கொங்கு செழித்தால், எங்கும் செழிக்கும்! கொங்கு மலிந்தால், எங்கும் மலியும்!! இது நானா சொல்வது அல்லங்க; சங்ககாலப் பழமொழி! கொங்குநாட்டான் அப்படீன்னா ஒரு தனியிடம் எந்த சபையிலும் உண்டு!
நெருக்கடி காலத்துல காரோட்டி உசுரைக் காப்பாத்தினது ஆகட்டும், எங்கும் கோலோச்சி எவரும் அசைக்க முடியாத இராமாவரம் தோட்டத்துக்குள்ளவே புகுந்து மிரட்டினதா இருக்கட்டும், அறிவியல் கண்டுபிடிப்புகளா இருக்கட்டும், அதுல கொங்கு நாட்டுக்கு ஒரு தனியிடம் இருக்கத்தான செய்யுது?!
காரணம் என்ன? வம்புதும்புக்கு போக மாட்டாங்க; தானதர்மம் நெறயவே செய்வாங்க; விருந்தோம்பலுக்கு இலக்கணமா இருப்பாங்க; சமத்துவம் பேணுவாங்க; குழைந்தையக் கூட, வாங்க கண்ணூன்னு மரியாதையா அழைப்பாங்க...
அதான், கூடியிருக்குற பொட்டி தட்டிகள்ல இருக்குற ஒரு பொட்டி தட்டியப் பார்த்துக் கேட்டானாம் வெள்ளைக்காரன், are you from Coimbatore by any chance?னு. எல்லாம், அவனைப் பாத்து அந்த பொட்டிதட்டி கத்தினதுதான் காரணம். ஆமாங்க, அந்த பொட்டிதட்டி, “Will you please set-up'nga, please?"னு கோவத்துல கூட குழைஞ்சுதாம்!
கொங்குநாட்டுல 30க்கும் மேற்பட்ட வேளிர்கள் இருந்ததாக கொங்கு சதகம் சொல்லுது. அதுல, எந்த சிற்றரசுக்கு கீழ நான் பிறந்த மண் வருதுன்னு ஒரு அலசல்... அதுல கிடைச்சதுதான், இந்த ஆறை நாடு பற்றின விருத்தம்.
சேவைநக ரன்னியூர் வெள்ளாதி கோமங்கை திசை
புகழவாழ் முடுதுறை
தென் கவசை துடியலூர் நீலநகர் பேரையொடு
தெக்கலூர் கரை மாதையும்
மேவுபுக ழவிநாசி கஞ்சை கானூர்கரவை வெண்பதியு
மிருகா லூரும்
விரைசேரு முழலையொடு வடதிசையி லுறுகின்ற
வெள்ளையம்பாடி நகரும்
நாவலர்க் கினிதான திருமுருகு பூண்டியொடு
நலசெவளை பழனைநகரும்
நம்பியூ ரோடெலத் துருக்கிரம் புலவர் நகரமுட
னினிமையான
கோவினகர் தொண்டைமான் புத்தூரு முட்டமே கூடலூர்
சிங்கநகருங்
குடக்கோட்டூர் குள்ளந்து றைப்பதியு வாள்வந்தி
கோட்டைகரை யாறைநாடே!
புகழவாழ் முடுதுறை
தென் கவசை துடியலூர் நீலநகர் பேரையொடு
தெக்கலூர் கரை மாதையும்
மேவுபுக ழவிநாசி கஞ்சை கானூர்கரவை வெண்பதியு
மிருகா லூரும்
விரைசேரு முழலையொடு வடதிசையி லுறுகின்ற
வெள்ளையம்பாடி நகரும்
நாவலர்க் கினிதான திருமுருகு பூண்டியொடு
நலசெவளை பழனைநகரும்
நம்பியூ ரோடெலத் துருக்கிரம் புலவர் நகரமுட
னினிமையான
கோவினகர் தொண்டைமான் புத்தூரு முட்டமே கூடலூர்
சிங்கநகருங்
குடக்கோட்டூர் குள்ளந்து றைப்பதியு வாள்வந்தி
கோட்டைகரை யாறைநாடே!
இதுல மொத்தம் 35 ஊர்கள் அடங்கி இருக்குங்க. நான் பிறந்த மண், மொதல் வரியிலயே இருக்கு. ஆமாங்க, கோமங்கலம் புதூர்ல இருந்து ரெண்டு மைல் தள்ளி இருக்குறதுதான் எங்க ஊரான அந்தியூர். இஃகி!
ஆறை நாட்டுக்காரன்னா நீ பெரிய வெண்ணையா? அப்படீன்னு ஒடனே எகுறுவீங்களே? நாங்க அப்படியெல்லாம் நடந்துக்கவே இல்லை. அமைதி! அமைதி!! ஆனா ஏன் அப்படி சொல்லுதோம்?
அதுக்கு முன்னாடி, கொங்குநாட்டுக்கும் வெண்ணெய்க்கும் ஒரு தொடர்பு இருக்கு?? ஆமாங்க, வெண்ணெய்ன்னா அது ஊத்துக்குளிதாங்க. இரயிலெல்லாம் கூட அங்க பிரத்தியேகமா நின்னு வரும் தெரியுமா?
சுலுவுல சிக்காத, கடைஞ்செடுத்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய வெண்ணெய் மாதிரியான, அரிதான ஆள் அவன் அப்படீன்னு உவமைப்படுத்திச் சொல்றதுதாங்க அது. வெண்மையான நெய்; வெண்ணெய்! அதுவே, வெண்ணைன்னும் புழக்கத்துல வந்திடுச்சி! ஆனா, வெண்ணைன்னா, வெண்மையான நெல்.
வெண்ணையப் பத்தி பேசிட்டு, வெங்காயத்தைப் பத்திப் பேசாட்டா குத்தமாயிடாது? அதுவும், கொங்குநாட்டுல இருக்குற ஈரோடைல இருந்து வந்ததுதான்ங்றது சொல்லித் தெரிய வேண்டியதில்லை! உயிரில்லாத, விதையில்லாத, வெறும் சதைப் பிண்டமானதுன்னு நையாண்டி செய்யுறதுக்கு அதை ஈரோட்டுக்காரர் புழங்கவே, அது பிரசித்தம் ஆயிடுச்சி. என்னா பெரிய வெங்காயம்? வெங்காய தேசியம்... இப்படியெல்லாம் போகும் அது!
வெங்காயமோ, வெண்ணெயோ.... நாம போயி பொழப்பு தழைப்பைப் பார்த்தாதான் நம்ம வண்டி ஓடும்... வாங்க போலாம்!
33 comments:
ஆஹா அப்போ ஒருத்தர வெண்ணென்னு திட்டுனா கவுரவமா?
சூப்பர்ப் விளக்கங்கள் பழமை அய்யா
என்ன நடக்குது இங்க :-)
//.. நம்பியூ ரோடெலத் துருக்கிரம் புலவர் நகரமுட ..//
இது கோபிக்கு பக்கத்துல இருக்குற நம்பியூருங்களா..??
@@பிரியமுடன்...வசந்த்
ஒரு நாளைக்கு அண்ணா சொல்றீங்க, மறு நாளைக்கு அய்யா சொல்றீங்க... போடா வெண்ணெய் சொல்லாத வரைக்கும் நல்லது; இஃகி!
வெண்ணெய் வெட்டின்னா, வெண்ணெய வெட்டுற அளவுக்கு பலசாலின்னு வஞ்சப் புகழ்ச்சியில வாருறதுதானுங்க.... அதான், போடா வெண்ணெய்!
//Thekkikattan|தெகா said...
என்ன நடக்குது இங்க :-)
//
ஊர்ப் பழமைதான்! என்ன பிரபாகர் சிரிப்போடவே கிளம்பிட்டீங்க??
@@பட்டிக்காட்டான்..
ஆமாங்க, ஆறை நாட்டு மணவாளா!
ஆறை நாட்டுச்சிங்கம் அண்ணன் பழமை வருகிறார் பராக் பராக் :)
//கொங்கு செழித்தால், எங்கும் செழிக்கும்! கொங்கு மலிந்தால், எங்கும் மலியும்!! //
கொங்கு இப்ப மலிந்தா இருக்கு?
இயல்பான எழுத்து நடை..பதிவு நல்லாயிருக்குங்க.
//குழைந்தையக் கூட, வாங்க கண்ணூன்னு மரியாதையா அழைப்பாங்க...
//
கண்டிப்பா, இதை பார்த்து வியந்து பின்பற்றி வருகிறேன்....
//லுவுல சிக்காத, கடைஞ்செடுத்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய வெண்ணெய் மாதிரியான, அரிதான ஆள் அவன் அப்படீன்னு உவமைப்படுத்திச் சொல்றதுதாங்க அது.//
நன்றி பழைமைபேசி... அருமையான விளக்கம். இந்த வகையில் யோசிக்கவே இல்லை.
//நாம போயி பொழப்பு தழைப்பைப் பார்த்தாதான் நம்ம வண்டி ஓடும்... வாங்க போலாம்!//
சரிதான், இதுதான் உண்மை.
பிரபாகர்.
வடக்குப் பெரும்பாலை,
வைகாவூர் தெற்கு
குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று-கிடக்கும் களித்தண் டலை மேவும்
காவிரி சூழ் நாடு
குளித்தண் டலையளவு கொங்கு-
எங்கோ படித்த தனிப்பாடல் நினைவிற்கு வருகிறது.
வடக்கு பெரும்பாலை
தெற்கு பழனிமலை
மேற்கே வெள்ளியங்கிரி
கிழக்கு குளித்தலை
பகிர்விற்கு நன்றி.....
//வெங்காய தேசியம்... இப்படியெல்லாம் போகும் அது!//
எங்கயோ உள்குத்து இருக்குமாட்டமிருக்குதுங்ணா.....நா...
ஆட்டத்துக்கு வல்லீங்கோ......
வம்புதும்புக்கு போக மாட்டாங்க
" குழைந்தையக் கூட, வாங்க கண்ணூன்னு மரியாதையா அழைப்பாங்க..."
இதை எனது குடும்பத்தார் கழிந்த வாரம் கண்கூடாகக் கண்டு மகிழ்ச்சி உற்றோம்.
தம்பி மணி எனது பேத்தி மல்லிகையையும், பேரன் கவினையும் கண்ணூன்னு கண்ணூன்னு அழைத்து, அவர்களுடன் கீழே உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அவர் குழந்தைகளுக்குக் கொடுத்த மரியாதையைக் கண்டு எனது குடுபத்தார் வியப்படைந்து, இப்பொழுது குழைந்தைகளுக்கு மரியாதைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கண்ணூன்னு கண்ணூன்னு அழைக்க ஆரம்பித்துவிடுவார்கள் போல தெரிகிறது.
கொக்கு தலையில் வெண்ணெய வைக்கிற கதையை இப்போதுதானே படித்தோம்.
அன்புடன்
அண்ணன் நாஞ்சில் பீற்றர்
so nice
and
informative
Can u tell SALEM is under KONGU or any other rule?
//எங்கும் கோலோச்சி எவரும் அசைக்க முடியாத இராமாவரம் தோட்டத்துக்குள்ளவே புகுந்து மிரட்டினதா இருக்கட்டும்
//
அண்ணே இது என்னாண்ணே நான் கேள்விப்படாத விஷயமா இருக்கே?? விரிவாச் சொல்ல முடியுமா??
\\வம்புதும்புக்கு போக மாட்டாங்க; தானதர்மம் நெறயவே செய்வாங்க; விருந்தோம்பலுக்கு இலக்கணமா இருப்பாங்க; சமத்துவம் பேணுவாங்க; குழைந்தையக் கூட, வாங்க கண்ணூன்னு மரியாதையா அழைப்பாங்க...\\
எளிதில் எல்லோரையும் நம்புவாங்க
கொங்கு மண்ணின் மகத்துவத்தை அப்படியே சொன்னதற்கு வாழ்த்துக்கள்
ஆகா, இடுகையப் போட்டுட்டு விமானம் ஏறி, நார்போஃக் வர்றதுக்குள்ள பிரபலம் ஆயிடுச்சு போலிருக்கே.... சரிதான்!
மக்கா, இங்க மணி 11 ஆச்சு; எல்லாருக்கும் நன்றி; புதுகை அண்ணனுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு நான் நித்திரைக்கு போறேன்!
//எம்.எம்.அப்துல்லா said...
//எங்கும் கோலோச்சி எவரும் அசைக்க முடியாத இராமாவரம் தோட்டத்துக்குள்ளவே புகுந்து மிரட்டினதா இருக்கட்டும்
//
அண்ணே இது என்னாண்ணே நான் கேள்விப்படாத விஷயமா இருக்கே?? விரிவாச் சொல்ல முடியுமா??
//
காளியம் பாளையத்து கட்டபொம்மன், நெகமம் நெப்போலியன், கொங்குநாட்டு மறவன், கோவை மாவீரன் யாருன்னு கேட்டுத் தெரிஞ்சுக்குங்க!
பின்னாடி, வயசாயி, நாடி தளர்ந்து, கொங்குப் பங்காளிகளே ஒத்துழைக்காம / மாறுதலையாவும் மாற அவருக்கு வீழ்ச்சி... அது வேற விசயம்... ஆனா, 1978 - 1987 வரைக்கும்.... அவர் ஆட்சிதான்!
//அதுல கொங்கு நாட்டுக்கு ஒரு தனியிடம் இருக்கத்தான செய்யுது?!//
? மற்றும் ! ஒரே இடத்தில் :))
//“Will you please set-up'nga//
நம்முளுக்கும் தானுங் எங்க, எப்ப, என்ன பேசினாலும் இந்த "ங்க" வந்துருதுங்...
வெங்காயம் நம்மூருக்காரரு சொன்னதும்னாலும் அது வெளிநாட்ல இருந்த வந்த சமாச்சாரம்லங்க
அப்பொற ஒன்னு தெரிங்லா மாப்ள
நம்ம பாலா அண்ணனோட தம்பி மெட்ராசுல இருந்துகிட்டு இன்னைக்கு இங்கிருந்துதான் வெண்ணெய் வாங்கி நெய் காச்சி திங்றாருங்களாமா..
இப்பவெல்லாம்... ஊத்துக்குளில ரயிலு நின்னாக்க மோர் விப்பாங்க..... வாங்கி குடிச்சுப்பாருங்க... அம்புட்டு ருசியா இருக்குமுங்க
அப்ப recessionக்கு காரணம் கொங்கு நாடுதான்னு சொல்லுறீய?
சரிதான்.. ஒபாமாவுக்கு இப்பவே மெயில் தட்டனும்.
கதிர் - ஈரோடு said...
/இப்பவெல்லாம்... ஊத்துக்குளில ரயிலு நின்னாக்க மோர் விப்பாங்க..... வாங்கி குடிச்சுப்பாருங்க... அம்புட்டு ருசியா இருக்குமுங்க/
இப்புடி உசுப்பேத்தி விமானத்துல ஊத்துக்குளி மோரு கேட்டு ஈவ் டீசிங்ல மாட்டி விடவாக்கு.
ஏனுங் பழமை. இந்த கடைஞ்செடுத்த வெண்ணெய்ல கடைஞ்செடுத்த அயோக்கியன்னு உள்குத்து சைடு குத்து ஓன்னும் இல்லீங்களே.
(ஒன்னு சரியா போட்டிருக்கேன்)
பழமையண்ணே, நம்மூர்ப் பழமை கலக்கலுங்க :)
சிங்கனூர்ங்கறது சிங்காநல்லூர்னு நினைக்கிறேன். சூலூரெல்லாம் அப்புறம் தான் உருவானது போல..
அருமையான பாடலுங்ணா. இந்தப் பாட்டு எந்த நூல்ல வருதுங்ணா?
கொங்கு மண்டலத்தப் பத்தி சொன்னது நூத்துக்கு நூறு உண்மைங்க :)
நமக்கு சின்ன வயசுல சொல்லித்தந்ததே இந்த "ங்க" போட்டுப் பேசறதத்தாங்க :)
ஏனுங்ணா....நம்மூரு முக்கோணம், கள்ளிப் பாளையம் அப்பறம் வெஞ்சப்பட்டி, பொட்டயம்பாளயம் இதெல்லாம் பத்தி எதாவது போட்ருக்குதா?
அந்தியூரு நம்ம பாட்டியவங்க ஊருங்னோவ்.. நம்ம மாமன் பொண்ணு எல்லாம் ஜீவா நகர்தானுங்.. ;)
நம்மூரு நெனப்பக் கெளப்பி உட்டுட்டீங்களே..
ஏனுங்ணா....நம்மூரு முக்கோணம், கள்ளிப் பாளையம் அப்பறம் வெஞ்சப்பட்டி, பொட்டயம்பாளயம் இதெல்லாம் பத்தி எதாவது போட்ருக்குதா?
அந்தியூரு நம்ம பாட்டியவங்க ஊருங்னோவ்.. நம்ம மாமன் பொண்ணு எல்லாம் ஜீவா நகர்தானுங்.. ;)
நம்மூரு நெனப்பக் கெளப்பி உட்டுட்டீங்களே..
ஊர் விளக்கங்களுடன் கூடிய இடுகை...நன்று....
அட தம்பி? நம்மாளா நீங்க? {மரியாதை} அபபவும் வாசம் அடிச்சுது? என்ன குலம்நீங்க? வளைச்சுப் போட்டிறலாம்? இப்படி துடியான மாப்பிள்ளைதான் ரொம்பப்பேர் தேடிக்கிட்டு இருக்காங்க. எங்குருப்பெருமை அமெரிக்கா வரைக்கும் கேட்குதோ. விசயத்துக்கு வாறன். காரோட்டியவர் கண்ணப்பன். நெகமம் நெப்போலியன்கே.வி.கந்தசாமி. ராமாவரத்தில் புகுந்த்தவர் ஏ.எம். ரத்தினம். கரிக்கிட்டா .தம்பி அட வாறன். காரோட்டியவர் கண்ணப்பன். நெகமம் நெப்போலியன்கே.வி.கந்தசாமி. ராமாவரத்தில் புகுந்த்தவர் ஏ.எம். ரத்தினம். கரிக்கிட்டா .தம்பி. நையாண்டியைப் பார்க்கும்போதே நெனெச்சேன். இது நம்மாளு
@@சின்ன அம்மிணி
வணக்கமுங்....
@@அப்பாவி முரு
எடை வெட்டுல இருக்கற மாதர சொல்றாங் தம்பீ!
@@Rex
நன்னீங்கோ!
@@ பிரபாகர்
வாங்க பிரபாகர், வணக்கம்!
@@ஆரூரன் விசுவநாதன்
ணா, வாங்! நெம்ப விசியம் இன்னுமு இருக்குதுங்!
//அப்பன் said...
வம்புதும்புக்கு போக மாட்டாங்க
//
அதேதானுங்!
@@naanjil
அண்ணா, வணக்கம்! :-0)
@@யாசவி
கொங்குன்னு நினைக்குறனுங்... சாய்(யு)ங்காலம் வந்து பாத்து சொல்றனுங்...
@@எம்.எம்.அப்துல்லா
அண்ணா, எங்க வட்டுக்கோழி மாமா சொல்லி இருக்குறதை படீங்க!
@@நிகழ்காலத்தில்...
நன்றிங், திருப்பூரார்!
@@SUREஷ் (பழனியிலிருந்து)
இஃகி; கலையம்புத்தூராரே, பாட்டுல பழனையூர் பார்த்தீங்களா?
@@கதிர் - ஈரோடு
மாப்பு வாங்க, ரெண்டு லோட்டா மோர் வேணும் எனக்கு!
@@முகிலன்
ஆமா, தட்டுங்க, எங்க ஊரை இன்னும் மேல கொண்டு போகச் சொல்லுங்க; உங்களுக்கு புண்ணியமாப் போவும்!
@@வானம்பாடிகள்
பாலாண்ணே, அய்ய... அது, பிரிம்பா சொல்ற சொலவடைதானுங்!
@@ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
வாங்க தம்பி, ஆமாங்க, கொங்கு சதகம்!
@@Rangs
ஆகா, பார்த்தசாரதி அவிங்க ஊரா நீங்க? அப்ப, நீங்களும் ஆறை நாட்டாந்தான்!
@@க.பாலாஜி
நன்றிங்க பால்சு!
@@vattukozhi
வாங்க மாமா! நெம்பச் செரியா சொல்லிப் போட்டீங்க ஒன்னைத் தவுர!! ஆமாங்க, கண்ணாலம் ஆயி குழைந்தை குட்டிக ஆயிப் போச்சுங்களே.... நீங்க நெம்ப லேட்டு!!!
//vattukozhi said...
அட தம்பி? நம்மாளா நீங்க? {மரியாதை} அபபவும் வாசம் அடிச்சுது? என்ன குலம்நீங்க? வளைச்சுப் போட்டிறலாம்? இப்படி துடியான மாப்பிள்ளைதான் ரொம்பப்பேர் தேடிக்கிட்டு இருக்காங்க.//
ஆத்தோய்... நம் மாப்ளைக்கு கண்ணாலாம் ஆயிபோச்சு...
இனிமே இப்பிடிகிப்பிடி பேசிப்போடாதிங்க..
//பழமைபேசி said...
வாங்க மாமா! நெம்பச் செரியா சொல்லிப் //
மாப்பு... வாத்துக்கோழி..
மாமா இல்லீங்க....
அது திருப்பூர் அக்காங்க
////பழமைபேசி said...
வாங்க மாமா! நெம்பச் செரியா சொல்லிப் //
மாப்பு... வாத்துக்கோழி..
மாமா இல்லீங்க....
அது திருப்பூர் அக்காங்க//
அடடா.... நான் இதை எதிர்பார்க்கவே இல்லியே! நொம்ப நன்னிங்க மாப்பு!!
//கொங்குநாட்டான் அப்படீன்னா ஒரு தனியிடம் எந்த சபையிலும் உண்டு!//
நம்ம சபையிலும் உங்களுக்கு தனியிடம் உண்டுங்கோ.... :))
http://rajasabai.blogspot.com
//ஆமாங்க, கண்ணாலம் ஆயி குழைந்தை குட்டிக ஆயிப் போச்சுங்களே.... நீங்க நெம்ப லேட்டு!!!//
அண்ணனுக்கு லேட்டாயிப்போச்சேன்னு வெசனத்தப் பாரு...?.. இருங்க.. இருங்க.. என்ற அண்ணிகிட்ட போட்டுக்க்கொடுத்தாதேன் சரியாப் போகும்...!!
(இஃகி..இஃகி.. சும்மாத் தமாசு.. தமாசுங்கோவ்)
பதிவுக்கு சம்பந்தமில்லாத விவகாரம்...ஆனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை...
//
குழைந்தையக் கூட, வாங்க கண்ணூன்னு மரியாதையா அழைப்பாங்க...
//
இது முழுக்க உண்மையல்ல...இது பற்றி பேசினால் ஒரு நல்ல பதிவு திசை திரும்பி விடும் என்பதால் வேறு சமயம் கிடைத்தால் பேசலாம்...
பார்த்த சாரதிங்களா? அதாருங்? எந்தூருங்?
ஏனுங் மணி.. அந்தியூர்ல உங்கூடு எங்கிருக்குதுங்?
Post a Comment