அது ஒன்னும் இல்லீங்க.... நம்மூரு இளவட்ட பையன், சட்டம் படிக்கணும்னு ஒரு சட்ட வாத்திகிட்டப் போய் படிக்க சேந்தான். அவன்கிட்ட குருவுக்கு செலுத்த தட்சிணை இல்லை. அதனால ஒரு ஒப்பந்தம் செஞ்சிகிட்டான் தன்னோட குருவோட. அதாவது 'தான் எப்ப வழக்காடி வெல்றானோ அப்ப, நூறு பொற்காசுகள, தான் குருவுக்கு தட்சிணையா செலுத்துவேன்' அப்படின்னு. ஆனா பாருங்க, ஆண்டுகள் பல வந்துச்சு போச்சு, இவன் குருவுக்கு தட்சிணை தர்ற மாதிரி தெரியல.குரு பொறுத்து பொறுத்து பாத்தாரு, கடைசியா இது குறிச்சு ஊரு நீதிசபைல வழக்கு தாக்கல் செஞ்சாரு. வழக்கும் விசாரணைக்கு வந்துச்சு.
கடைசில, 'மாணவன் குருவுக்கு நூறு பொற்காசுகள் தர வேணும்'னு சொன்னாங்க. மாணவன் யோசிச்சு பாத்துட்டு நீதிசபைல சொன்னான், 'நல்ல தீர்ப்பு சொன்னீங்க. அப்ப, அந்த நூறு பொற்காசுகல நான் தர தேவை இல்ல'னு. குழம்பிப்போன நீதி அரசர், 'மாணவனே, என்ன சொல்லுற?, அதான் நீ தர வேணும்னு தீர்ப்பு சொல்லி ஆச்சே'னு கேட்டாரு. அவன் சொன்னான், 'அதான் நான் இந்த வழக்குலயும் தோல்வி கண்டுட்டேன், ஆக பேசின ஒப்பந்தப்படி, எந்த வழக்குலயும் வெல்லாத நான் தர தேவை இல்ல'னு. குருவோ, 'தீர்ப்பின் படி எனக்கு நூறு பொற்காசுக வேணும்'னு கேட்டாரு.
குழம்பின நீதி அரசர், தீர்ப்ப மாத்தி, 'மாணவன் காசு தர தேவை இல்ல'னு சொன்னாரு. மாணவனுக்கு மகிழ்ச்சி! ஆனா பாருங்க, குரு மாணவன பாராட்டிட்டு கேட்டாரு, 'இப்ப நீ வழக்குல வெற்றி அடஞ்சுட்ட, ஆக பேசின ஒப்பந்தப்படி நீ காசுகளை தர வேணும்'னு. நீதி அரசர்கிட்டயும் இத சொல்லி முறையிட்டாரு. நீதி அரசர் என்ன தீர்ப்பு சொல்லி இருப்பாரு?
எனக்கு இதை யோசிச்சு யோசிச்சு மண்டை வெடிச்சிரும் போல இருக்கு. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன். தயவு செஞ்சி யோசிங்க... சொல்லுங்க....
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இப்போ நான் ரொம்ப பிஸியா இருக்கேன்... போயிட்டு அப்புறம் வந்து சொல்றேன்... அவ்வ்வ்.....
//ச்சின்னப் பையன் said...
இப்போ நான் ரொம்ப பிஸியா இருக்கேன்... போயிட்டு அப்புறம் வந்து சொல்றேன்... அவ்வ்வ்.....//
இப்படி எஸ்கேப் எல்லாம் ஆவக் கூடாது சின்ன பையா....வந்து சொல்லு ராசா....
வீணா,
நான் வீட்ல அப்பப்ப 'tube light'னு சொல்லி வையறது உண்டு. உங்கள ஷான் 'சரியான கற்பூரம்'னு சொல்லி வைவாரோ? 'டக்'னு பிடிச்சுடிறீங்களே.... நீங்க சரியாத்தான் சொல்லி இருக்கீங்க. 'operation success, but patient not survived'ங்ற மாதிரி, குருவுக்கு வழக்கு வெற்றி, ஆனா பலன் இல்ல. முரணான ஒன்னு! ஆங்கிலத்துல, 'Lawyer Paradox'னு சொல்லுவாங்க.
முதல்ல ஓட்டு
/*
எனக்கு இதை யோசிச்சு யோசிச்சு மண்டை வெடிச்சிரும் போல இருக்கு. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்
*/
ஏன் எங்க மண்டை நல்ல இருக்கது பிடிக்கலையா ?
Post a Comment