6/19/2013

ஊஞ்சல்

ஊஞ்சல்

தொட்டுப் போகிறது
வாஞ்சைக் காற்று!
பெய்த மழையில்
தனக்குத் தானே
ஆடி மகிழ்கிறது
அந்த ஊஞ்சல்!!

கெட்டவனா?

நிறைய பாம்புகள்
வளைய வரும் இடம் இது 
சொன்னார்கள் கூட வந்தவர்கள்!
ஒன்றுகூடத் தென்படவில்லை!!
அவ்வளவு கெட்டவனா நான்?!