10/07/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 3!

மூஞ்சியப் பாரு, மொகரக் கட்டையப் பாரு; மொகானூர் முச்சந்தியில செருப்படி வாங்குனவனாட்டவே இருக்குறாம் பாரு!! இப்படியெல்லாம் நாளொரும் பேச்சும், பொழுதொரு திட்டுமா வாங்கிட்டு குதூகலமா இருந்த பூமிதாங்க, வாரக்க நாடு!

ஆமாங்க, நாம என்னதான் பெருமைமிகு ஆறை நாட்டு மண்ணுல பொறந்து இருந்தாலும், வளர்ந்தது, படிச்சது எல்லாமும் வாரக்க நாட்டுல இருக்குற வாகத்தொழுவு வேலூர், சலவநாயக்கன் பட்டிப் புதூர்லதாங்க! தினமும் நாலு மைல் தொலைவு தோட்டங்களுக்குள்ள பூந்து பூந்து, இட்டேரி வழியாத்தான் பள்ளிக்கூடம் போறது. அப்ப, சன்னமா அல்லக் கண்ணுல அம்மணிகளைப் பாத்தாலே போதும், மேல சொன்ன மாதர அர்ச்சனைக எல்லாம் வாங்க வேண்டி இருக்கும்.

ஒரு சொல்லு, பதிலுக்கு சொன்னாப் போச்சு! மடமடன்னு, அம்மணிகெல்லாம் ஒன்னு கூடித் தூத்துவாங்க பாருங்க, ரொம்ப நல்லா இருக்கும். நாங்க அதுகளைக் கேட்டு இரசிப்போம். ரெண்டு நாள் அப்படி இப்படிப் பேசுவாங்க, மூனா நேத்து நெல்லிக் காய் இருக்கு வேணுமான்னு வாஞ்சையாக் கேட்பாங்க. இஃகிஃகி!!

செஞ்சேரி மலைத் தேருக்கு போனாக்க, வாங்கி வந்த கரும்புல மறக்காம ஒரு சல்லை கொண்டு வந்து குடுப்பாங்க. மாலை கோயிலுக்குப் போனவங்க, தேர் முட்டாய் கொண்டு வந்து குடுப்பாங்க. நாம, நம்ம பங்குக்கு, எப்பவாச்சும் எடுக்குற அடுக்குத் தேன்ல ஒரு ரட்டு அவங்களுக்குத் தாறதுதான்! சரி..சரி.. வாங்க, வாரக்க நாட்டுல எந்தெந்த ஊருகெல்லாம் வருதுன்னு பார்க்கலாம்!


பூமேவு தென்சேரி திருவளர் களந்தையும்
கழ்கொண்ட பல்லடமுடன்
பூமலூரழகாய பேறைமா நஅகரமும்
புகல்குயிலை
சூரவூரும்
தேமேவு சோலைசெறி சாமளா புரமெழிற்
செய்புதுவை வெள்ளலூரும்
திரமான கோடிநகர் மங்கலம் வாகையொளிர்
சேர்நிகம மாவலூரும்
பாமேவு வாணிகுடி கொண்டிலகு மிரவலர்கள்
பகரவரி தாயபுத்தூர்
பன்னுமறை யந்தணர்கள் வாழ்விற் செழித்திடும்
பழமைமிகு சிங்கநல்லூர்
மாமேவு செந்தாமரைப் பொய்கை யுங்காஞ்சி
மாந்திவயங்கு மேலாம்
மாநிலம் புகழ்மந்திர கிரிமுருகர் வாசஞ்செய்
வாரக்க நாடுதானே!

தென்சேரி, களந்தை, சூரவூர், நி(நெ)கமம், பேறை, குயிரை, பூமலூர், பல்லடம், சாமளாபுரம், புதுவை, வெள்ளலூர், கோடிநகர், மங்கலம், ஆவலப்பூம்பட்டி, புத்தூர், கீழ்ச் சிங்காநல்லூர்னு, ஆக மொத்தம் பதினாறு பேரூர்கள் கொண்டதுதாங்க வாரக்க நாடு!

ஆமாங்க, நெகமமும் செஞ்சேரியும் முக்கோணத்துல ரெண்டு மொனையின்னா, மூனாவது மொனைதாங்க வீதம்பட்டி வேலூர். கூடவே, துவால்த் துணியும், துப்பட்டி கதையும் எழுதலாமுன்னு இருந்தேன். ஆனா இன்னைக்கு வேலையிலயே ஒருபாடு நேரம் ஆயிப் போச்சு மக்கா! நாளா மக்காநாள் பார்க்கலாஞ் செரியா?!

15 comments:

பிரபாகர் said...

//செஞ்சேரி மலைத் தேருக்கு போனாக்க, வாங்கி வந்த கரும்புல மறக்காம ஒரு சல்லை கொண்டு வந்து குடுப்பாங்க. மாலை கோயிலுக்குப் போனவங்க, தேர் முட்டாய் கொண்டு வந்து குடுப்பாங்க. நாம, நம்ம பங்குக்கு, எப்பவாச்சும் எடுக்குற அடுக்குத் தேன்ல ஒரு ரட்டு அவங்களுக்குத் தாறதுதான்! //

இன்னமும் அந்தமாதிரி இருக்காங்களான்னே? இப்பல்லாம் மாறிடுச்சி. சிறு வயசுல ஓடியாடி விளையாண்டதெல்லாம் கனவா போயிடும் போலிருக்கு. நாகரிகம் பல நல்லதா கொடுத்தாலும் அதே அளவுக்கு நிறைய இழக்குறோம்... ரொம்ப நல்லாருக்குங்க...

பிரபாகர்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சன்னமா அல்லக் கண்ணுல அம்மணிகளைப் பாத்தாலே போதும்//

பார்த்தாலே இப்படியா...,

ஈரோடு கதிர் said...

//அப்ப, சன்னமா அல்லக் கண்ணுல அம்மணிகளைப் பாத்தாலே போதும்//

பள்ளிக்கோடம் போறப்பவேவா..

சின்ன பள்ளிக்கோடமா? பெரிய பள்ளிக்கோடமா?

சல்லைக் கரும்பு, தேர் முட்டாய்... ம்ம்ம்ம்... ஒரே சாலிதானப்போ

vasu balaji said...

சொல்றத பார்த்தா மொகானூர்ல என்ன நடந்தாலும் இஃகின்னு போறா மாதரதான் இருக்கு. இஃகி இஃகி

ஆரூரன் விசுவநாதன் said...

பாடலுக்கான பொருளையும் இணைத்துக் கொடுத்தீர்களாயின் இன்னும் அருமையாக இருக்கும்.


அருமை.

கண்ணகி said...

தமபி, ஐயா, ராசா. சிரிப்பை என்னால் அடக்கவே முடியவில்லை. "மூஞ்சியைப்பாரு, மொகரையப்பாறு, மோகனூர் முச்சந்தியில் செருப்படி

ராஜ நடராஜன் said...

//மூஞ்சியப் பாரு, மொகரக் கட்டையப் பாரு; மொகானூர் முச்சந்தியில செருப்படி வாங்குனவனாட்டவே இருக்குறாம் பாரு!!//

ஐ!மாதர அர்ச்சனை நல்லாயிருக்குதே:)

ராஜ நடராஜன் said...

//தமபி, ஐயா, ராசா. சிரிப்பை என்னால் அடக்கவே முடியவில்லை. //

திருப்பூரு வாத்துக்கோழியக்கா!ரொம்பத்தான் சிரிக்காதீக.ஊரு விட்டு ஊரு பஞ்சம் பொழக்க வந்த எடத்திலயும் அம்மணியோட அர்ச்சனை"மூஞ்சியப் பாரு!மொகறயப் பாரு"தானுங்...

பழமைபேசி said...

@@பிரபாகர்

மாற்றங்கள் என்றும் மாறாதது! இஃகி!

@@SUREஷ் (பழனியிலிருந்து)

ஆமாங்க மருத்துவரே!

@@ கதிர் - ஈரோடு

மாப்பு, வாங்க, வணக்கம்!

@@வானம்பாடிகள்

இஃகி, சொல்லித் தெரிவதில்லை... நன்றிங்க பாலாண்ணே!

@@ஆரூரன் விசுவநாதன்

தலை, பெருமாலும் ஊர் பெயருகதானுங்க....இருந்தாலும் முயற்சி செய்யுறேன்! நன்றி!!

@@vattukozhi

இஃகிஃகி!

@@ ராஜ நடராஜன்

அண்ணா, நீங்க இந்த மாதர வாங்குனது இல்லீங்ளாக்கூ?

குறும்பன் said...

பாட்டுல இருக்குற ஊர் பேர வரிசைகிரமா கொடுத்தா நல்லா இருக்கும். பாட்டை படிச்சி இருக்குற ஊர தெரிஞ்சுக்குறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது.

முடிஞ்சா மற்ற நாட்டை பத்தியும் எழுதுங்க. எங்க ஊரெல்லாம் எந்த நாட்டுல வருதுன்னு தெரிஞ்சிகுவோம். கோரிக்கை புரியுதுல்ல இஃகிஃகி.

க.பாலாசி said...

//தென்சேரி, களந்தை, சூரவூர், நி(நெ)கமம், பேறை, குயிரை, பூமலூர், பல்லடம், சாமளாபுரம், புதுவை, வெள்ளலூர், கோடிநகர், மங்கலம், ஆவலப்பூம்பட்டி, புத்தூர், கீழ்ச் சிங்காநல்லூர்னு, ஆக மொத்தம் பதினாறு பேரூர்கள் கொண்டதுதாங்க வாரக்க நாடு!//

ஊர் பேரெல்லாம் கேள்விபட்ட மாதிரியே இல்லை..சிலதை தவிர. ஆமாம் இப்ப இந்த ஊரெல்லாம் இருக்குங்களா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அட.. எங்க பூர்வீக ஊர் சூலூர் வந்திருச்சுங்க இந்தப் பாட்டுல!! எங்க தாத்தா ஊரு சூலூரு, பாட்டி ஊரு வெள்ளலூருங்கோவ் :)

என்னதாஞ் சொல்லுங்க.. நம்மள சேர்ந்த ஊர் வந்துதுன்னா ஒரு மகிழ்ச்சி தான் :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//க.பாலாஜி said...

ஊர் பேரெல்லாம் கேள்விபட்ட மாதிரியே இல்லை..சிலதை தவிர. ஆமாம் இப்ப இந்த ஊரெல்லாம் இருக்குங்களா?//

ஆமாங்க பாலாஜி. இந்த ஊரெல்லாம் இன்னமும் இருக்குதுங்கோவ்.

Unknown said...

//.. சன்னமா அல்லக் கண்ணுல அம்மணிகளைப் பாத்தாலே போதும் ..//

அண்ணன் அப்பவே பெரியாளா இருந்துருப்பீங்களாட்டு இருக்குதா..??!!

Unknown said...

நேத்திக்கு மாடு ஒன்னு பாக்கிலாமுன்னு வேலூர் வழியாத்தானுங்க எறங்காட்டுக்கு போனோம்...