‘என்றான்.

பின் எப்படித்தான் பிடிப்பதாக உத்தேசம்?

நான் கொக்கு தலைமேல் வெண்ணெயை வைப்பேன். அஃது உருகி வழிந்து கொக்கின் கண்ணை மறைக்கும். அப்போது, அதை ‘லபக்; கென்று பிடிப்பேன்’ என்றானாம்.

இதில் இருகருத்துகள். ஒன்று இவன் மடையன், மற்றொன்று, கொக்கு ஒரு மடைமையுடைய் பிராணி என்ற மரபு நம்பிக்கை. கொக்கு a symbol of idiocy or naivety. மூட நம்பிக்கை எனலாம். as there is no scientific evidence for that.

என்வே, 'என்னை கொக்கென்று நினத்தாயா?' அஃதாவது, என்னை கொக்கைப்போல ஒரு மடைமையுடைய்வன் என நினத்தாயோ? என்று பொருள்.

--கள்ளபிரான்

====================

”நீர் என்ன பெரிய கொக்கா?”

”சரி, வேண்டாம்; சின்ன கொக்கு!! போதுமா? போதுமா??”

”என்னது?”

”செரிடாப்பா, நான் எந்த கொக்கும் இல்ல! ஆனா, அகந்தைய அடக்கி நீ மனுசனா இரு போ!”

23 comments:

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

பழமையண்ணே, நீங்க எங்க படிச்சீங்க? உங்கள் தமிழாசிரியர்கள் பெருமைக்குரியவர்களே.

அருமையான விளக்கம்.

இதுல ஏதோ உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே :)

கதிர் - ஈரோடு said...

கொக்கை எரித்த கொங்கணவனை வன்மையாக கண்டிக்கிறோம்...

அந்தப்பாவி எரிக்காம இருந்திருந்தா... நேத்து ராத்திரி மாப்புகிட்ட பதில் தெரியாம மாட்டியிருக்க மாட்டேனுல்ல..

அல்லது
கம்னு புடிச்சு கொடுத்திருந்தா ஆசனூர்ல ஜாலியா இருக்கிற ஆரூரன்க்கு ஃபிரை பண்ணிக் கொடுத்திருக்கலாம்

கதிர் - ஈரோடு said...

//செந்தில்
உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே//

செந்தில், நேத்து ராத்திரி வானம்பாடி அண்ண வூட்ல ரொம்ப ஆடினம, மாப்பு இந்த கேள்விய கேட்டு ஃப்யூஸ் புடிங்கிட்டாரு....

அதுதான் மேட்டரு

பிரபாகர் said...

சிறு வயதில் என் தாத்தா சொன்ன கதையினை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. பழைமைபேசியா கொக்கான்னானம்...

பிரபாகர்.

பிரபாகர் said...

//கொக்கை எரித்த கொங்கணவனை வன்மையாக கண்டிக்கிறோம்...

அந்தப்பாவி எரிக்காம இருந்திருந்தா... நேத்து ராத்திரி மாப்புகிட்ட பதில் தெரியாம மாட்டியிருக்க மாட்டேனுல்ல..

அல்லது
கம்னு புடிச்சு கொடுத்திருந்தா ஆசனூர்ல ஜாலியா இருக்கிற ஆரூரன்க்கு ஃபிரை பண்ணிக் கொடுத்திருக்கலாம்//

கதிர்,

அது சங்க காலத்து கொக்கு.... பாவம் விட்டுடுங்க...

இருந்தாலும் ராத்திரி பத்து நிமிஷம் அலைய விட்டுட்டீங்க (கொக்கு மேட்டர கண்டுபிடிக்கத்தான்).

பிரபாகர்.

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...
/செந்தில், நேத்து ராத்திரி வானம்பாடி அண்ண வூட்ல ரொம்ப ஆடினம, மாப்பு இந்த கேள்விய கேட்டு ஃப்யூஸ் புடிங்கிட்டாரு....

அதுதான் மேட்டரு/

ஆமாம். நான் முடியாம தூங்கிட்டேன். இப்போ பார்த்த அத்தினி விஷயமிருக்கு. ஆனாலும் கதிருக்கு தில்லுதான். மாப்பு வூட்லயே வந்து ஆப்பு வச்சிக்க முடியுது.
/ஆடினம/
இது!

Kailashi said...

கொக்கென நினைத்தாயா கொங்கணவா? என்ற பழமொழியும் உள்ளதே பழமைபேசி ஐயா.

தீப்பெட்டி said...

நல்ல விளக்கம் பாஸ்..

நான்கூட சிலநேரம் யோசித்திருக்கிறேன்,
கொக்கை எதுக்கு சொல்லுறாங்கனு..

இராகவன் நைஜிரியா said...

நேத்து பாலா அண்ணன் வலைப்பூவில் உங்க பின்னூட்டம் படிக்கும் போதே நினைச்சேன், கொக்கு பற்றி ஒரு இடுகை வரும் என்று நினைத்தேன்.

கலக்கிட்டீங்க ஐயா.

துபாய் ராஜா said...

அழகான பாடல்.

அருமையான பகிர்வு.

அற்புதமான விளக்கம்.

வாழ்த்துக்கள் நண்பரே....

சிங்கக்குட்டி said...

மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

படிக்காசுப் புலவரையெல்லாம் தேடிப்பிடிகிறதுன்னா மறுபடியும் ஒண்ணாம்ப்பு போய் உட்கார்ந்து வரவேண்டியதுதான்.

கொக்கென நினைத்தாயோ மட்டும் கேட்ட நினைவு வருது.ஆமா கொக்கும் நாரையும் ஒண்ணா இல்ல வேற வேறயா?

Gr said...

எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
பிடித்திருந்தால் பின்தொடருங்கள்

பழமைபேசி said...

@@ ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...


வணக்கம் தம்பீ!

உங்க வினாவுக்கான விடை இங்கே!

பழமைபேசி said...

@@கதிர் - ஈரோடு

இஃகிஃகி, வாங்க மாப்பு!

//கதிர் - ஈரோடு said...
//செந்தில்
உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே//

ச்சும்மா, ச்சும்மா, கொஞ்சம் தூக்கலா இருக்கட்டுமேன்னுதேன்.... இஃகிஃகி!

//பிரபாகர் said...
சிறு வயதில் என் தாத்தா சொன்ன கதையினை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. பழைமைபேசியா கொக்கான்னானம்...

பிரபாகர்.
//

முன்னாள் சிங்கப்பூர் வீட்டுக்கு வந்த இன்னாள் சிங்கப்பூருக்கு நன்றி!

//கம்னு புடிச்சு கொடுத்திருந்தா ஆசனூர்ல ஜாலியா இருக்கிற ஆரூரன்க்கு ஃபிரை பண்ணிக் கொடுத்திருக்கலாம்////

ஆசனூர் ஆளே காணம்? ஏன்??

@@வானம்பாடிகள்

நல்ல நித்திரையாங்க பாலாண்ணே?!

//Kailashi said...
கொக்கென நினைத்தாயா கொங்கணவா? என்ற பழமொழியும் உள்ளதே பழமைபேசி ஐயா.
//

ஆமாங்க, பழமொழிதான் இதனோட வேர்; நன்றி!

//தீப்பெட்டி said...
நல்ல விளக்கம் பாஸ்..

நான்கூட சிலநேரம் யோசித்திருக்கிறேன்,
கொக்கை எதுக்கு கொல்லுறாங்கனு..
//

நன்றிங்க சிவகாசியார்! கொக்கை கொல்றாங்களா? கோழிகள் பத்தலையாயிருக்கும்!

@@இராகவன் நைஜிரியா

வாங்க ஐயா, வணக்கம்! எதோ, நம்மால முடிஞ்சது!

@@துபாய் ராஜா

நன்றிங்க நண்பா!

//சிங்கக்குட்டி said...
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
//

நன்றிங்க!

//ராஜ நடராஜன் said...
ஆமா கொக்கும் நாரையும் ஒண்ணா இல்ல வேற வேறயா?
//

வேற வேறங்ணா! Pelican ibis (நாரை); crane (கொக்கு); ஒரு எட்டு, எங்கூர்ப் பக்கத்துல இருக்குற நல்லாம்பள்ளித் தோப்புக்கு ஒருவாட்டி போயிட்டு வாங்களேன்!

//Gr said...
எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
பிடித்திருந்தால் பின்தொடருங்கள்
//

வாழ்த்துகள்!

ராஜ நடராஜன் said...

//வேற வேறங்ணா! Pelican ibis (நாரை); crane (கொக்கு); ஒரு எட்டு, எங்கூர்ப் பக்கத்துல இருக்குற நல்லாம்பள்ளித் தோப்புக்கு ஒருவாட்டி போயிட்டு வாங்களேன்!//

நான் இதுவரைக்கும் Pelican ஐ கொக்குன்னு நினச்சிட்டுருக்கேன்.Crane முதல் தடவையா கேட்கிறேன்.நமக்கு தெரிஞ்சதெல்லாம் கிரேன் தானுங்க:)

பழமைபேசி said...

ஆகா, அண்ணன் இன்னும் வலையிலதானா??

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்ல பகிர்வு

கள்ளபிரான் said...

கடின உழைப்பு. பாராட்டுககள்.

எனினும்,

There is some ambiguity here:

//ஆகவே, ”அவரு எங்கண்ணனா, அல்லது கொக்கா?” என வினவும் போது, அண்ணன் ஆனவன் கொக்கைப் போன்ற அற்பன் அல்லாது, வாசுகியின் கற்பைப் போன்ற வலியவன் எனும் உயர்வு நவிற்சி வெளிப்படுகிறது. இதுவே புழக்கத்தில் வல்லமையைக் குறிக்கும் சொலவடையாக ஆகிப் போனது.//

I don't quite understand the above para.

The following is different and added here for interest only:

’நீ என்ன பெரிய கொக்கா?’ என்ற கேள்விக்கு மட்டுமே இங்கே இடம்.

‘நாங்க என்ன கொக்கா?’ என்றும் சொல்லிச்சண்டையுடுவதுண்டு. இதில், இக்கதை பொருந்தாது.

இங்கே பொருந்துவது கொக்கு as a symbol of naivety. கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடித்தல் என்பதிலிருந்து வந்தது.

ஒருவன் கொக்கு பிடிக்க போனான. கொக்கு வந்து உடகார்ந்தது. ஆனால் பிடிக்கவில்லை. துணைக்குச்சென்றவன்: ‘ஏன்னே பிடிக்காமல் இருக்கிறீர்கள்? என்று கேடக, இவன், ‘அட மடையா.. கொக்கு பறந்தோடி விடும்’ ‘என்றான்.
பின் எப்படித்தான் பிடிப்பதாக உத்தேசம்?
நான் கொக்கு தலைமேல் வெண்ணெயை வைப்பேன். அஃது உருகி வழிந்து கொக்கின் கண்ணை மறைக்கும். அப்போது, அதை ‘லபக்; கென்று பிடிப்பேன்’ என்றானாம்.

இதில் இருகருத்துகள். ஒன்று இவன் மடையன், மற்றொன்று, கொக்கு ஒரு மடைமையுடைய் பிராணி என்ற மரபு நம்பிக்கை. கொக்கு a symbol of idiocy or naivety. மூட நம்பிக்கை எனலாம். as there is no scientific evidence for that.

என்வே, 'என்னை கொக்கென்று நினத்தாயா?' அஃதாவது, என்னை கொக்கைப்போல ஒரு மடைமையுடைய்வன் என நினத்தாயோ? என்று பொருள்..

படிக்காசுப் புலவர் புராணத்தைத்தான் ஆராய்ந்தாரோ? மக்கள் பேச்சுவழக்கை கேட்கவில்லையோ?

பழமைபேசி said...

@@கள்ளபிரான்

நன்றிங்க! மேலதிகத் தகவல் நானும் கேள்விப்பட்டதே, ஆனாலும் முழுமையாக என்னால் நினைவிற் கொண்டு வர இயலவில்லை.... தாங்கள் அறியக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

கொக்கு தலையில வெண்ணெய் வெக்குற ஆள்றா அவன் என்பதும் உண்டு...

அது சரி said...

//
அவன் ஊருக்குள் சென்று கொண்டிருக்கும் போது மரத்தின் மேலிருந்த கொக்கு ஒன்றின் எச்சம் இவனது மேலே விழவும், இவன் அதை உற்று நோக்கவும், இவனது தவச்சிறப்பால் அந்தக் கொக்கானது எரிந்து விழுந்தது.
//

KFC மாதிரி KFKவா? :0)))

naanjil said...

தம்பி மணி

பெட்னா 2009 இலக்கிய விநாடி வினா போட்டியில படிக்காசு புலவர், சதகம் பற்றிய வினா இருந்தது.

அருமையான விளக்கம்.
வாழ்த்துக்கள்.

அன்புடன் அண்ணன்
நாஞ்சில் பீற்றர்.

பழமைபேசி said...

@@அது சரி

இஃகிஃகி!

@@ naanjil

ஆமாங்க அண்ணா, நன்றி!