5/29/2009

அன்பர் அகநாழிகை அவர்கட்கு ரெண்டு பைசா!

இன்றைய உலகமயமாக்கல், பொருளாதாரமயமாக்கல், வணிகமயமாக்கல், முழுகதியில் திறம் நகர்வு, இப்படியான மாற்றங்கள் முழு வீச்சில் நடைபெறுகிற கால கட்டத்தில் உலக அளவில் உள்ள பெரும்பாலான மொழிகள் அருகி வருகிறது என்பது அமெரிக்காவுக்கு கறுப்பினப் பிள்ளை அதிபர் என்பதற்கு ஒப்பானதாகும். என்ன? ஒரே வித்தியாசம், பின்னது மகிழ்வான பற்றியம், முன்னது கவலை கொள்ளக் கூடிய பற்றியம்!

இத்தகைய சூழலில் தமிழ்த் துணைப்பாடத்தில் பாடம் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த இடுகை ஒரு மேற்கோள். இதுதான் இன்றைய நிலமை!

மொழி வளம், கடந்தகாலம், வாழ்க்கையில் ஒருபுறம் இருப்பவனுக்கு மறுபக்கத்து லெளகீகம் பற்றின தகவல், இப்படி நிறையப் பற்றியங்கள் இலக்கியங்கள் மூலமாக நமக்குக் கிடைக்கிறது. அதற்காக படைக்க எத்தனிப்பவன் எல்லாம், அடுத்தவரின் இலக்கியம் படித்து இருக்க வேண்டும் என்று இந்த காலகட்டத்தில் நாம் யாரையும் குறை சொல்ல இயலாது. அப்படிச் செய்கிற போது, தமிழின் வளர்ச்சிக்கு, அல்ல, தமிழின் பின்னடைவுக்கு அதுவே ஒரு காரணம் ஆகி விடும்.

அதே வேளையில், இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி, அதன் அருமை பெருமைகளை எடுத்தியம்பி வாசிக்கும் படியாக ஊக்குவிப்பது நலம் பயக்கும். அவர்களுக்கும் செறிவான சொல் வளம், சொற்றொடர் அமைப்பு முதலியன கைகூடும். நான் சிறு வயதில் இருந்த போது, இலக்கியம் என்றாலே ஒருவித அச்ச உணர்வு மேலோங்கும். அதற்கு என்ன காரணம்?

என்னைவிட மூத்த வயதினர் அளவளாவும் போது, அது எதோ மாயை போன்றதொரு பிரம்மையை ஏற்படுத்தியதே! இதோ எமது தமிழ் முதுகலைப்பட்ட இரண்டாம் ஆண்டு பாடப்புத்தகத்தில் இருந்து, இலக்கியம் என்பதற்கு ஒரு விளக்கம், புத்தகத்தில் உள்ளது உள்ளபடியே:

“இலக்கியம் என்பது மனித வாழ்விலிருந்தே உருவாகிற கலையாகும். மனித வாழ்வை பார்த்தது போலச் செய்தலே இலக்கியம். மண் வளத்திற்கும், பருவ மாற்றங்களுக்கும் விதை நேர்த்திக்கும் ஏற்ப விளைச்சலின் வகைகள் வேறுபடுவது போலவே, இலக்கியத்தின் வளர்ச்சியும் வேறுபடும்!”.

எனவே தமிழில் போதிய சொல்வளம் மற்றும் படைப்பாற்றல் உடையவன், அவன் வாழ்கிற காலத்தை அடிப்படையாக வைத்து இலக்கியம் படைக்க முடியும். அவனுக்கு மற்றவர்களது படைப்புகள் வாசித்திருக்க வேண்டுமென்கிற கட்டாயம் இல்லை. வாசித்து இருப்பானாயின், படைக்கும் போது அது கைகொடுக்கும், அவ்வளவே! ஊர் வழியே போகிறான். போகிற வழியில் அவன் கண்ட பாமரனது லெளகீகத்தை அச்சில் ஏற்றி, நாடோடி இலக்கியம் என்றான். ஏற்றுக் கொண்டோமே?!

வலைப்பூ என்ற நவீனம், ஒருவனைத் தமிழின்பால் ஏற்றியிருக்கிறது. அவனைத் தமிழுலகம் வரவேற்க வேண்டும். சமூக சிந்தனைகள் பிறக்க வேண்டும். இருப்பதை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற அவன் வழிவகை செய்ய வேண்டும். முடிந்த வரை தமிழ்ச் சொற்களையவன் கையாள வேண்டும்.

படைப்பு என்பது படைப்பில் இருக்க வேண்டும்; அதைப் படைக்கும் தனி நபரின்பால் இருக்கக் கூடாது. விமர்சனம் என்பதும் அதே வழியில் படைப்பின் மீது இருக்க வேண்டும்; படைப்பாளன் மீது இருக்கக் கூடாது என்பதில் அனைவரும் கருத்தாய் இருந்திடல் வேண்டும் என்ற உங்கள் சிந்தனையுடன் பாவேந்தரின் பாவொன்று:

தன்னினத்தான் வேறினத்தான் தன்பகைவன் தன்நண்பன் எவனா னாலும்
அன்னவனின் அறுஞ்செயலைப் பாராட்டு வோன்செய்தி அறிவிப் போனாம்!
சின்னப்பிழை ஏடெழுதும் கணக்காயன் செய்திடினும் திருநாட் டார்பால்
மன்னிவிடும். ஆதலினால் ஏடெழுதும் வாழ்க்கையிலே விழிப்பு வேண்டும்!


25 comments:

vasu balaji said...

/முடிந்த வரை தமிழ்ச் சொற்களையவன் கையாள வேண்டும்./

முயல்கிறேன்.

தலைப்பு புரியவில்லை.:‍-s

பழமைபேசி said...

//பாலா... said...
/முடிந்த வரை தமிழ்ச் சொற்களையவன் கையாள வேண்டும்./

முயல்கிறேன்.

தலைப்பு புரியவில்லை.:‍-s
//

பாலாண்ணே, வாங்க, வணக்கம்!

ரெண்டு பைசாங்றது பரங்கிக்காரனோட மரபுச் சொல்லுங்க அண்ணே.

2 cents = humble opinion

ரெண்டு பைசா = பணிவார்ந்த கருத்துகள்

இது இந்த சுட்டியோட எதிர்வினை!நன்றிங்க அண்ணே!

இராகவன் நைஜிரியா said...

// படைப்பு என்பது படைப்பில் இருக்க வேண்டும்; அதைப் படைக்கும் தனி நபரின்பால் இருக்கக் கூடாது. விமர்சனம் என்பதும் அதே வழியில் படைப்பின் மீது இருக்க வேண்டும்; படைப்பாளன் மீது இருக்கக் கூடாது என்பதில் அனைவரும் கருத்தாய் இருந்திடல் வேண்டும் //

சரியாகச் சொன்னீர்கள் ஐயா. படைப்பை விமர்சிக்கலாம் தப்பில்லை. ஆனால், தனிப்பட்ட விமர்சனம் என்பது ஏற்றுக் கொள்ளப் படக்கூடாதுதான்.

இராகவன் நைஜிரியா said...

நான் இன்னும் கற்கும் நிலையில்தான் இருக்கின்றேன். அதனால் சொற்களை கையால்வதில் சிக்கல் அதிகம் இருக்கின்றது.

சிக்கல் இல்லாமல் என் வாழ் நாளில் கற்றுக் கொண்டு விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

தமிழும் சரியாகத் தெரியவில்லை, ஆங்கிலமும் சரியாகத் தெரியவில்லை. இதுதான் இன்றைய என் நிலை. மாறுவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

நசரேயன் said...

//முடிந்த வரை தமிழ்ச் சொற்களையவன் கையாள வேண்டும்//

முயற்சி பண்ணுறேன் அண்ணே

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
// படைப்பு என்பது படைப்பில் இருக்க வேண்டும்; அதைப் படைக்கும் தனி நபரின்பால் இருக்கக் கூடாது. விமர்சனம் என்பதும் அதே வழியில் படைப்பின் மீது இருக்க வேண்டும்; படைப்பாளன் மீது இருக்கக் கூடாது என்பதில் அனைவரும் கருத்தாய் இருந்திடல் வேண்டும் //

சரியாகச் சொன்னீர்கள் ஐயா. படைப்பை விமர்சிக்கலாம் தப்பில்லை. ஆனால், தனிப்பட்ட விமர்சனம் என்பது ஏற்றுக் கொள்ளப் படக்கூடாதுதான்.
//

இராகவன் ஐயா, வாங்க, நன்றிங்க!

ராஜ நடராஜன் said...

ரெண்டு பைசான்னா பணிவான கருத்துக்களா?எங்கே ஒரு ரெண்டு பைசா ஆங்கிலத்தில எடுத்து விடுங்க பார்ப்போம்:)

பழமைபேசி said...

// ராஜ நடராஜன் said...
ரெண்டு பைசான்னா பணிவான கருத்துக்களா?எங்கே ஒரு ரெண்டு பைசா ஆங்கிலத்தில எடுத்து விடுங்க பார்ப்போம்:)
//

அண்ணே வாங்க... இஃகிஃகி!

"Hey Raj, This is Peter man!"

"hi! I wanna learn couple of slang man!!"

"roger"

"sorry?"

"I said, I got that!"

"what?"

"Oh Sorry for the slang... roger means "I undersatnd". But the same time, British guys mean different you know?"

"what's that?"

"oh yeah, they mean it for heating the underwear!"

"heating the underwear... what are you talking?"

"hey Raj, sorry man, I used again another slang...sorry yeah!"

"well, I still couldn't roger"

"ha! ha!! you are funny man... it means being in bed with counter part... sorry to bring all this to you at this time..."

"it's ok, it's ok"

"ok man, I got to go... take care man!"

பழமைபேசி said...

"hey Raj, I forgot to tell you about two cents... saying, put my 2 cents worth of suggestion/opinion became two cents... syrs"


see u real soon - syrs

பழமைபேசி said...

//நசரேயன் said...
//முடிந்த வரை தமிழ்ச் சொற்களையவன் கையாள வேண்டும்//

முயற்சி பண்ணுறேன் அண்ணே
//

இஃகிஃகி!!

ஆ.ஞானசேகரன் said...

///அவன் வாழ்கிற காலத்தை அடிப்படையாக வைத்து இலக்கியம் படைக்க முடியும். அவனுக்கு மற்றவர்களது படைப்புகள் வாசித்திருக்க வேண்டுமென்கிற கட்டாயம் இல்லை. வாசித்து இருப்பானாயின், படைக்கும் போது அது கைகொடுக்கும், அவ்வளவே!///

ஆம்ம்ம்ம்ம் உண்மையை உணர்கின்றேன்...

ஆ.ஞானசேகரன் said...

//முடிந்த வரை தமிழ்ச் சொற்களையவன் கையாள வேண்டும்.//

முயற்சிக்கின்றோம்.....

தேவன் மாயம் said...

ரெண்டு பைசாங்றது பரங்கிக்காரனோட மரபுச் சொல்லுங்க அண்ணே.

2 cents = humble opinion

ரெண்டு பைசா = பணிவார்ந்த கருத்துகள்
///

பரங்கியின் தாக்கம் இன்னும் இந்தியனை விடவில்லையே!! பழமையான சொற்கள் இருக்க இதை உபயோகிக்க வேண்டிய அவசியம் என்ன?
வேறுவழியே இல்லாதபோது இத்தகைய சொற்களை உபயோகிக்கலாமே!!

Karthikeyan G said...

மாப்ளை என்றழைத்த உங்கள் அன்புக்கு நன்றிகள் பற்பல.. :-)

மாம்ஸ்.. உங்கள் கருத்தில் துளியும் உடன்பாடில்லை.
ஒருவன் வாரமலர், குடும்பமலர் மட்டும் படித்துவிட்டு அதுதான் இலக்கியத்தின் உச்சம் என நினைத்து அதைபோலவே காவியங்கள் படைத்து தன்னை மாபெரும் எழுத்தாளன் என நினைத்துக்கொண்டல் என்ன ஆவறது. அதற்காகத்தான் அகநாழிகை படிக்கசொல்லிஇருக்கார்.

நல்ல இலக்கியத்தை படிக்காமல் நல்ல எழுத்து சாத்தியமில்லை என நினைக்கிறேன். ஒருவன் தன் அனுபவங்களை உள்ளபடியே மற்றவர்களுக்கு கொண்டு செல்ல நல்ல வாசிப்பை தவிர வேறு என்ன உதவும்.

பழமைபேசி said...

//thevanmayam said...
ரெண்டு பைசாங்றது பரங்கிக்காரனோட மரபுச் சொல்லுங்க அண்ணே.

2 cents = humble opinion

ரெண்டு பைசா = பணிவார்ந்த கருத்துகள்
///

பரங்கியின் தாக்கம் இன்னும் இந்தியனை விடவில்லையே!! பழமையான சொற்கள் இருக்க இதை உபயோகிக்க வேண்டிய அவசியம் என்ன?
வேறுவழியே இல்லாதபோது இத்தகைய சொற்களை உபயோகிக்கலாமே!!
//

மருத்துவர் ஐயா, உங்கள் அதீத பற்றினை மெச்சுகிறேன்.

நானாவது, தமிழ் படுத்தின மரபுச் சொல்லாய்ப் புழங்கினேன். ஆங்கிலமே தமிழாய் ஆகிறதே நாட்டில்?

புலிய விட்டுட்டு இந்த எலிய வந்து புடிக்கிறீங்களே ஐயா? அவ்வ்வ்......

பழமைபேசி said...

//Karthikeyan G said...
மாப்ளை என்றழைத்த உங்கள் அன்புக்கு நன்றிகள் பற்பல.. :-)

மாம்ஸ்.. உங்கள் கருத்தில் துளியும் உடன்பாடில்லை.
ஒருவன் வாரமலர், குடும்பமலர் மட்டும் படித்துவிட்டு அதுதான் இலக்கியத்தின் உச்சம் என நினைத்து அதைபோலவே காவியங்கள் படைத்து தன்னை மாபெரும் எழுத்தாளன் என நினைத்துக்கொண்டல் என்ன ஆவறது. அதற்காகத்தான் அகநாழிகை படிக்கசொல்லிஇருக்கார்.

நல்ல இலக்கியத்தை படிக்காமல் நல்ல எழுத்து சாத்தியமில்லை என நினைக்கிறேன். ஒருவன் தன் அனுபவங்களை உள்ளபடியே மற்றவர்களுக்கு கொண்டு செல்ல நல்ல வாசிப்பை தவிர வேறு என்ன உதவும்.
//

வாங்க மாப்பிள்ளை... நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க...

இதே வாதம் நானும் நிறைய தடவை கேட்டு இருக்கேன்... இதுவும் அப்படித்தான்... நீங்கெல்லாம், வெறுமையா இருக்கிற பாதி கோப்பைய பாத்து ஆதங்கப்படுறீங்க...நான் அதையே மகிழ்ச்சியா நினைக்கிற இரகம்...

நகரங்களிலும் நடுத்தர வர்கத்திலும் இருக்கிறவர்கள் நிறைய வாசித்து முறையான படைப்புகள் தரலாம்... அதே இடத்திலிருந்து மாறுபட்ட படைப்புகளும் வந்திட்டு இருக்கு காலங்காலமா.... அதையும் நீங்க தெரிஞ்சிக்கணும்....

பெரும்பான்மையான ஊரகப்பகுதின் குடிமக்கள்? தமிழ்வழிக் கல்வி படித்து, இன்றைக்கு பெங்களூரிலோ, பூனாவிலோ, அல்லது உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு பிள்ளையார் சுழி போட நினைப்பவனுக்கு?

புலம்பெயர்ந்த இடங்களில் இருந்து கொண்டு, அது உள்நாடானாலும் ஆனாலும் சரி, வெளிநாடானாலும் சரி, அவனுக்கு இதே ஒரு தயக்கத்தைக் கொடுக்கும்.... ஏன்னா, அவன் நாட்டுப்புறத்தான்....

யதார்த்த வாழ்க்கையில என்ன நடக்குது? தெரிஞ்சோ தெரியாமலோ, சின்னதா நாலு வரி எழுதிப் பாக்குறான்... யாரோ பக்கத்திலிருக்குறவங்க நல்லா இருக்கு மாப்புன்னு சொல்ல, மறுபடியும் எழுதுறான்....

அப்பத்தான் இலக்கியம்ன்னா என்னன்னு யாரோ சொல்லக் கேக்குறான்... அதுவே தீராத தாகத்தை உண்டு பண்ணுது... அப்புறம் தாகத்தைத் தணிக்க ஒன்னு ரெண்டு புத்தகத்தை நாடுறான்... எழுதுறான்... மறுபடியும் சின்னதா ஒரு அங்கீகாரம்.... பெரிய அளவுல எழுதி ரெண்டு பத்திரிகைகளுக்கு அனுப்புறான்...

India Todayல வந்திடுது...மறுபடியும், மறுபடியும் பல அயராத முயற்சிகள்... பெரிய இலக்கியவாதின்னு சமூகம் சொல்ல ஆரம்பிக்குது.... மூலனூர் சிவாண்ணன், க.சீன்னு தமிழுலகத்துக்கே சொந்தமும் ஆயிடுறாரு....

இது பாதிக் கோப்பை நிறைஞ்ச வரலாறு.... அதே போல பல ஊரகச் இளைஞர்கள் எத்தனித்து, இலக்கியத்தின் பெருமைகள் பேசப்படுவது கண்டு, மருண்டு தனது வழியிலிருந்து பிரிந்து மாற்று வழியில பிரிந்து போயிடுறான்... போனவன் போயே போயிட்டான், திரும்பி வரவே இல்லை....

இன்னொருத்தன்... பிரபலத்துக்கு ஆசைப்பட்டு எழுதுறான்... இவனெல்லாம் இலக்கியவாதியான்னு விமர்சனம்... விமர்சனமே அவனைச் செதுக்குது... வாசிக்க ஆரம்பிக்கிறான்... எழுதுறான்,,,,வாசிக்கிறான்...எழுதுறான்... செம்மையான எழுத்தாளன் ஆயிட்டான்....

இதெல்லாம், திராவிடக் கட்சிகள் திராவிடத்துல நிலை கொண்டு இர்ந்தப்ப நடந்த கால நிகழ்வுகள்... இன்றைக்கு, இளைஞன் அம்மான்னு தமிழ்ல தட்டுறதே ஊக்குவிக்கப்பட வேண்டிய காரியம்...

அதுவே ஒரு கவிதைன்னும் ஆயிடிச்சி... மகிழ்ச்சி... அப்படியாவது தமிழ் அழிவதில் இருந்து காப்பாற்றிக் கொள்ளட்டும்... மொக்கை கிக்கைன்னும் சனங்க சொல்வாங்க... அதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது... நான் ஒரு இடுகை இடணும் அது குறிச்சு... இப்போதைக்கி இது போதுங் கண்ணு!

அது சரி(18185106603874041862) said...

அண்ணா,

உங்க கருத்துடன் 1000% ஒத்து போகிறேன்...எழுதுபவர்கள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை...அவர்கள் நினைப்பதை அவர்கள் எழுதுவது தான் இலக்கியம் என்று நினைப்பவன் நான்...வாழ்க்கையிலிருந்து தான் இலக்கியமே தவிர இலக்கியமே வாழ்க்கை அல்ல...நகுலன், வாமுகோமு, போர்ஹேஸ்,சு.ரா, பா.ரா, கி.ரா, ஓஹான் பாமுக் என்று லட்சம் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்...எல்லாரையும் படித்தால் படிக்கத் தான் நேரமிருக்குமே தவிர எழுத இருக்காது...எழுதுவது தன் எண்ணங்களையும் தன் பார்வையையும் வெளிப்படுத்தவே தவிர, இவர் இப்படி எழுதினார் என்று பட்டியல் போட அல்ல...

எழுதுவது என் விருப்பம்...அதை படிப்பது படிப்பவர்களின் கெடுவினை :0))...

நான் கிறுக்குவதற்கு நகுலன் பொன்னுசாமியும், ரமேஷ் பிரேமும், கேத்தி ஆக்கரும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிய வேண்டிய அவசியம் இல்லை...படிக்க முடியாது என்றே நான் வெளிப்படையாக சொல்கிறேன்!

அதே போல வட்டார மொழி வழக்கும்...ஒரு மீனவர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் போது அவர்கள் செந்தமிழில் பேசிக் கொள்வதாக எழுதினால், அந்த எழுத்தின் உயிரே போய் விடுகிறது என்பது என் கருத்து...உண்மையில் வட்டார மொழி தான் இலக்கியம் என்றே சொல்லத் தோன்றுகிறது..

My two pence!

(இந்த பின்னூட்டத்தில் வரும் "பெத்த" பெயர்கள் வேண்டுமென்றே ட்ராப்பியது!)..

ராஜ நடராஜன் said...

//"Hey Raj, This is Peter man!"

"hi! I wanna learn couple of slang man!!"

"roger"

"sorry?"

"I said, I got that!"//

Hi pete!you been to texas eh!Howz that guy bush?

அது சரி(18185106603874041862) said...

You got my vote mate!

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...


Hi pete!you been to texas eh!Howz that guy bush?
//

I'm on the way to your place mate...

பழமைபேசி said...

//அது சரி said... //

அஃகஃகா! அதிரடி அது சரி அண்ணாச்சி... உங்கபாணியில சொன்னாத்தானே எதுவும் நல்லா இருக்கு... அந்த பெயர்ப் பட்டியல் அபாரம்... அகஃகா!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...

Hi pete!you been to texas eh!Howz that guy bush?
//

Hey Raj, whats up? he mu'be chilling out man...

தேவன் மாயம் said...

//thevanmayam said...
ரெண்டு பைசாங்றது பரங்கிக்காரனோட மரபுச் சொல்லுங்க அண்ணே.

2 cents = humble opinion

ரெண்டு பைசா = பணிவார்ந்த கருத்துகள்
///

பரங்கியின் தாக்கம் இன்னும் இந்தியனை விடவில்லையே!! பழமையான சொற்கள் இருக்க இதை உபயோகிக்க வேண்டிய அவசியம் என்ன?
வேறுவழியே இல்லாதபோது இத்தகைய சொற்களை உபயோகிக்கலாமே!!
//

மருத்துவர் ஐயா, உங்கள் அதீத பற்றினை மெச்சுகிறேன்.

நானாவது, தமிழ் படுத்தின மரபுச் சொல்லாய்ப் புழங்கினேன். ஆங்கிலமே தமிழாய் ஆகிறதே நாட்டில்?

புலிய விட்டுட்டு இந்த எலிய வந்து புடிக்கிறீங்களே ஐயா? அவ்வ்வ்.....///

அன்பு நண்பரே!

சாதாரணமாகவும் அறிவியல்ரீதியாகவும் எழுதிவரும் நாம் இலக்கியம் பற்றியும் தெளிவுபெற வேண்டியது அவசியமாகவே தெரிகிறது.

இதுபற்றி விரிவான பதிவுகள் அவசியம் தேவை..

அகநாழிகை said...

அன்பின் பழமைபேசி அவர்களுக்கு,
தாமதமான இந்த பின்னூட்டத்திற்காக எனது வருத்தங்களைத் தெரிவிக்கிறேன். உங்கள் பதிவு எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் என்னை எந்த இடத்தில் குறை காண்கிறீர்கள் என்பது விளங்கவில்லை. நான் எனது கருத்தை ஜ்யோவ்ராம் சுந்தர் தளத்தில் தெளிவாக கூறியிருக்கிறேன். வாசிப்பு பழக்கம் அவசியம் என்பது மட்டும்தான் அது. மற்றபடி இலக்கியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், கட்டுடைத்தல், அதிகாரம் போன்றவை குறித்தெல்லாம் அல்ல. எழுதுபவர்கள் வாசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது பணிவான கருத்து. உங்கள் கட்டுரை சில இடங்களில் புரியவில்லை. மேலும் எனக்கு ஆங்கில அறிவு குறைவு. எனது பெயரையிட்டு பணிவார்ந்த கருத்துக்கள் என்றெல்லாம் போட்டு, தன்னடக்கமாய் கூறியிருக்கிறீர்கள். அது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது. நான் சாதாரணமானவன். படிப்பதும் எழுதுவதும் போதையாகக் கொண்டவன். கணிணியில் எழுதுவதென்பது 9 மாதங்களாகத்தான்.
உங்களின் ஆரம்ப கால வாசகன் நான். நடுவில் இந்தப்பக்கம் வரவில்லை. இனி வாசிப்பேன். பழமையைப் பேசுவது எனக்கும் பிடிக்கும். சமுக மானுடவியல்தான் என்னுடைய மிகவும் விருப்பமான பாடம். அது சார்ந்தே கடந்த 7 வருடங்களாக படித்து வருகிறேன்.
நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

பழமைபேசி said...

//அகநாழிகை" said...
அன்பின் பழமைபேசி அவர்களுக்கு,
தாமதமான இந்த பின்னூட்டத்திற்காக எனது வருத்தங்களைத் தெரிவிக்கிறேன். உங்கள் பதிவு எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் என்னை எந்த இடத்தில் குறை காண்கிறீர்கள் என்பது விளங்கவில்லை.
//

வெற்றி! வெற்றி!!

அன்பா, வணக்கம், வாங்க!! உங்களை என்னோட இடுகையில பின்னூட்டம் போட வெச்சது எனக்கு வெற்றிதானே?! இஃகிஃகி!!

நான் குறைன்னு சொல்லவே இல்லீங்களே? நெசமாத்தான்....

இதுல உங்க பெயரைப் பயன்படுத்திகிட்டேனே ஒழிய, வேறொன்றும் இல்லை....அதுவும் அங்க இருந்தவங்கள்ல நீங்க மட்டுமே எனக்கு பரிச்யம் என்பதால்!

ஆனால் அந்த இடுகையில் இருந்த சூழல், விமர்சனத்திற்கு வாசிப்பனுபவம் தேவை என்பது போன்ற புரிதலை எனக்குத் தந்தது... மற்ற ஓரிருவரும் அதே போலப் புரிந்து கொண்டதையும் அறிய முடிந்தது.... மற்றபடி குறை காணவில்லை...நண்பா... அப்படி ஒரு புரிதல் ஏற்படின், பொறுத்துக் கொள்ளவும்...