மாதம் நீங்கள் இரண்டு கவிதைகள் அனுப்பலாம். ஒவ்வொரு கவிதைக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் தரப்படும். ஆக ஆண்டுக்கு ஒரு இலட்சத்து இருபதனாயிரம் ஈட்டுவதற்கான நல்லதொரு வாய்ப்பு. தங்கள் படைப்புகள் பாரெங்கும் பிரபலமடைவதோடு கை நிறையப் பணமும் கிடைக்க அரியதொரு வாய்ப்பு. தவறவிடாதீர்!!
ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ஒவ்வொரு கணக்குத் துவங்கவும் ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே வைப்பு நிதியாகும். தமிழ் வளர்க்கவும் உங்கள் படைப்பாற்றல் பெருக்கவும் பொருளாதாரம் கூட்டவும் இது அருமையான வழி. அப்படியான படைப்புகள், கன்னிமாரா நூலகம், கனடா நாட்டுல இருக்குற வாட்டர்லூ பல்கலைக்கழக நூலகம், நியூயார்க் பொதுநூலகம், எகிப்து அலெக்சேண்ட்ரா நூலகம் போன்ற நூலகங்களில் உங்கள் படைப்புகள் இடம் பெற்றுச் சிறப்பெய்தவும் இது ஒரு நல்வாய்ப்புதானே? தகவலை அகிலமெங்கும் பரப்புங்கள். தமிழர்கள் எல்லாரும் பயனடையட்டும். கவிமாலா திட்டத்துல சேருங்க! கனவெல்லாம் நனவாகும்!!
கவிமாலா நிறுவனத்தின் இத்தகைய நல்ல திட்டத்தினைச் செயல்படுத்த உலகமெங்கும் முகவர்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பமுள்ளோர் அணுகலாம்.
அணுக வேண்டிய முகவரி:
திரு.பொருளீட்டன்,
கருவூலகச் செயலர்,
கவிமாலா பன்னாட்டு நிறுவனம்,
முதலிலி வணிகப்பாளையம்,
ஆக்கப்பாடனூர் வட்டம்,
கொங்குநாடு - ௮௲௧
14 comments:
குறிச்சிக்கிட்டோம். தின வார மாத இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் நிறைய விளம்பரம் வந்தால் நம்பகத்தன்மை கூடும்.
//குறும்பன் said...
குறிச்சிக்கிட்டோம். தின வார மாத இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் நிறைய விளம்பரம் வந்தால் நம்பகத்தன்மை கூடும்.//
உங்களைப் போன்ற கவிஞர்கள் பல நூறு பேர் ஆதரவு கொடுத்தால் உடனடியாக அதுவும் கை கூடும்!!
:))))))))))))))))
ஆள் புடிச்சு குடுத்தா தரகுத்தொகை உண்டுதானே
கவிஜ தமிழில் தான் இருக்க வேண்டும் என்று சட்டம் பதியவில்லை.
வைப்பு நிதி என்றால் (wife) பேரில் கம்பேனி துவங்குவீர்களா.
மகளும் கூட்டாளிதானே.
//வைப்பு நிதி என்றால் (wife) பேரில் கம்பேனி துவங்குவீர்களா.
மகளும் கூட்டாளிதானே.//
மன்னிக்கணும். ”வாய்த்த”தற்கு நிதி அல்ல; “வைப்பு” நிதி!!
***மாதம் நீங்கள் இரண்டு கவிதைகள் அனுப்பலாம். ***
கவிதையா? கதை மாரி எதாவது "வாங்க" மாட்டாளா?
நம்ம "கடலை கார்னர்" சீரீஸ ஒரு எபிசோட் $1000 போட்டு வாங்கிக்கிறேன்னு ஒரு ஆஃபர் வந்தது.
பணமா முக்கியம்னு வேணாம்னு சொல்லிட்டேன் :))))
நல்ல திட்டமா இருக்கே
கைக்ள் கவிதை எழுத பரபரக்குது
மன்மோ இமயம் தாண்டிப் பற்க்குது
தமிழை வைத்தும் பிழைக்க அரசியல் அல்லாது
ஒரு வழி காட்டியமைக்கு மனமார்ந்த நன்றி
வாட்டர்லூ! கனடா நாட்டுல இருக்குற வாட்டர்லூ பல்கலைக்கழக நூலகம்!! இது செல்வா முயற்சியா?
பகிர்வுக்கு நன்றி...
நண்பர்களிடம் பகிர்கிறேன்...
@@உயிர்நேயம்
வணக்கம் உயிர்நேயம். என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? மாதம் பத்தாயிரம் ஈட்டுவதோடு, உங்கள் புகழ் அகிலமெங்கும் பரவுமே? ஒரு இலட்ச ரூபாய் முதலீட்டில் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரும்படி. ஒரு இலட்சத்தில் திரைப்படமா? எப்படி? எப்படி?? அடுப்படி!!
அய்யா, உயிர் நேயம் செம காமெடி சார் உங்களோட. மொதல்ல பழமை பேசி யாருன்னு தெரிஞ்சுக்க அவரோட முந்தின பதிவுகள் நாலையாவது படிச்சுப் பாருங்க.
//அணுக வேண்டிய முகவரி:
திரு.பொருளீட்டன்,
கருவூலகச் செயலர்,
கவிமாலா பன்னாட்டு நிறுவனம்,
முதலிலி வணிகப்பாளையம்,
ஆக்கப்பாடனூர் வட்டம்,
கொங்குநாடு - ௮௲௧//
பழமை, என்னது வகை மொக்கையா?
அங்க இதை வைத்து சக்கையா பணம் பண்ணலாம்ன்னு நினைத்தேன். இஃகி... இஃகி.
Post a Comment