6/26/2013

நொன்னை நையாண்டி

நொன்னை நையாண்டி

ஓடிக் கடக்கும் அவளது காலடி
கீழே கிடந்த இறகின் மீது 
கொஞ்சமே கொஞ்சமாய்த்தான்
உரசிச் செல்கையில்
நீர்த்தரையை நான் பார்க்க, 
தனக்கே தனக்குத்தான்
நொன்னை நையாண்டியுடன்
மொண்ணை மூக்குக் கெக்கலிப்பு
தீண்டப்பட்டுச் சொக்குண்ட
அந்த குள்ளமணி வாத்துக்கு!!


வாய்த்தமை

நாந்தான் 
காய்கறிக்கார அம்மா!
நீதான்
காய்கறி வாங்க வர்றவங்க!
அப்பா,
நீங்க அவ பின்னாடி வாங்க!
கூடை தூக்கிட்டு வர்ற அப்பா நீங்க!!
குழந்தைகள் உலகிலும்
எனக்கு வாய்த்தது அதேதான்!!

4 comments:

ராஜி said...

அப்பவாவது அப்பா ரோலை நல்லா பண்ணீங்களா?!

திண்டுக்கல் தனபாலன் said...

அதுவும் ஒரு சந்தோசம் தான்...!

பார்வதி இராமச்சந்திரன். said...

நல்லாருக்கு...(இந்தூர்ல அம்மாதான் கூட தூக்குறாங்க சாமி..)

மாதேவி said...

ரசனை.