உடல் கிடைத்திருக்கிறதா? காண்பிக்க வேண்டியதுதானே?? ஊடகங்களே, அழுவாச்சி நாடகங்கள் எதுவும் கைவசம் இல்லையோ??
உண்மையாக இருப்பினும், தோல்வி யாருக்கு? அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது வெற்றியா??
தூக்கிலிட்ட போதும், வீரபாண்டிய கட்டபொம்மன் இன்றும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்?
என் விழிகளினைக் காண
இயலாது திரும்புமாறும்
என் முறுவலினை ஏந்த
இயலாது குனியுமாறும்
உன் உளம் பலம்குன்றிற்றா?
உண்மையில் அன்பு செய்த
முன்னைய நிலையை மூட
முனைந்தனையா இப்போது?
இறப்புற்ற கணங்களெல்லாம்
உண்மையில் இறப்பதில்லை.
பிறப்புற்று எம் வாழ்க்கை ஏட்டின்
பின்புறம் தொடர்ந்து நிற்கும்.
மறப்புற்று வாழ்தல் பொய்
அம் மணித் துகள்களினை.
நாங்கள்
இறப்புற்ற போதும்
அந்தக் கணங்களோ
இறப்பதில்லை!
13 comments:
நன்றி நண்பா..
மக்களே தமிழர்களுக்குச் சாதகமில்லாத பல தகவல்கள் இலங்கை இராணுவத்தால் வெளியிடப்படுகிறது. சற்றுப் பொறுமை காத்திடுங்கள். இலங்கை இராணுவம் கூறிவருவதை ஆதாராபூர்வமாக நிரூபிக்க முடியாது.
//இறப்புற்ற கணங்களெல்லாம்
உண்மையில் இறப்பதில்லை.
பிறப்புற்று எம் வாழ்க்கை ஏட்டின்
பின்புறம் தொடர்ந்து நிற்கும்.
மறப்புற்று வாழ்தல் பொய்
அம் மணித் துகள்களினை.//
சத்தியம் மணியாரே !!
"கடைசி நேர பிரச்சாரம் தோற்கட்டும்!"
உங்கள் வார்த்தை பலிக்கட்டும். தியாகங்கள் தோற்பதில்லை.
கொழும்புவில் தமிழர்கள் சிங்கள காடையர்களால் தாக்கப்படுகின்றனர்.
பொய் சொல்லி பிழைக்கும் இந்த சிங்கள வர்க்கத்தின் இது கடைசி பொய்யாக இருக்கட்டும் ....!!! கோமாளிகள் .....!!!!
//உடல் கிடைத்திருக்கிறதா? காண்பிக்க வேண்டியதுதானே??//
கிடைத்தா தானே காண்பிக்க... பரப்புரையின் உச்சகட்டம்....
அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது வெற்றியா??
//
மனித நேயமற்ற மிருகங்கள்:(
நன்றி நண்பர்களே! இதில் யாரும் தோற்கவும் இல்லை, வெற்றி பெறவும் இல்லை.
இத்தனைக்கும் பிறகு, தமிழர்நலன் காக்கப்படவில்லை என்றால், அது உலக சமுதாயத்திற்கும் மனிதநேயத்திற்கும் விடப்பட்ட சவால்.
தமிழர்கள் மட்டுமே பாதிக்கப்படவில்லை, ஏராளமான பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், நாட்டின் வளர்ச்சி தடைபட்டு இருக்கிறது. இதனைத்தையும் புரிந்து, அமைதியைத் தருபவன் நல்ல தலைவன். இல்லாவிடில் அவன் அரக்கனே! அது, சிறுபான்மைத் தலைவனுக்கும் பொருந்தும், பெரும்பான்மைத் தலைவனுக்கும் பொருந்தும்!!
ஆனால் இந்த இழிநாடகம் போடுவது ஆட்சியாளனுக்கு இழிவு!!!
//இத்தனைக்கும் பிறகு, தமிழர்நலன் காக்கப்படவில்லை என்றால், அது உலக சமுதாயத்திற்கும் மனிதநேயத்திற்கும் விடப்பட்ட சவால்.
//
:(
பொய் பொய்யாக இருக்கட்டும் !
//தூக்கிலிட்ட போதும், வீரபாண்டிய கட்டபொம்மன் இன்றும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்?//
ஆம் நண்பா,
இலங்கை அரசு பொய் வதந்திகளையும், பொய் தகவல்களையும் உலகநாடுகளுக்கு கொடுத்து ஏமாற்றும் வித்தை எவ்வளவு நாள்????
நன்றி நண்பரே...
Post a Comment