5/26/2009

உளவியலும், தி.மு.கழகத்தின் பொருளாதாரத் தேசியப் பற்றும்!

இந்தியாவைப் பொறுத்த வரையில், குறிப்பாகத் தமிழகத்தில் உளவியல் ரீதியான புரட்சி உடனடியாகத் தேவைப்படுகிறது. காரணம் என்ன? கடந்து வந்த திராவிட அரசியல்ப் பாதையும், இன்றைய பொருளாதார தேசியமும் ஒன்றிணைந்து வருகிற கால கட்டத்தில், அது பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு சென்று சேராததுதான்.

அரசியல் கட்சிகளுக்கே கூட, எடுக்கும் நிலைப்பாடுகளுக்கு உண்டான அடிப்படைக் காரணம் தெரிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் விளைவாய், ஏதோ ஒன்றைச் சொல்லி மக்களை அப்போதைக்கு சமாளிப்பது என்றாகிவிட்டது.

விழிப்புணர்வைக் கொண்டு சேர்ப்பதற்கு முன் பெரிய அளவில் உளவியல் ரீதியான சிந்தனை மாற்றம் வந்தாக வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு விவாதம் நடை பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். உடனே, கருத்தடிப்படையில் கேள்விகளை பெரும்பாலான நேரங்களில் வைப்பதில்லை. Negative Attack என்று சொல்லப்படுகிற, எதிர்மறையான விமர்சனங்களை உணர்வுகளின் அடிப்படையில் வைத்து, கருத்தை முன் மொழிபவரின் வாயை அடைப்பது.

இங்கே குழந்தைகள் கூட வெகு அழகாகச் சொல்வார்கள். Hey, you are picking on me! அதாவது ஒருவர் ஒன்றைக் கூறும் போது, அவர் வேறொரு சூழ்நிலையில் கூறிய ஒன்றை வைத்து மறித்துப் பேசுவது, அல்லது குற்றஞ் சாட்டுவது. இதனாலாயே அறிவார்ந்த பெரியவர்களும், சித்தாந்த, கொள்கை ரீதியான கோட்பாடுகளை முன் வைத்துப் பேசுவது இல்லை. மாறாக, சாமி கண்ணைக் குத்தி விடும், காத்து கறுப்பு அண்டி விடும் என்கிற போக்கில் பேசுவதை நடைமுறைக்கு கொண்டு வந்து, அந்த பழக்கத்திலேயே ஊறிவிட்டது சமூகம்.

தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் மனோபாவத்தை மாற்றி அமைக்க, மனோதத்துவ முறையிலேதான் தீர்வு கண்டாக வேண்டும். இந்த உளவியல் ரீதியான பரப்புரை வலுவான ஆயுதம் என்பதை, கடந்த அமெரிக்கத் தேர்தலிலும் கண்டோம். ஒரு எளிய குடியில், ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த ஒபாமா செய்தது என்ன?

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட உளவியல் நிபுணர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து, அமெரிக்க பிரச்சினைகள், மனநிலையைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்றாற் போல பிரசாரத்தைக் கையாண்டதுதான். இலாரி கிளிண்டனும், யான் மெக்கெயினும் எதிர்மறைத்(offence) தாக்குதல் நடத்துகிறார்கள். இவர் என்ன செய்ய வேண்டும்? அதைத் தடுத்தாட்கொள்ள(defence) வேண்டும். இவர் இந்த இரண்டையும் பாவிக்காமல், மூன்றாவதாக உளவியல் (psychological motivation) ஊக்குவிப்பைப் பொழிகிறார்.

நம்பிக்கை, நாம் மீள்வோம், History is just started happening! Are you taking part of it, or just watching it by sitting on side lines? வரலாறு படைக்கப் பிறந்தீர்களா? அல்லது வரலாறு நிகழ்வதை வேடிக்கை காணப் போகிறீர்களா?? இப்படி மக்களைப் பார்த்து வினவுகிறார். கூடவே, திட்டங்கள், வாழ்வின் யதார்த்தங்கள் போன்ற அம்சங்களையும் அதனூடாகப் பாய்ச்சுகிறார்.

மக்கள் சிந்தனைக்கு ஆட்பட, வரலாறும் நிகழ்ந்தது. இத்தகைய வல்லமை படைத்ததுதான் உளவியல்க் கோட்பாடு. இதுகாறும், அவை கைதேர்ந்த நிபுணர்களால் எதிர்மறைக்கு பாவிக்கப்பட்டு வந்தது. இனி, சமூக மாற்றத்திற்கும் பாவிக்கப்பட வேண்டிய கட்டாயம் தமிழ்நாட்டில் இருக்கிறது.

எதற்காகப் பாவிக்கப்பட வேண்டும்? பொருளாதார தேசியத்தையும், தமிழ்த் தேசியத்தையும் இனங்காண, இனங்கண்டு அதன் அத்தியாவசியத்தை வெகுசன மக்களுக்குக் கொண்டு செல்வதில் பாவிக்கப்பட வேண்டும்.

அது என்ன பொருளாதார தேசியம்? தேசியம் என்றால், ஒன்றிணைக்க வல்ல எதோ ஒரு மூலத்தை அடிப்படையாகக் கொண்ட பரந்த மக்கள்த் தொகுப்பு. அந்த மூலம், மொழியாக இருக்கலாம், மதமாக இருக்கலாம், பூகோள ரீதியினாலான நிலப்பரப்பாக இருக்கலாம், மனிதத்தோற்றமாக இருக்கலாம், அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்தியாவுக்கு எது மூலம்? மொழியா என்றால், இல்லை. மதமா என்றால் இல்லை. வேறு என்ன?? இன்றைய சூழலில், காசுமீரம் முதல் குமரி வரையிலும் இருக்கும் மக்களை இணைப்பது ஒன்றே ஒன்றுதான். உலகமே வியக்கும் அந்த பொருளாதாரக் கட்டமைப்புதான் அந்த மூலம். பஞ்சாப்பும், தமிழகமும், ஆந்திரமும், பீகாரும் இன்னபிற பிரதேசங்களும் ஒன்றுக்கொன்று பொருளாதார ரீதியில் பின்னிப் பிணைந்திருக்கிறது. பொருளாதாரக் கட்டமைப்பின் வாயிலாகப் பிணைக்கப்பட்டதால் இந்தியா ஒரு பொருளாதாரத் தேசியம்.

இந்தியா எப்போது இந்த புதிய பரிமாணத்தைப் பெற்றது? உலகின் மற்ற பக்கங்களில், பொருளாதாரமயம் ஆக்கலும், உலகமயம் ஆக்கலும் துளிர்த்த அதே வேளையில் இந்த புதிய பரிமாணம் உருப் பெற்றது. அதே நேரத்தில்தான், தமிழ்நாட்டிலே இருந்த தமிழ்த் தேசியவாதிகள் இந்திய பொருளாதார தேசியத்தின்பால் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றத் துவங்கினார்கள். திமுகவில் இதற்கு வித்திட்டவர் முரசொலி மாறன்!

ஏன் அவ்வாறு செய்யத் துவங்கினார்கள்? உலகமயமாக்கலின் தாக்கம்! தனிப்பட்ட முறையிலே வளர வேண்டும் என்றாலும் சரி, கட்சி வளர வேண்டுமானாலும் சரி, தமிழ்நாடு வளர வேண்டுமானாலும் சரி, பொருளாதார தேசியத்தின் பங்களிப்பு தமிழகத்திற்கு தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டது.

தான் வளர வேண்டுமானால், கட்சி வளர வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்கு மக்கள் வேண்டும். மக்களுக்கு திட்டங்கள் வேண்டும். அதைப் புரிந்து கொண்டதாலேயே தேசியத்தில் பங்கு கொண்டார்கள், அதன் பயனாலேயே இலவசத் திட்டங்களும், ரூபாய் அரிசித் திட்டமும் சாத்தியமாயிற்று.

அப்படியானால், இவர்களின் தமிழ்த் தேசியம் இனி அவ்வளவுதானா? கிடையாது. இவர்களிடம் உள்ள பொருளாதாரத் தேசியமும் தமிழ்த் தேசியமும், உடலும் உயிரும் போன்றது. எது ஒன்றைக் கைவிட்டாலும், அதோ கதிதான்! உடல் என்பது தமிழ்த் தேசியம். உடலுக்கு தாங்கக் கூடிய ஊறு நேரலாம். ஆனால், உயிர் இல்லையேல் எதுவும் இல்லையன்றோ? உயிருக்கு இடையூறு என்றால், கையையோ காலையோ வெட்டி எடுக்கவும் செய்வர். அதே நேரத்தில், உடலைப் பேணி காப்பதுவும் இன்றியமையாதது.

இந்த நிலை திமுகவுக்கு மட்டுந்தானா? கிடையாது! ஒவ்வொரு மாநிலக் கட்சிக்கும் உண்டு. அதையும் மீறி, உலகெங்கும் உள்ள தேசியங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். 50% வாக்குகள் பெற்ற ப்ளாக் க்யூபெக் கட்சி, தனிநாடு கோருவதைக் கைவிட்டு பொருளாதார தேசியத்துக்கு திரும்பியது. இவர்களால் பொருளாதார தேசியத்தின் பலன்களை முழுதாகப் பெற்றுத் தர இயலாது என மக்கள் எண்ணியதால், க்யூபெக்கில் 38% ஆக அவர்கள் பலம் குறைந்தது.

அவ்வளவு ஏன்? தனிநபர்கள் குறுக்கீடு இன்றி பங்களா தேசிலும், சிங்கள மக்களிடமும், பாகிசுதானிலும் தேர்தல் நடத்தினால், அவர்கள் இந்தியாவுடன் இணையத் தயார் என்றுதானே சொல்வார்கள்?

இதனைப் புரிந்து கொள்ளாவிடில் மக்களிடத்தே குழப்பமே மிஞ்சும். திமுகவைப் பொறுத்த மட்டிலும், இந்த காரண காரியங்களை கட்சியினருக்கும், மக்களுக்கும் புரிய வைக்காமல் போனதும் முரசொலி மாறன் அவர்களையே சாரும். ஆனால், உளவியல் ரீதியாக கருத்துகளை நல்வழியில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு நல்ல பேச்சாளர்கள் வேண்டும்; நல்ல எழுத்தாளர்கள் வேண்டும். அந்த சமூகப் பொறுப்பு, இந்தக் கட்டுரை எழுதுபவனுக்கு உண்டு; வாசகர்களுக்கு உண்டு; சமூக ஆர்வலர்களுக்கு உண்டு; கல்வியாளர்களுக்கு உண்டு; அனைவருக்கும் உண்டு. ஆனால், இது சாத்தியம்தானா?

31 comments:

ராஜ நடராஜன் said...

நீங்க பெரிய பெரிய கருத்தா சொல்றீங்க.எங்க அரசியலுக்கு புரிஞ்சது,தெரிஞ்சதெல்லாம் கோயபல்ஸ் உளவியல் மாத்திரமே.நான் சொல்றது பொய்ன்னா பக்கத்து இருக்குற பதிவர்கள்ல யாரையாவது கேட்டுப்பாருங்க.

ராஜ நடராஜன் said...

//தனிநபர்கள் குறுக்கீடு இன்றி பங்களா தேசிலும், சிங்கள மக்களிடமும், பாகிசுதானிலும் தேர்தல் நடத்தினால், அவர்கள் இந்தியாவுடன் இணையத் தயார் என்றுதானே சொல்வார்கள்?//

தேச எல்லைகள் என்பது என்ன?மனிதன் தனக்குத்தானே போட்டுக்கொண்ட கோடுகள்.சரியான மனோபாவம் இருக்கும்பட்சத்தில் கன்னியாகுமரிலிருந்து இமயமலை வரையும் பாகிஸ்தான்,இந்தியா தொட்டு பங்களாதேஷ் வரையும் நேர் கோடா ஹைவேஸ் அமைத்து விடலாம்தான்.இந்தப்பக்கம் ராமர்பாலத்தை உண்மையிலேயே பாலமாக்கிட்டாக் கூட நல்லாத்தான் இருக்கும்.நினைக்கிறதுக்கு சுகமாத்தான் இருக்குது.ஆனால் நடைமுறைகள்?

குறும்பன் said...

//அப்படியானால், இவர்களின் தமிழ்த் தேசியம் இனி அவ்வளவுதானா? கிடையாது.// உண்மை, இத வச்சு தான் இவங்க பொழப்ப ஓட்டனும், இது இல்லாம போச்சுன்னா இவங்க காலி. இன்னும் சிறிது காலத்தில் இவங்க தமிழ் தேசியமா? அப்படின்னா என்ன? என்று கேட்பார்கள். இன்னும் குறிப்பா சொல்லனும்னா எதிர் கட்சியாக இருக்கும் போது தமிழ்த் தேசியம் வேணும், ஆளும் கட்சியாக இருக்கும் போது தமிழ்த் தேசியம் ஒரு சுமை.

//இவர்களிடம் உள்ள பொருளாதாரத் தேசியமும் தமிழ்த் தேசியமும், உடலும் உயிரும் போன்றது. எது ஒன்றைக் கைவிட்டாலும், அதோ கதிதான்! //

இவர்களிடம் உள்ள பொருளாதாரத் தேசியமும் தமிழ்த் தேசியமும், உயிரும் உடலும் போன்றது.... என்று சொல்வதே சரியாக இருக்கும்.

\\உடல் என்பது தமிழ்த் தேசியம். \\ சரியாக சொல்லியுள்ளீர்கள்.

முன்னமே இவர்கள் சொல்லி இருக்குறாங்க.


தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.....

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசுகாரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே ....

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
நீங்க பெரிய பெரிய கருத்தா சொல்றீங்க.எங்க அரசியலுக்கு புரிஞ்சது,தெரிஞ்சதெல்லாம் கோயபல்ஸ் உளவியல் மாத்திரமே
//

அண்ணே வாங்க! அவ்வ்வ்...

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
இந்தப்பக்கம் ராமர்பாலத்தை உண்மையிலேயே பாலமாக்கிட்டாக் கூட நல்லாத்தான் இருக்கும்.நினைக்கிறதுக்கு சுகமாத்தான் இருக்குது.ஆனால் நடைமுறைகள்?
//

அண்ணே, நான் கனடாவுக்கும் அமெரிக்காவும் இருக்குற எல்லைய நீக்குறதுக்கு தயாரான சட்ட முன்வரைவுபத்தி எல்லாம் எழுதி, பின்னாடி நிறைய வெட்டிட்டேன்... இடுகை நெடு நீளமா இருக்குன்னு...

பழமைபேசி said...

//குறும்பன் said... //

வாங்க மாமியார்-திமுக தலைவரே!

அது என்ன மாமியார்-திமுக? anti-DMK, இஃகிஃகி!!

அந்த பாட்டு, அபாரமா இருக்குங்... இரசித்தேன், சிரித்தேன்!!

செந்திலான் said...

// தேசியம் என்றால், ஒன்றிணைக்க வல்ல எதோ ஒரு மூலத்தை அடிப்படையாகக் கொண்ட பரந்த மக்கள்த் தொகுப்பு. அந்த மூலம், மொழியாக இருக்கலாம், மதமாக இருக்கலாம், பூகோள ரீதியினாலான நிலப்பரப்பாக இருக்கலாம், மனிதத்தோற்றமாக இருக்கலாம், அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.//

உங்களது கருத்தை முற்றிலும் நிராகரிக்கிறேன்.தேசியம் என்பது மொழியை மட்டுமே அடிப்படையாக கொண்டது.
உங்களது கருத்தின்படி மதம் என்றால் முஸ்லிம்,கிறித்துவ நாடுகள் அனைத்தும் ஒரே நாடாக இணைந்திருப்பார்கள்.
நிலப்பரப்பு என்றால் உலகின் எழுபத்தைந்து விழுக்காடு நாடுகள் இருக்காது.பொருளாதாரம் என்றால் உலக நாடுகள் அனைத்துமே எல்லா நாடுகளுடனும் வணிகம் செய்கின்றன.
இவைகளில் எவ்வாறு தேசியத்தை கட்டமைக்க முடியும் ..?
இந்திய தேசியம் என்பது ஒரு கற்பிதம் அது மக்களின் அறியாமையால் தான் தாங்கி நிற்கிறது.

பழமைபேசி said...

//செந்தில் said...
உங்களது கருத்தை முற்றிலும் நிராகரிக்கிறேன்.தேசியம் என்பது மொழியை மட்டுமே அடிப்படையாக கொண்டது.//

வாங்க செந்தில், வணக்கம்! மொழியின்பால் உள்ள பற்று காரணமாக இப்படிச் சொல்கிறீர்கள், புரிகிறது.

ஆனால், நடைமுறையில அப்படியில்லைங்களே! கனடாவுல இரண்டு மொழிகள்... அப்ப கனடிய மண்ணில் இருப்பவனை ஒன்று சேர்த்து, அவர்களது தனித்தனமைய வெளிப்படுத்துறது கனடிய தேசியம்.

அதே போலத்தான் சிங்கப்பூர்... நான்கு ஆட்சி மொழிகள்... அவர்களது தனிப்பட்ட கலாசாரம், பண்பாட்டை வெளிப்படுத்துறது அவங்க தேசியம்...

ஆ.ஞானசேகரன் said...

நமக்கு கொஞ்சம் சிக்கலான ஒன்று. எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை? இருப்பினும் முயற்சிக்கலாம்...

குடுகுடுப்பை said...

அதே போலத்தான் சிங்கப்பூர்... நான்கு ஆட்சி மொழிகள்... அவர்களது தனிப்பட்ட கலாசாரம், பண்பாட்டை வெளிப்படுத்துறது அவங்க தேசியம்...//

சிங்கை மாதிரி இருந்திருந்தா இலங்கை எங்கியோ போயிருக்கும். இப்போ தமிழர்களை கொன்று புதிய புத்தர் ஆகிவிட்டார்கள். புதிய புத்தருக்கு நிறைய ஆதரவு புத்தர்கள் வேறு.

ஈழத்தமிழர்கள் சுயநலமாக முடிவெடுத்து வல்லரசு நண்பர்களை உருவாக்கி நலமாக இருக்கவேண்டும்.தமிழ்ச்சமூக வெற்றியின் வலிமை பின்னொரு காலத்தில் நாடு பெற்றுத்தரக்கூடும்.

குடுகுடுப்பை said...

ஈழத்தின் இன்றைய தேவை,மருத்துவம் மீள் குடியமர்வு, சிங்களக்க்குடியேற்றம் தடுக்கப்படல்.

பழமைபேசி said...

//செந்தில் said...
இந்திய தேசியம் என்பது ஒரு கற்பிதம் அது மக்களின் அறியாமையால் தான் தாங்கி நிற்கிறது.//

என்னோட பழைய நினைவுகளக் கிளறி வுட்டுட்டீங்க...

காந்தி பூங்காவுல கூடி, அங்க இருந்து DB Road, 100 Feet Road, Gandhi Puram, Jail Road வழியா, கோவைத் தென்றல் மு.இராமநாதனும் கு.இராமகிருட்டிணனும் மாறி மாறிக் கூவ, நானும் கூட்டாளிகளும் பின்னாடியே கூவிட்டுப் போயி, வ.உ.சிதம்பரம் பூங்காவுல ஊர்வலத்த முடிச்சுகுவோம்... அப்ப கூவுனதுல இருந்து:

தந்தை பெரியார் ஈ.வெ.ராவும்தந்தை பெரியார் ஈ.வெ.ராவும்

பேரறிஞர் அண்ணாவும்பேரறிஞர் அண்ணாவும்

டாக்டர் கலைஞர் மு.க.வும்டாக்டர் கலைஞர் மு.க.வும்

பேராசிரியர் பெருந்தகையும்பேராசிரியர் பெருந்தகையும்

ஊட்டி வளர்த்த தமிழுணர்வைஊட்டி வளர்த்த தமிழுணர்வை

கொல்லாதே! கொல்லாதே!!கொல்லாதே! கொல்லாதே!!

தேசியமாம் தேசியம்தேசியமாம் தேசியம்

என்னங்கடா தேசியம்?என்னங்கடா தேசியம்?

தொடப்பக் கட்டை தேசியம்தொடப்பக் கட்டை தேசியம்

தேசியமாம் தேசியம்தேசியமாம் தேசியம்

என்னங்கடா தேசியம்?என்னங்கடா தேசியம்?

வெங்காய தேசியம்வெங்காய தேசியம்

தேசியமாம் தேசியம்தேசியமாம் தேசியம்

என்னங்கடா தேசியம்?என்னங்கடா தேசியம்?

நாறிப்போன தேசியம்நாறிப்போன தேசியம்


ஆனா, இப்பெல்லாம் ஒரு நிதானத்துக்கு வந்துட்டமுங்க... இஃகிஃகி!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தான் வளர வேண்டுமானால், கட்சி வளர வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்கு மக்கள் வேண்டும். மக்களுக்கு திட்டங்கள் வேண்டும். அதைப் புரிந்து கொண்டதாலேயே தேசியத்தில் பங்கு கொண்டார்கள், அதன் பயனாலேயே இலவசத் திட்டங்களும், ரெண்டு ரூபாய் அரிசித் திட்டமும் சாத்தியமாயிற்று.//


மக்கள் பயன் அடைகிறார்கள் தலைவரே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எளிமையாய் தோன்றுகின்ற சற்றே ஆழமான கருத்துக்கள்

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
நமக்கு கொஞ்சம் சிக்கலான ஒன்று. எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை? இருப்பினும் முயற்சிக்கலாம்...
//

இஃகிஃகி... இல்லாட்டா, கூச்சலும் குழப்பமுந்தான்.... இது, அல்லது அதுன்னு ஒரு சித்தாந்தம், ஒரு பார்வை இருக்கணும்... அதான் நம்ம பார்வை!

பழமைபேசி said...

@@குடுகுடுப்பை


அண்ணே வாங்க! உங்கள் கருத்துகளுடன் உடன்படுகிறேன்!!

பழமைபேசி said...

//SUREஷ் said...
மக்கள் பயன் அடைகிறார்கள் தலைவரே..,
//

வாங்க மருத்துவர் ஐயா, இல்லாட்டி சனங்க விடுவாங்களா என்ன??

நாம ஊர் விட்டு ஊர் போவதும், நம்ம ஊர்க்கு மத்தவங்க வருவதும்னு எல்லாம் தவிர்க்க முடியாதது ஆயிப்போச்சுங்க...

கோயம்பத்தூர் மண்வாசனை (nativity) மங்குதுன்னு வருத்தம்தான்... ஆனாலும் வெளியூர்க்கு ஓடி வந்த நான் வருத்தப்படுறதுல ஞாயம் இல்லைங்களே?! :-(

Renga said...

//இப்பெல்லாம் ஒரு நிதானத்துக்கு வந்துட்டமுங்க... //

I salute you!!!! Your thinkings are very rational and very needy to the nation. I fully subscribe your views.

I strongly believe TIME brings CHANGES, changes brings PROSPER. Prosperity is the engine to move the society.

Hence, we need to educate the people to understand every single issue in rational way not an emotional way.

But I am very concerned most of the bloggers are an emotional writers and inducing others to think in such a direction... Hope they all graduate to the next level like you...

Renga

சுந்தர் said...

//தேசியத்தில் பங்கு கொண்டார்கள், அதன் பயனாலேயே இலவசத் திட்டங்களும், ரெண்டு ரூபாய் அரிசித் திட்டமும் சாத்தியமாயிற்று//

பொருளாதார ரீதியாக ஒரு ரூபாய் அரிசி, இலவசங்கள் சாத்தியமானது எப்படி ? அரசின் வருவாய் டாஸ்மாக் மூலம் பன்மடங்கு பெருகியதால்தானே.

பழமைபேசி said...

//தேனீ - சுந்தர் said...

பொருளாதார ரீதியாக ஒரு ரூபாய் அரிசி, இலவசங்கள் சாத்தியமானது எப்படி ? அரசின் வருவாய் டாஸ்மாக் மூலம் பன்மடங்கு பெருகியதால்தானே.
//

உண்மைதான்... அதே நேரத்தில் இதில் இருப்பதை அதில் போட்டு, அதில் இருப்பதை இதில் போட்டு என மத்திய அரசு தரும் மானியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டுமல்லவா?

அதே வேளையில், மத்திய அரசு திட்டங்களின் மூலம் தமிழ்நாடு பெறுவது 11%. இதுவும் 4% அதிகப்படியான சலுகை என்று புள்ளி விபரம் கூறுகிறது.

பழமைபேசி said...

@@Renga

Thank you for the comments, understanding as well as for the appreciation. :-0)

தீப்பெட்டி said...

//அரசியல் கட்சிகளுக்கே கூட, எடுக்கும் நிலைப்பாடுகளுக்கு உண்டான அடிப்படைக் காரணம் தெரிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் விளைவாய், ஏதோ ஒன்றைச் சொல்லி மக்களை அப்போதைக்கு சமாளிப்பது என்றாகிவிட்டது//

நூத்துல ஒரு வார்த்தை(?) ஒரு வாக்கியம்)

நல்ல தீவிர அலசல் பதிவு..

//அவ்வளவு ஏன்? தனிநபர்கள் குறுக்கீடு இன்றி பங்களா தேசிலும், சிங்கள மக்களிடமும், பாகிசுதானிலும் தேர்தல் நடத்தினால், அவர்கள் இந்தியாவுடன் இணையத் தயார் என்றுதானே சொல்வார்கள்?//

அதெப்படி சொல்றீங்க..

பழமைபேசி said...

//தீப்பெட்டி said...

//அவ்வளவு ஏன்? தனிநபர்கள் குறுக்கீடு இன்றி பங்களா தேசிலும், சிங்கள மக்களிடமும், பாகிசுதானிலும் தேர்தல் நடத்தினால், அவர்கள் இந்தியாவுடன் இணையத் தயார் என்றுதானே சொல்வார்கள்?//

அதெப்படி சொல்றீங்க..
//

வாங்க தீப்பெட்டியார்...

இன்னைக்கு உலகத்தின் போக்கு அதானுங்களே? வடகொரிய மக்களுக்கு தென் கொரியாவோட இணைய ஆசை; இரசியாவுல இருந்து பிரிஞ்ச ஒரு சிலவுங்களுக்கு, ஏன் பிரிஞ்சோம்னு ஆதங்கம்? ஐரோப்பா முழுமைக்கும் ஒரு நாணயம்ன்னு ஒன்று கூடல்; கனடாவுக்கும் அமெரிக்காவும் இருந்த எல்லைய நீக்குறதுன்னு, இருக்க 9/11 வந்து நிறுத்திடுச்சு... ரெண்டு அரசாங்கமும் ஒரு குடியமர்வு சட்டம் கொண்டு வர்றதுல வேலை செய்துட்டு இருக்காங்களாம். அது முடிஞ்ச உடனே, இந்த முயற்சி மறுபடியும் துளிர்க்கலாம்....

பங்களாதேசு, பாகிசுதான், ஆப்கானிசுதான்ல இருந்து எதோ ஒரு வழில இந்தியாவுக்கு சனங்க படையெடுத்துட்டு இருக்காங்கதானே? எல்லாம் பொருளாதார ஈர்ப்புதான் காரணம்... ஆப்கானிசுதான்/பங்களாதேசு அமைச்சர்கள் பலருக்கு இந்தியாவுல வீடு, குடும்பம்ன்னுகூட இருக்காம்...

Sanjai Gandhi said...

அறிவாளிகளுக்கான பதிவு போல. நம்பள்கி ஒன்னியும் பிரில தலீவா..

//அவ்வளவு ஏன்? தனிநபர்கள் குறுக்கீடு இன்றி பங்களா தேசிலும், சிங்கள மக்களிடமும், பாகிசுதானிலும் தேர்தல் நடத்தினால், அவர்கள் இந்தியாவுடன் இணையத் தயார் என்றுதானே சொல்வார்கள்?//

இதென்ன கலாட்டா? :)
உங்க கிட்ட வாக்கெடுப்பு நடத்தினா சீனாவோட இணைஞ்சிடலாம்னு சொல்விங்களா? :)

பழமைபேசி said...

//$anjaiGandh! said...

இதென்ன கலாட்டா? :)
உங்க கிட்ட வாக்கெடுப்பு நடத்தினா சீனாவோட இணைஞ்சிடலாம்னு சொல்விங்களா? :)
//

வாங்க தேசியம்! :-0)

இந்தியா அந்த நிலைமைக்குப் போகாதுங்ற நம்பிக்கை இருக்கே? என்ன செய்ய??

செந்திலான் said...

//ஆனால், நடைமுறையில அப்படியில்லைங்களே! கனடாவுல இரண்டு மொழிகள்... அப்ப கனடிய மண்ணில் இருப்பவனை ஒன்று சேர்த்து, அவர்களது தனித்தனமைய வெளிப்படுத்துறது கனடிய தேசியம்//

வணக்கமுங்க ..!கனடா,சிங்கப்பூர் போன்ற நாடுகள் எல்லாம் குடியேறிகளின் நாடு.அவர்களுக்கென்று ஒரு தேசியம் இல்லை என்றே கருதலாம் .ஜப்பான்,ஜெர்மனி மாதிரி நாடுகள் ஸ்டாலினின் தேசம் பற்றிய பொது வரையறையின் படி தொடர்ச்சியான நிலப் பரப்பு,பொது மொழி ,பொது கலாச்சாரம் கொண்ட தேசியங்களாக கருதலாம் என்று நினைக்கிறேன்.ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியது இது.
எப்படியோ கோவையை வலம் வந்த நாட்களை நினைவு படுத்தி விட்டேன் மகிழ்ச்சி ...
உங்கள ரொம்ப நாளா படிக்கிறேன் இப்போதான் பின்னூட்டம் இட்டேன்
நமக்கு பல்லடம் பக்கம் தான் ஊருங்க அண்ணா..!

Arasi Raj said...

சரியா சொன்னேங்க

ஒபாமா மாதிரி நம்பிக்கை குடுக்குற மாதிரி பேசினா யாருக்கு தன மயக்கமும் கூடவே நம்பிக்கையும் வராது.

அமெரிக்கா, நான் எழுந்து நிப்போம்னு அவர் சொல்ற மாதிரி நம்ம ஊர்ல யாரு சொல்றா..

ஏலே மவனே., சுதாரிச்சுக்கோ, சுருட்டுற அளவுக்கு சுருட்டிக்கோன்னு தானே சொல்றாங்க

பழமைபேசி said...

//செந்தில் said...
ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியது இது.//

ஆகா, என்ன ஒரு தன்னடக்கம்?! இருக்கட்டு, இருக்கட்டு!!


//எப்படியோ கோவையை வலம் வந்த நாட்களை நினைவு படுத்தி விட்டேன் மகிழ்ச்சி ...//

ஆமாங்க, நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லோணும்....


//உங்கள ரொம்ப நாளா படிக்கிறேன் இப்போதான் பின்னூட்டம் இட்டேன்//

நன்றிங்க, நன்றிங்க!!

//
நமக்கு பல்லடம் பக்கம் தான் ஊருங்க அண்ணா..!//

அப்பிடீங்களா? பல்லடம் எல்லாம் நமக்கு தண்ணிபட்ட பாடுங்..

திருப்பூர் போற வழிலீங்ளா? உடலப்பேட்ட வழிலீங்களா? பொள்ளாச்சி, கோயமுத்தூரு, கரடிவாவி, சோமனூர், சாமளாபுரம்... எந்த வழில உங்க ஊர்?

பழமைபேசி said...

//நிலாவும் அம்மாவும் said...
ஏலே மவனே., சுதாரிச்சுக்கோ, சுருட்டுற அளவுக்கு சுருட்டிக்கோன்னு தானே சொல்றாங்க
//

இஃகிஃகி, பழம நல்லாத்தான் பேசுறீங் நீங்க...

செந்திலான் said...

// திருப்பூர் போற வழிலீங்ளா? உடலப்பேட்ட வழிலீங்களா? பொள்ளாச்சி, கோயமுத்தூரு, கரடிவாவி, சோமனூர், சாமளாபுரம்... எந்த வழில உங்க ஊர்? //

அங்க தான் மிஸ் பண்ணிட்டீங்க பல்லடம் - தாராபுரம் வழியில புத்தரச்சல் ன்னு ஒரு கிராமம் தாங்கண்ணா...! தாமதமான் பதிலுக்கு வருந்துகிறேன்.

ராஜ நடராஜன் said...

மீண்டும் ஒரு முறை தமிழ்மணம் இடுகை பரிந்துரைக்கு வாழ்த்து சொல்ல வந்தேன்.