9/30/2008

நீ தாழ்ந்தவனா? திருந்துங்கப்பா.......

பொதுவா, ஒவ்வொருத்தரும் தன்னை உயர்வா நினைக்கணும். குறைந்தபட்சம் தாழ்வா நினைக்கக் கூடாது. அதுக்காக, இறுமாப்போட இருக்கணும்ன்னு நாம சொல்ல வரலை. அப்பத்தானே, இயல்பா எதையும் செய்யமுடியும். இல்லீங்ளா? ஆனா பாருங்க, தமிழர்கள்ல ஒரு கணிசமான சதவிகிதத்தினர்க்கு இதுல என்னவோ கொஞ்சம் சிக்கல்.

நம்மாளு செய்யுற தொழில்ல படு திறமைசாலியா இருப்பான். ஆனா பாருங்க, அலுவலகம் தொழில் செய்யுற இடம்ன்னு வந்துட்டா அடக்கியே வாசிப்பான். நாட்டுக்குள்ள, வடநாட்டவரைப் பாத்தாப் பேச மாட்டான். வெளிநாடுன்னா, வெள்ளைக்காரன், சீனன் இவங்க முன்னாடி அடக்கியே வாசிப்பான். அவனுக பெரும்பாலும், நல்லா, வாய்ச் சொல்லில் வீரனா இருப்பாங்க. இந்த மாதிரி சூழ்நிலைல, அலுவலகத்துல கலந்துரையாடல்(group discussion), வேலை நிமித்தம் நிலைஅறி கூட்டம்(status meeting)ன்னு பலதும் நடக்கும்.

அவனுக அந்த மாதிரி நேரங்கள்ல, நல்லா அவனுகளை சுயவிற்பனை (self promoting) செய்வாங்க.... நம்மாளு, கொஞ்சம் கூட சட்டை செய்துக்க மாட்டாரு. நம்ம ஆளுகள்ல இருக்குற, திடமாப் பேசி வேலை செய்யுற தன்னம்பிக்கை இருக்குறவன் பேச ஆரம்பிச்சா, அந்த வாய்ச்சொல் வீரனுக்கு இடிக்கும். ஆனா, நம்ம தன்னம்பிக்கை கொண்டவன் பேசி அதை சரி பண்ணுவான். அங்கதாங்க பிரச்சினை! வாய்ச்சொல் வீரன், மரம் மாதிரி பவ்யமா உக்காந்துட்டு இருக்குற நம்மாளுக்கு தூண்டில் போடுவான். என்ன முருகா, நீ என்ன நினைக்குறேன்னு சும்மா கேப்பான். வேறென்ன? நம்மாளு சரணாகதிதான்!

சரி அது போகட்டும், வெளில வந்து சக நாட்டவன் நண்பனைப் பாத்து சலிச்சுக்குவான், 'ஏண்டா, வாய வெச்சிக்குனு சும்மா இருக்க மாட்டியா?'ன்னு கேப்பான்.
சில நேரங்கள்ல திரை மறைவுல போட்டும் விட்டுடுவான். ஏண்டா, உங்களுக்கு இந்த பொழப்பு? மொதல்ல, நீ உன்னை உயர்வா நினை! நீ, எந்த விதத்துல குறைச்சல்?? மத்தவன் சொல்லுறது சரி, அவன் மேல்! சகநாட்டவன் பேசினா, அது சரி இல்லை; ஏன்னா, சகதோழன் தன்னை விட உயர்ந்தவன் இல்லை!! எந்த ஊர் ஞாயம்டா இது?

போதும்டா, உங்க தாழ்வு மனப்பான்மை. நீயும் திறமைசாலிதான்! உன்னை மாதிரி உன்னோட சக நண்பனும் திறமைசாலிதான்!! நீ பேசு. இல்ல, பேசுற உன் நண்பனையாவது பேச விடு! நண்பன் பேசுறது சரியாயிருந்தா ஆதரவு குடு!!


ச்சும்மா, கடனைக் கட்ட முடியாதவனுக்கு கடனைக் குடுத்துப்பிட்டு முக்காடு போடுற முட்டாப் பயலுவகளை விட நீ அறிவாளிதான், அதை மொதல்ல நீ நம்பு!


குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்!

அறிவகம்

திரு. பழமைபேசி,

அருமையா எழுதியிருக்கீங்க.. தமிழர்கள் முதலில் தங்களுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை விடவேண்டும். நம்மில் ஒருவன் முன்னேற முயற்சித்தால் அவனை தூக்கிவிடா விட்டாலும் பரவாயில்லை, காலைவாரி விடக்கூடாது. தமிழர்கள் தங்கள் பெருநதன்மையை பணிவாக காட்டுவது சிறந்த பண்பாடுதான். அதேநேரத்தில் பணிவை மற்றவர்கள் இழிவாக மதிப்பிடுவார்களானால், பணிவது பயந்து அல்ல பண்பாடுக்காக என்பதை தைரியமாக சொல்லும் தன்னம்பிக்கை தமிழனுக்கு என்று வருகிறதோ அன்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கும்.தமிழர்களே பணிவு காட்டுங்கள் அதற்காக பணிந்துவிடாதீர்கள்.

24 comments:

Unknown said...

//கடனைக் கட்ட முடியாதவனுக்கு கடனைக் குடுத்துப்பிட்டு முக்காடு போடுற முட்டாப் பயலுவகளை விட நீ அறிவாளிதான்//

நல்லாச் சொன்னீங்க...

Unknown said...

இன்றுதான் ஒலிபெருக்கியோடு உங்கள் பதிவுப் பக்கத்தைத் திறக்கும் வாய்ப்புக் கிடைத்தது.ஒத்த கருத்துடைய பல பட்டிகளை திறந்து வைத்திருந்ததால் எந்த பக்கத்தில் இருந்து பாடல் வருகிறது என திகைத்துப் போனேன். பாடல்கள் அனைத்தும் அருமை. பாடல்களின் தொடுப்பு வழங்க முடியுமா?

தாமிரபரணி said...

இ(ஹி)ந்தியா என்னும் அடிமைதனத்தில் இருக்கும் வரை, நம் தமிழ் மக்களால் அதிலிருந்து மிளமுடியாது, நம் தமிழ்நாட்டில் கானும் அனைத்து இடங்களிலும் ஹிந்தி நிறைந்து வழிகின்றன, நீ விரும்பினாலும் விருமாவிட்டாலும் உன்மேல் ஹிந்தி திணிக்கபடுகின்றன, இதற்கு மிகபெரிய எடுத்தகாட்டு ரூபாய் தாள்கள், நடுவன அரசு அலுவலகங்கள்,வங்கிகள் அனைத்திலும் ஹிந்தியும், ஆங்கிலமும்மே முன்னிறுத்தபடுகின்றன, பின்பு எப்படி தமிழன் தன்னைதானே உயர்வாக நினைத்துகொள்வது, பள்ளிகூடங்களில் இருந்தே வடநாட்டவர்களையும், ஹிந்தியையும் பெருமையுடன் பாடம் நடத்துகிறார்கள், நாமும் எருமைபோல கேட்டுகொண்டிருக்கிறோம், அதனால்தான் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வந்து ஹிந்தியை எதிர்பார்பதும், தமிழ்நாட்டில் நாங்கு வருடத்துக்கு மேல் வேலை செய்துகொண்டிருக்கிறான் ஆனால் தமிழில் நான்கு வார்த்தைகூட பேச தெரியாது, பேச முயச்சிப்பதில்லை மாறாக தினமும் தமிழர்களை பார்த்து ஹிந்தி தெரியவில்லை என்று நிந்திக்க வேண்டியது.
நான் வசாரித்தவரை, எனக்கு தெரிந்தவரை நம் தமிழர் பற்றிய கலாசாரத்தை பற்றியோ, நம் அரசர்களை பற்றியோ, இந்திய சுதந்திரத்துக்காக போரிட்ட தமிழர்களை பற்றியோ அவர்கள் படிப்பதில்லை, காரணம் தமிழன் புறக்கணிக்கபடுகிறான் என்பதே கசப்பான உண்மை, நாம் இந்தியா என்கிற அடிமையில் நம் சுயமரியாதையை தொலைத்துவிட்டோம் நண்பர்களே தொலைத்துவிட்டோம்

பழமைபேசி said...

//பின்னூட்டம் பெரியசாமி.. said...
//கடனைக் கட்ட முடியாதவனுக்கு கடனைக் குடுத்துப்பிட்டு முக்காடு போடுற முட்டாப் பயலுவகளை விட நீ அறிவாளிதான்//

நல்லாச் சொன்னீங்க...
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!!

பழமைபேசி said...

//பின்னூட்டம் பெரியசாமி.. said...
இன்றுதான் ஒலிபெருக்கியோடு உங்கள் பதிவுப் பக்கத்தைத் திறக்கும் வாய்ப்புக் கிடைத்தது.ஒத்த கருத்துடைய பல பட்டிகளை திறந்து வைத்திருந்ததால் எந்த பக்கத்தில் இருந்து பாடல் வருகிறது என திகைத்துப் போனேன். பாடல்கள் அனைத்தும் அருமை. பாடல்களின் தொடுப்பு வழங்க முடியுமா?
//

தமிழும், நல்ல பல கருத்துக்களும் பரவட்டும்.....

http://www.digital-webstream.de/stream/26390.ram

பழமைபேசி said...

@@@தாமிரபரணி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!!உங்க ஆதங்கம் புரிகிறது. ஆனாலும், நாம் நிமிர்ந்து நிற்கவேண்டும்...... அப்பொழுது தானே நம் எண்ணங்கள் நம்மவருக்காவது புலப்படும். பேசவேண்டும்....
தமிழா, அச்சம் தவிர்!
அதாவது தாமிரபரணி போல்! அப்போதுதான் குரல் வெளிப்படும்!!

குடுகுடுப்பை said...

பொதுவாக நாம் விட்டுக்கொடுத்து விடுவோம்.குறிப்பிட்ட பிற மாநிலத்தவர்களை பாருங்கள் அவர்கள் பேசவே மாட்டார்கள், காரியம் மட்டும் நடக்கும்

பழமைபேசி said...

//வாங்க, வாங்க! அது அடுத்த பிரச்சினை. விட்டுக் குடுத்து விட்டுக் குடுத்து, நாம எப்ப ஒசரத்துக்கு வர்றது? என்னோட ஆதங்கம் எல்லாம், அவங்களை மாதிரி நாமளும் ஏன் ஒருத்தொருக்கு ஒருத்தர் ஆதரவா காரியம் பண்ணுற வகையில இருக்கப்படாதுங்றதுதான்.

பழமைபேசி said...

@@குடுகுடுப்பை said...

வாங்க, வாங்க! அது அடுத்த பிரச்சினை. விட்டுக் குடுத்து விட்டுக் குடுத்து, நாம எப்ப ஒசரத்துக்கு வர்றது? என்னோட ஆதங்கம் எல்லாம், அவங்களை மாதிரி நாமளும் ஏன் ஒருத்தொருக்கு ஒருத்தர் ஆதரவா காரியம் பண்ணுற வகையில இருக்கப்படாதுங்றதுதான்.

Anonymous said...

இது நல்லா இருக்கு....

பழமைபேசி said...

//ரகு said...
இது நல்லா இருக்கு....

//
வாங்க ரகு! நன்றி!!

Natty said...

உலகத்துல உன்னை விட யாரும் பெரியவன் இல்ல.. .அதனாலே யாரையும் பார்த்து பயப்படாதே
உலகத்துல உன்னை விட யாரும் சின்னவன் இல்ல... அதனாலே யாரையும் பார்த்து துச்சமா நினைக்காதே...

- அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியப்பெருமாள் இந்திரன் ;)

பழமைபேசி said...

//Natty said...
உலகத்துல உன்னை விட யாரும் பெரியவன் இல்ல.. .அதனாலே யாரையும் பார்த்து பயப்படாதே
உலகத்துல உன்னை விட யாரும் சின்னவன் இல்ல... அதனாலே யாரையும் பார்த்து துச்சமா நினைக்காதே...

- அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியப்பெருமாள் இந்திரன் ;)
//

வெகு நேர்த்தியான மொழிங்க! ரொம்பப் பிடிச்சு இருக்கு... கண்டிப்பா இதன்படி நடக்க முயற்சி செய்வேன். வருகைக்கும் மேலான மொழிக்கும் மிக்க நன்றி!

Unknown said...

//தமிழும், நல்ல பல கருத்துக்களும் பரவட்டும்.....//

மிக்க நன்றி பழமைபேசி..
இப்பொதெல்லாம் பிண்ணனியில் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் பாடல்கள், பாவலர் தேனிசை செல்லப்பா இசை மற்றும் குரல் உள்ளிட்ட தமிழிசையுடனே எனது வேலை நடைபெறுகிறது.

பழமைபேசி said...

//
பின்னூட்டம் பெரியசாமி.. said...
//தமிழும், நல்ல பல கருத்துக்களும் பரவட்டும்.....//

மிக்க நன்றி பழமைபேசி..
இப்பொதெல்லாம் பிண்ணனியில் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் பாடல்கள், பாவலர் தேனிசை செல்லப்பா இசை மற்றும் குரல் உள்ளிட்ட தமிழிசையுடனே எனது வேலை நடைபெறுகிறது.
//

மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி!!

Anonymous said...

Good Point...

அது சரி said...

//
வெளிநாடுன்னா, வெள்ளைக்காரன், சீனன் இவங்க முன்னாடி அடக்கியே வாசிப்பான்.
//

அப்பிடியெல்லாம் யாரும் இருக்கிறதா தெரியலை. நீங்க எந்த நாட்ல இருக்கிற தமிழர்கள் பத்தி சொல்றீங்க?

//
மத்தவன் சொல்லுறது சரி, அவன் மேல்! சகநாட்டவன் பேசினா, அது சரி இல்லை; ஏன்னா, சகதோழன் தன்னை விட உயர்ந்தவன் இல்லை!! எந்த ஊர் ஞாயம்டா இது?
//

யாரும் வேண்டுமென்றே இப்படியெல்லாம் செய்வதில்லை. ஒரு உரிமையில் சொல்வார்களே தவிர, கவிழ்க்க வேண்டும் என்று சொல்வதில்லை.

//
ச்சும்மா, கடனைக் கட்ட முடியாதவனுக்கு கடனைக் குடுத்துப்பிட்டு முக்காடு போடுற முட்டாப் பயலுவகளை விட நீ அறிவாளிதான், அதை மொதல்ல நீ நம்பு!
//

அமெரிக்காவில் நடக்கும் பிரச்சினைகளை பற்றி நீங்கள் சொல்லியிருந்தால்....


"கடனை கட்ட முடியாதவனுக்கு கடனை குடுத்துப்பிட்டு முக்காடு போடுற முட்டாப்பயலுவ"... இது பிரச்சினையின் உண்மையான விபரங்களையும், அதன் அடிப்படையும் பற்றி தெரியாதவர்கள் சொல்வது.... ஒருவரை முட்டாள் என்று சொல்லு முன், அவர் முட்டாள் இல்லாவிட்டால் அதை சொல்பவர் மிகப்பெரிய முட்டாள் ஆகிறார்..

ஒரு வேளை எனக்கு தெரியவில்லையோ என்னவோ.. எனக்கு தெரிந்த வரை தமிழர்கள் யாரும் தாழ்வு மனப்பான்மையுடன் இல்லை. என்னவோ தமிழர்கள் எல்லாம் தாழ்வு மனப்பான்மையுடன் கூனிகுறுகி நடப்பது போல் நீங்கள் பதிவிட்டிருப்பது ஆச்சரியாமாக இருக்கிறது!

பழமைபேசி said...

//அது சரி said...

வாங்க நண்பரே! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

//என்னவோ தமிழர்கள் எல்லாம் தாழ்வு மனப்பான்மையுடன் கூனிகுறுகி நடப்பது போல் நீங்கள் பதிவிட்டிருப்பது//

எல்லாரும்னு சொல்லவே இல்லீங்களே... 'தமிழர்கள்ல ஒரு கணிசமான சதவிகிதத்தினர்க்கு'ன்னுதான் சொல்லி இருக்கிறேன்.

என்னுடைய அனுபவம் அப்படி. அப்படி இல்லாம இருந்தா, அது நல்ல விசயந்தான். அதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சியும் கூட.

ரிஷி (கடைசி பக்கம்) said...

Dear palamaipesi,

Even now I'm facing the problem with some of north indian contractors.

Also with few of our people.

By the way I like anthiyur. Once I visited anthiyur / nagalur - my room mates native

பழமைபேசி said...

//
கடைசி பக்கம் said...
Dear palamaipesi,

Even now I'm facing the problem with some of north indian contractors.

Also with few of our people.

//
ஆமாங்க.... சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, கனடா, இப்ப அமெரிக்காவுல நாம பாத்த அனுபவத்தின் விளைவுதாங்க இந்த பதிவு. ஒரு ஆதங்கம்! அவ்வளவே!!

பழமைபேசி said...

//By the way I like anthiyur. Once I visited anthiyur / nagalur - my room mates native//

நன்றிங்க!!

அறிவகம் said...

திரு. பழமைபேசி அருமையா எழுதியிருக்கீங்க..

தமிழர்கள் முதலில் தங்களுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை விடவேண்டும். நம்மில் ஒருவன் முன்னேற முயற்சித்தால் அவனை தூக்கிவிடாவிட்டாலும் பரவாயில்லை, காலைவாரி விடக்கூடாது.

தமிழர்கள் தங்கள் பெருநதன்மையை பணிவாக காட்டுவது சிறந்த பண்பாடுதான். அதேநேரத்தில் பணிவை மற்றவர்கள் இழிவாக மதிப்பிடுவார்களானால், பணிவது பயந்து அல்ல பண்பாடுக்காக என்பதை தைரியமாக சொல்லும் தன்னம்பிக்கை தமிழனுக்கு என்று வருகிறதோ அன்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கும்.

தமிழர்களே பணிவு காட்டுங்கள் அதற்காக பணிந்துவிடாதீர்கள்.

பழமைபேசி said...

@@@அறிவகம்

//
என்னோட பதிவை விட, நீங்க இப்ப சொன்னதுதான் எதார்த்தம். அருமை. உங்க வலைப்பூல நிறைய நல்ல விசயங்கள் இருக்கு. மிக்க மகிழ்ச்சி!!!

பழமைபேசி said...

@@@அறிவகம்

உங்க அறிவியல் சம்பந்தமான பதிவு காலத்துக்கே ஏற்ற ஒன்னு. என்னோட பாணியில, அடுத்த வாரம் நான் ஒன்னு பதியறன்.