9/13/2008

அன்னைக்கும் இன்னைக்கும்......

நீள்நெடுங்கண்ணி - விசாலாட்சி
திருவரங்கம் -- ஸ்ரீரங்கம்
திருச்சிற்றம்பலம் - சிதம்பரம்
திருமறைக்காடு - வேதாரணியம்
திருமுதுகுன்றம், பழமலை - விருத்தாச்சலம்
அங்கயற்கண்ணி - மீனாட்சி
அறம்வளர்த்தாள் - தர்மசம்வர்த்தனி
எரிசினக் கொற்றவை - ரௌத்திர துர்க்கை
ஐயாநப்பர் - பஞ்சநதீசுவரர்
குடமூக்கு - கும்பகோணம்
வாள்நெடுங்கண்ணி - கட்சுநேத்ரி
செம்பொன்பள்ளியார் - சொர்ணபுரீச்சுரர்
யாழினும் நன்மொழியாள் -- வீணாமதுரபாஷினி
தேன்மொழிப்பாவை - மதுரவசனி
பழமலைநாதர் - விருத்தகிரீச்சுரர்

---தேவநேயப்பாவாணர் நூலில் இருந்து

2 comments:

Mahesh said...

என்னங்க... உங்க கடைக்கும் விடுமுறை போல... அபாரமான‌ ஸ்ரீந‌கர் உலா முடிஞ்சு இன்னைக்குதான் சென்னை... என்னமோ நடுவுல இணயத்த எட்டிப்பாக்க முடிஞ்சுது... அப்பிடி உங்க பக்கமும் ஒரு உலா வந்தேன்... நான் தமிழ் நாட்டுல பல கோவில்களுக்கு பொகும்போது இந்த மாதிரி தமிழ் பெயர்களை கண்டு அசந்து போனேன்... இன்னும் சிலது பாருங்க..

திருமறைக்காடர் வேதபுரீஸ்வரர்
அண்ணாமலைநாதர் ‍ அருணசலேஸ்வரர்
உண்ணாமுலையம்மன் அபீதகுஜாம்பாள்
பெரியநாயகியம்மன் ப்ருஹந்நாயகி
தாமரைக்கண்ணி பத்மாக்ஷி

இப்போதைக்கு இவ்வளவுதான் ஞாபகம் வருது

அப்ப‌றம் மீனாட்சிக்கு அங்கயகற்கண்ணின்னு இருக்கு. கொஞ்ச‌ம் சரி பண்னிடுங்க.

பழமைபேசி said...

@@Mahesh

வாங்க மகேசு! ஆமாங்க, ஒரே வேலை..... இனியும் ரெண்டு மூணு நாள் ஆகும்.... நீங்க நல்லபடியா ஊரில இருந்துட்டு வாங்க.