5/21/2009

பயத்துனால பேசுறத விட்டுட்டு, பேசுறதுக்கு பயப்படாம இருக்கணும்!

நான் மூனாவது/நான்காவது படிக்கும் போதுன்னு நினைக்குறேன், சரியா நினைவில்லை, அந்த காலகட்டத்துல எங்க வீட்டுப் புறக்கொல்லையில ஒரு பெரிய தொட்டி, செவ்வக வடிவுல இருக்கும். தண்ணி நிரப்பாம, பெரும்பாலும் வெறுமனேதான் இருக்கும். நானும் எங்க சித்தி பையன், நரிக்கல்பட்டி செந்திலும் வாகா உள்ள இறங்கி உக்காந்துட்டோம். தொட்டிய ஒரு சொகுசுந்து (Pleasure Car) மாதிரி கற்பனை செய்துகிட்டு, தண்ணி இறைச்சி ஊத்துற வண்ண நெகிழிக் கோப்பை(mug)களை மூலைக்கு ஒன்னா, ஒலிபெருக்கியாட்டம் கட்டியாச்சு. நான் பிரசாரம் செய்யுறவன், செந்தில் பின்னாடி கூவுறவன்.

‘பல்கேரியக் கப்பல் ஊழல் மன்னன் கோமாளியின் கைத்தடி குழந்தைவேலுவுக்கா உங்கள் ஓட்டு?’, இப்படி ஏக வசனத்துல, நாங்க மத்தவங்க கூவுறதுல இருந்து தெரிஞ்சிகிட்டதை எல்லாம் சொல்லிக் கத்தி தேர்தல் பிரச்சாரம் செய்துட்டு இருந்தோம். திடீல்ன்னு யாரோ எங்களை எட்டிப் பாக்குற மாதிரி இருந்துச்சு. மேல் நோக்கிப் பாத்தோம், நல்லா வெள்ளை முழுக்கை சட்டை போட்டுகிட்டு, நெடிய உயரத்துல, எலுமிச்சை நிறத்துல ஒருத்தர்! கூட எங்கம்மாவோட ஒன்றுவிட்ட சகோதரர், அதாவது என்னோட மாமா, பின்னாடி அசட்டுச் சிரிப்போட எங்க அப்பா!!

நாங்க வெலவெலத்து, தொட்டிய உட்டு இறங்கி வந்து நடுங்கிகினு நின்னோம். அந்த வெள்ளையுஞ் சொல்லையுமா இருந்தவரு, காரோட்டிகிட்ட சொன்னாரு, ‘தம்பீ, வண்டீல முன்னாடி இருக்குற பொட்டலத்த எடுத்தாப்பா!’.

பொட்டலம் வந்ததும், உள்ள பச்சநெற மழைக் காய்தத்துல சுருட்டின சாக்லேட் முட்டாய், அந்தக் காய்தத்துல ரெண்டு முயல் படம் போட்டு இருக்கும், பேர் மறந்துடுச்சு. பேர் போன முட்டாய் அது. ஆளுக்கு நாலு குடுத்து, தட்டிக் குடுத்துட்டு, ’என்ன மெளனு? நீங்கெல்லாம் எனக்கு வேலை பாத்துட்டு, பசங்களை அந்தப் பக்கம் வேலை செய்யுறதுக்கு அனுப்பிட்டீங்க போலிருக்கு?’ன்னாரு சிரிச்சிட்டே. எங்க மாமாவும், அப்பாவும் அசடு வழிய, நாங்க வுட்டோம் ஒரே ஓட்டம் வெளில.

அதுக்கப்புறந்தான் தெரிஞ்சது அவர்தான் ப. குழந்தை வேலுன்னும், எங்க ஊரான உடுமலைத் தொகுதியில இருந்து வெற்றியடைஞ்சு வேளாண்மைத் துறை மந்திரி ஆயிட்டாருன்னும். அடுத்த அடுத்த காலங்கள்ல, எங்க ஊருக்கு பிரத்தியேகமா திருமூர்த்தி மலையிலிருந்து வர்ற மாதிரி குடிதண்ணீர்த் திட்டம் கொண்டு வந்தாரு.


அதுக்கப்புறம் பல வருசங்கள் கழிச்சு, அதிமுக (ஜெ) அணி சார்பா, சேவல் சின்னத்துல நின்னாரு. நாந்தான் எங்க ஊர்ல அவருக்கு தேர்தல் துண்டுச் சீட்டு (booth slip) எழுதுற வேலை பார்த்தது. எங்க ஊர்ல அதிக வாக்குகள் வாங்கினாரு, ஆனாலும் சாதிக்பாட்சாகிட்ட தோத்துட்டாரு. அதுக்கப்புறம் திருச்செங்கோட்ல நின்னு, பாராளுமன்ற உறுப்பினர் ஆனதுக்கப்புறம் மேல சொன்ன கதைய எங்க மாமா அவர்கிட்ட சொல்ல, நான் நெளிய, ஒரே சங்கடமாப் போச்சு. அந்த காலகட்டத்துல எடுத்ததுதான் மேல இருக்கிற படம்.

என்னோட கல்யாணத்தன்னைக்கு நிறைய அரசியல் பிரமுகர்கள் வந்திருந்தாங்க. ஆனாலும், கடைசி வரைக்கும் இருந்து, வாழ்த்திட்டு போனது அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் C.T.தண்டபாணி. நல்ல மனிதர். அடித்தட்டுல இருந்து வந்து, இந்திராகாந்தி அவங்க கூடவே வேலை பார்த்தவர். என்னோட சின்ன மாமனாரோட நண்பர். என்னோட திருமணத்துக்கு அப்புறம், ஒரு வார இறுதியில, விருந்துல கலந்து பேசிட்டு இருக்குறப்ப, அவர் எதுக்கோ முரசொலி மாறன் அவர்களைப் பத்தி சொல்லிட்டு இருந்தாரு.

அவர் சொன்னதுல இப்ப எனக்கு நினைவுக்கு வர்றதுல இருந்து ஒன்னு! மாறன் ஐயா, தன்னோட கட்சியினரோ, சொந்தகாரங்களோ அனாவசியமா வீட்டுக்கோ, அல்லது அவர் பின்னாடியோ வந்தா கடுப்பாயிடுவாராம். அதே நேரத்துல, மாற்றுக் கட்சி ஆட்கள் வந்தா, முகம் மலரப் பேசிட்டு இருப்பாராம். இவர் டில்லியில இருக்குறப்ப, இதைப் பத்தி கேக்க, அவர் சொன்னாராம், ‘யோவ், தெண்டபாணி, நாமெல்லாம் ஒரே கருத்துள்ள ஆளுக. புதுசா என்னத்த பேசிடப் போறம்? மாத்துக் கட்சி ஆளுகன்னா, பரிமாறவும், தெரிஞ்சிக்கவும் நெறைய இருக்கும்யா!”ன்னு. மாற்றுக் கருத்துகளுக்கு எவ்வளவு மதிப்புன்னு தெரிஞ்சிக்க, இதை CTD எங்களுக்கு சொன்னதா ஞாபகம். CTDயும் நல்ல மனுசன், சகல கட்சிக்காரங்களும் மதிச்ச ஒரு வித்தியாசமான நபர்.

இதெல்லாம் எதுக்கு இப்ப ஞாவகத்துக்கு வருதுங்கன்னா, நாட்டுலயும் சரி, வலையிலயும் சரி, மெலிஞ்சு பேசுனா மிதிக்கிறாங்க! வலிஞ்சு பேசுனா வாழ்த்துறாங்க!! ஊரோட ஒத்து ஊதினா நல்லவன், கொஞ்சமா மாத்திப் பேசுனா பொல்லாதவன். சொல்ல வர்றவங்க, எதுக்கு பொல்லாப்புன்னு சொல்லாமலேவும் போயிடுறாங்க. தியாகங்கள் மங்குது, மாறா துரோகம்ங்ற வசவு மலிஞ்சிட்டு வருது.


ஒபாமா சொன்னது போல, பயத்துனால பேசுறத விட்டுட்டு, பேசுறதுக்கு பயப்படாம இருக்கணும். அப்பத்தான், நாடு, ஊடகம், பத்திரிகை, வலையுலகம், அது எதுவானாலும் மக்களின் பிரதிபலிப்புல இருந்து அந்நியப்படாம இருக்கும். இல்லாட்டி, அடுத்த தலைமுறையும் பிறழ்ந்த தகவல்களைத்தான் படிக்கப் போறாங்க!!

18 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//அந்தக் காய்தத்துல ரெண்டு முயல் படம் போட்டு இருக்கும், பேர் மறந்துடுச்சு. //

ஹையா...நியூட்ரின் சாக்லேட்டு.

எம்.எம்.அப்துல்லா said...

//நாட்டுலயும் சரி, வலையிலயும் சரி, மெலிஞ்சு பேசுனா மிதிக்கிறாங்க! வலிஞ்சு பேசுனா வாழ்த்துறாங்க!! ஊரோட ஒத்து ஊதினா நல்லவன், கொஞ்சமா மாத்திப் பேசுனா பொல்லாதவன். சொல்ல வர்றவங்க, எதுக்கு பொல்லாப்புன்னு சொல்லாமலேவும் போயிடுறாங்க. தியாகங்கள் மங்குது, மாறா துரோகம்ங்ற வசவு மலிஞ்சிட்டு வருது.

//

இலட்சத்துல ஒரு வார்த்தைண்ணே.

ஆனாலும் விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யுது. நானும் ஜோசப்பால்ராஜீம் சில கருத்துக்களில் நாய் மாதிரி அடித்துக் கொள்வது அனைவரும் அறிந்ததே.ஆனாலும் சிங்கையில் நான் இருந்த 10 நாட்களும் அவர் என்னை சந்திக்காமல் இருந்ததேயில்லை.அதேபோல் அண்ணன் நர்சிம் திமுகவை கிண்டல் செய்து துணுக்கு எழுதினால் நல்லா இருக்கான்னு என்கிட்டதான் முதலில் கேட்பார்(என்னா வில்லத்தனம்??!!??) :)

கருத்து வேறு நட்பு வேறு என்பது பலருக்கும் பிடிபடுவதில்லை.

vasu balaji said...

/நாடு, ஊடகம், பத்திரிகை, வலையுலகம், அது எதுவானாலும் மக்களின் பிரதிபலிப்புல இருந்து அந்நியப்படாம இருக்கும். இல்லாட்டி, அடுத்த தலைமுறையும் பிறழ்ந்த தகவல்களைத்தான் படிக்கப் போறாங்க!!/

அதுக்காகத்தான் பண்ணுறாங்களோன்னு தோணுது.

பாவக்காய் said...

Romba Nalla Pathivu.
Senthil

வேத்தியன் said...

நான் என்றைக்குமே பயப்பட்டதே கிடையாதே...
:-)

கொஞ்சம் நக்கல்..
முடிந்தால் வந்து பார்க்கவும்...
http://jsprasu.blogspot.com/2009/05/blog-post_21.html

வல்லிசிம்ஹன் said...

பேசப் பயமாத்தான்யா இருக்கு.

ஆ.ஞானசேகரன் said...

//பயத்துனால பேசுறத விட்டுட்டு, பேசுறதுக்கு பயப்படாம இருக்கணும்//

நல்ல பதிப்பு நண்பா...உங்களை நீங்களே அலசி பார்த்து சொல்லுரீங்க...

MADURAI NETBIRD said...

நல்ல பதிப்பு தோழரே

சுந்தர் said...

மாற்று கருத்தை மதித்த , மாறன் பற்றிய தகவல் அருமை., பிரச்சாரம் பண்ண முன் அனுபவம் இருக்கு போல.,

நட்புடன் ஜமால் said...

தலைப்பு அருமை

பதிப்பு நல்ல பகிர்வு

நன்றி

Muniappan Pakkangal said...

Too many informative things in a single post,nice to see ur photo,taken in which year?

கபீஷ் said...

இனிமேல் பொடி வைக்காம நேரடியா எழுதப் போறீங்கன்னு சொல்றீங்க சரியா?

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
//அந்தக் காய்தத்துல ரெண்டு முயல் படம் போட்டு இருக்கும், பேர் மறந்துடுச்சு. //

ஹையா...நியூட்ரின் சாக்லேட்டு.
//

ஆங்... நன்றிங்கண்ணே!

//ஆனாலும் விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யுது.//

ஆமாங்க அண்ணே...

//பாலா... said... //

பாலாண்ணே, வாங்க, வணக்கம்!!

//பாவக்காய் said...
Romba Nalla Pathivu.
Senthil
//

நன்றிங்க செந்தில்!

//வேத்தியன் said...
நான் என்றைக்குமே பயப்பட்டதே கிடையாதே...
:-)
//

நன்றிங்க, உங்க பக்கத்துக்கு ஏற்கனவே வந்து படிச்சுட்டேன்!

//வல்லிசிம்ஹன் said...
பேசப் பயமாத்தான்யா இருக்கு.
//

வாங்க வல்லிம்மா, அதாங்க ஆதங்கம்!

//ஆ.ஞானசேகரன் said...
//பயத்துனால பேசுறத விட்டுட்டு, பேசுறதுக்கு பயப்படாம இருக்கணும்//

நல்ல பதிப்பு நண்பா
//

நன்றிங்க ஞானியார்!

//மதுரைநண்பன் said...
நல்ல பதிப்பு தோழரே
//

நன்றிங்க மதுரை நண்பரே!

//தேனீ - சுந்தர் said...
மாற்று கருத்தை மதித்த , மாறன் பற்றிய தகவல் அருமை., பிரச்சாரம் பண்ண முன் அனுபவம் இருக்கு போல.,
//

இஃகிஃகி... வெளில யாருகிட்டவும் சொல்லிடாதீங்க...

// நட்புடன் ஜமால் said...
தலைப்பு அருமை

பதிப்பு நல்ல பகிர்வு

நன்றி
//

ஆகா, ஜமால் அண்ணே, இன்னைக்குதான் நம்ம பக்கத்துக்கு வழி தெரிஞ்சுதா? அவ்வ்வ்.... நன்றிங்க!

//Muniappan Pakkangal said...
Too many informative things in a single post,nice to see ur photo,taken in which year?
//

thanks buddy, 10 years ago!!

//கபீஷ் said...
இனிமேல் பொடி வைக்காம நேரடியா எழுதப் போறீங்கன்னு சொல்றீங்க சரியா?
//

இலண்டன் மாநகர சீமாட்டி, வாங்க, வணக்கம்! இஃகிஃகி, உசுப்பலுக்கெல்லாம் மயங்க மாட்டோமே?!

குடந்தை அன்புமணி said...

//நாட்டுலயும் சரி, வலையிலயும் சரி, மெலிஞ்சு பேசுனா மிதிக்கிறாங்க! வலிஞ்சு பேசுனா வாழ்த்துறாங்க!! ஊரோட ஒத்து ஊதினா நல்லவன், கொஞ்சமா மாத்திப் பேசுனா பொல்லாதவன். சொல்ல வர்றவங்க, எதுக்கு பொல்லாப்புன்னு சொல்லாமலேவும் போயிடுறாங்க. தியாகங்கள் மங்குது, மாறா துரோகம்ங்ற வசவு மலிஞ்சிட்டு வருது. //

நல்லா சொன்னீங்க நறுக்குன்னு!

தீப்பெட்டி said...

சரியாச் சொன்னீங்க.. பாஸ்..

பழமைபேசி said...

குடந்தையார், தீப்பெட்டியார்...நன்றிங்க!!

ராஜ நடராஜன் said...

வருகைப் பதிவு செய்துக்கிறேன்.

பழமைபேசி said...

// ராஜ நடராஜன் said...
வருகைப் பதிவு செய்துக்கிறேன்.
//

மாற்றுக் கருத்து ஆனாலும், தயங்காமச் சொல்லணும்/ தாராளமா எடுத்துக்கணும்.