7/01/2008

பங்களிப்பு

நம்ப ஊர் பத்தைக பத்தின பதிவுக்கு, நண்பரோட பங்களிப்பு:

ந‌ன்றாக‌ வ‌ரிசைப்படுத்தி இருக்கீங்க‌, என‌க்கு தெரிந்து ஒரு செடி விட்டு விட்டீர்க‌ள். தொட்டாஞ்சிணிங்கி என்று ஒரு செடி, தொட்ட‌வுட‌ன் அந்த‌ கிளையில் உள்ள‌ அனைத்து சின்ன‌ சின்ன‌ இலைக‌ளும் மூடிக்கொள்ளும், சின்ன‌ வ‌ய‌தில் ம‌ணிக்க்க‌ண‌க்கில் ஒரு அதிச‌ய‌ம் மாதிரி பார்த்துக் கொண்டு இருப்போம். This is the mimosa, also commonly known as 'touch-me-not'.

இன்னொரு செடி என‌க்குப் பெய‌ர் ச‌ரியாக‌ தெரிய‌வில்லை, ஆனால் அத‌னுடைய‌ த‌ண்டைக் கிள்ளி அதில் வ‌ரும் ச‌ற்றே வெள்ளை நிற‌த்தில் இருக்கும் அத‌ன் சாற்றை பிண்ணூசி (Safety Pin) பின் புற‌த்தில் உள்ள‌ சிறு துளையில் விட்டு ஊதினால் bubbles ந‌ன்றாக‌ வ‌ரும். அதுவும் சிறு வ‌யது விளையாட்டு ம‌ற‌க்க‌ முடியாத‌து..

-- இர‌மேசு தியாக‌ராச‌ன்

சரியா சொன்னீங்க இரமேசு. நம்ப இட்டேரீலதான் எவ்வளவு சமாச்சாரம் இருக்கு?! அந்த பால்க்கொழுந்து தண்டு ஒடச்சி, பின்னூசில மொட்டு(குமிழி) விடறது சொன்னீங்க பாருங்க, அது அபாரம். ஓடி ஓடி, ஒடச்சி ஒடச்சி மொட்டு விடுவோம்... என்ன ஒரு சந்தோசம்?!

தும்பக்கொடி ஒடச்சி மூக்குல விட்டு, தும்மல் வர வெப்போம். பூவரச இலைய சுருட்டி, சீட்டி அடிப்போம். கத்தாழைல மணி-இந்துனு எழுதி அதுல சொகம் காணுவோம். இட்டேரீல நெறம் மாறற பச்சோந்திய பாக்குறதுல ஒரு சந்தோசம். தேன் எடுப்போம். சூரிப்பழம், கத்தாழைப்பழம், கள்ளிப்பழம், பிறண்டைப்பழம், கோவைப்பழம்னு பல ரகங்களப் பறிச்சு திம்போம். மொத்தத்துல இட்டேரீல ஓடித் திரிஞ்ச காலம், ஒரு வசந்த காலம்.

(டேய் விசுவா, வாடா, வட்டப்பாறைல சித்த ஒக்காந்துட்டு வரலாம்.... பட்சி வர்ற நேரம் ஆகுதல்லோ...)

No comments: