ஆமாங்க, இதை ஏற்ற இறக்கத்தோட நயம்பட எழுதினா, படிக்க நல்லாதான் இருக்கும். ஆனா, வாழ்க்கைக்கு எது ஆதாரம்? எது மூலம்?? எது அடிப்படை???
பழமைதான் மூலம்; பழமைதான் ஆதாரம்; பழமைதான் அடிப்படை! ஒவ்வொருத்தரும், அவங்கவங்க வாழ்க்கையச் சக்கரம் கண்டுபிடிக்கிறதுல இருந்து ஆரம்பிக்க முடியுமா? முடியாது!
எழுதி வெச்சதைக் கத்துகிட்டு, லெளகீகங்றது எந்த நிலையில இருக்கோ, அதுல இருந்து மேம்பட முயற்சிக்கணும். சரிதானே? அப்ப, எழுதி வெச்சதை, பதிஞ்சி வெச்சதைப் படிச்சு ஆகணும். அப்பத்தான் புதுமைகள் மலரும்! இல்லாட்டி, பழசுலயேதான் திரும்பத் திரும்ப உழண்டுகிட்டு இருக்கணும்!
சரி, பழசைக் கத்துகிறதால என்ன அனுகூலம்?
- பழமையைக் கற்பதால், அடையாளத்தைத் தெரிவு செய்து, முகாந்திரம் வெளிப்படுகிறது.
- பழமையைக் கற்பதால், முடிவெடுத்தல் மறறும் தருக்க வழிமுறைகள் செம்மைப்படுகிறது.
- பழமையைக் கற்பதால், சமூகக் கோட்பாடுகளின் நிறை குறைகளை அறிய முடிகிறது.
- பழமையைக் கற்பதால், கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடங்கள் கற்க முடிகிறது.
- பழமையைக் கற்பதால், தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுச் செம்மைப்படுத்த ஏதுவாகிறது.
பழமையான நினைவுகளை அசைப்போட்டுக் கூட, நிகழ்காலத்தை இனிமையாக்க முடியும். பழைய தவறுகளை நினைச்சு, அதுல இருக்கிற வழுக்களைக் களைந்து, நிகழ்காலத்தை இனிமையாக்க முடியும்.
அதேபோல, எதிர்காலத்தைப் பற்றிய அவதானமும், முன்னெச்சரிக்கையும் மிக அவசியம். வருமுன் காப்பது சாலச் சிறந்தது அப்படின்னு சொல்லிப் படிக்கிறமே?
இப்படி, எதிர்காலத்தைப் பற்றிய முன்னெச்சரிக்கைக்கு மூலதனம் பழமை. இந்த முன்னெச்சரிக்கைக்காக, பழமைங்ற மூலதனத்தைப் போட்டு விளைச்சல் மேற்கொள்றது நிகழ்காலம். ஆக, எதிர்காலத்துக்கும் இன்றியமையாதது இந்தப் பழமை!
முத்தாய்ப்பா நாம சொல்றது என்னன்னா, பழமைய மேம்படுதலோட கூட்டிப் புதுமை காணுறதுதாங்க வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும்! பழமை, பழமைன்னு ஒதுக்கி வைக்கிறதாலப் புதுமை வந்திடாதுங்க இராசா!!
பழமை அறியாதவன் பாழ்!
19 comments:
இராசா.. எப்படித் தமிழ் எழுதறீங்க!!! இந்த மாதிரி ஒரு இ ரூல் இருப்பதே மறந்து போச்சு..
நீங்க சொன்ன கோணத்துல பாத்தா பழமை தேவை தான்..
/எதிர்காலத்தைப் பற்றிய முன்னெச்சரிக்கைக்கு மூலதனம் பழமை. இந்த முன்னெச்சரிக்கைக்காக, பழமைங்ற மூலதனத்தைப் போட்டு விளைச்சல் மேற்கொள்றது நிகழ்காலம். ஆக, எதிர்காலத்துக்கும் இன்றியமையாதது இந்தப் பழமை!/
சரியாச் சொன்னீங்க.
/பழமை, பழமைன்னு புறம் பேசினதாலப் புதுமை வந்திடாதுங்க இராசா!!/
இதோட பழமை பழமைன்னு ஒவ்வாதத புடிச்சி தொங்கறதும் தப்பில்லையா?
இவ்வளவு நேரம் திரட்டியில் இணைக்காமல் விட்ட புதுமையை கண்டிக்கிறேன்:))
//பழமை அறியாதவன் பாழ்!//
நச்!
//பழமை அறியாதவன் பாழ்! //
ஆமாண்ணா ஃபாலோவர்ஸ் கம்மியாத்தானிருக்கு...
பழைய நெனைப்புத்தான் பேரான்டி....பெங்களுருலிருந்து அப்பன்.
இது சுயதம்பட்டமா?? ;))
எப்படிங்க ஐயா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..
// அப்பாவி முரு said...
//பழமை அறியாதவன் பாழ்! //
ஆமாண்ணா ஃபாலோவர்ஸ் கம்மியாத்தானிருக்கு...//
இது.. அப்பாவி... சூப்பர்
சரியாச் சொன்னீக ராசா :)
@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
நன்றிங்கோ!
@@வானம்பாடிகள்
அண்ணஞ்ச் சொல்றதும் சரிதானுங்கோ!
@@அப்பாவி முரு
அடப் படுபாவித் தம்பி...
@@தாராபுரத்தான்
ஆகா, அதான் வலையுலகம் இருளோன்னு இருக்கு.... வந்து சித்த கலக்குங்க!
@@ஈரோடு கதிர்
நன்றிங்க மாப்பு!
@@முகிலன்
ஏன்? ஏன்? ஏன் இந்தக் கொலைவெறிங்க தம்பி?
//இராகவன் நைஜிரியா said...
எப்படிங்க ஐயா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..
//
யோசிக்க வெக்கிறாயிங்க அண்ணே!
// எம்.எம்.அப்துல்லா said...
சரியாச் சொன்னீக ராசா :)
February 25, 2010 2:51 AM
//
நன்றிங்க அண்ணா!
நல்ல செய்தி அண்ணா
பெயர் சொல்லும் பதிவு..
பழைமை,
புதுமையா இருக்குங்க ! :)
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல , கால வகையினானே
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல , கால வகையினானே
நீங்க சொன்னா சரிதான்
நல்லா சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்
வயசாகறதெல்லாம் பெரிய ப்ரச்சனையா என்ன? யாரு இப்போ திடீர்னு உங்களைப் பாத்து பெருசுன்னு சொன்னாங்க(எப்படியோ யாரோ உண்மைய கண்டுபிடிச்சிட்டாங்க, பழைமை காண்டாயிட்டாரு)
பழைய ஃபோட்டோவப் பாத்து ஏமாறோதார் சங்கம்
//கபீஷ் said...
பழைய ஃபோட்டோவப் பாத்து ஏமாறோதார் சங்கம்
//
இதெல்லாம் வேலைக்காகாதுங்க அம்மணி; நேர்ல பார்த்து ஏமாந்தோர்தான் நிறைய.... இஃகிஃகி! குடுகுடுப்பை அந்தக் கடுப்புலதான் காணாமப் போய்ட்டாருங்க..... இஃகிஃகி!!
/ பழமையைக் கற்பதால், முடிவெடுத்தல் மறறும் தருக்க வழிமுறைகள்
> செம்மைப்படுகிறது.
அது எதை `கற்கின்றீர்கள்` என்பதை பொருத்தது. மனிதர்களில் பெரும்பாலும்
வெறுப்பு, சோர்வு இவற்றைதான் `கற்கின்றீர்கள்`. இதற்கு எவ்வளவு
வேண்டுமானாலும் உதாரனம் தருகிறேன்//
மேன்மைகள் யாவும், பழமைகளின் வழித் தோன்றலே!
உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம்.
தீப்பிடித்தவுடனே, அந்த நபரைக் கம்பளி அல்லது பாயில் வைத்துச் சுருட்ட
வேண்டும். இது நான் துவக்கப் பள்ளியில் பயின்ற பாடம்.
தீப்பிடித்த நபரை, தண்ணீர் நிலை இருந்தால் உடனே அதில் போட வேண்டும்;
அல்லது நீர் விட்டு அணைக்க வேண்டும். இது புதுமைச் செய்தி!
இரண்டாவது எப்படித் தோன்றியது?
பாயில் அல்லது கம்பளியில் சுருட்டுவதால், சருமத்தின் மேல் பாகம்
சேதாரப்படுகிறது. அதை மீட்டெடுக்க முடியாது.
அதுவே நீரில் இடுவதால், கொப்புளங்கள் ஏற்பட்டாலும், சருமம் பழைய
நிலைக்குத் திரும்ப வல்லது என்பது பழமையில் இருந்து ஏற்பட்ட மேம்படுதல்.
இந்த நிலையில், ஒருவருக்கு இரண்டாவது கருத்தை மட்டுமே போதிக்கும் போது
மீண்டும் பழைய தவறு நடக்க வாய்ப்புள்ளது. கொப்புளிக்கிறதே என பாயில் அவர்
சுருட்ட முயற்சிக்க கூடும்.
அதுவே, பழையதோடு புதியதையும் கற்றவர் அந்தத் தவறைச் செய்யார்! பழமை
என்கிற போது, அது ந்ல்லதோ, கெட்டதோ, இரண்டையும் சேர்த்தே கற்க வேண்டும்.
நல்லதாயின் அதைப் போற்றுவோம்! கெட்டதாயின், அதை மேன்மைக்கு
உள்ளாக்குவோம். எனவேதான், பழமை என்பது ரொம்ப முக்கியம் இராசா!!
விவாத இழை!
Post a Comment