7/19/2008

நீ எதை உண்டு மயங்கினாய் தமிழா?

தேனுண்டு மயங்கியது வண்ணத்துப்பூச்சி,
கானல்நீர் கண்டு மயங்கியது தும்பி,
பாலுண்டு மயங்கியது கன்று,
கள்ளுண்டு மயங்கியது வண்டு!

கூழுண்டு மயங்கினான் தொழிலாளி,
இலைச்சாறுண்டு மயங்கினான் நோயாளி,
நீர்மோருண்டு மயங்கினான் வழிப்போக்கன்,
சோறுண்டு மயங்கினான் அன்னக்காவடி; ஆனால்
நீ எதை உண்டு மயங்கினாய் தமிழா?
நீ எதை உண்டு மயங்கினாய் தமிழா?

நீர் சுமந்த மண்குடம் எங்கே?
தாகம் தணித்த தாழி எங்கே?
கஞ்சி சுண்டிய சுட்டிப்பானை எங்கே?
கீரை கடைந்த வாய்ச்சட்டி எங்கே??
சோறு பொங்கிய பொங்கற்பானை எங்கே??புளியும் உப்பும் அடுக்கிய அடுக்குப்பானைகள் எங்கே??

காய்கறிகள் சுமந்த நார்க்கூடைகள் எங்கே?
சிந்தாக், காகிதக் கூடைகள் எங்கே?
நவதானியமும் கொண்ட சணல்பைகள் எங்கே?
உடுப்பு சுமந்த நூற்பைகள் எங்கே?
தேநீர் உண்டு மகிழ்ந்த குவளைகள் எங்கே? மேனாட்டு,
நெகிழிப்(plastic) பொருளுக்கு, மயங்கிவிட்டாயேடா தமிழா?

வாருங்கள்! மயக்கம் தெளிந்து,திரும்புவோம் பழமைக்கு!!வாருங்கள்! மயக்கம் தெளிந்து,திரும்புவோம் பழமைக்கு!!

2 comments:

Unknown said...

அருமை,அருமை வாழ்த்துக்கள் நண்பரே.
அன்புடன்
சந்துரு

பழமைபேசி said...

//அருமை,அருமை வாழ்த்துக்கள் நண்பரே.
அன்புடன்
சந்துரு//

பாராட்டுக்கு நன்றி நண்பா!