2/04/2010

யார், என்ன சொன்னார்கள்?

ஒரு விழா, அதுல கலந்துக்க பாவேந்தரும் ஒரு அமைச்சரும் போயிருந்தாங்க. அப்ப, இரண்டு பேருக்குமே வரவேற்பு, மாலை மரியாதை எல்லாம் கிடைச்சது. மேடையில உட்கார்ந்து இருந்தாங்க. அப்ப, பாவேந்தருக்குக் கிடைச்ச ஒரு பொன்னாடைய அமைச்சர் சுட்டு, தான் உட்கார்ந்து இருந்த இடத்துக்கு நகர்த்திட்டாரு.

பாவேந்தர் உரையாற்றுற முறையும் வந்துச்சு. ஒலிபெருக்கியில போயி, அவர்களே, இவர்களே எல்லாம் சொல்லி முடிச்சுட்டு சொன்னாராம், “நம்ம அமைச்சர் இருக்கிறாரே? அவர் ஒரு பொறுக்கி!” அப்படின்னு சொல்லவும் மக்கள் பரபரக்க, பாவேந்தரோ பதட்டப்படாம பக்கத்துல இருந்த சோடாத் தண்ணிய ஒரு வாய் குடிச்சுட்டுத் தொடர்ந்தாராம், “எடுத்த வைரம்! மிகவும் நல்லவர்!!.....” அப்படின்னு.


======================================

சேக்சுபியர் ஒரு நாத்திகர் அப்படின்னு ஒரு கருத்து இருக்கு. இறை நம்பிக்கையக் கடுமையாச் சாடினாராம். எதையும், எதற்கும் பயப்படாமச் சொல்லக் கூடியவராவும் இருந்தாராம். அவருக்கு வயசாயி, எண்பது எண்பத்தஞ்சி வயசா இருக்கும் போது நோய் வாய்ப்பட்டுக் கிடந்தாராம்.

அந்த சூழ்நிலையில, திடீர்னு ஒரு நாள் பாதிரியாரையும் வழக்கறிஞர் ஒருத்தரையும் வரச் சொன்னாராம் சேக்சுபியர். எல்லாருக்கும் ஒரே பரபரப்பு, ஆச்சரியம்!


கடைசி நேரத்திலயாவது எப்படியோ அவருக்கு இறை பக்தி மேல ஒரு நம்பிக்கை வந்துதே? பாதிரியாரை வெச்சிட்டு உயில் எழுதணும்னு ஆசைப்படுறார் பாருங்கன்னு எல்லாருக்கும் ஒரே மகிழ்ச்சி.

அவங்களும் வந்தாங்க. பாதிரியார், சட்டத்தரணி ரெண்டு பேரையும் ரெண்டு பக்கத்துல வெச்சிட்டுச் சொன்னாராம், “நானும் இயேசு கிறிஸ்த்து மாதிரி, கொடுமையானவங்களுக்கு மத்தியில இருந்துட்டு சாகப் போகிறேன்!” அப்படின்னு!


======================================

ஃபிலடெல்பியால மதியம் இரண்டு மணி, கடுமையான கோடைகாலம் அது. நகர்ப்புறத்தோட மத்தியில இருக்குற ஒரு சாலையோரம். வாகனம் நிக்குது. வேர்க்க விறுவிறுக்க அவர் அந்த வண்டியில இருந்த மின்கலப்(battery) பொட்டியக் கழட்டிட்டு இருந்தாராம்.

அந்த நேரத்துல அங்க வந்த காவல்காரரு(police), ”ஏம்ப்பா வந்து உதவி ஏதாவது வேணுமா?”. அதைக் கேட்ட அவரு, வேண்டா வெறுப்பா நிமிர்ந்து பார்த்தாராம். அதுக்கு இவர் சொன்னாராம், “ஆமா, உனக்கு சிரமமாத்தான் இருக்கும். நான் ஏன் கேக்குறேன்னா, இது என்னோட வண்டி? நீ உன் வேலைய முடிச்சிட்டியானா, உன்னை உள்ள தள்ளிட்டு நேரங்காலத்துல நான் வீடு போய்ச் சேரணும்!” அப்படின்னு!

19 comments:

அப்பாவி முரு said...

//“நம்ம அமைச்சர் இருக்கிறாரே? அவர் ஒரு பொறுக்கி!”//

தமிழ் இலக்கணத்தில் மூன்றுகாலத்தையும் குறிக்கும் வகையிலான சொற்களுக்கு என்ன பெயர்?

vasu balaji said...

முத்தான மூன்று லொல்லு:))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

3ம் கலக்கல் லொள்ளு :)

//தமிழ் இலக்கணத்தில் மூன்றுகாலத்தையும் குறிக்கும் வகையிலான சொற்களுக்கு என்ன பெயர்?// வினைத்தொகை

Unknown said...

மூன்று ஜோக்குகளுமே சிறப்பு

sathishsangkavi.blogspot.com said...

எல்லாரும் நல்லா சொல்லி இருக்கறாங்க...

குறும்பன் said...

//“நம்ம அமைச்சர் இருக்கிறாரே? அவர் ஒரு பொறுக்கி!” // உண்மை இஃகி

//“நானும் இயேசு கிறிஸ்த்து மாதிரி, கொடுமையானவங்களுக்கு மத்தியில இருந்துட்டு சாகப் போகிறேன்!” அப்படின்னு! // ;-)))) உண்மை உண்மை உண்மை

அரசூரான் said...

நானா இருந்தா... எங்க "பொறுக்கி"ய எழுதிகாமிங்கன்னு சொல்லி, மெல்லினம் ஒழிந்து வல்லினம் மிகுந்து இருந்திருந்தது... மென்னிய் "பொருக்கி" இருப்பேன். அருமை.

இதே போல் ஒரு அரசர் தன்னை புகழ்ந்து பாடிய (கண் தெரியாத) தமிழ் புலவருக்கு தன் அமைச்சரிடம் அவருக்கு ஒரு பொன்னாடை எடுத்துவர்ச் சொன்னாராம். ஆனா அந்த பன்னாட கண் தெரியாதவர்தானே என்று ஒரு கிழிந்த பொன்னாடைய போர்த்தினாரம்.

அதை தடவி பார்த்து தெரிந்துகொண்ட புலவர் அதை அழகாக சொன்னாரம்... நான் பெரிதாக தங்களை என்ன பாடி கிழித்துவிட்டேன் என்று எனக்கு பொன்னாடை போர்த்தி பெருமை படுத்துகிறீர்கள் என்று கேட்டாராம்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

மூன்றும் சிறப்பு,வித்தியாசமான இடுகை. எண்பது,எண்பத்தைந்து என்பதில் உள்ள பிழையை சரி செய்யுங்கள்.

க.பாலாசி said...

சுவாரசியமான மூன்று நிகழ்வுகள்... ஆனாலும் பாவேந்தர் சொன்ன முதல்வார்த்தை உண்மைதானே..??

அண்ணாமலையான் said...

நல்ல நிகழ்வு, நல்ல பகிர்வு

கபீஷ் said...

@அப்பாவி முரு,
வினைத்தொகை?

பழமைபேசி said...

//கபீஷ் said...
@அப்பாவி முரு,
வினைத்தொகை?
//

எங்கயும் பாத்து காப்பி அடிக்கிறதுதான் வழக்கமா சீமாட்டி மேம்?

@@அண்ணாமலையான்
@@ஸ்ரீ
@@க.பாலாசி
@@அரசூரான்
@@குறும்பன்
@@ Sangkavi
@@முகிலன்
@@ ச.செந்தில்வேலன்
@@வானம்பாடிகள்
@@அப்பாவி முரு

நன்றிங்க மக்களே!

நேசமித்ரன் said...

செம லொள்ளு

:))

தாராபுரத்தான் said...

எல்லாருக்கும் ஒரே மகிழ்ச்சி.எனக்கும் தானுங்கககக.

Thamira said...

சுவாரசியம்.

பழமைபேசி said...

@@நேசமித்ரன்

நன்றிங்க நேசமித்ரன்!

//தாராபுரத்தான் said...
எல்லாருக்கும் ஒரே மகிழ்ச்சி.எனக்கும் தானுங்கககக.
//

இஃகிஃகி!

//நசரேயன் said...
நல்லா இருக்கு
//

தளபதி வாழ்க, வணக்கம்!

//ஆதிமூலகிருஷ்ணன் said...
சுவாரசியம்.
//

ஆதி, வாங்க, வணக்கம்! நன்றி!!

cheena (சீனா) said...

அன்பின் பழமை பேசி

மூன்றுமே நல்லா இருக்கு - மூணாவது சூப்பர் - நச்சுன்னு முடியுது -

நல்வாழ்த்துகள் பழமை பேசி

மதுரை சரவணன் said...

nalla pathivu. rasiththen. meentum meentum patiththen. arputham.

மாதேவி said...

மூன்றும் அசத்தல்.