7/26/2008

ஒளவையின் பதிலடி

ஒளவையின் காலத்தில் வாழ்ந்த போட்டிப் புலவர், ஒட்டக்கூத்தர். இவருக்கு நெடுநாளாக ஒளவையை அவமானப்படுத்த வேண்டும் என்பது ஒரு வித்துவ அவா. அதை நிறைவேற்று முகமாக, அரச சபையில் வைத்து ஒரு விடுகதை போன்ற கேள்வியைக் கேட்டார், "ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி, அது யாது?" என்று. இந்தக் கேள்வியால் வந்த வினைதான் இந்தப் பாடல்:

எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது.

தமிழில் 'அ' என்ற எழுத்து 'எட்டு' என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் 'வ' என்பது '1/4'ஐ குறிக்கும். ஆகவே 'எட்டேகால்' என்பது 'அவ' என்றாகிறது. ஆக, முதல் சொற்றொடர் 'அவ லட்சணமே' என்று பொருள் தருகிறது.


எமன் ஏவும் பரி என்பது 'எருமை'.

பெரியம்மை என்பது லட்சுமியின் தமக்கையான 'மூதேவி'.

மூதேவியின் வாகனம் கழுதை.

முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது 'குட்டிச்சுவர்'.

குலராமன் தூதுவன் 'குரங்கு'.

ஆரை என்ற பூண்டிற்கு ஒரு தண்டும்(கால்), நான்கு இலையுமுண்டு.

3 comments:

வெட்டிப்பயல் said...

அருமை அருமை... உங்க எல்லா பதிவும் அருமையா இருக்குங்க. தொடர்ந்து எழுதவும்...

பழமைபேசி said...

//வெட்டிப்பயல் said...
அருமை அருமை... உங்க எல்லா பதிவும் அருமையா இருக்குங்க. தொடர்ந்து எழுதவும்...
//
ஊக்கத்திற்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன். மிக்க நன்றி!

Unknown said...

இது அவ்வைக்கும் கம்பனும் நடந்த போட்டியெனப் படித்திருக்கிறேன்...நீங்கள் ஒட்டக்கூத்தரை இழுத்திருக்கிறீர்கள்....ஏன்...?