தமிழ்ப் பதிவுலகில் இருக்கும் பதிவர்களில் சரிபாதி சென்னையிலிருந்து என்று வைத்துக் கொண்டாலும் கூட, நிகழும் அக்கப்போர்களில் சரிபாதி சென்னை தவிர்த்த ஏனைய இடங்களில் இருந்து தோன்றி இருக்க வேண்டுமல்லவா? இந்த ஒன்னரை வருடத்திய எமது அவதானத்தின்படி, கிட்டத்தட்ட அனைத்துமே சென்னையில் இருந்தே முளைக்கின்றன என்பதுதானே கசப்பான உண்மை?
தாக்குதல் என்றால், கூட்டாகவோ தனியொரு நபராகவோ நாட வேண்டியது, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கிற துறையினரிடம்! ஆனால் சிலவேளைகளில் நட்பும், தான் சார்ந்து இருக்கும் சமுதாயம் முதலான நலன்களைக் கருத்தில் கொண்டு வாளாதிருப்பதும் வழமையே! அப்படி என்றால், இதிலும் இவர்கள் வாளாதிருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், நட்பு பேணி நண்பர்களுக்கு உள்ளாகவே தகராறைத் தீர்த்திருக்க வேண்டும்.
அதைவிடுத்து, இப்படி ஏதேச்சையான, ஒருமித்த எழுத்து வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதுதான் எழுத்துரிமையா? பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவும் ஆறுதலும் என்றால், தனிப்பட்ட முறையில் மடலாடல்கள், மின்னாடல்கள் போன்றவற்றில் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே? இடுகைகள் மற்றும் சிட்டாடல்களில் எழுத்து வன்முறையைக் கையாண்டு நீங்கள் செய்வது என்ன தெரியுமா? Character Assassination!
நான் இந்த நிகழ்வைக் கொண்டு மட்டுமே இடுவதல்ல இந்த இடுகை! கடந்த காலங்களில் எண்ணற்ற முறை, முறைதவறிய எழுத்து வன்முறை அரங்கேறி இருக்கிறது. உடலால் ஏற்படும் ஊறுக்குக் கதறும் நீங்கள், மனதில் ஏற்பட்ட, என்றும் ஆறாத வடுக்களுக்கு வாய் திறக்க மறுப்பது ஏன்? ஏன்?? ஏன்???
”முரட்டுத் துலுக்கன், முட்டா நாயக்கன், செருப்பு, அரைகுறைகள்”, “எழுத்தறிவில்லாத ஆடுமாடுகள்”, இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... சாதி, மதங்கள், மற்றும் இன்னபிற பிறப்புச் சூழ்நிலைகளைக் கேலிசெய்து எத்துனை எத்துனை இடுகைகள்?
அதற்கு மேல், பிரித்தாளும் மனோநிலையில்.... நம்ம செட் ஆளுக, நம்ம ஆளுக தவிர மத்ததெல்லாம் அஜீரணம், வாயில நல்லா வந்திரும்... இப்படி, மெலியவனை, எளியவனைக் குதறும் பாங்கில் எத்துனை? எத்துனை??
அந்த குரோதத்திற்கு இரையான ஒருவர் மனவேதனையை வெளிக் காண்பிக்கிறார், எப்படி? திமிர், ஆணவம்.... இப்படியாக. மெலியவனும், எளியவனும் அந்த எழுத்து வன்முறைக்கு மேலும் மேலும் ஆட்படும் போது, அதன் வலியில் தன்னையே இழந்து மூடனாகிறான். மூடன் ஆனவனுக்கு தூக்கு தண்டனை என்றால், மூடனாக ஆக்கியவனுக்கு?!
அரசியல் உலகிலே அவ்வப்போது, தூயமணிகள் ஆற்றும் பங்கு மிக முக்கியமானது. ஆம், இவர்கள் நீதிமான்களாகவோ, மொழி சார்ந்த ஆன்றோராகவோ, சமூக சேவையிலோ சிறந்து இருப்பர். அரசியலில் தலைவனுக்கு ஒரு இக்கட்டு என்று வரும்போது, அந்த அபிமானத் தலைவனைக் காப்பாற்றும் பொருட்டு இந்தத் தூயமணிகள் தூதுவராகச் சென்று கடமை ஆற்றிடுவர். அடிப்படை ஒழுக்கத்தில், தான்சார்ந்த துறையில், நற்பெயரோடு இருக்கும் இவர்களுக்கு, ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும். அதை, அந்த ஊழலில் திளைத்த அபிமானத் தலைவனுக்கு ஏதுவாகப் பயன்படுத்தும் பாங்கை நீங்கள் அவ்வப்போது காணலாம்!
அதேபோலத்தான் பதிவுலகமும்! பதிவுலகத் தூயமணிகள், திறத்தால், நற்பண்புகளால்ச் சிறந்தவர்களாக இருப்பர். பதிவுலகின் போக்கை மாற்றுவதிலே, இவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. எழுதுகிற எழுத்திலே, வக்கிரமும், ஆணவமும், விரசமும் ஓங்கி, தனிநபர்த் தாக்குதல், வன்மம் என்றெல்லாம் மேலோங்கும். அப்போது இந்தத் தூயமணிகள் அது குறித்து இடுகை இட மாட்டார்கள். ஏன்?
வன்மம் விதைப்பது அவர்களது அபிமானத்துக்கு உரியவர்கள் ஆயிற்றே? அதுவே, அந்த அபிமானத்துக்கு உரியவர்களுக்கு ஒன்று என்றால், சென்னையில் இருந்தும், திருப்பூரில் இருந்தும், கோவையிலிருந்தும் சிலிர்த்துக் கிளர்ந்து எழுந்திடுவர் இவர். பிறகென்ன? ஒட்டு மொத்த பதிவுலகும் இந்த பிம்பத்தைத்தான் பிரதிபலிக்கிறது என்றாகிவிடும்.
இட்ட இடுகைக்கு, ஒத்த கருத்துக் கொண்டவர் இட்ட மறுமொழிகள் இவ்வளவு என்றால், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் இடாத மறுமொழிகள் பலமடங்கு கூடுதலாய் இருக்கும். உலகில் எதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு, நடப்பவற்றை அவதானிக்கும் சாமான்யர்கள் ஏராளம்! ஏராளம்!! அதற்கு இந்த இடுகையே சான்று!!!
தூயமணிகளே, முலாம் பூசிய கண்ணாடி ஒன்றின் முன்னாற்ப் போய் நின்று, உங்கள் முகத்தை ஒருமுறை பாருங்கள்! உங்களை நீங்களே வினவிக் கொள்ளுங்கள்!! Shame on you Mr. Clean!!!
இனி? இந்த இடுகை இட்ட பாவத்திற்கு, கேலியும் கிண்டலும் நையாண்டியும் ஓங்கும். பழி தீர்க்கத் தருணம் பார்த்து, வழிவகை பார்த்துக் கிடந்திடலாம். அப்படியாயின், அவர்கட்கு யாம் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! I am sorry my dear....
அகந்தை அகலட்டும்!
சகிப்பு பெருகட்டும்!!
சகிப்பு பெருகட்டும்!!
39 comments:
//
அகந்தை அகலட்டும்!
சகிப்பு பெருகட்டும்!!
//
தனி மனித தாக்குதல் கருத்து ரீதியாக / உடல் ரீதியாக எவ்வகையேனும் சகிக்க முடியாதவையே
வழிமொழிகிறேன்.
me the fist
நண்பரே...
பல பேருடைய மனக்குமுறல்களை அழகாய் வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள். இதுபோன்ற கருத்துக்கள் உங்களைப்போன்ற மூத்த பதிவர்களிடமிருந்து வருவதுதான் மிகச்சரியான ஒன்று. நாங்களெல்லாம் இன்றைய காளான்கள். எங்களின் கருத்துக்களை செவிமடுக்காமல் இவன் என்ன பெரிய இவனா? சொல்ல வந்துட்டான் எனும் சொல்லாடலும், கருத்தாடலும் தான் எழும்.
ஒவ்வொரு பதிவரும் படிக்கவேண்டிய இடுகை. நன்றி பழமைபேசி...
பிரபாகர்.
:)
இன்னும் அறுவா வெட்டுதான் விழல. யாருக்கு அந்த பெருமை(!) ன்னு தெரியல
வரிக்கு வரி வழிமொழிகின்றேன்.
//வரிக்கு வரி வழிமொழிகின்றேன்.///
அதே! :)
நீங்க சொன்னதையெல்லாம் மறுக்கா சொல்லிக்கறேன். (மறுபடியும் எழுத்துப்பிழை பழசை நீக்கிட்டேன்)
//இந்த இடுகை இட்ட பாவத்திற்கு, கேலியும் கிண்டலும் நையாண்டியும் ஓங்கும். பழி தீர்க்கத் தருணம் பார்த்து, வழிவகை பார்த்துக் கிடந்திடலாம்//
பயமாகத்தான் இருக்கு.
// பிரபாகர் said...
நண்பரே...
பல பேருடைய மனக்குமுறல்களை அழகாய் வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள். இதுபோன்ற கருத்துக்கள் உங்களைப்போன்ற மூத்த பதிவர்களிடமிருந்து வருவதுதான் மிகச்சரியான ஒன்று. நாங்களெல்லாம் இன்றைய காளான்கள். எங்களின் கருத்துக்களை செவிமடுக்காமல் இவன் என்ன பெரிய இவனா? சொல்ல வந்துட்டான் எனும் சொல்லாடலும், கருத்தாடலும் தான் எழும்.
ஒவ்வொரு பதிவரும் படிக்கவேண்டிய இடுகை. நன்றி பழமைபேசி...
பிரபாகர்.
//
ரிப்பீட்டேய்
வழிமொழிகிறேன்...
//இட்ட இடுகைக்கு, ஒத்த கருத்துக் கொண்டவர் இட்ட மறுமொழிகள் இவ்வளவு என்றால், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் இடாத மறுமொழிகள் பலமடங்கு கூடுதலாய் இருக்கும்//
அண்ணா, ஒரு சந்தேகம்.
இந்த நல்ல கருத்துள்ள இடுகைக்கு ஒரு எழுபது பேர் ஆதரவு தெரிவித்து நூறு பின்னூட்டம் போடுறோம்ன்னா,
படிச்சுட்டு பின்னூட்டம் போடாத மீதமுள்ள அன்பர்கள் அனைவரும் இந்த இடுகையின் கருத்தை எதிர்க்கிறாங்கன்னு அர்த்தமா? ஆவ்வ்வ்வ்
// கோவி.கண்ணன் said...
:)
இன்னும் அறுவா வெட்டுதான் விழல. யாருக்கு அந்த பெருமை(!) ன்னு தெரியல//
பிரமாதம்...பிரமாதம்.
இது 499 வது இடுகை...
அடுத்தது கேள்வி - பதில் இடுகை தானே...
என்னோட கேள்வி வந்ததா? அதற்கு பதில் வருமா?
அருமையா சொல்லியிருக்கீங்க பழமைபேசி!
அழகாக, அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வழிமொழிகிறேன்.
தனக்கும் தன்னைச் சார்ந்தவருக்கும் ஒரு நியாயம், அடுத்தவருக்கு ஒரு நியாயம் - இது இயற்கையானதுதான். ஆனால் தாங்கள் மட்டுமே உத்தமர்கள்கள், நியாயவான்கள், அறிவு ஜீவிகள் என்று அறிவுரை வழங்கும் சிலர் எழுத்தில் ஆணவமும், ஆக்ரோஷமும், வன்முறையும். யாராவது அவர்களின் ஆணவத்தைப் பற்றியோ, இவர்களின் சார்ந்த நியாயங்களைப் பற்றியோ சொன்னால் அவர்களை உதாசீனப்படுத்துவது, ஏளனப்படுத்துவது, கேவலப்படுத்துவது, இல்லை ”இந்தப் பதிவைப் பற்றிப் பேசு” என்று புறந்தள்ளுவது.
அப்புறம் தனி மனித தாக்குதல் - இதற்கு அர்த்தம் என்னவென்றே இப்பொழுது புரியவில்லை! இதற்கும், தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு பொழிப்புரை, மற்றவர்களுக்கு ஒரு பொழிப்புரை வைத்திருக்கிறார்கள். இதுவும் இயற்கையானதுதான். இதேபோல்தான் கருத்து சுதந்திரம். சொல்வதற்கு ஒன்றுமில்லை!
அறிவுரைகள் நிறையக் கொடுக்கிறார்கள். யாராவது திருப்பிக் கொடுத்தால் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுகிறார்கள்.
ஒவ்வொருத்தர் சொல்வதும் அபிப்பிராயங்கள்தான். அப்பிடி இருக்கையில் அது எப்படி இருக்க வேண்டும்?! அதைச் சிந்திப்பதில்லை.
இவர்களின் இடுகைகளைப் படித்து விட்டு, ஆட்களைப் புரிந்து கொண்டு, நாகரீகமாக நகர்ந்து விட வேண்டியதுதான்.
உங்கள் பதிவில் எழுதப்பட்டிருக்கும் பல கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை. (இந்த பதிவு இப்பொழுது எழுதப்பட்டதால்).
அதே சமயம் இனி விமர்சனம் செய்யும்பொழுது அடுத்தவர் எப்படி அதை எடுத்துக்கொள்வார் என்று அறிந்து விமர்சனம் செய்வது நல்லது. இல்லையேல் "சூப்பர்" என்று நல்ல பதிவுகளுக்கும், மற்ற சமயங்களில் நமது கருத்தை நமது மனதிலும் வைத்துக்கொள்ளலாம்.
இதேல்லாம் ஏன் நடக்குது. பதிவர்னா நல்லவரா கெட்டவரா? இடுகையை வரிக்கு வரி எழுத்துக்கு எழுத்து வழி மொழிகிறேன்.
ஒவ்வொரு வார்த்தையையும் வழிமொழிகிறேன்...
தேவையான நேரத்தில் வந்திருக்கும், அவசியமான இடுகை...
சமீபத்தில் இந்தச் சண்டை பிடிக்காமல் வெறுத்துப்போய் நான் எழுதிய
"என்ன நல்லதைக் கொடுத்துவிட முடிந்தது" கவிதையின் சிலவரிகள் இங்கு பொருந்தும் என நினைக்கிறேன்
//சுழலும் நாற்காலியில் குளிரும் அறையில்
வார்த்தை வசப்படும் சிலருக்கு
முப்பத்தி சொச்ச பொத்தான்களின் மூலம்
விமர்சனங்களால், இசங்களால்
செத்துக் கொண்டிருக்கும் சாதிகளால்
தேடலோடு படிக்க வருபவனுக்கு
தேவையில்லாததைத் திணிக்க முடிகிறது
ஒன்று மட்டும் புரிகிறது
தெருச்சண்டை போடுபவனுக்கு
எப்போதும் சண்டை முக்கியமில்லை
வேடிக்கை பார்ப்பவனே முக்கியம்//
தம்பி, போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். தொடர்க. உம பணி. பூனைகளுக்கு மணி கட்டிவிட்டிர்கள்
பழமையண்ணே, மிகவும் தேவையான இடுகை.
வரிக்கு வரி வழிமொழிகிறேன்.
//அகந்தை அகலட்டும்!
சகிப்பு பெருகட்டும்!!
//
சரியாகச் சொன்னீர்கள்!
உங்கள் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் பாஸ்..
நன்றிகள்..!
உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன். பல நேரம் இந்த இடுகைகளை பார்த்து ஙே என்று விழித்ததுதான் மிச்சம்!
நாம் மூக்கை நுழைக்கவேண்டாம் என்று எனக்குப்பின்னூட்டமிட்ட நீங்கள், தற்போது இடுகையிட்டிருப்பது கண்டு மகிழ்கிறேன். உங்கள் வார்த்தைகள் மிகச்சரி!!! சொல்லவேண்டியதைச் சொல்லித்தானே ஆகவேண்டும்!!!
//வரிக்கு வரி வழிமொழிகின்றேன்.///
அதேதான்.
திரு பழமைபேசி..
முதலில் நன்றி.
நாம் சார்ந்திருக்கும் இடத்தில் ஒரு தவறு நடக்கும் பொழுது,அது தவறு என்று மிகத் தீர்மானமாகத் தெரியும் பொழுது..வாயை மூடிக்கொண்டிருத்தல் சரி என்று சொல்கிறீர்களா?
கருத்துச் சுதந்திரம் எழுத்த்துச் சுதந்திரம் என்று ஏதாவது பெயரைக்கொண்டு கண்டதையும் எழுத்தில் எழுதி அதற்கு பதில் எழுதி நாசாமாய்போகட்டும்.
ஆனால், நட்பு முறையில் அழைத்து அடிப்பதை நியாயப்படுத்துகிறீர்களா அல்லது அதை எதிர்த்துக் கருத்துச் சொல்வதை தவறு என்கிறீர்களா என்று மட்டும் சொல்லவும்.
சார், நீங்கள் செய்துள்ளது Character Assassination இல்லையா.
And also do you also agree that Lasantha Wickramatunga and Tissainayagam got verdict what they deserved for their writings?
//நர்சிம் said... //
திரு. நர்சிம்,
வணக்கம்! தங்களுடைய நல்லெண்ணச் செயல்களைக் கேள்விப்பட்டவன் என்கிற முறையில், எமது நன்றிகளும்!!
//நட்பு முறையில் அழைத்து அடிப்பதை நியாயப்படுத்துகிறீர்களா .//
அது நியாயமானது அல்ல!
//அதை எதிர்த்துக் கருத்துச் சொல்வதை தவறு என்கிறீர்களா என்று மட்டும் சொல்லவும்//
தவறாகாது, எப்போது? இந்தத் தவறுக்கு மூலகாரணம் என்று எதோ ஒரு சப்பைக்கட்டு கட்டுவார்களே, அதையும் சாடி இருந்தால்....
ஆம் நண்பரே, சென்னையிலே இருந்து வெளிவரும் காழ்ப்புணர்வுக் கட்டுரைகளும், தனிமனிதத் தாக்குதல்களும், சாதி மதத்தை ஒட்டி மனம் புண்படும்படியான இடுகைகள் ஏராளம்! அவை பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டுமா என்ன? அவற்றையும் தங்களைப் போன்ற நல்லவர்கள் கையில் எடுக்கவில்லையே என்பதுதான் எம்மைப் போன்ற கடைக்கோடி வாசகர்/பதிவர்களின் ஆதங்கம்.
//நாம் சார்ந்திருக்கும் இடத்தில் ஒரு தவறு நடக்கும் பொழுது,அது தவறு என்று மிகத் தீர்மானமாகத் தெரியும் பொழுது..வாயை மூடிக்கொண்டிருத்தல் சரி என்று சொல்கிறீர்களா?
//
முதல் தெரிவு: சட்டம் ஒழுங்கு பராமரிப்புத்துறை
இரண்டாம் தெரிவு: நண்பர்களுக்குள்ளாக முரண் களைதல்
இந்த இரண்டையும் விடுத்து பதிவுகள் வழியாக பிரச்சினையைக் கையில் எடுப்பது பதிவுலகுக்கு நல்லதாக ஒருகாலும் இருக்க முடியாது. இந்தப் பதிவர் காவல் துறையினரின் விசாரணையில் என்றால் அது செய்தி. அதன்பின்னால், அவர் செய்த அநியாயங்களை எழுதலாம். ஆனால், தற்போது நடந்து வருவது அந்தக் கணக்கில் வராது நண்பா!
அரசியல் உலகிலும், திரையுலகிலும், பொது வாழ்விலும் ஏதேச்சதிகார அதிகார வர்க்கம் நடத்தும் நிழலுலகம் போன்ற ஒன்றை நடத்துவதற்கு, உங்கள் நியாயமான அறச்சீற்றம் துணை போகிறது என்பதே எம் தாழ்மையான எண்ணம்.
//கருத்துச் சுதந்திரம் எழுத்த்துச் சுதந்திரம் என்று ஏதாவது பெயரைக்கொண்டு கண்டதையும் எழுத்தில் எழுதி அதற்கு பதில் எழுதி நாசாமாய்போகட்டும்.//
தங்களுடைய அதே ஆதங்கம்தான் எம்மைப் போன்றவர்களுக்கும்!
//Karthikeyan G said...
சார், நீங்கள் செய்துள்ளது Character Assassination இல்லையா.
//
கிடையாது! யாரைச் செய்ததாக நீங்கள் நினைக்கிறீர்கள்!
//And also do you also agree that Lasantha Wickramatunga and Tissainayagam got verdict what they deserved for their writings?//
திசை திரும்பும்படியான கேள்வி தம்பி! எங்கள் மனவோட்டத்தை வெளிப்படுத்த எண்ணினோம். வெளிப்படுத்தி ஆயிற்று. அவ்வளவே!
//மணிகண்டன் said...
உங்கள் பதிவில் எழுதப்பட்டிருக்கும் பல கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை. (இந்த பதிவு இப்பொழுது எழுதப்பட்டதால்).
//
வாங்க மணிகண்டன்... நீங்கள் வேறொரு நாளில் மீண்டும் வந்து வாசித்துக் கொள்ளுங்களேன்.... :-0)
மாற்றுக் கருத்துகளுக்கு நம் சபையில் தகுந்த மரியாதை உண்டு நண்பா!
வழிமொழிந்த அத்துனை நண்பர்களுக்கும் மிக்க நன்றி! இதில் அரசியல் எல்லாம் கிடையாது. நிறையப் பேர் தத்தம் கருத்துகளைச் சொல்ல பயப்படுகிறார்கள் என்பதை அறிந்து, வெளிப்பட்ட உணர்வே இது! இந்த இடுகையால் எவருக்கேனும் மனம் புண்பட்டு இருந்தால் வருந்த்துகிறேன்!!
Sorry mate, but I have to totally disagree with you.
கேரக்டர் அசாசினேஷன்?? இல்லாத ஒன்றை பற்றி எழுதினால் தான் தவறு...நடந்த விபரங்கள் மட்டுமே எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது...சம்பவத்தில் உடன் இருந்தவர்களும் இதை ஒப்புக் கொண்டே இருக்கிறார்கள்..
//
”முரட்டுத் துலுக்கன், முட்டா நாயக்கன், செருப்பு, அரைகுறைகள்”, “எழுத்தறிவில்லாத ஆடுமாடுகள்”, இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... சாதி, மதங்கள், மற்றும் இன்னபிற பிறப்புச் சூழ்நிலைகளைக் கேலிசெய்து எத்துனை எத்துனை இடுகைகள்?
அதற்கு மேல், பிரித்தாளும் மனோநிலையில்.... நம்ம செட் ஆளுக, நம்ம ஆளுக தவிர மத்ததெல்லாம் அஜீரணம், வாயில நல்லா வந்திரும்... இப்படி, மெலியவனை, எளியவனைக் குதறும் பாங்கில் எத்துனை? எத்துனை??
//
பதிவுலகம் ஒன்றும் நிஜ உலகில் இருந்து எந்த விதத்திலும் மாறுபட்டது அல்ல...அதே காம குரோத கோபங்கள், வெறுப்புகள், விருப்பங்கள் எல்லாம் வழிகிறது...இது எல்லாரும் தெரிந்த ஒன்று...
ஆனால் இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் அதிர்ச்சியடைய காரணம் அடி மட்டுமல்ல...நட்பாக அழைத்து பின்னர் அடித்தது...இது தான் அதிர்ச்சி தருகிறது..
//அது சரி said...
Sorry mate, but I have to totally disagree with you.
கேரக்டர் அசாசினேஷன்?? இல்லாத ஒன்றை பற்றி எழுதினால் தான் தவறு...நடந்த விபரங்கள் மட்டுமே எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது...சம்பவத்தில் உடன் இருந்தவர்களும் இதை ஒப்புக் கொண்டே இருக்கிறார்கள்..
//
எங்கடா நம்ம அண்ணனைக் காணோமேன்னு பார்த்தேன்....வாங்க அண்ணாச்சி!
காவல்துறைக்குப் போகாகதின் காரணம்? இதெல்லாம் நான் கேட்கக்கூடாதுதான்... விசயம் பொதுவுக்கு வந்தா, கேட்டுத்தானே ஆவணும்.
எதோ ஒரு காரணம்... அந்த காரணத்துக்காகவே வலையில விசயத்தைக் கொண்டு வராம இருந்திருக்கலாம் இல்லையா??
அவர் செய்தது நியாயம்னு சொல்ல வரலை! ஆனா, இதுக்கு குரல் குடுக்குற நீங்க மத்ததுக்கும் குடுக்கலாமே??
//பதிவுலகம் ஒன்றும் நிஜ உலகில் இருந்து எந்த விதத்திலும் மாறுபட்டது அல்ல...//
//நட்பாக அழைத்து பின்னர் அடித்தது...இது தான் அதிர்ச்சி தருகிறது..
//
இதுமட்டும் நிஜ உலகத்துல நடக்கிறது இல்லையா அண்ணாச்சி அப்ப? என்ன பேச்சுப் பேசுறீங்க...
பயங்கரவாதியை விமர்சியுங்கள், கூடவே அது தலைதூக்கியதின் காரணத்தையும் அலசினால், அவர் ஒபாமாவுக்கு ஒப்பானவர் ஆவர். நோபல் பரிசும் வழங்கப்படும். இதற்கு ஐரோப்பாவில் இருக்கும் அது சரி அண்ணனே உத்திரவாதம்!!
தேவையான பதிவு.
நிறைய பேர் எப்படி சொல்வது என யோசித்துக் கொண்டிருந்த விஷயம் .சில விஷயங்கள் பதிவைக் காட்டிலும் மறுமொழியில் மனசு நோகாமல் தெளிவு படுத்தியிருப்பது நல்ல விஷயம் நண்பரே.
நீங்கள் எனக்குச் சொன்ன பதில்களில் ஒத்துப் போகிறேன் நண்பா..நன்றி.
பல விசயங்களில் ஒத்த சிந்தனை நம்முடையது என்றே நினைக்கிறேன்.இந்த ஒற்றைப் பதிலிலேயே அதை உணர்கிறேன்.
நன்றி.
என்ன அருமையான பதிவு. அந்த கருத்து(?) மோதல்களை பார்த்து என் மனதில் தோன்றியதை அப்படியே எழுதியுள்ளீர்கள்.
எல்லாவற்றையும் பொதுவில் வைத்துவிட்டு, பின் அதற்கு பின்னூட்டம் இடுபவர்களை திட்ட வேறு செய்கிறார்கள்.
எப்பொழுதுதான் திருந்தப் போகிறார்களோ......
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு......
அவசியமான பதிவு....
@@நர்சிம்
மிகவும் மகிழ்வாய் உணர்கிறேன், நன்றிங்க நர்சிம்!
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி!
"தூயமணி" பழமைக்கு வணக்கம். மண்டைக்குள்ள மணியடிச்சா பதிவ போட்டிடனும்... நல்ல பகிர்வு.
தீபாவளிக்கு நம்ம வீட்டு பக்கம் ஒரு எட்டு வந்துவிட்டு போகவும், உங்களுக்காக சிறப்பு "கை முறுக்கு" தயாரா இருக்கு.
என்ன நடக்குது.. எதப்பத்தி எல்லாரும் கதைக்கறீங்க.. ஒண்ணுமே புரியல.. :(
Post a Comment