6/29/2013
கண்ணாடி வளையல்
என்றோ ஒரு நாள்!
க.மு இரண்டாம் ஆண்டு
எனக்குப் பிடித்தது
கண்ணாடி வளையலும்
தாவணியும்தானென்று
நான் உன்னிடத்தில் சொன்னதை
நினைவில் வைத்திருந்து
நோகடிக்க வேண்டுமென்பதற்காகவே
அந்த பச்சை வண்ண வளையல்களை
கண்ணில் தெரிகிறாற் போல
வைத்துச் சென்றிருக்கிறாய்!!
தொடக்கூட பயமாயிருக்கிறது
ஏமாந்து விழுந்து உடைந்து விட்டால்
அன்புக் குடம் குறைகுடமானதோ?
கேட்டுச் சுளுக்கு எடுப்பாய்
கண்ணுக்குப் புலப்படாப் பிரம்பும் நீளும்!
தொடாமலும் இருக்க முடியவில்லை!!
தொட்டுப் பார்ப்பதா வேண்டாமா?
கொஞ்சமாய் ஒசந்து
ஒசந்த வேகத்திலேயே தாழ்ந்து
மீண்டும் ஒசறப் பார்க்கும் எண்ணவூசலில்
மெல்ல நகர்கின்றன நத்தை நாட்கள்!!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
தொட்டால் தப்பில்லை
எண்ண ஊஞ்சலை ரசித்தேன்...
உடைக்காமல் தொட்டுப் பார்த்து விடுங்களேன்!
Post a Comment