6/06/2013

தேடல் . . .

சென்ற வாரம்
சென்ற மாதம்
சென்ற ஆண்டு
தேடியன எல்லாமும் கிடைக்கிறது
இன்று தேடப்படுவது தவிர!!

                0o0o0o0
எதையோ தேடப்போய்
இது வந்து அகப்பட
தேடுவது நின்று போய்
அழைத்ததில் தெரிகிறது
பிள்ளைப் பேறு காலம்
அவளுக்கல்ல
அவளது மகளுக்கு!!

                0o0o0o0

தேடியலைந்து திரிந்து
கண்டுபிடித்த பின்னர்
சாவதனமாய்ச் சொல்கிறான்
மச்சான்
இதை மொதல்லயே
சொல்லியிருக்கலாமே?
போனவருசமே அவ சூசைடு!!

                0o0o0o0

கண்ணூ
நெம்ப நேரமா
என்னமோ தேடுறீயே
சொல்லிப் போட்டுத் தேடு
எனும் அப்பத்தா சொல்கிறார்
இத மொதல்லயே
சொல்றதுக்கென்ன கெரகம்?
உன்ற சோப்புலயே இருக்குது பாரு!
கண்ணாடி கிடைத்தது என்பதா?
அப்பத்தாவிடம் பல்பு என்பதா??

                0o0o0o0

குவிக்கப்பட்டிருந்த கூழாங்கற்களில்
தேடித் தேடி தெரிவு செய்து
ஒன்றை எடுத்து நிமிர்கையில் 
Can I have that one?
குளிருண்டது அந்தக்கல் மட்டுமல்ல!!

No comments: