2/27/2010

வெள்ளை மனசு!

நளினமாய்ப் பேசி
நல்லது பல சொல்லி
இசைவும் துலங்குகிற
தருணமது!
ஓடியாடுவதினின்றும்
மிகுதியான குதூகலத்துடன்,
அய்... ஜாலி...
ரோட்டுல, ரோட்டுல நின்னு போற
எங்க காரை
இந்த மாமா வாங்கறாங்க!

==============================

தானே பரிமாறுவதும்
துடைக்கத் துணிதருவதுமாய்
மாய்ந்து மாய்ந்து
விருந்தோம்பல்!

ரேவதிக்கு உடம்பு சரியில்ல;
இல்லன்னா
இதைவிட இன்னும்
நல்லாக் கவனிச்சிருப்பா!!

ஆமாங்க அங்க்கிள்...
நீங்கெல்லாம் ஏன் வர்றீங்கன்னு
சணடை போட்டு
அழுதுட்டே இருந்ததால
தலை வலிக்குதுன்னு
உள்ள படுத்திட்டு இருக்காங்க
அம்மா!!!

18 comments:

க ரா said...

நல்ல நகைச்சுவை.

*இயற்கை ராஜி* said...

:-))

ஈரோடு கதிர் said...

வெள்ளையோ வெள்ளை

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/வெள்ளையோ வெள்ளை/

ஆமாங் மாப்பு. அனியாயத்துக்கு உஜாலா வெள்ளை.

Anonymous said...

:0)

ஆரூரன் விசுவநாதன் said...

இயல்பான வரிகள்.....இனிமையாய்

Muruganandan M.K. said...

"ஆமாங்க அங்க்கிள்...
நீங்கெல்லாம் ஏன் வர்றீங்கன்னு
சணடை போட்டு" நல்லாத்தான் கிண்டல் பண்ணுகிறீர்கள்.

priyamudanprabu said...

ஆமாங்க அங்க்கிள்...
நீங்கெல்லாம் ஏன் வர்றீங்கன்னு
சணடை போட்டு
அழுதுட்டே இருந்ததால
தலை வலிக்குதுன்னு
உள்ள படுத்திட்டு இருக்காங்க
அம்மா!!!
/////////

என்ன சொல்ல????????

கபீஷ் said...

//ரோட்டுல, ரோட்டுல நின்னு போற//

ரோட்டுல, நின்னு நின்னு போற?

கபீஷ் said...

மொத கவுஜ:
அப்படி இப்போ கேட்க நேர்ந்தால் bliss. குழந்தைங்க அநியாயமா விவரமானவங்களா இருக்காங்க.

ரெண்டாவது கவுஜ: அடிக்கடி துண்டு போட்டு get together ஐ சிறப்பிக்கப் போறத நிறுத்தணும்னு முடிவு பண்ணீட்டீங்க போலருக்கு.

லாஜிக் கொஞ்சம் மிஸ்:-)

பழமைபேசி said...

//கபீஷ் said...
//ரோட்டுல, ரோட்டுல நின்னு போற//

ரோட்டுல, நின்னு நின்னு போற?
//

அது குழந்தைங்க.... உங்களை மாதிரி என்ன அறிவு ஜீவியா??

பழமைபேசி said...

//கபீஷ் said...
ரெண்டாவது கவுஜ: அடிக்கடி துண்டு போட்டு get together ஐ சிறப்பிக்கப் போறத நிறுத்தணும்னு முடிவு பண்ணீட்டீங்க போலருக்கு.

லாஜிக் கொஞ்சம் மிஸ்:-)
//

நீங்க வேற, இன்னைக்கு மொதல் வேலை அண்ணனைக் கூப்ட்டு மன்னிப்பு கேட்கணும்.... அவரு, கூப்ட்டு நம்மால நேத்தைக்கு போக முடியலை....அதான்!

பத்மா said...

வெள்ளையுள்ளம் தான் ...மற்றவருக்கு தான் பாவம் தாங்காது

சரண் said...

உக்காந்து யோசிச்சதுங்களா.. இல்ல நெசமாவே நடந்ததுங்களா?

Jerry Eshananda said...

அந்த கடைசி வரிகளின் கனத்தை உணர முடிகிறது,[நேரில் பார்க்கும் பொது பேச வேண்டும்,ப்ளீஸ் ஞாபக படுத்துவீங்களா?]

கபீஷ் said...

//அது குழந்தைங்க...//

குழந்தை தெளிவாத்தான் சொல்லியிருக்கும். நீங்க தூக்கக் கலக்கத்துல எழுதிட்டு சமாளிக்கறீங்க. பரவாயில்ல மன்னிச்சிட்டேன்.

//
அது குழந்தைங்க.... உங்களை மாதிரி என்ன அறிவு ஜீவியா??
//

இதுக்கு புண்ணாக்குன்னு சொல்லியிருக்கலாம். சரி இனி உங்க வயசு பத்தி சொல்லி ஓட்டலை. அதுக்காக இப்படி எல்லாம் சொல்லி அசிங்கப்படுத்தாதீங்க, அறிவுஜீவிங்களை.

பழமைபேசி said...

@@க.இராமசாமி
@@இய‌ற்கை
@@ஈரோடு கதிர்
@@வானம்பாடிகள்
@@சின்ன அம்மிணி
@@ஆரூரன் விசுவநாதன்
@@Dr.எம்.கே.முருகானந்தன்
@@பிரியமுடன் பிரபு
@@padma

நன்றி மக்களே, நன்றி!

//சரண் said...
உக்காந்து யோசிச்சதுங்களா.. இல்ல நெசமாவே நடந்ததுங்களா?
//

எல்லாமே அனுபவத்துல வந்ததுதானுங்க தம்பி!

//ஜெரி ஈசானந்தா. said...
அந்த கடைசி வரிகளின் கனத்தை உணர முடிகிறது,[நேரில் பார்க்கும் பொது பேச வேண்டும்,ப்ளீஸ் ஞாபக படுத்துவீங்களா?]
//

இஃகிஃகி!

//கபீஷ் said...
இதுக்கு புண்ணாக்குன்னு சொல்லியிருக்கலாம்.
//

ஒப்புதல் வாக்குமூலத்துக்கு நான் பொறுப்பாக மாட்டேனே?! இஃகி!

அன்புடன் அருணா said...

:)