11/10/2012

நினைப்பு


நினைப்பு

இவ்வுலகில்
எங்கு நோக்கினும்
பிளவுகள்
பிணக்குகள்
முரண்கள்
பாகுபாடுகள்
காழ்ப்பு
சலிப்பான எண்ணத்தோடு
குளக்கரையில் 
ஓடிக்கொண்டிருக்கையில்
தடுமாறி இடறி விழ
அன்பாய்க் கைகொடுத்து
தூக்கிவிட்டுச் சென்ற
முகமறியா அந்நபரின்
வாஞ்சையில்
தோற்றுப்போயின
எல்லாமும்!!

தொப்பி

நீலவண்ணத் தொப்பியை
பெட்டியின் மேலே
வைத்து விட்டு
அப்போதுதான்
சிவப்பு வண்ணத் தொப்பிக்கு
மாறியிருந்தேன்!

வேகமாய்
நிகழ்ச்சிக்கூடத்தின்
மறுகோடிக்குச் சென்று
அழுது தீர்த்தாள்
அம்மா 
நீலக்கலர் தொப்பிக்குள்ள இருந்த
அப்பாவைக் காணோம்!

அம்மா 
நீலக்கலர் தொப்பிக்குள்ள இருந்த
அப்பாவைக் காணோம்!


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல நினைப்பு...

அம்மா பாவங்க...

semmalai akash said...

முகம் மறந்து போனாலும் நினைவுகள் மறப்பதில்லை!

அருமை நண்பரே!