7/04/2008

அபிசேகங்களும் அதன் பயன்களும்

நமக்கு இதுல அந்த அளவுக்கு ஞானமோ, அக்கறையோ கெடயாது. கோயிலுக்கு போவோம், சாமி கும்பிட்டுட்டு வருவோம், அவ்வளவு தான். தெரிஞ்ச தகவல பதிஞ்சு வெப்போம். அக்கறையும் ஆர்வமும் உள்ளவங்களுக்கு பிரயோசனப்படுமாயிருக்கும். நம்ம நோக்கம், அது தானுங்களே!

பதினெட்டு அபிசேகங்கள்
  1. தீர்த்த அபிஷேகம் - மனசுத்தம்
  2. எண்ணெய் - பக்தி
  3. நெல்லிப்பொடி - நோய் நிவாரண்ம்
  4. பால் அபிஷேகம் - சாந்தம்
  5. மஞ்சள் பொடி - மங்கலம்
  6. தயிர் - உடல் நலம்
  7. நெய் - நல்வாழ்வு
  8. பன்னீர் - புகழ்
  9. நாட்டு சர்க்கரை - சோதிடம்
  10. விபூதி - ஞானம்
  11. சந்தனம் - சொர்க்க லோகம்
  12. தேன் - குரல் வளமை, ஆயுள்
  13. பழச்சாறு - ஜனவசீகரம்
  14. பஞ்சாமிர்தம் - நீண்ட ஆயுள்
  15. பஞ்ச கவ்யம் - பாவம் நீக்கல்
  16. இளநீர் - புத்திரப் பேறு
  17. அன்னம் - அரசு உதவி
  18. மாப்பொடி - குபேர சம்பத்து

பஞ்ச கவ்யம் (பசு கொடுக்குற அஞ்சு பொருளுக) - பால், தயிர், நெய், சிறுநீர் (கோமியம்), சாணம். 'பஞ்ச கவ்யம்'னா சரி. 'பஞ்ச கோமயம்'னா அது தப்பு. கோமியம், அஞ்சுல ஒண்ணு.

(எதையும் தெரிஞ்சு செய்வோம்! அப்படியே அதை நாலு பேர்க்கும் சொல்லி வெப்போம்!! நாஞ்சொல்லுறது சரி தானே?!)

No comments: