5/12/2009

பொள்ளாச்சி: ஓட்டு நோம்பி, ஒரு கண்ணோட்டம்!

அன்பர் குறும்பன் அவர்கள் கொங்கு பகுதியில் தேர்தல் நிலைமை குறித்து மிகவும் ஆவலாய் இருப்பதோடு, யாரும் அலசி ஆராய்ந்து பதிவிடவில்லையே என்ற ஆதங்கத்திலும் இருக்கிறார். எனவேதான், இக்கட்டான சூழ்நிலையிலும் இந்த இடுகையை இடுகிறேன். எங்கேயோ அமெரிக்காவில் பெட்டி அடித்துக் கொண்டிருப்பவனுக்கு பொள்ளாச்சியைப் பற்றி என்ன தெரியும் என்று வினவலாம். நியாயமான கேள்விதான்!

செவ்வாய் கிரகத்தைப் பற்றி இங்கிருந்தே அலசுவது இல்லையா மக்களே? நான் அந்த மண்ணில் பிறந்து, பட்டி தொட்டிகளில் மாடு மேய்த்தவன், தெரிந்ததையும், மனதில் பட்டதையும், கேள்வியுற்றதையும் சொல்ல ஆசைப் படுகிறேன். ஆகவே பொறுத்துக் கொள்ளவும்! இஃகிஃகி!!

1985 வரையிலான பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதியின் வாக்காளர் மனநிலை வேறு, இப்போதைய வாக்காளர்களின் மனநிலை வேறு. 1985 வரையிலும், வேளாண்குடி மற்றும் ஏழை மக்கள் ஏகமனதாய் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களிப்பர். உடுமலை, பொள்ளாச்சி நகர்ப்புற மற்றும் பெதப்பம்பட்டி பேரூர்ப் பகுதிகளில் மட்டும் தி.மு.கழகத்திற்கு கணிசமான வாக்காளர்கள் உண்டு. ஏனைய கிராமப்புறப் பகுதிகளில் அ.தி.மு.கழகம் செல்வாக்கோடு திகழ்ந்தது. அதே வேளையில், காங்கிரசுக் கட்சிக்கும் கிராம, நகர்ப்புறப் பகுதிகளில் தி.மு.கழகத்தை விட ஆதரவு அதிகமாக இருந்தது.

நாடு விடுதலை அடைந்ததிலிருந்தே, பெரியவர் அய்யாமுத்து, அருட்செல்வர் மகாலிங்கம் ஐயா, தொழிலதிபர் வெ. வித்தியாசாகர் ஐயா, கோவிந்தராசு அவர்கள், திருமலைசாமி அவர்கள் என்று நிறைய பிரபலங்களின் ஆதரவும் காங்கிரசுக்கு உண்டு. அதுபோக, உடுமலை HMS சின்னச்சாமி, INTUC P.L. சுப்பையா முதலிய தொழிற்சங்கத் தலைவர்களின் ஆதரவும் காங்கிரசுக்கு உண்டு. இடையில், நாராயணசாமி ஐயா அவர்களின் விவசாயிகள் சங்கம் இந்தப் பகுதியில் செல்வாக்கு பெற்று, பின்னாளில் அந்த வாக்காளர்கள் தி.மு.க, பின்னர் ம.தி.மு.கவுக்குச் சென்றனர்.

இந்தப் பின்னணியில் இருந்த தொகுதியில், 1985க்குப் பிறகு வந்த கல்வியறிவு கூடிய இளைஞர்களால் போக்கு மாறத் துவங்கியது. கிராமங்களில் தி.மு.க மற்றும் இன்றைய ம.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு பெருகியது. இதன் காரணமாய், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், கிணத்துக்கடவு, வால்பாறை, பொங்கலூர்ப் பகுதியில் என்றும் இல்லாதவாறு, 1985க்குப் பிறகு நடந்த பல தேர்தல்களில் தி.மு.க/ம.தி.மு.க வென்று சாதனை படைத்தது. இந்தப் பின்னணியில்தான் ம.தி.மு.கவின் கிருட்டிணன் தொடர்ந்து வெல்லவும் முடிந்தது.

இதற்கிடையில் 2006 சட்டசபைத் தேர்தல் வந்தது. தி. மு. கழகத்தில் உள்ள உள்ளூர்ப் பிரமுகர்களிடம் படுபயங்கரமான உட்கட்சிப் பூசல். அது மட்டுமல்லாது, உடன் இருந்த ம.தி.மு.கழகமும் அணி மாறியது. இதன் காரணமாய், மீண்டும் தி.மு.கழகம் பெரும்பாலான கோவைத் தொகுதிகளில் தோற்றது. அதன் விபரம் வருமாறு:

கிணத்துக்கடவு (அதிமுக) வித்தியாசம்: 5150
பொள்ளாச்சி (அதிமுக) வித்தியாசம்: 2946
உடுமலை (அதிமுக) வித்தியாசம்: 3463
வால்பாறை (காங்) வித்தியாசம்: 20979
பொங்கலூர் (திமுக) வித்தியாசம்: 53
தாராபுரம் (திமுக) வித்தியாசம்: 4712

ஆக, இந்த ஆறு தொகுதிகளில் பெற்ற வாக்குகளைப் பார்க்கும் போது திமுக அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது தெரிகிறது. இனி 2009க்கு வருவோம்.

இப்பகுதியில் ம.தி.மு.க கலகலத்து விட்டது என்பதே உண்மை. மு.கண்ணப்பன் அவ்ர்கள், காட்டம்பட்டிக் கந்தசாமி அவர்கள் போன்றோரெல்லாம் இப்போது தி.மு.கழகத்தில். ஆக, அ.தி.மு.கழகம் இப்பகுதியில் வலுவிழந்திருக்கிறது. அது போக, கொங்கு முன்னேற்றப் பேரவை எழுச்சியோடு களம் காணுகிறது. இப்பகுதியில் இருக்கும் காங்கிரசார் எப்போதும் தி.மு.கவுக்கு வாக்களிப்பது கிடையாது, கூட்டணியாய் இருந்தாலும்! அவர்கள் அதிமுகவுக்கே வாக்களிப்பது வழக்கம்!! இந்தத் தேர்தலில் எந்தவிதமான உறுத்தலும் இல்லாமல், கொ.மு. பேரவைக்கு வாக்களிப்பதின் மூலம் அவர்களுக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

கூடவே, தி.மு.க மற்றும் அ.தி.மு.கழகத்தில் இருந்தும் கொ.மு.பேரவைக்கு வாக்குகள் வெகு தாராளமாகச் செல்லக்கூடும். இது போதாதென்று தே.மு.தி.கவும் அடித்தட்டு மக்களின் வாக்குகளை அள்ளும். இந்த இரு வேட்பாளர்களும் எந்தக் கட்சியின் வாக்குகளை அதிகம் கவர்கிறார்களோ அது தோற்கும். கடைசி நேரத்தில், தோற்கும் மனநிலையில் உள்ள வேட்பாளர் இந்த இரு (திமுக, அதிமுக) கட்சிகளில் யாரோ ஒருவருக்கு உள்ளடி வேலை பார்ப்பதுவும் உண்டு. ஆனால், கொ.மு.பேரவையைப் பொறுத்த மட்டில் அது நடக்க வாய்ப்பு இல்லை. ஆகவே, திருப்பூர் மச்சானுக்கு மாலை விழலாம்!


17 comments:

லவ்டேல் மேடி said...

நல்ல கணிப்பு...!!! வாழ்த்துக்கள்..!!!


கண்டிப்பாக கொங்கு முன்னேற்ற பேரவை பொள்ளாச்சி, ஈரோடு , நாமக்கல், திருப்பூர் , போன்ற பகுதிகளில் சீட்டை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது ......

SUREஷ் said...

கூட்டணியாய் இருந்தாலும்! அவர்கள் அதிமுகவுக்கே வாக்களிப்பது வழக்கம்!!//


என்ன தல இப்படி ஒரு குண்டத்தூக்கிப் போடுறீங்க..,

குறும்பன் said...

\\ஆகவே, திருப்பூர் மச்சானுக்கு மாலை விழலாம்! \\ that's the BEST result :-))

கொங்கு - ராசா said...

Good one.. கொஞ்சம் லேட் :)

கண்ணப்பன், கந்தசாமி.. நீங்க ஊரை விட்டு போயி ரொம்பநாள் ஆச்சு போல ;)

DHANS said...

erode and pollachi result is sure...

தமிழர் நேசன் said...

முற்றிலும் உண்மை தான். திருப்பூரில் நன்றாகவே உணர முடிகிறது..

தமிழன் said...

ஜாதி அரசியலை ஒழிப்போம்

தமிழர் நலம் காப்போம்

Joe said...

"Oh, I don't really care about that country and its politics, dude!" என்று பேசித் திரியும் அமெரிக்க இந்தியர்களின் நடுவில் நீங்கள் அங்கிருந்த படியே செய்த தேர்தல் அலசல் அருமை.

வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

Mr. Shanmuga Sundaram is also from TUP know?!

லவ்டேல் மேடி said...

// தமிழன் said...

ஜாதி அரசியலை ஒழிப்போம்

தமிழர் நலம் காப்போம் //இவ்வளவு உணர்ச்சி பூர்வமான ஆளு.... ராமதாஸ் , திருமாவழவன் போன்ற ஆளுங்க கட்சி ஆரம்பிக்கும்போது போய் சொல்லீருந்தா நல்லாருக்கும்......

தாரணி பிரியா said...

இங்க கோவையில கூட சிலிண்டர் ஜெயிச்சுடும்தான் எல்லாரும் பேசிக்கிறாங்க‌

குறும்பன் said...

சண்முகசுந்தரம் உடுமலைகாரர், திருப்பூரிலும் பல்லடத்திலும் தொழில் இருக்கு என்று எங்கோ படித்தேன் (அது தவறாகவும் இருக்கலாம்). அவரோட நண்பர்கிட்ட இது பற்றி விசாரிக்கறேன்.

குறும்பன் said...

//He hails from Udumalpet and has businesses in Tripur and Palladamm. //

நண்பர் அனுப்புன மயில்ல தாங்க சண்முகம் உடுமலைன்னு சொன்னாரு. இப்ப திருப்பூர்ல வீடு வாசல் கட்டி குடி இருக்கலாம், என்ன இருந்தாலும் இவரு உடுமலைகாரர் தான். நாம எப்பவும் BEST ஆவே நினைப்போம் :-))

குறும்பன் said...

இரட்டை வாழ்த்துகள் பழைமை. பேரு என்ன வச்சிருக்கிங்க?

தமிழ் பிரியன் said...

இரட்டைக்கு வாழ்த்துக்கள் பழமைபேசி!
பொள்ளாச்சி தொகுதி உருமாற்றத்தால் கோவையின் சில பகுதிகள் பொள்ளாச்சியில் இணைந்ததாக படித்தேன்.. உக்கடம் வரை பொள்ளாச்சியாமே..அதனால் இன்னும் வேறு சில மாற்றங்களும் நிகழ்ந்து இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனா ஜெயிக்க போவது என்னவோ இரண்டில் ஒன்று தான்.. ;-)

தமிழ் பிரியன் said...
This comment has been removed by the author.
Poornima Saravana kumar said...

நல்ல கணிப்புதான்!