5/12/2009

புன்னைப்பூ!


இளவஞ்சிப்பூ பூத்திருக்க
புன்னைப்பூவும் பூக்குமல்லோ?
துணைக்கந்த ஆத்திப்பூவும்
அழகழகா அரும்புமல்லோ??

அன்புள்ள வாசகர்களே! வணக்கம்!! எமக்கென்று ஒரு வலைப்பூ உண்டுபண்ணி பதினொரு மாதங்கள் ஆயினும், ஆரம்ப காலத்தில் நண்பர்கள் மட்டுமே வாசிக்கும் வண்ணம் இருந்தது. பின்னர், சில மாதங்கள் கழித்து மெதுவாக பதிவுலகிலும் நுழைந்தோம். மிக நல்ல அனுபவம். திரும்பிப் பார்க்கையில் மிக வியப்பாகவும் மகிழ்வாகவும் உள்ளது.

இன்னும் எழுதுவதற்கு கிராமத்து நினைவுகளும், வட்டார வழக்குகளும், தமிழ் சார்ந்த விபரங்களும், புனைவுகளும், நனவுகளும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இது பூக்கும் காலமன்றோ? முதலில் எள்ளுத் தாத்தா எழுதிய வைத்தியம் எனும் தொடரைத் துவங்கினோம். இன்னும் அது முற்றுப் பெறவே இல்லை. மீதம் இருக்கும் விபரங்களையும் எழுதத்தான் வேண்டும். ஆனாலும் இது மொட்டு மலரும் காலமன்றோ??

பின்னர், சித்திரக்கவி வரிசையில் பாடல்கள் எழுத, கவி காளமேகத்தின் தாக்கம் எனும் தொடரைத் துவங்கினோம். துணைக்கு, அண்ணன் மகேசு அடியெடுத்துக் கொடுக்க, கனவில் கவி காளமேகம் என்ற தொடரையும் துவங்கினோம். இந்த இரண்டும் இன்னும் முற்றுப் பெறவில்லை. ஆயினும் இது அலரி விரியும் பொழுதன்றோ?!

அதன் பின்னர், கிராமியத்து நனவுகளோடு நடப்பு நிகழ்வுகளையும் கலந்து கொடுக்க பள்ளையம் எனும் தொடர் கண்டோம். அதுவும் நிலுவையில்தான்! பதிவது புரிதலே ஆயினும், இனிவரும் நேரம் செந்தும்பை செவக்கும் நேரமன்றோ?! ஆகவேதான் அன்பர்களே, ஓரிரு திங்கள் கழிந்து மறுமலர்ச்சியுடன் திரும்பும் வரையில், உங்களுக்கு பணிவான வணக்கமும் நன்றியும் சொல்லி விடைபெறுகிறேன்!!

பழமைபேசி (எ) மெளன. மணிவாசகம்.

31 comments:

Mahesh said...

என்னாது ஒரிரு திங்களா? என்னாச்சு?

எங்க போறீங்க? விடுமுறைல இந்தியாவுக்கா?

பாலா... said...

/பாலாண்ணே, வணக்கம்! ரெண்டொரு நாளில் தொடர்வேன்... தங்களது ஆவலுக்கு மிக்க நன்றியண்ணே!!/

//ஓரிரு திங்கள் கழிந்து மறுமலர்ச்சியுடன் திரும்பும் வரையில்//

தினங்கள்
திங்கள்
திடுக்!!

எம்.எம்.அப்துல்லா said...

அட ஒரு வருஷமாகப் போகுதுல்ல!!!!

நீங்க ஒரு ஜீன்ஸ் போட்ட திருவள்ளுவர்ணே :)))


இந்தியாவுக்கா வர்றீக??? கூப்புட மறந்துராதீக.

குடந்தைஅன்புமணி said...

சென்றுவாருங்கள்! பயணம் இனிமையாக வாழ்த்துகள்!

சின்ன அம்மிணி said...

சந்தோசமா போயிட்டு நல்லா ஊர்சுத்திட்டு வாங்க‌

பழமைபேசி said...

//Mahesh said...
என்னாது ஒரிரு திங்களா? என்னாச்சு?

எங்க போறீங்க? விடுமுறைல இந்தியாவுக்கா?
//

அண்ணே, முன்னாடியே சொல்லி இருந்திருக்க வேணும்... Allergy, வார இறுதி நாள்ல வீட்டுல அது இது வாங்கிப் போட, Buffalo மாத்தி Albany போய் வர நாள் ஓடிப் போச்சுங்க....

பழமைபேசி said...

//பாலா... said...

தினங்கள்
திங்கள்
திடுக்!!
//

இன்னும் ஒரு வாரத்துக்கு வலையில இருக்க முடியும்ன்னு பார்த்தேன் பாலாண்ணே, முடியாது போலிருக்கு...அதான்...இஃகிஃகி!!

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
இந்தியாவுக்கா வர்றீக??? கூப்புட மறந்துராதீக.
//

அண்ணே கண்டிப்பா... நான் இன்னும் பத்து நாள்ல தொடர்புல வர்றேன்...நன்றி!

பழமைபேசி said...

//குடந்தைஅன்புமணி
//சின்ன அம்மிணி

வாங்க, வணக்கம். நன்றி! ஆனா, இந்தியப் பயணம் இன்னும் ஒரு மாசங்கழிச்சுத்தான்...

நசரேயன் said...

சட்டு புட்டுன்னு முடிச்சிட்டு வாங்க

சூர்யா said...

நல்லா பாத்து பத்தரமா போய்ட்டுவாங்கங்ண்ணா.. ஊர்ல எல்லாரயும் கேட்டதா சொல்லுங்க..
வரும்போது நெறயா வாய்க்கா வரப்பு, புல்லுப் பூண்டெல்லாம் படம் புடிச்சுட்டு வந்து எங்களுக்கெல்லாம் காட்டுங்க..

இராகவன் நைஜிரியா said...

விடுப்பில் இந்தியா செல்கின்றீர்களா..

மிக்க நன்று...

போய் வாருங்கள்

பிரியமுடன்.........வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/2009/05/blog-post_05.html

இங்க வந்து ஒரு முடிவ சொல்லிட்டு போங்கப்பு....

வில்லன் said...

ஓஒ ஊருக்கு போறிங்களா???? சந்தோசம். பத்திரமா போயிட்டு வா ராசா....... அப்படியே நம்ம அப்பச்சிய ரொம்ப கேட்டதா சொலுங்க... நெறைய வெளக்கமும் கேட்டுட்டு வந்து எழுதுங்க.... ரொம்ப ப்றேயோஜனமா இருக்கும்.

குறும்பன் said...

உங்கள் பயணம் இனிதாக இருக்கட்டும்.
என்ன தேர்தல் நேரமா பார்த்து போறீங்க? இதுல ஏதாவது சங்கதி இருக்கா? இஃகி.. உடுமலைகாரரு பொள்ளாச்சியில் நிக்கறாராம், ஏதாவது தொடர்பு உண்டா? இஃகி இஃகி

நிறைய படங்கள் எடுத்து வரவும். எங்க போனாலும் படம் எடுக்க மறந்திடாதிங்க.

வேத்தியன் said...

விடுமுறையும் பயணமும் இனிதாக அமைய வாழ்த்துகள்...

லவ்டேல் மேடி said...

போயிட்டு வாங்க தலைவரே...!! வாழ்த்தி வழியனுப்புரோமுங்கோவ் ...!!! வரும்போது சந்தையில ஏதாவது வாங்கிட்டு வாங்க.....!!!!


பை...பை....!!!

மதுவதனன் மௌ. said...

நன்றே சென்று வந்து மீண்டும் தொடருங்கள்.. மகிழ்வோடு சந்திப்போம் மீண்டும்

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

Muniappan Pakkangal said...

Innum ezhutha niraya irukku-romba nalla vishayam.Neram kedaichaa,namma pakkam vanthu Thalaiya paathuttu ponga Rasa.

குறும்பன் said...

இரட்டை வாழ்த்துகள் பழைமை. என்ன பேரு வச்சிருக்கிங்க?

பூ, பூ எழுதினப்பவே ஊகித்திருக்கனும். ;-)

நீங்க ஊருக்கு போறீங்கன்னு எல்லாரையும் போல நினைச்சுக்கிட்டேன். :-))

தங்ஸ் said...

twins??? Vazthukkal! Peru enna vechirukeenga? Kutti Pookalukku Nalvaravu..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இரட்டை வாழ்த்துக்கள் பழமை பேசி.. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பழமைபேசி (எ) மெளன. மணிவாசகம்.

=உங்களின் உண்மை பெயர் கண்டு ஆச்சரியம்

இரண்டு பெண்குழந்தைகள் பிறந்துள்ளதை அறிந்தேன்

வாழ்த்துக்கள் தாய்க்கும் சேய்களுக்கும்.

Viji said...

வாழ்த்துகள். இரட்டிப்பு மகிழ்ச்சி.

ச்சின்னப் பையன் said...

வாழ்த்துகள். இரட்டிப்பு மகிழ்ச்சி

பழமைபேசி said...

வாழ்த்திய, வாழ்த்தப் போகும் அனைவருக்கும் தியா மற்றும் தன்வி ஆகியோரது சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!!

ராஜ நடராஜன் said...

மணியண்ணா!நல்ல செய்தி கேட்டேன்.வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்.

Poornima Saravana kumar said...

அண்ணாச்சி ஒரு பேச்சுக்காவது சொல்லியிருக்கலாம்ல:((

பிரியமுடன் பிரபு said...

we will wait for u...........

come back soon

பிரியமுடன் பிரபு said...

.