2/11/2010

பதின்மத்தின் ஒரு சேதி!

நான் மன்னிப்பு கேட்கலை, வருத்தம்தான் தெரிவிச்சேன்; மன்னிப்பு கேட்காவிட்டாப் பரவாயில்லை, வருந்துகிறேன்னு சொல்லிடு போதும்! இப்படியெல்லாம் சொல்லி, ஒரு போலித்தனமான உயர்வை வெளிப்படுத்துறதை நீங்க பார்த்து இருக்கலாம். பார்க்கலைன்னாலும், சமூகத்துல நிச்சய்மா பார்ப்பீங்க.

அதாவது, மன்னிப்பு கேட்கிற இடத்துல வருத்தம் தெரிவிச்சுட்டா, தெரிவிக்கிறவரோட கெளரவத்துக்குக் குறைச்சல் இல்லையாம். ஏன்? ஏன் இந்த வெட்டி வேலை??

மன்னிப்பு அப்படீங்கற சொல், மன்னுதலோட தொடர்ச்சி. மன்னுதலை நிலைநாட்டுறவன் மன்னன். அப்ப, இந்த மன்னுதல்னா என்ன?? கோபம், தாபம், மகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம், உவகை இப்படியான எதுவாக இருந்தாலும், அதிலிருந்து விடுபட்டு ஒரு தனிப்பட்ட நிலையில மனதை நிறுத்துறதுதாங்க இந்த மன்னுதல்.

ஆக, அந்தவிதமான தனிப்பட்ட நிலையில் மனதைக் கொண்டு மக்களை நீதி தவறாது ஆள்பவன் மன்னன். ஒரு நல்லதோ, கெட்டதோ அது எதுவாயிருந்தாலும் அதன் தாக்கத்தில் வீழாது பொறுத்துக் கொள்வது மன்னித்தல், அதனோட பெயர்ச்சொல் மன்னிப்பு.

வருந்துதல் அப்படின்னா? செய்த தவறை, அல்லது நடந்துவிட்ட கெடுதியை அல்லது விரும்பத்தகாத ஒன்னை நினைத்து தன் மனதைத் தானே வருத்திக் கொள்வது. இச்செயலோட பெயர்ச் சொல் வருத்தம். தான் அல்லாது, புறநிலையால் மனம் துன்புறுவது துயரம். துயரத்தைக் கடைபிடிப்பது துக்கம்.

ஆக, மனதை நிலைநிறுத்திக்கோ அப்படின்னு அடுத்தவனைச் சொல்றதுலதான் அவனுக்கு பலன் இருக்கு. ஏன்னா, அவன் தன்னோட தவறை இன்னும் ஒத்துக்கலை.


அதுவே, வருந்துகிறேன் அப்படின்னு சொல்லும்போது, தனது தவறை ஒப்புக் கொண்டு, அதற்கு வருந்துகிறேன் அப்படிங்ற பொருள் உள்தாங்கி வரும். இது தெரியாம, மக்கள் மன்னிப்பு கேட்கறதுக்கு ஒரு தயக்கம்; மாறா, வருத்தம் தெரிவிச்சுக்குறதுன்னு ஒரு வெட்டி வியாக்கியானம்.

சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தா, தாராளமா மன்னிச்சுக்குங்க அப்படின்னு சொல்லுங்க; அதுல வீரியத்தைக் கூட்டிச் சொல்லணுமானா, ரொம்ப வருத்தமா இருக்கு, வருந்துறேன்னும் சொல்லுங்க. வீணா, அர்த்தமில்லாத கண்டு பாவனை நமக்கு எதுக்கு? எதுக்கு??

இப்ப எதுக்கு இந்த பிரசங்கம் அப்படின்னுதானே யோசிக்கிறீங்க?! அதுல ஒரு உள்குத்து இருக்குது இராசா, ஒரு உள்குத்து இருக்குது!


ஆமாங்க, கடந்த காலத்துல தம்பி அக்பர், நண்பர் வேத்தியன், இன்னும் ஒரு சிலர் வேற வேற தலைப்புகள் கொண்ட வலைத்தொடர் இடுகையில எழுத அழைப்பு விடுத்து இருந்தாங்க. நான், அதுகள்ல பங்கெடுத்துக்க முடியலை. அதுக்கு நான் இப்ப மன்னிப்பும் கேட்டுக்குறேன்... பங்கெடுத்துக்க முடியலையேன்னு வருத்தமும் தெரிவிச்சுக்கிறேன். இஃகிஃகி!!

இனி நாம இன்றைய இடுகைக்கு வருவோம். இதுல கலந்துக்க அழைப்பு விடுத்த நண்பர் ஆதிக்கு நன்றி! தொடர் இடுகையின் சாராம்சம் என்ன? பதின்ம காலத்து அனுபவங்கள்ல ஒன்னு ரெண்டைப் பகிர்ந்துக்கணும், அதான்!

நான் பள்ளியில படிக்கிற காலத்துல, எங்க அம்மாவோட அம்மாவோட அப்பா, அதாவது எங்க அமுச்சியோட அப்பா ஊர்லதாங்க வளர்ந்தேன். சலவநாயக்கன் பட்டிப்புதூர்ல இருந்து வாகத்தொழுவு வேலூருக்கு தினமும் நாலு மைல் தூரம் நடந்து போகணும் பள்ளிக்கூடத்துக்கு.

போற வழி ஒரு இட்டேரி, அதாவது மண் சாலை; ரெண்டு பக்கமும் கத்தாழை, சூரி மரங்க, கள்ளிச் செடி, நொச்சி மரம், தொட்டாச்சிணுங்கி, பூவரச மரம், ஆவாரம்பூச் செடிக, கோவைக் கொடிக, துத்திச் செடிகன்னு பலதும் இருக்கும்.


கத்தாழைகள்ல அம்மணிகளோட நாமுளும் இருப்போம். அய்ய... நீங்க நினைக்கிற மாதிரி இல்ல! பொன்னானுக பேருமு அம்மணிக பேருமு ஒட்டுக்கா ஒட்டுக்காப் போட்டு கீறி வெச்சிருப்பாங்கன்னு சொல்ல வந்தேன்.

அப்புறம் வெள்ளிக்கிழமையானா, பரீட்சை லீவு விட்டா, தோட்டங்காட்டுக்கு போயிடணும்; வேறெதுக்கு? மாடு மேய்க்கத்தான்! அப்படித்தாங்க, ஒரு நாள் நான் ஊருக்கு மேவறம் இருந்த ஒரு தோட்டத்துல மாடு மேய்ச்சுட்டு இருந்தன். அவங்க அப்பதான் சோளத்தட்டு எல்லாம் வெட்டி, அறுவடை செய்து இருந்தாங்க. நான் அந்தக் காட்டுல மாடு கன்னுகளை மேய்க்க விட்டுட்டு, அவங்க சாளை முன்னாடி இருந்த களத்துல இருந்தேன்.

அந்தத் தாத்தா எதோ புத்தகம் படிச்சுட்டு இருந்தாரு. பள்ளிக்கூட லீவுல டவுன்ல இருந்து வந்திருந்த அவங்க பேத்தியும் அந்த சாளைத் தாவாரத்துல ஊஞ்சல் ஆடிட்டு இருந்துச்சு. அப்ப எனக்கு வயசு 14. எதோ பேசிட்டு இருந்தோம், திடீல்னு அந்த பொண்ணு ஒரு கேள்வி கேட்டாப் பாருங்க, எனக்கு கைகால் எல்லாம் நடுக்கம் எடுத்துகிச்சு.

ஆமாங்க! காதல்னா என்ன? நீங்களும் நானும் காதலிக்கலாமா அப்படின்னுச்சு அது. எனக்கா, என்ன சொல்றதுன்னே தெரியலை. இதுக்கும் அந்தப் பொண்ணுக்கு என்ன விட ரெண்டு வயசு கம்மி. மாடு பக்கத்து தோட்டத்துல புகுந்துடுச்சுன்னு சொல்லிட்டு, எடுத்தேன் ஓட்டம்! அவ்வளவுதான், அந்தப் பக்கமே தலைவெச்சுப் படுக்கலையே?!

பத்துநாள்க் கழிச்சு, அவங்க அம்மா அப்பாவோட எங்க வீட்டுக்கு வந்திருந்துச்சு. என்னைப் பார்த்துப் பார்த்து மெலிசா சிரிக்குது. எனக்கா, உள்ளூர ஒரே பயம். கிராமத்தானுக்கு அதை எதிர்கொள்ற பக்குவம் அப்ப இருந்திருக்கலை. வேறென்ன சொல்ல?!


நாணம் என்பது பொதுவுடமை!

(குடுகுடுப்பை மற்றும் தளபதி நசரேயன் தொடரவும்)

30 comments:

பாவக்காய் said...

kalakkal thalaiva !! indha india-tripil dharapuram pakkam poneengala?

- senthil

குடுகுடுப்பை said...

சென்சார் கட் நடந்த மாதிரி இருக்கே......

தாராபுரத்தான் said...

தவறு என்பது தவறிச் செய்வது..தப்பு என்பது தெரிந்து செய்வது..தவறுசெய்தவன் வருந்தியாகனும். தப்பு செய்தவன் திருந்தியாகனும். வாத்தியார் வாய் மூலமா வாலி சொல்லியிருக்கார்ல்ல. அதுசரி பக்கத்து சாலை பாப்பாகிட்ட பயந்ததை சொல்லாம விட்டிங்க. மந்திரீத்து விட்டிருப்போம்மில்ல.

Unknown said...

ஒரு நல்ல வாய்ப்பை தவற உட்டுட்டீங்களே பழமை

அன்புடன் அருணா said...

நம்பிட்டோம்!

Anonymous said...

//நாணம் என்பது பொதுவுடமை//

:)

Paleo God said...

ஆக பின் நவீனத்துல ஆரம்பிச்சு பொதுவுடைமைல முடிச்சிருக்கீங்க.. ஆனாலும் முத பில்ட் அப்...யப்பா..:)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சூப்பர் ஸ்டாரு யாருண்ணு கேட்ட

அண்ணன் பழமைபேசின்னு சொல்லு..,

குறும்பன் said...

ஓ மன்னிப்பு வருந்துவதற்கு இப்படி பொருள் இருக்கா?

அமுச்சின்னா அம்மாவோட அம்மாவோட அப்பாவா? அப்ப அம்மாவோட அப்பாவை என்னனு கூப்பிடுவீங்க? நாங்க அப்புச்சின்னு கூப்பிடுவோம்.

\\கத்தாழைகள்ல அம்மணிகளோட நாமுளும் இருப்போம். அய்ய... நீங்க நினைக்கிற மாதிரி இல்ல! பொன்னானுக பேருமு அம்மணிக பேருமு ஒட்டுக்கா ஒட்டுக்காப் போட்டு கீறி வெச்சிருப்பாங்கன்னு சொல்ல வந்தேன்.\\
உங்க பேருக்கு பக்கத்தில் எந்த அம்மணியோட பேரு இருந்தது? சும்மா தெரிஞ்சுக்கலாம்ன்னுதான். இஃகி

\\இதுக்கும் அந்தப் பொண்ணுக்கு என்ன விட ரெண்டு வயசு கம்மி\\ தப்பென்ன இருக்கு இஃகி.

\\அப்ப இருந்திருக்கலை\\ நம்பறோம். -

vasu balaji said...

/இதுக்கும் அந்தப் பொண்ணுக்கு என்ன விட ரெண்டு வயசு கம்மி. /

அட அட. ச்ச்சும்மா..பொது அறிவுக்காக இந்தத் தகவலெல்லாம் தெரிஞ்சி வெச்சிக்கிறது:))

/என்னைப் பார்த்துப் பார்த்து மெலிசா சிரிக்குது. எனக்கா, உள்ளூர ஒரே பயம். /

அச்சோ. பயத்துலயும் என்னமா பாத்து வச்சிருக்குது புள்ள:))

/கிராமத்தானுக்கு அதை எதிர்கொள்ற பக்குவம் அப்ப இருந்திருக்கலை. வேறென்ன சொல்ல?! /

இப்ப இருக்கான்னு எதிர்பாராத திசையில இருந்து ஒரு எதிரொலி கேட்டாமாதிரி இல்லை?:))

ஈரோடு கதிர் said...

இந்த வாரம் முழுசும் ஒரே உள்குத்தா இருக்கும்போல இருக்கே

ப்ரியமுடன் வசந்த் said...

மாடு பக்கத்து தோட்டத்துல புகுந்துடுச்சுன்னு சொல்லிட்டு, எடுத்தேன் ஓட்டம்! அவ்வளவுதான், அந்தப் பக்கமே தலைவெச்சுப் படுக்கலையே?!
//

:)))))

அம்புட்டு நல்லவரா நீங்க?

ஈரோடு கதிர் said...

//ஆமாங்க! காதல்னா என்ன?//

இது டாப் டக்கரு...

ஆமா கத்தாழச் செடியில எழுதிவச்ச அம்முனி எங்க இருக்குதுங்க இப்போ

க.பாலாசி said...

//இதுக்கும் அந்தப் பொண்ணுக்கு என்ன விட ரெண்டு வயசு கம்மி.//

அப்புறமென்ன... ச்ச்ச... சான்ஸ மிஸ் பண்ணிட்டீங்களே...

கபீஷ் said...

//குடுகுடுப்பை said...
சென்சார் கட் நடந்த மாதிரி இருக்கே......
//

சென்சார் கட் மட்டுமா, ஆள்மாறாட்டம் வேற :-)

கபீஷ் said...

//கண்டு பாவனை//

அப்படீன்னா தமிழ்ல ஷோ ஆஃப் ஆ?

பாவம்ங்க அவருக்குத் தமிழ் சரியா தெரியாததுனால அப்படி சொல்லிட்டார். நாம அவர மன்னிச்சிடலாம் :-) படம் வேற ஓடல.

ஆனா மன்னிப்பு+வருத்தம் தெரிவிக்க இவ்வளவு நாள் நீங்க எடுத்துக்கிட்டத எப்படியும் நியாயப்படுத்த முடியாது. அக்பர், வேத்தியன் மன்னிச்சாலும் நான் உங்கள மன்னிக்கல.:-):-)

- இரவீ - said...

:)) இஃகி இஃகி...

Unknown said...

ஒரு மாப்பு கேக்குறதுக்கு இவ்வளவு பில்-டப்பா??

அதுலயே முக்கால் பதிவு போயிருச்சி. கடைசில நெறைய சென்சார் கட் போட்டு 3 பாரால சொல்லவந்ததை முடிச்சிட்டிங்க. ஆரம்பிச்சா மாதிரியே இல்லை.. :))

பழமைபேசி said...

பழமைபேசி said...
பழமைபேசி said...
// கபீஷ் said...
//கண்டு பாவனை//

அப்படீன்னா தமிழ்ல ஷோ ஆஃப் ஆ?
//

ஆமாங்க சீமாட்டி....



மக்களே, இப்ப நான் வேலைக்கு கிளம்பிட்டு இருக்கேன்... சாயங்காலம் வந்து நீங்க வாருனதுக்கு Damage Control செய்யுறேன் சரியா?

என்னா வில்லத்தனம்?!

கபீஷ் said...

//சாயங்காலம் வந்து நீங்க வாருனதுக்கு Damage Control செய்யுறேன் சரியா?//

அதெல்லாம் நடக்கற காரியமா? வந்து எல்லாருக்கும் ஒட்டுக்கா ஒரு நன்றி சொல்றதுக்கு இவ்வளவு பில்டப்பா?

சிநேகிதன் அக்பர் said...

இதுக்கு மன்னிப்பெல்லாம் ரொம்ப அதிகம். என்னையும் நினைவில் கொண்டது சந்தோசமாக இருக்கு.

உங்கள் பதின்ம வயது அனுபவங்கள் அருமை அண்ணா.

நசரேயன் said...

//குடுகுடுப்பை said...
சென்சார் கட் நடந்த மாதிரி இருக்கே......
//

ஆமா.. ஆமா

Viji said...

:)

சரண் said...

கத பொசுக்குன்னு பாதிலயே முடிஞ்சா மாதிரி இருக்கு.. கண்டிப்பா இந்தக் கதையில இன்னும் விவாகாரம் இருக்கோணும்.. அப்புறம் அந்தப் பாப்பாத்தி பேரென்ன? இப்ப எங்க இருக்குது?

அப்புறம் ஒரு முட்டாத்தனக் கேள்வி.. பதின்ம வயதுன்னா 12-19 (teens) வரைக்குமா?

பழமைபேசி said...

@@பாவக்காய்

நன்றிங்க, தாராபுரத்துக்கு பக்கத்துல போனேன்... ஆனா, தாராபுரம் போகலை.... அடுத்த விசுக்கா போகோணும்!

//குடுகுடுப்பை said...
சென்சார் கட் நடந்த மாதிரி இருக்கே......
//

க்கும்!

@@தாராபுரத்தான்

மந்திரிச்சு உடுறதா? ஊர் கடத்தி, இலட்சுமி நாய்க்கன் பாளையத்துல அல்ல கொண்டு போய் விட்டாங்க?!

@@தாமோதர் சந்துரு

இஃகி!

//அன்புடன் அருணா said...
நம்பிட்டோம்!
//

Very Good!

@@சின்ன அம்மிணி

சிரிப்பு? இஃகி!

//ஷங்கர்.. said...
ஆக பின் நவீனத்துல ஆரம்பிச்சு பொதுவுடைமைல முடிச்சிருக்கீங்க.. ஆனாலும் முத பில்ட் அப்...யப்பா..:)
//

என்ன செய்யுறதுங்க... நேரா விசயத்துக்கு வந்தா, பொசுக்குன்னு இருக்குன்னல்ல சொல்லுறீங்க?

@@SUREஷ் (பழனியிலிருந்து)

மருத்துவரே, நான் ஒரு சாமான்யன்.. அப்படியே தொடரவும் விருப்பம்!

//குறும்பன் said...
அமுச்சின்னா அம்மாவோட அம்மாவோட அப்பாவா?
//

மருத்துவர்கள்ன்னாலே, பிரச்சினைதான்! ஏன், நீங்களும் குழம்பி அடுத்தவங்களையும்? அம்மாவோட அம்மாவோட அப்பா, அப்படின்னா அமுச்சியோட அப்பா... அதாவது பூட்டன்!

//உங்க பேருக்கு பக்கத்தில் எந்த அம்மணியோட பேரு இருந்தது?//

அந்த அம்மணிதானுங்க!

//\\அப்ப இருந்திருக்கலை\\ நம்பறோம். -//

நன்னியோ நன்னி!

//வானம்பாடிகள் said...
இப்ப இருக்கான்னு எதிர்பாராத திசையில இருந்து ஒரு எதிரொலி கேட்டாமாதிரி இல்லை?:))
//

என்னைக்கு ஒருத்தங்களுக்குன்னு ஆச்சோ, அன்னைக்கே அது போச்சுது... இதுலென்ன எதிரொலி?

//ஈரோடு கதிர் said...
இந்த வாரம் முழுசும் ஒரே உள்குத்தா இருக்கும்போல இருக்கே
//

ஆமாங்க மாப்பு... நீங்க எதுக்கும் பாத்து இருங்க... இஃகி!

// பிரியமுடன்...வசந்த் said...

:)))))

அம்புட்டு நல்லவரா நீங்க?
//

நல்லவர் கெட்டவர்ங்றது அல்ல இங்க.... திராணி இல்ல... அதுல என்னங்க தம்பி ஒளிவு மறைவு??


@@க.பாலாசி

ப்ச்!


//கபீஷ் said...
//குடுகுடுப்பை said...
சென்சார் கட் நடந்த மாதிரி இருக்கே......
//

சென்சார் கட் மட்டுமா, ஆள்மாறாட்டம் வேற :-)
//

இத பார்றா.... நாமளா வலிய வந்து Wantedஆ எனக்கு தெகிரியம் இருந்து இருக்கலைன்னு சொன்னாலும் நம்ப மாட்டாங்கிறாய்ங்க....


//பாவம்ங்க அவருக்குத் தமிழ் சரியா தெரியாததுனால அப்படி சொல்லிட்டார். நாம அவர மன்னிச்சிடலாம் :-) படம் வேற ஓடல.//

கட்சியுந்தான படுத்துகிச்சு... ஏன் மறைக்கப் பாக்குறீங்க??

//அக்பர், வேத்தியன் மன்னிச்சாலும் நான் உங்கள மன்னிக்கல.:-):-)//

காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வி எவ்வளவோ பரவாயில்லை என்று!!

//இரவீ - said... //

நன்றிங்!

//முகிலன் said...
ஒரு மாப்பு கேக்குறதுக்கு இவ்வளவு பில்-டப்பா??
//

என்ன செய்யுறதுங்க... நேரா விசயத்துக்கு வந்தா, பொசுக்குன்னு இருக்குன்னல்ல சொல்லுறீங்க?

@@ திகழ்
@@அக்பர்
@@நசரேயன்
@@Viji

நன்றிங்க மக்களே!

பழமைபேசி said...

//சரண் said...
கத பொசுக்குன்னு பாதிலயே முடிஞ்சா மாதிரி இருக்கு.. கண்டிப்பா இந்தக் கதையில இன்னும் விவாகாரம் இருக்கோணும்.. //


தம்பி,

பொதுவா நாம புனைவு எழுதுறது மிகவும் குறைவு. அனுபவங்களைச் சார்ந்தே எழுதிட்டு வர்றோம்... சுவை கூட இதர விபரங்களைச் சேர்த்தும்வும், நேரிடையான அடையாளம் தெரியாம இருக்க பேர்களை மாத்திப் போட்டும் இடுகைகள் இட்டுட்டு வர்றோம்...

நிறுத்த வேண்டிய இடத்துல நிறுத்தவும்தான், வாசகர்கள் கலாய்ச்சிச் சிரிச்சுட்டு இருக்காங்க... பிற்பாதி மகா சோகம் கப்பியதுங்க தம்பி!



//அப்புறம் அந்தப் பாப்பாத்தி பேரென்ன? //

என் மனையாள் உட்பட்டு, கோவையிலிருந்தும், திருப்பூரிலிருந்தும், நான் குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்த என் உற்றார் உறவினர் எல்லாரும் தினமும் வந்து, என் இடுகைகளை வாசிக்கிறாங்க... அது போக நண்பர்கள் உலகின் நாலா பக்கங்களில் இருந்தும்.... அவங்க சுலுவுல விசயத்தை யூகிச்சு இருப்பாங்க... இருந்தாலும், நீங்க கேட்டதற்காக... அம்மணி பேர்ல நிலா இருக்கும்.

//இப்ப எங்க இருக்குது?//

சொர்க்கத்தில் இருந்து எனக்கு அனுதினமும் ஆசிர்வாதங்களை அனுப்பிகிட்டே இருக்கு!


//அப்புறம் ஒரு முட்டாத்தனக் கேள்வி.. பதின்ம வயதுன்னா 12-19 (teens) வரைக்குமா?//

ஆமாங்க!

சரண் said...

//பிற்பாதி மகா சோகம் கப்பியதுங்க தம்பி!//
// அம்மணி பேர்ல நிலா இருக்கும். //
//
சொர்க்கத்தில் இருந்து எனக்கு அனுதினமும் ஆசிர்வாதங்களை அனுப்பிகிட்டே இருக்கு!//

புரியுதுங்க..

இந்த மாதிரி சோகங்களெல்லாம் நமக்குள்ளே கலந்து நம்மோடவே மண்ணாகர விஷயங்கங்க..
இவ்வளவு சோகம் இருக்கறது தெரியாம..எதோ வெளயாட்டாக் கேட்டுட்டங்க.. மன்னிச்சுக்கோங்க..

பழமைபேசி said...

//எதோ வெளயாட்டாக் கேட்டுட்டங்க.. மன்னிச்சுக்கோங்க//

அய்ய... பரவாயில்லங்க தம்பி...

//வெளயாட்டாக்//

இது என்னன்னு படிச்சு சொல்ல முடியும்ங்களா?

Sabarinathan Arthanari said...

//சொர்க்கத்தில் இருந்து எனக்கு அனுதினமும் ஆசிர்வாதங்களை அனுப்பிகிட்டே இருக்கு!//

நகைசுவையாக படித்த பதிவு, கடைசியில் மனதை கனக்க செய்து விட்டது

Thamira said...

மன்னிப்புக்கான பில்ட் அப் அழகு.

நாணம் என்பது பொதுவுடைமை' நச்சுன்னு முடிச்சுருக்கீங்க.!