7/17/2008

'கூப்பிடு தூரம்' என்றால் என்ன?

கூப்பிடு தூரம் இருக்கும்னு கிராமத்துல சொல்லுவாங்க. நானும் நிறய தடவை கேட்டும் இருக்குறேன். ஒருத்தர் கூப்டும் போது அதிக பட்சம் ஒருத்தரால எவ்வளவு தூரத்துல இருந்து கேக்க முடியுமோ, அது தான் கூப்பிடு தூரம்னு நாமளா நினைச்சிகிட்டதுதான். எங்க அப்பிச்சி சொன்னாரு, அது இல்லடா பேரான்டினு. மேலும் அவரு ஆயிரம், இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்னாடி எழுதின கணக்காயிரம் செய்யுளை அப்படியே விளக்கி சொன்னாரு. அத மேல படிப்போம்:

"முன்னோர்கள் தனக்கான நீட்டல் அளவை, தன் உடல் உறுப்புகளில் இருந்தே அமைத்துக் கொண்டார்கள். ஒரு மனிதனின் சராசரி விரல் அளவை, ஒரு விரக்கடை என்று சொல்வார்கள். 12 விரல்கடைகள் சேர்ந்து ஒரு சாண் ஆகும். ரெண்டு சான் சேர்ந்து 1 அடி ஆகும். இந்த மூன்று அளவுகளை அளக்கவும் எங்கேயும் சென்று அளவு கோல் தேட வேண்டிய அவசியம் இல்லை. இந்த அளவுகளை அளக்க நம் கையில் உள்ள விரல்களே போதும். ரெண்டு முழம் சேர்ந்தது ஒரு சிறு கோல், நான்கு சிறு கோல் சேர்த்தது ஒரு பெருங்கோல், 500 பெருங்கோல் கொண்டது ‘ஒரு கூப்பிடு தூரம்’. எனவே கூப்பிடு தூரம் என்பது நீங்கள் நினைப்பது போல் ஒலி சார்ந்த அளவு கோல் அல்ல! நீட்டல் அளவு பற்றிய அந்தக்காலத்து ‘வாய்ப்பாட்டின்’ அடிப்படையில் அமைந்தது. இப்படிப்பட்ட நான்கு கூப்பிடு தூரம் சேர்ந்தது தான் ‘ஒரு காத தூரம்’. வாயால் பாடி (இசையுடன்) மனதில் நினைவு வைத்துக் கொள்வதற்கு ஏற்ப அமைக்கப்பட்டதால் தான் ‘வாய்ப்பாடு’ என்பதற்கு அப்பெயர் வந்திருக்கிறது"

அணு 8 கொண்டது = கதிரெழுதுகள்
கதிரெழுதுகள் 8 கொண்டது = பஞ்சுத்துகள்
பஞ்சித்துகள் 8 கொண்டது = மயிர்முனை
மயிர்முனை 8 கொண்டது = நுண்மணல்
நுண்மணல் 8 கொண்டது = வெண்சிறு கடுகு
வெண்சிறு கடுகு 8 கொண்டது = எள்ளு
எள்ளு 8 கொண்டது = நெல்லு
நெல்லு 8 கொண்டது = விரல்
விரல் 12 கொண்டது = சாண்
சாண் 2 கொண்டது = முழம்
முழம் 2 கொண்டது = சிறுகோல்
சிறுகோல் 4 கொண்டது = பெருங்கோல்
500 பெருங்கோல் = கூப்பிடு தூரம்
4 கூப்பிடு தூரம் = ஒரு காத தூரம்

9 comments:

சீமாச்சு.. said...

இவ்வளவு விஷயம் இருக்கா இதுல..

2000 முழம் ஒரு கூப்பிடு தூரம் ஆகுதா?

காத தூரம் எல்லாம் சாண்டில்யன் கதையில படிச்சது தான்..

நன்றி.. இது போல நல்ல விஷயங்கள் எழுதறதுக்கு

பழமைபேசி said...

//Seemachu said...
இவ்வளவு விஷயம் இருக்கா இதுல..

2000 முழம் ஒரு கூப்பிடு தூரம் ஆகுதா?

காத தூரம் எல்லாம் சாண்டில்யன் கதையில படிச்சது தான்..

நன்றி.. இது போல நல்ல விஷயங்கள் எழுதறதுக்கு
//கிராமத்துல காதுல விழுகிற விசயங்களுக்கு ஒரு விளக்கம்.... இதெல்லாம் மறைஞ்சி போயிடக்கூடாது பாருங்க... அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்ல ஒரு முயற்சி....

பரிசல்காரன் said...

யோவ்...! உடுமலையா நீ? ஆஹா.. என் சொந்த ஊரு தலைவா அது!

நல்ல நல்ல மேட்டரெல்லாம் எழுதறீங்க!

இந்த தலைப்புக்கு பொருத்தமா நான் ஒண்ணு சொல்லவா?

பாலைவனச்சோலை படத்துல படநாயகர்கள் ரெண்டு மூணு பேர் பஸ் ஸ்டாப்புல நின்னுட்டிருப்பாங்க. (ஸைட்டடிக்க) அப்ப ஒருத்தர் வந்து `இங்க ராமசாமி வீடு எங்க இருக்கு'ன்னு கேப்பாரு. உடனே
சந்திரசேகரோ, தியாகுவோ ‘இதோ கூப்பிடு தூரத்துலதான் இருக்கு' ம்பாரு. உடனே அந்த ஆளு செய்யறதுதான் காமெடி..

அவங்க கைகாட்டின திசையை நோக்கி `ராமசாமீ... ராமசாமீ'ன்னு கூப்பிட்டுட்டே நடந்து போவாரு!!!

அத பாக்கும் போதும், நினைக்கும்போதும் பயங்கரமா சிரிப்பேன்!

(என் ப்ரொஃபைல்ல இருக்கற மெய்ல் ஐ.டிக்கு உங்க ஃபோன் நம்பரை அனுப்புங்க!சில யோசனைகள் சொல்றேன்!)

பழமைபேசி said...

//பரிசல்காரன் said...

//

நீங்க சொன்ன மாதிரியே தொலைபேசி எண்ணை அனுப்பிட்டேனுங்க.... Kerala Queen Bras கிருஷ்ணமூர்த்திய கேட்டதா சொல்லுங்க....

Unknown said...

நல்ல பதிவு, அருமையான தகவல்கள். நன்றி!

பழமைபேசி said...

//இளைய கரிகாலன் said...
நல்ல பதிவு, அருமையான தகவல்கள். நன்றி!
//
வாங்க இளைய கரிகாலன்! நன்றி!!

Rebels Quarters said...

what is an ambidu thooram?

Keezhappatti said...

/////இவ்வளவு விஷயம் இருக்கா இதுல..

2000 முழம் ஒரு கூப்பிடு தூரம் ஆகுதா?

காத தூரம் எல்லாம் சாண்டில்யன் கதையில படிச்சது தான்..///////

இவரு கணக்குல மண்ணை அள்ளி கொட்ட........

Raju Balasubramanian said...

விளக்கம் சரிதான். ஆனால் இவை எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வருமா என்று பார்த்தால் யோசிக்க வைக்கிறது.