நாம் இடும் இடுகையை மருத்துவர் ருத்திரன், முனைவர் நா.கணேசன், அண்ணன் துக்ளக் மகேசு போன்றவர்கள் எல்லாம் வந்து வாசிக்கிறார்கள் என்று தெரிந்ததும் மனம் மகிழ்ச்சியை அடைகிறது, ஆனாலும் ஒரு சில மணித்துளிகள் கூட அது நீடிப்பதில்லை. என்ன காரணம்?
நாம் ஏதாவது அபத்தமாக எழுதி இருந்தால், அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? எதற்கும் இட்ட இடுகையை போய் மீண்டும் ஒரு முறை பார்க்கலாம், இப்படியெல்லாம் ஒரு பதற்றம் ஏற்படுகிறது, அச்ச உணர்வு மேலோங்குகிறது. உண்மையில் சொல்லப் போனால், இதற்கு அச்சப்பட்டே நாம் சமூகம் பற்றிய இடுகைகளை முடிந்த வரை தவிர்த்தே வந்திருக்கிறோம்.
எனினும் சமூகத்தில் உள்ள ஊடகங்களைப் பார்க்கிற போது நமக்கு ஒரு நிம்மதி. ஊடகத்தில் வருகிற, சொல்லப்படுகிற பாங்குடன் ஒப்பிடும் போது, நாம் அவ்வாறெல்லாம் சொல்லி இருக்க மாட்டோம் என்ற நிம்மதி பிறக்கிறது.
உதாரணத்திற்கு, சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியத் தேர்தலைக் கவனத்தில் கொள்வோம். வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. ஒரு பக்கம் பார்த்தால், அந்தக்கட்சி முன்னணி! மறுபக்கம் பார்த்தால் இந்தக்கட்சி முன்னணி!! எப்படி, ஒரே நேரத்தில் மாறுபட்ட செய்திகள்? நாம் சென்னையிலுள்ள பத்திரிகை நண்பர் பிரகாசு அவர்களைத் தொடர்பு கொள்கிறோம். அவர் கூறியதிலிருந்து:
ஒரு தொகுதிக்கு நூற்றுக்கணக்கான இயந்திரங்கள். எண்ணும் இடத்தில், அவை பல பிரிவுகளாக வைக்கப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணுகிறார்கள். எண்ணிய வாக்குகளின் கூட்டுத் தொகையை வைத்து ஒரு ஊடகம் சொல்கிறது, அந்தக்கட்சி முன்னணி!
முதல் சுற்றில், எடுத்துக் கொள்ளப்பட்ட பிரிவு / இயந்திரங்களில் பெரும்பாலானவற்றில் இந்தக்கட்சி அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆகவே, அந்தத் தொகுதியில் இந்தக்கட்சி முன்னணி!!
இவற்றை நம்பி வாக்குவாதத்தில் இறங்கி, காரசாரமாகப் பேசி, பின்னர் கைகலப்பு வரை போகிறார்கள் நம் மக்கள். பாருங்கள், நான் இந்த இடுகை இட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு செய்தி, ‘பற்றி எரிகிறது பஞ்சாப்!’. அது என்ன, பஞ்சா பற்றி எரிய? அப்படியே பற்றி எரிந்தாலும், சமூக நலன் கருதி, செய்தியை உரிய வாக்கில் தரும் கடமை ஊடகங்களுக்கு இல்லையா என்ன? இவையெல்லாம் ஒரு உதாரணத்திற்குத்தான். இதனைப் பற்றி மேலும் விவரிக்காமல், இடுகையின் கருவுக்குச் செல்வோம் வாருங்கள்.
ஊடகத்தில், கட்டுரை, செய்தி, விவாதம், சொல்லாடல் என்று பல பரிமாணங்களில் பற்றியங்களை (விசயங்களை) மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். அவற்றின் தன்மை பற்றி, ஒவ்வொரு நுகர்வோரும் அறிந்து கொள்ள வேண்டியது ஊடகத்தின் பிடியில் சிக்கியுள்ள இன்றைய உலகில் மிக அவசியம்.
சமூகத்தில் தெரிந்த பற்றியங்கள், தெரிந்தே இருக்கிறது. தெரிந்தே, தெரியாதனவும் இருக்கிறது. அதாவது, நமக்குத் தெரிந்தே பல விசயங்கள் தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. தெரியாத தெரிந்தனவும் வானளாவக் கிடக்கிறது. அதே வேளையில், நமக்குத் தெரியாத தெரியாதனவும் உள்ளது. இந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு, சொல்ல வருவதைத் தம் வசதிக்கேற்ப ஏற்றியும், மாற்றியும், சுற்றியும், குற்றியும் சொல்லப்படுவன இன்றைய எண்ணப் பரிவர்த்தனைகள்.
இந்த பரிவர்த்தனையில் பல கூறுகள் உள்ளன. அவற்றில், ஒரு சிலவற்றை நாம் சொன்னதைச் சொல்லியபடியே எடுத்துக் கொள்ளலாம், நம்பலாம். ஆகவே, அந்தக் கூறுகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது இங்கு.
நிகழ்வு/கூற்று(truth): இவை பெரும்பாலும் நடந்த உண்மை நிகழ்ச்சிகள். நடக்காத ஒன்றை, நடந்ததாகக் கூறி, சட்டச் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ள துணிவது பெரும்பாலும் இல்லை. இந்த அம்சத்தின் கீழ் கூற்றுக்களும் வரும். இந்தியாவுக்கு வடக்கே இமயமலை என்பது கூற்று, இதனையும் ஒருவர் மாற்றிச் சொல்வாராயின், அவர் சமூக விரோதியே! தவறுதலாகச் சொல்வது என்பது வேறு, ஆனால் வேண்டுமென்றே சொல்வாராயின், சட்டப்படி அது குற்றம்.
தகவு (fact): இவை பெரும்பாலும் சுவராசியத்தைக் கூட்ட, உள்ளபடியாகவோ, அல்லது இட்டுக்கட்டியோ சொல்லப்படுவன. ஆகவே, 100% உத்திரவாதம் தர இயலாது. மன்மோகன் சிங் பதவி ஏற்றார் என்கிற நிகழ்வோடு, சோனியாவைப் பார்த்துப் பவ்யமாகக் கை கூப்பியபடி சென்றார் என்று சொல்லப்படுகிற தகமைக்கு உத்திரவாதம் தர இயலாது.
புரிந்துணர்வு (perception): பதவி ஏற்கும் போது, கை கூப்பியபடி சென்ற காட்சி காணொளியில் ஓடுகிறது. முதலாம் நபருக்கு அது பவ்யமாகச் செல்வது போன்ற புரிதல் ஏற்படுகிறது. அதுவே அடுத்த செய்தியாளருக்கு, சோனியாவைப் பார்க்கக் கூடாது என்பதற்காக தலையைக் குனிந்து கொண்டு செல்வது மாதிரியான புரிதல் ஏற்படுகிறது. ஆகவே, புரிந்துணர்வின் அடிப்படையில் வருவனவும் கேள்விக்குரியதே!
கருத்து (opinion): நிகழ்ச்சியில், கட்டுரையில் சொல்லப்பட்டு இருப்பது, கருத்தடிப்படையில் சொல்லப்பட்டதா என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். மன்மோகன் சிங் அவர்கள், கம்பீரமாக நடந்து செல்லவில்லை என்று சொன்னால், அது கருத்து. அதற்கு நீங்கள் உடன்படலாம், உடன்படாமலும் போகலாம். ஆகவே இதைக் கேட்டுவிட்டு, உங்கள் நண்பனிடம் போய் மன்மோகன் சிங் கம்பீரமில்லாத பிரதமர் என்று சொல்வது நலம் பயக்காது.
தரவு(data): ஆய்வு, புள்ளியியல், கணக்கெடுப்பு முதலானவற்றின் அடிப்படையிலான எண்ணப் பரிமாற்றம். இதிலும், ஏற்ற இறக்கம் எல்லாம் பங்கு கொள்ள வாய்ப்பு உள்ளது.
சான்று(evidence): சான்றுகளின் அடிப்படையில், அல்லது அதிகாரப்பூர்வமான ஒன்றின் வழி வரும் செய்திகள் பெரும்பாலும் நம்பத் தகுந்தவையே. இதிலும் கூட விதி விளையாட ஆரம்பித்து விட்டதுவோ?
இவைதான் ஊடகங்களின் மூல அம்சங்கள். இவற்றின் அடிப்படையில் மேலும் பல்வேறு கூறுகள் இருப்பினும், இவற்றைப் பகுத்தறிந்து, அதனடிப்படையில் செயல்படுவோமேயானால் ஊடகங்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது எம் கருத்து.
அதற்கு மேற்பட்டு, அய்யன் திருவள்ளுவரின் குறளே நமக்கு வழிகாட்டி:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
அதுனாலதான் நான் பதிவு எழுதரத நிறுத்திட்டேன்.
// எதற்கும் இட்ட இடுகையை போய் மீண்டும் ஒரு முறை பார்க்கலாம், இப்படியெல்லாம் ஒரு பதற்றம் ஏற்படுகிறது, அச்ச உணர்வு மேலோங்குகிறது. //
அட... இதுக்கெல்லாம் போய்......!!! விடுங்க தோழரே....
இல்லைனா ... தெனாலிகிட்ட இருந்து ... " கண்டி கதிர்காம கந்தண்ட வேல் ... " வாங்கிக்கலாம்......
தொடர்ந்து தெளிவான சிந்தனைகளின் பரிமாற்றம். மறுப்புக்கே இடமில்லை. இந்த மெய்ப்பொருள் காண்ப தறிவு! இதனாலதான் இத்தனை தவிப்பும். இல்லிங்களா? எங்க போய் காண்றது. ஒரு நிகழ்வு கூட இரண்டு ஊடகத்தில் வேற மாதிரியாதானே வருது.
இவற்றைப் பகுத்தறிந்து, அதனடிப்படையில் செயல்படுவோமேயானால் ஊடகங்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது எம் கருத்து.///
உண்மை! சரியான கருத்து நண்பரே!!
செம லாஜிக்.அதோட வள்ளுவத் தாத்தா சொல்றதையும் இணைத்தது அழகு.
//குடுகுடுப்பை said...
அதுனாலதான் நான் பதிவு எழுதரத நிறுத்திட்டேன்.
//
அட, நீங்க நகைச்சுவைதான எழுதுறீங்க... ச்சும்மா வாங்கண்ணே!
//லவ்டேல் மேடி said...
//இல்லைனா ... தெனாலிகிட்ட இருந்து ... " கண்டி கதிர்காம கந்தண்ட வேல் ... " வாங்கிக்கலாம்......//
இஃக்ஃகி!
ஒரு முக்கியமான நபரும் படிக்கிறாரு.அவர விட்டுட்டீங்களே!!
இஃகிஃகி
//எம்.எம்.அப்துல்லா said...
ஒரு முக்கியமான நபரும் படிக்கிறாரு.அவர விட்டுட்டீங்களே!!
//
அண்ணே, நீங்க நேற்றைக்கு வரலையே? அதான்!! இஃகிஃகி!!!
@@பாலா...
பாலாண்ணே, வாங்க, வணக்கம்!
@@thevanmayam
ஐயா, வாங்க, வணக்கம். எங்க மதுரை படங்கள்?
@@ராஜ நடராஜன்
நன்றிங்க அண்ணே!
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!
என்ன நண்பா அலசலில் இறங்கிடீங்க
ஊடகங்களின் நம்பகத்தன்மை மிகவும் குறைந்துவிட்டது உண்மைதான்.
(முக்கியமான விசயங்க - உங்க பதிவுக்கு அடிக்கடி வரும் வலைஞர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமைங்க)
// ஆ.ஞானசேகரன் said...
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!
என்ன நண்பா அலசலில் இறங்கிடீங்க
//
Interests
தமிழ் கற்பது கற்றதை எழுதுவது தகவல் சேகரிப்பு என இன்னும் பல... குறிப்பு: கொங்கு மண்டலத்தில் பழமை பேசுவது என்றால் அளவளாவுதல் என்று பொருள்!
அதான் கற்றதை எழுதுவதுன்னு என்னோட விபரப்பட்டைல சொல்லி இருக்கனே? இஃகிஃகி!!
//இராகவன் நைஜிரியா said...
(முக்கியமான விசயங்க - உங்க பதிவுக்கு அடிக்கடி வரும் வலைஞர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமைங்க)
//
வணக்கங்க ஐயா! நீங்கெல்லாம், வராவிட்டால் வருந்தும் பட்டியல்ல இருக்கீங்க!! அதை நினைவுல வெச்சுகிட்டு, வந்து போகணும்... சரீங்களா?!
அண்ணே... Fox நியூஸ் ரிப்போர்டுகளுக்கும் நம்மூர் ரிப்போர்ட்டுகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணும் இல்லயே !!!
1 லட்சம் ஹிட்டுகளுக்கு வாழ்த்துகள் !!
/நீங்கெல்லாம், வராவிட்டால் வருந்தும் பட்டியல்ல இருக்கீங்க!! //
சரியாச் சொன்னீங்க !! இடுகை போட்டுட்டு ராகவன் சார் வந்தாரான்னு பாத்துட்டு வந்த பிறகுதான் ஒரு திருப்தியே வருது !!
நூறவது ஃபாலோயருக்கு மணியண்ணன் 10 பவுன் தங்கச்சங்கிலியும் 2 பவுன் மோதிரமும் போடுகிறார் !!!
வாங்கோ... வாங்கோ...
//Mahesh said...
அண்ணே... Fox நியூஸ் ரிப்போர்டுகளுக்கும் நம்மூர் ரிப்போர்ட்டுகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணும் இல்லயே !!!//
வணக்கம்ண்ணே! சரியாச் சொன்னீங்க, ஆனா முக்கியமானதை வுட்டுட்டீங்க.... இங்கெ 25-30% பேர்தான் செய்திய கொஞ்சமாவது நம்புதாங்களாம்... அதாவது ஊடகத்து மேல இருக்குற நம்பகம் 25-30தானாம்.... நம்ப ஊர்ல? இஃகிஃகி!!
சாமி காத்தால வருதுன்னு வெளம்பரம் போட, அதைப் பாக்க கொள்ளை சனம் கூட... அதுல நாப்பது பேர் மண்டையப் போட்டதுதான் மிச்சம்.
//1 லட்சம் ஹிட்டுகளுக்கு வாழ்த்துகள் !!//
ஆகா...நானே இப்பதான் பாக்கேன்... நன்றிண்ணே!!
/நீங்கெல்லாம், வராவிட்டால் வருந்தும் பட்டியல்ல இருக்கீங்க!! //
சரியாச் சொன்னீங்க !! இடுகை போட்டுட்டு ராகவன் சார் வந்தாரான்னு பாத்துட்டு வந்த பிறகுதான் ஒரு திருப்தியே வருது !!
//
இராகவன் ஐயா, மகேசு அண்ணன் சும்மா லுலாயிக்கெல்லாம் சொல்லுற ஆள் கெடையாது... நல்லாக் கேட்டுகுங்க...
உண்மை தான் நண்பரே
ஊடகங்களின் நம்பகத்தன்மையே நீர்த்துப் போய் விட்டது.
அருமையாக எழுதி உள்ளீர்கள்
தொலை காட்சி ஊடகங்கள் ,அவரவர் விருப்பத்தை திணிப்பவை யாகவே உள்ளன.
//நாம் ஏதாவது அபத்தமாக எழுதி இருந்தால், அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? //
அப்ப நானெல்லாம் எழுதவே முடியாது தலைவரே,உங்க எழுத்துக்கும் மற்றும் கருத்துக்களுக்கும் என்ன குறை? தொடர்ந்து எழுதுங்க ,விடாம படிக்க நாங்க ரெடி.
ஊடகங்கள் பரபரப்புக்கும்,. பைசா கட்டுவதற்கும் ஆளாய் பறக்க ஆரம்பித்துவிட்டன... இந்த நேரத்தில் மெய்பொருள் காண்பதுதான் அரிது!
நல்ல ஒரு பதிவு. ஊடகங்கள் செய்யும் இந்த தில்லாலங்கடி வேலைகளை மக்கள் புரிந்து கொள்வார் இல்லையே.. அவற்றையே உண்மை என்று நம்புபவர்கள் எத்துனை பேர் உள்ளனர்?
@@திகழ்மிளிர்
@@தேனீ - சுந்தர்
நன்றி நண்பர்களே!
//குடந்தை அன்புமணி said...
ஊடகங்கள் பரபரப்புக்கும்,. பைசா கட்டுவதற்கும் ஆளாய் பறக்க ஆரம்பித்துவிட்டன...
//
//முகிலன் said...
நல்ல ஒரு பதிவு. ஊடகங்கள் செய்யும் இந்த தில்லாலங்கடி வேலைகளை மக்கள் புரிந்து கொள்வார் இல்லையே.. அவற்றையே உண்மை என்று நம்புபவர்கள் எத்துனை பேர் உள்ளனர்?
//
இது எல்லா ஊர்லயும் நடக்கிற ஒன்னுதான் முகுந்தன், குடந்தையாரே, நாமதான் சாக்கிரிதி..சாக்கிரிதியா இருக்கோணும்! அதச்சொல்லத்தான் இந்த இடுகை, இஃகிஃகி!!
Nalla finish,you to have select the correct news form what is being flashed by media.
அண்ணே நான் எதுக்கு பதிவு எழுதுறேன்னு தெரியலை
நான் எதிர்பார்த்தபடியே நடந்து விட்டது தேர்தல் கிளைமாக்ஸ்
https://www.blogger.com/comment.g?blogID=2371437159037577553&postID=2513292028234484261&page=1
Post a Comment