"காக்கைக்காகாகூகை கூகைக்காகாகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைகா கா!"
இதனைப் பிரித்துப் படிக்கவேண்டும்.
காக்கைக்காகா கூகை = காக்கைக்கு ஆகா கூகை = கூகை(ஒரு வகை ஆந்தை) இரவில் வெல்லுவது காக்கையால் ஆகாது.
கூகைக்காகா காக்கை = கூகைக்கு ஆகா காக்கை = பகலில் கூகையால் காக்கையை வெல்வதற்கு முடியாது. ஆகாத காரியம்.
கோக்கு கூ காக்கைக்கு
கோ = மன்னன்;
கோக்கு = மன்னனுக்கு
கூ = புவி
காக்கைக்கு = காப்பதற்கு
கொக்கொக்க = கொக்கு ஒக்க = கொக்கைப் போன்று தகுந்த சமயம் வரும் வரை காத்திருக்கவேண்டும்.
கைக்கைக்கு = பகையை எதிர்த்து
காக்கைக்கு = காப்பாற்றுதல்
கைக்கைக்காகா = கைக்கு ஆகா=(தகுந்த சமயமில்லாது போனால்) திறமைமிக்க தலைவனுக்கும் கைக்கு எட்டாது போய்விடும்.
பாடலின் பொருள்: தகுந்த சமயமும் வாய்ப்பும் பார்த்து, வாய்ப்புகளை நழுவ விடாது செயலாற்ற வேண்டும்.
நன்றி:- அகத்தியர் தொடுப்பு
7/26/2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஆஹா மிக மிக அருமை, ரொம்ப நன்றிங்க
//rapp said...
ஆஹா மிக மிக அருமை, ரொம்ப நன்றிங்க//
பின்னூட்டம் பதித்தமைக்கு நன்றி! இன்னும் நிறைய வரும்!!
தகரத்தைத் தெடர்ந்து ககரமா? நல்லது. சிறப்பாக உள்ளது. ஆனால் தலையங்கத்தில ககரம் என்பதற்குப் பதில் 'க'கரம் என ஏன் பதிந்தீர்கள். அந்த மேற்கோள் ஏன்...?
//தகரத்தைத் தெடர்ந்து ககரமா? நல்லது. சிறப்பாக உள்ளது. ஆனால் தலையங்கத்தில ககரம் என்பதற்குப் பதில் 'க'கரம் என ஏன் பதிந்தீர்கள். அந்த மேற்கோள் ஏன்...?//
அய்யா, அது பிழை. திருத்தியமைக்கு நன்றி!
ஆஹா .. மிக அருமை.. தமிழை வாழ வைக்க உங்களைப்போன்று பலர் இருபதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். வேற்று மொழிக்காரர் யாரேனும் கேட்கும்போது எடுத்து இயம்புவதற்கு கடல் போல் பெருமைகள் நம் தமிழில் உள்ளன.
அதில் மிக முக்கியமானது காளமேகப்புலவரின் இக்கவி.
நன்றி அன்பரே..
Post a Comment