2/03/2010

முரண்!

பால் ஊட்டும் மாட்டுக்கு?
புல்!

பணம் கொடுக்கும் வங்கிக்கு?
கடன்!

நிழல் கொடுக்கும் குடைக்கு?
வெயில்!!

புசிக்க வைக்கும் உழவனுக்கு?
பசி!

நடிக்கும் மாந்தருக்கு ஊரெல்லாம்?
பாராட்டு!

கற்பனை ஊர் முழுக்கவும்?
விற்பனை!

சாமியை வாழ வைப்பது?
ஆசாமி!

பணிவு காட்டுபவன் தோற்றம்?
குனிவு!

21 comments:

அரசூரான் said...

பழ(ம் பெரு)மை பதிவுக்கு?
மணி!

Anonymous said...

நல்ல சிந்தனை.

Thekkikattan|தெகா said...

அட! ரொம்ப அழகா கோர்வையா இருக்கே முரண்கள்...

Mahesh said...

மணியண்ணே.... என்ன நடக்குதுன்னு சித்த விளக்குனா புரிஞ்சுக்கலாம்.... :(

Mahesh said...

/அரசூரான் said...
பழ(ம் பெரு)மை பதிவுக்கு?
மணி!
//

அண்ணே.... பழமையார் "முரண்" பத்தி எழுதியிருக்காரு... தருமி வினா-விடை மாதிரி ஆக்கிட்டீங்களே :))))))))

வானம்பாடிகள் said...

:)).அபாரம்

ச.செந்தில்வேலன் said...

:))

ஜீவன்சிவம் said...

நல்லாயிருக்கு அண்ணாச்சி

ஜெரி ஈசானந்தா. said...

நகை முரண்.

Anonymous said...

எதார்த்த நிலை....

ஈரோடு கதிர் said...

ம்ம்ம்

செந்தில் நாதன் said...

//சாமியை வாழ வைப்பது?
ஆசாமி!//

ஹ்ம்ம்..சரி தான்

தாமோதர் சந்துரு said...

பழமை பதிவு எப்போதும்
புதுமை.
அப்பாடா நானும் ஒரு முரணைச் சொல்லியாச்சு.

முனைவர்.இரா.குணசீலன் said...

அருமை நண்பரே..

சாமியை வாழ வைப்பது?
ஆசாமி!

ஆமாம் சாமி!!

க.பாலாசி said...

எதையும் மறுப்பதற்கில்லை...

ராஜ நடராஜன் said...

நல்லாவே இருக்குது.இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.

Sangkavi said...

சரியாச்சொல்லியிருக்கறீங்க.....

நசரேயன் said...

நீங்க சொன்னா சரிதான்

பழமைபேசி said...

@@அரசூரான்

அண்ணன் மகேசு என்னவோ சொல்றாரு, கவனிங்க!

@@சின்ன அம்மிணி
@@Thekkikattan|தெகா
@@Mahesh
@@வானம்பாடிகள்
@@ச.செந்தில்வேலன்
@@ஜீவன்சிவம்
@@ஜெரி ஈசானந்தா.
@@தமிழரசி
@@ஈரோடு கதிர்
@@செந்தில் நாதன்
@@முனைவர்.இரா.குணசீலன்
@@க.பாலாசி
@@ராஜ நடராஜன்
@@Sangkavi
@@நசரேயன்

நன்றிங்க!


@@தாமோதர் சந்துரு
ஆகா!

ஆதிமூலகிருஷ்ணன் said...

சில சிறப்பானவை.

பழமைபேசி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
சில சிறப்பானவை.
//

நன்றிங்க ஆதி!