2/10/2010

அலட்சியம்!

காணொளியில் நாடக நாயகனது
கள்ளக் காதல் கலகலப்பாய்!
அம்மா!
அடச் சே, சும்மா இரு!

காதலியிடம் செல்லமாய்
ஒரு இடிகூட வாங்கியாகவில்லை
நாயகன் இன்னும்!
அம்மா!!
சும்மா கெட, உயிரை வாங்காத!!

காதலி நாடகநாயகனை
நெருங்கி உறவாட எத்தனிக்க,
விளம்பரநந்தி குறுக்கீடு!
உள்ளே படுக்கை நனைந்து
பள்ளியறையே நாறியது,
அலட்சியம்!!!

============================

சனிக்கிழமை இராச்சாப்பாடு
அவசரகதியில் ஏனோதானோவென!
ரெண்டாவது ஆட்டத்துக்கு
நேரமாச்சுறா...வாங்கடா போலாம்!!

ஈருளைச் சில்லுவண்டிகள்
முக்கோணச் சட்டத்திலும்
பின்னிருக்கையிலுமாய்
ஏற்றியபடி மூவருலாப்
போனது கொட்டகை நோக்கி!

டமால்!
டேய், யாரு வண்டியோ
பொங்க வெச்சுடுச்சுடா!!
சுற்றும் முற்றும் மற்றவர்
பயணித்த சைக்கிள்களைப்
பார்த்தபடி இவன்!!

உன்ற வண்டிதாண்டா
வெண்ணெய்,
பாரு கொஞ்சம் கீழ!!!

31 comments:

அது சரி(18185106603874041862) said...

//
உன்ற வண்டிதாண்டா
வெண்ணெய்,
பாரு கொஞ்சம் கீழ!!!
//

இது சூப்பரு...:0)))

ஊரு வண்டியெல்லாம் பாக்கிறாய்ங்க...அவய்ங்க வண்டிய கண்டுக்கிடவே மாட்டேங்கிறாய்ங்களே...

தாராபுரத்தான் said...

ரெண்டாவது ஆட்டத்திற்கா..உன்னை வெச்சுக்கிட்டு டி்வி,கீ.வி பார்க்க முடியுதா ஒண்ணா.இன்னைக்கு முதல்ல வந்திட்டோம்மில்ல .

cheena (சீனா) said...

நக்கலு லொள்ளு - சூப்பர் - முக்கோண சட்டம் - ஓஓ

அலட்சியம் - மழலைச் செல்வத்தைக் கவனிக்காமல் கானொளி காணும் அம்மாக்களின் அலட்சியம் அழகாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

நல்வாழ்த்துகள் பழமை பேசி

குடுகுடுப்பை said...

நீங்க டான்ஸ் பாத்தீங்களாண்ணே ஹிஹிஹிஒ

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை நண்பரே..

செந்தில் நாதன் Senthil Nathan said...

//உன்ற வண்டிதாண்டா வெண்ணெய்,
பாரு கொஞ்சம் கீழ!!!//

ஹி ஹி..இது பிடித்தது..

Paleo God said...

கலக்கறீங்க.. நண்பரே..:))

இரண்டுமே அருமை.

சீமாச்சு.. said...

//உள்ளே படுக்கை நனைந்து
பள்ளியறையே நாறியது,//

இந்த வரிகள் குழந்தையைக் குறிக்கிறது என்பதே சீனா சார் பின்னூட்டத்தைப் பார்த்துத் தான் புரிஞ்சுது..

எங்களை மாதிரி (அ)கவிஞர்களுக்கு கொஞ்சமாவது க்ளூ கவிதையிலேயே கொடுக்கக்கூடாதா?

அம்மாக்களுக்கெல்லாம் படுக்கையிலே உச்சா போற அளவுக்குக் குழந்தைங்க இருப்பதென்பது இப்பல்லாம் assume பண்ண முடியவில்லை..

Unknown said...

இப்பல்லாம் அம்மாக்கள் விவரம்.. டயப்பர் மாட்டி விட்டுடுறாங்க.. உச்சா பெட்ல போறதெல்லாம் வாய்ப்பே இல்லை..

ரெண்டாவது கவிதை ரசிச்சேன்..

Unknown said...

// தாராபுரத்தான் said...
ரெண்டாவது ஆட்டத்திற்கா..உன்னை வெச்சுக்கிட்டு டி்வி,கீ.வி பார்க்க முடியுதா ஒண்ணா.இன்னைக்கு முதல்ல வந்திட்டோம்மில்ல .
//

இவர் உங்க நண்பரா பழமை பேசி அங்கிள்?

Anonymous said...

அலட்சியம் அரங்கேறியது சுவாரஸ்யம்...

ஈரோடு கதிர் said...

மாப்பு அருமை...

அதென்னங்க... என்ன எழுதினாலும்... பின்னூட்டம் செம உள்குத்தா வருது கொஞ்ச நாளா.. இஃகிஃகி

vasu balaji said...

:)) என்னா அழிம்பு இது..ரெண்டாவது அசத்தல். அதுசரி சொன்னா மாதிரி முதல்ல தன்னை பார்க்கறதே இல்லை.

நிகழ்காலத்தில்... said...

சீரியல் பார்க்கும் பழக்கத்தை, அதன் விளைவில் ஒரு பகுதியை அருமையாக
கவிதை ஆக்கி இருக்கிறீர்கள் பங்காளி ..

Thamira said...

அன்புத்தோழர்,

ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். பதின்ம வயதுகளை நினைவு கூறும் ஒரு பதிவினை நீங்கள் எழுதவேண்டும் என்பது என் ஆசை. மறுக்கமாட்டீர்களென நம்புகிறேன். நன்றி.

http://www.aathi-thamira.com/2010/02/blog-post_11.html

கபீஷ் said...

முதல் கவிதை, ஆணாதிக்க கவிதை :-) என்னமோ இவுங்க டிவி பார்க்காத மாதிரி.

யாருங்க அது மணியண்ணணை வெண்ணெய்னு சொன்னவரு(பாராட்டறதுக்குத் தான்)

கபீஷ் said...

மணியன் ஈரிருளை பொங்கியதன் நினைவாக...
அப்படின்னு ரெண்டாவது கவுஜ/கவிதைக்கு ஒரு பி.கு போட்டிருங்க, சரியான பின்னூஸ் வரும் :-)

க.பாலாசி said...

‘அலட்சியம்’ அருமைன்னு சொன்னா நல்லாவா இருக்கும்...??

உண்மைதானுங்க...இந்தமாதிரித்தான்ஒவ்வொரு வீடும் நாறிக்கெடக்குதுங்க...

Unknown said...

// காதலி நாடகநாயகனை
நெருங்கி உறவாட எத்தனிக்க,
விளம்பரநந்தி குறுக்கீடு!
உள்ளே படுக்கை நனைந்து
பள்ளியறையே நாறியது,
அலட்சியம்!!! //

இது நல்லா இருக்கு

Unknown said...

//.. உன்ற வண்டிதாண்டா
வெண்ணெய்,
பாரு கொஞ்சம் கீழ!!! .. ..//

இக்கி.. இக்கி..

துபாய் ராஜா said...

அருமை.

பழமைபேசி said...

//முகிலன் said...
// தாராபுரத்தான் said...
ரெண்டாவது ஆட்டத்திற்கா..உன்னை வெச்சுக்கிட்டு டி்வி,கீ.வி பார்க்க முடியுதா ஒண்ணா.இன்னைக்கு முதல்ல வந்திட்டோம்மில்ல .
//

இவர் உங்க நண்பரா பழமை பேசி அங்கிள்?
//

அஃகஃகா!

முகிலன்,

உங்க சேர்க்கை சரியில்ல... குடுகுடுப்பைகூட சேராம இருந்த வரைக்கும் நல்லா இருந்தீங்க... ஊருக்கு போன இடைவெளில கெட்ட சகவாசம் அண்டிருச்சு போல... இஃகிஃகி!!

பழமைபேசி said...

//கபீஷ் said...
முதல் கவிதை, ஆணாதிக்க கவிதை :-) என்னமோ இவுங்க டிவி பார்க்காத மாதிரி. //

சீமாட்டியின் ஆதிக்கம் தாங்க முடியலை.... அவ்வ்வ்.......

பெருசு said...

திடிர்ன்னு பின்நவீனத்துவம் முன்நவீனத்துவம் எல்லாம் கலந்து கட்டி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்க.

//உள்ளே படுக்கை நனைந்து
பள்ளியறையே நாறியது,//

இத எந்த நவீனத்துலே சேக்கலாமுன்னு தெரியலீங்.

Paleo God said...

//உள்ளே படுக்கை நனைந்து
பள்ளியறையே நாறியது,//

இத எந்த நவீனத்துலே சேக்கலாமுன்னு தெரியலீங்//

முன் நவீனத்துல ஆரம்பிச்சு பின் நவீனத்துல நனைந்ததால, நடு நவீனம்..:)

Sanjai Gandhi said...

பட்டய கிளப்புங்க ராசா :))

வில்லன் said...

/ முகிலன் said...


// தாராபுரத்தான் said...
ரெண்டாவது ஆட்டத்திற்கா..உன்னை வெச்சுக்கிட்டு டி்வி,கீ.வி பார்க்க முடியுதா ஒண்ணா.இன்னைக்கு முதல்ல வந்திட்டோம்மில்ல .
//

இவர் உங்க நண்பரா பழமை பேசி அங்கிள்?//

என்ன சைக்கிள் கேப்ல அண்ணன் பலமைபெசிய அங்க்ள்னு சொல்லி வயச கொறசாபுல இருக்கு.....எதெல்லாம் நல்லா இல்ல பேரன் பொறக்குற வயசுல உங்க நண்பர (ஒத்த வயசா இருந்தா நண்பர் தான) எங்க அண்ணன அங்கிள்ன்னு சொல்லுறது.....

வில்லன் said...

/அது சரி said...


//
உன்ற வண்டிதாண்டா
வெண்ணெய்,
பாரு கொஞ்சம் கீழ!!!
//

இது சூப்பரு...:0))) //
ரிப்பிட்டு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வில்லன் said...

/பழமைபேசி said...


//முகிலன் said...
// தாராபுரத்தான் said...
ரெண்டாவது ஆட்டத்திற்கா..உன்னை வெச்சுக்கிட்டு டி்வி,கீ.வி பார்க்க முடியுதா ஒண்ணா.இன்னைக்கு முதல்ல வந்திட்டோம்மில்ல .
//

இவர் உங்க நண்பரா பழமை பேசி அங்கிள்?
//

அஃகஃகா!

முகிலன்,

உங்க சேர்க்கை சரியில்ல... குடுகுடுப்பைகூட சேராம இருந்த வரைக்கும் நல்லா இருந்தீங்க... ஊருக்கு போன இடைவெளில கெட்ட சகவாசம் அண்டிருச்சு போல... இஃகிஃகி!!//

முகிலன் அண்ணாச்சி குடுகுடுப்பையோட சேர்ந்தது....
பூவோட சேர்ந்த நாறும் போல..... பன்றியோட சேர்ந்த கன்றும் போல......எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்.... அது உங்க இஷ்டம்....

வில்லன் said...

/ குடுகுடுப்பை said...


நீங்க டான்ஸ் பாத்தீங்களாண்ணே ஹிஹிஹிஒ//
ஒரே டான்ஸ் தொடையாட்டம்னு நாக்க தொங்க போட்டுகிட்டே அலையும்....... உங்க புத்தி தெரிஞ்சுதான் நீங்க இருக்குற ஏரியா கவுண்டில (நம்மவூரு மாவட்டம் போல) ஸ்பிரிட் (விஸ்கி /பிராந்தி) கூட விக்க விடமாட்டக்கான்...

பழமைபேசி said...

@@அது சரி
@@தாராபுரத்தான்
@@cheena (சீனா)
@@குடுகுடுப்பை
@@முனைவர்.இரா.குணசீலன்
@@செந்தில் நாதன்
@@ஷங்கர்..
@@Seemachu
@@முகிலன்
@@தமிழரசி
@@ஈரோடு கதிர்
@@வானம்பாடிகள்
@@நிகழ்காலத்தில்...
@@ஆதிமூலகிருஷ்ணன்
@@கபீஷ்
@@க.பாலாசி
@@பேநா மூடி
@@திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்).
@@துபாய் ராஜா
@@பெருசு
@@ஷங்கர்..
@@வில்லன்

நன்றி மக்களே, நன்றிங்க!