10/06/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 2!

வணக்கம் மக்கா! நேற்றைக்கு ஆறை நாட்டைப் பார்த்தாலும் பார்த்தோம், ஆளாளுக்கு எங்க ஊர் எந்த நாட்டுல வருதுன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க பாருங்க. எந்தஊர் எந்த நாட்டுலன்னு பாக்குறதுல கூட ஒரு சுவாரசியந்தேன். கூடவே, திலுப்பூர் அக்காவிங்க நான் போட்ட் புதிரையும் விடுவிச்சுப் போட்டாங்க என்ன?

இதுக்கு நடுப்புல, தாராவரத்துகாரர் வந்து வம்புதும்பைக் கோடி காமிச்சுட்டு போறாரு. வம்பு நம்ம அல்லாருத்துக்கும் தெரியும். அதென்ன தும்பு? அய்ய, பண்டங்கன்னுக கழுத்துல கட்டுற தும்பு இதில்லீங்கோ! தும்புன்னா, குசுகுசூ.. குசுகுசூ... ன்னு பேசறதுதான், Gossip, அடுத்தவங்களுக்கு செரமம் தாற மாதிரியான வீண் பேச்சுக! அதான், வம்புதும்புக்கு போக மாட்டாங்கங்றது!!

அப்பறம் இன்னொரு பொன்னான் வந்து, எங்க ஊரான பொட்டையம் பாளையம், அதான் பொட்டிக்காம் பாளையம் எந்த நாட்டுல வருதுன்னு கேட்டுச்சு. அதான், அந்த ஊர் அடங்குன பொன்கலூர் நாட்டைப் பத்தின விருத்தம்:



பொங்கலூர் கொடுவாயி செம்பை குன்றாபுரம்
புற்றிரைசை யுகாயனகரம்
புகல்பொருந்தா புரி திருப்பையூருடனேற்
புகழ்பெரும் பிள்ளை நகரம்
தங்குமிச்சிக் காணி வானவன் சேரியொடு தளிகைநிறை
யங்கிநகரம்
சாரரவண் நல்லூர்பல் லாபுரி குடிமங்கை
தகைமையுட னோதுதென்னா
மங்கலந் தென்பள்ளி லக்கர் பெற்றம்பள்ளி வாய்த்தநம
நாரியெழில்சேர்
மண்ணறை முகுந்தநல் லூரமுக் கயங்கற்றை
மாலூற்றலூர் சிறந்த
புங்கமிகு காஞ்சிநதி லவணநதி யாண்கொல்லி
புராரிநதி மாமாங்குசூழ்
பூர்வீக வலகுமலை யாண்டவன் அரசுபுரி
பொன்கலூர் நாடுதானே!

பொன்கலூர், இச்சிக்காணி, தென்னமங்கலம், கொடுவாயி, அலகுமலை, தென்பள்ளி, செம்புத்தொழு, தளிகை, இலக்கம்பாடி, சொக்கம்பாளையம், அவினாசிபாளையம், பெற்றம்பள்ளி, குன்றிடம், நிறையூர், நமனாரி, புற்றிரைச்சல், அங்கித்தொழு, மண்ணறை, உகாயனூர், அரவணநல்லூர், நல்லூர், பெருந்தொழு, பல்லாக்கோயில், அமுக்கயம், திருப்பூர், பொட்டிக்காம்பாளையம், கற்றாங்காணி, பெரும்பிள்ளையூர், குடிமங்கலம், ஊற்றுக்குழின்னு ஆக மொத்தம் இருபத்து ஏழு ஊருக!

அப்படித்தான் பாருங்க கண்ணூ, திண்டுக்கல் நாகல்நகர்ல நமக்கு ஒரு வங்கணன் (நண்பன்) இருந்தான். சூலூர்ல, அவுங்க சித்தப்பன் ஊட்ல இருந்து வேலைக்கு எங்கூட வருவான். ஒருநா, எங்கூட்டுக்கு வந்திருந்தப்போ எங்கம்மா சொன்னாங்க, உங்க அண்ணன் மத்தியான சோத்துக்கு வந்தவன் தலைக்கு எண்ணெய் வெச்சும் வெக்காமப் போயிட்டானடா அப்படீன்னு. நானுஞ் செரின்னு கேட்டுகிட்டேன்.

கூட வந்தானே, நம்ம வங்கணக்காரன் சிவப்பிரகாசம், ஒன்னுந்தெரியாம திருட்டாட்டு முழி முழிக்கிறான். என்னடா சங்கதின்னு கேட்டதுக்கு திலுப்பிக் கேக்குறான், மத்தியான சோத்துக்கும் தலைக்கு எண்ணெய் வெக்கிறதுக்கும் என்ன சம்பந்தமுன்னு? அப்பத்தான் எனக்கு புரிஞ்சது, ஏன் அவன் அந்த முழி முழிக்கிறானுன்னு!

ஆமாங்க, அவசரமா வெளில கிளம்பிப் போறதை எங்க கொங்கு நாட்டுல சொல்றது, தலைக்கு எண்ணெய் கூட வெக்காமப் போறான் அவன் அப்படின்னு! இஃகிஃகி, நீங்க எங்க தலைக்கு எண்ணெய் கூட வெக்காமக் கிளம்புறீங்க இப்ப? இருந்து எதனாப் பின்னூட்டம் போட்டுட்டு போவிங்களாமா, சித்த!


அங்கண என்னன்னு கேட்டாக்க, வங்கணச் சிறுக்கி வாடுதேன்னானான் இவன்!

16 comments:

Anonymous said...

கால்ல சுடுதண்ணி கொட்டுனு மாதிரி ஓடிட்டான்னு சொல்லறதைவிட இந்த எண்ணெய் சமாச்சாரம் நல்லாத்தானிருக்குது.

பிரபாகர் said...

//அவசரமா வெளில கிளம்பிப் போறதை எங்க கொங்கு நாட்டுல சொல்றது, தலைக்கு எண்ணெய் கூட வெக்காமப் போறான் அவன் அப்படின்னு! //

நல்ல தகவல். விஷயங்கள சொல்லி கலக்குறீங்க...

தும்புன்னா கயிறுன்னு ஒரு அர்த்தம் இருக்குத்தானே? தும்ப விட்டுட்டு வால புடிக்கிறதுன்னு பழமொழி இருக்குல்ல?

ஓட்டுக்கள போட்டாச்சுன்னே..

பிரபாகர்.

Rekha raghavan said...

நல்லா இருக்குதுங்கோ! ஓட்டும் போட்டாச்சுங்கோ!

ரேகா ராகவன்.

Rangs said...

னோவ்.... பிரமாதங்க.. எங்கூரு குடிமங்கலத்துக்குல்லாரதான் வருங்னா..

இந்த முழு விருத்தமும் கெடைக்குமாங்னா..எங்க பாட்டிகுட்ட சொல்லோனும்ங்க்னா..

vasu balaji said...

பிரபாகர் கேட்டுபுட்டாரு. அதென்னுங் நம்ம திண்ணையில தும்ப விட்டு வால புடிக்கிறதுன்னா என்னான்னு கேட்டுபோட்டு வேற வால சை தும்ப புடிச்சிட்டீங்க. ஒரு தும்பே வம்பாப் போச்சேன்னு இருக்க மூணு தும்பு.

செந்திலான் said...

புற்றிரைச்சல்!!!!! நம்ம ஊருங்கன்னே !!!!!!!!!!!!!!!!!! அண்ணே இப்போ அது புத்தரச்சல் ஆயிடுச்சுங்கோ (சில பேர் அத புத்தெரிச்சல் அப்படின்னு சொல்றாங்க ).

அறிமுகத்துக்கு நன்றிங்க அண்ணே !!!!

ஈரோடு கதிர் said...

நம்மு பொழப்பெல்லாம்... எண்ணெய் வெக்காம ஓடற மாதிரிதான் இருக்குங்க..

இன்னொன்னு... எண்ணைய் வெச்சா... சட்னு வழிஞ்சு மூஞ்சிக்கு வேற வந்துறுங் மாப்ள

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பழமையண்ணே, அசத்தலுங்க.

//கதிர் - ஈரோடு said...

இன்னொன்னு... எண்ணைய் வெச்சா... சட்னு வழிஞ்சு மூஞ்சிக்கு வேற வந்துறுங் மாப்ள//

:)

கண்ணகி said...

செல்லப்பேஏமாந்து போச்சே. போகுது போங்க. முந்திகிட்ட மகராசிக்கு என் ஆசிகளைச்சொல்லுங்க. மறந்து போனதெல்லாம் நினைவுக்கு வருது. யாரப்பா உங்கள் தமிழ் வாத்தியார். சொல்லிக்குடுத்த வாத்தியார் பேரைகே காப்பற்றும் பிள்ளை இது. ஆமா, அதிருக்கட்டும். கொழந்த, குட்டிக உங்களுக்கெத்தனை? ஊரானுக்கெத்தனை? இதப்பத்தி ஒரு பதிவு போடுங்க. அப்புறம் என் பேரு வாத்துக்கோழியாக்கும். அது என்ற வூட்டுக்காரர் எனக்கு வைத்த ராக்கும். சொல்லிபுட்டேன்.

பழமைபேசி said...

எல்லாருக்கும் நன்றி!

வாத்துக்கோழி அக்கா, எங்க வாத்தியாருக எல்லாரும் இப்ப திலுப்பூர்லதானுங்....

http://www.tamilmanam.net/inc/star_prof_disp.php?date=2008-12-01

ஆ.ஞானசேகரன் said...

//ஆமாங்க, அவசரமா வெளில கிளம்பிப் போறதை எங்க கொங்கு நாட்டுல சொல்றது, தலைக்கு எண்ணெய் கூட வெக்காமப் போறான் அவன் அப்படின்னு! இஃகிஃகி, நீங்க எங்க தலைக்கு எண்ணெய் கூட வெக்காமக் கிளம்புறீங்க இப்ப?//

நானும் கேட்டுயுள்ளேன்

ராஜ நடராஜன் said...

இன்னைக்கு எனக்கு திடீர்ன்னு ஒரு ஞானோதயம்.ஆமா!இவரு இத்தனப் பாட்டு எழுதறாரே,இதுக்கு எசப்பாட்டா கொஞ்சம் இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான் மாதிரி பாட்டு வரிக்கு புதுசா ஒரு சவுண்டு ஆப் மியூசிக் போட்டா எப்படி இருக்குமுன்னு ஒரு ரோசனை!

ராஜ நடராஜன் said...

குன்றிடம் குண்டடம் ங்களா,சொக்கபாளையாம் சொக்காபாளையமா,அப்புறம் நன்னேரிங்களா?

ராஜ நடராஜன் said...

//ஆமாங்க, அவசரமா வெளில கிளம்பிப் போறதை எங்க கொங்கு நாட்டுல சொல்றது, தலைக்கு எண்ணெய் கூட வெக்காமப் போறான் அவன் அப்படின்னு!//

முன்னாடியெல்லாம் தலைக்கு எண்ணெய் வைக்காத மூஞ்சி ஏதாவது இருந்துச்சாக்கும்(இரு பொருள் கொள்க)

துபாய் ராஜா said...

எங்க ஊருப்பக்கம் 'பறவைக்காலி'ன்னு சொல்லுவாங்க.... :))

பழமைபேசி said...

@@ஆ.ஞானசேகரன்

நன்றி ஞானியார்!

@@ராஜ நடராஜன்

ஆமாங்க அண்ணே!

@@துபாய் ராஜா

தகவலுக்கு நன்றிங்க!