5/07/2011

பொட்டிதட்டியின் புரிதல்கள் - 1

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி முதலானவற்றை முறையாக ஆராய்ந்து நோயை அகற்றிடல் வேண்டும்.

மிக எளிதாக, அய்யன் திருவள்ளுவர் ஈரடிகளில் சொல்லி முடித்து விட்டார். ஆனால், இவற்றுக்குப் பின்னால், ஒவ்வொரு நாளும் பல பில்லியன் அமெரிக்க வெள்ளிகள் செலவிடப்படுகின்றன. வருவாயாக ஈட்டப்படுகின்றன. ஆராய்ச்சிக்காக முதலீடு செய்யப்படுகின்றன.

பெருமளவு ஒழுங்குக்கு கொண்டு வரப்பட்ட மருத்துவத் துறையானது இப்பிரபஞ்சத்தில் இருக்கிறது என்று சொன்னால், அது அமெரிக்காவில் இருக்கும் கட்டமைப்பு என்றே கூற முடியும். அந்த அளவுக்கு, சட்ட திட்டங்கள் மூலமாகவும், தகுந்த நெறிகளைக் கொண்டும் பராமரிக்கப்பட்டு வருகிறது. என்றாலும், ஆங்காங்கே வழுக்கள் இடம் பெறுவதும் தவிர்க்க இயலாததாகி விடுகிறது.

கடந்த இருபது ஆண்டுகளாக, மென்பொருள்க் கட்டுமான நிறுவனங்கள், குறிப்பாக இந்திய நிறுவனங்கள், பெருமளவில் கட்டுமானப் பராமரிப்பில் களமிறங்கிப் பல இலட்சம் கோடி ரூபாய்கள் இலாபம் ஈட்டி வருவது கண்கூடு.

ஒரு சாமன்யன்,இந்த மருத்துவக் கட்டமைப்பில் எப்படி இடம் கொள்கிறான்? இடங்கொளலுக்குப் பின்னணியில் என்னவெலாம் நடக்கிறது என்பதை மேலோட்டமாக பார்த்துச் செல்வதே இவ்விடுகையின் நோக்கமாகும்.

ஒரு சாமன்யன் இந்த மருத்துவக் கட்டமைப்பில் நான்குவிதமான வழிகளில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ இடங்கொள்ள முடியும். அவை யாவன?

விருமாண்டி, வெங்காய வடாம் குழுமத்தில் பணிக்குச் சேருகிறார். ஊதியச் சிப்பத்தின்(package) உள்ளீட்டில், விருமாண்டியின் குடும்பத்தாருக்கான மருத்துவக் காப்பீட்டுச் சேவையும் வெங்காய வடாம் குழுமத்தாரால் வழங்கப்படுகிறது.

ஒருவேளை, விருமாண்டி அவர்கள் சுயதொழில்ச் செய்பவர் அல்லது பணிக்குச் செல்லாதவராயின், தானே முன்னின்று, மருத்துவக் காப்பீட்டினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மாகாண அரசின் மெடிக்எய்டு அல்லது நடுவண் அரசின் மெடிகேர் ஆகிய திட்டங்களின் வாயிலாகவும், மருத்துவக் காப்பீட்டுச் சேவையைப் பெறமுடியும்.

சேவை தேவைப்படும் போது, தற்காலிக நுகர்வோராக இருந்து, மருத்துவச் சேவைகளைப் பணம் அளித்துப் பெற்றுக் கொள்வது.

இந்த நான்கு முறைகளின் வாயிலாக அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவக் கட்டமைப்பில் இடம் பெறும் போது, மெடிக் எய்டு மற்றும் மெடிகேர் ஆகிய அரசு சார்ந்த காப்பீட்டு வசதிகளைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.

மெடிக்எய்டு திட்டம் என்பது, மாகாண் அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. வருவாயில் மிகவும் பிந்தங்கிய கீழ்க்கண்ட பிரிவினர், அத்திட்டத்தின் வாயிலாகப் பலன் பெறலாம்.
  • கற்பிணிப் பெண்டிர் (சும்மா, கற்பிணிகள்னு போட முடியாது?!)
  • 19 ஆண்டுகளுக்கு குறைந்த வயதுடையோர்
  • 65 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயதினர்
  • கண் பார்வையற்றோர்
  • மாற்றுத் திறனாளிகள்
  • செவிலியர் சேவை தேவைப்படுவோர்
மெடிகேர் திட்டம் என்பது, நடுவண் அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இதன் மூலமாக, கீழ்க்கண்ட பிரிவினர் பயன்பெறலாம்.
  • 65 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலான ஆண்டுகளை வயதாகக் கொண்டவர்கள்
  • சிறுநீரகக் கோளாறு கொண்டவர்கள் மற்றும் சிறுநீரகம் பழுதடைந்தவர்கள், வயது வரம்பு கிடையாது.
  • மாற்றுத்திறனாளிகள் மற்றும் பணி புரிய இயலாதவர்கள்
இப்படியான மருத்துவக் கட்டமைப்பில், முதல் அடுக்குச் சேவை மையங்களாக இடம் பெறுவன கீழ்க்கண்ட அமைப்புகளாகும்.
  • மருத்துவர், மருத்துவமனை, செவிலியர், செவிலியர் நிலையம், மருந்தாளுநர் முதலான சேவகர்கள்
  • மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் (Insurance Companies)
  • மருந்துப் ப்யனீட்டு மேலாண்மை நிறுவனங்கள் (Pharma Benefit Managers)
  • ஒருங்கிணைந்த மெடிகேர்-மெடிக்எய்டு சேவை மையங்கள் (Centers for Medicare & Medicaid Services (CMS)
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை, மிகவும் மேலெழுந்தவாரியான தகவல்களே ஆகும். ஒவ்வொன்றையும் இன்னும் ஆழமாக நோக்குகிற போது, கட்டமைப்பின் கூறுகள் கிளை, கிளையாகப் பிரிந்து செல்வதைக் காணலாம்.

இதிலே தொழிற் கட்டுறுத்தல் மேலாண்மை (business process management) எப்படி இடம் பெறுகிறது. இன்னபிற வியாபாரக் கூறுகள் என்னென்ன என்பதையெல்லாம் அடுத்தடுத்த இடுகைகளிலே காணலாம்.

வேண்டுகோள்: Memphis, TN, டென்னசி மாகாணம், மெம்ஃபிசு நகரில் வசிப்பவர் எவரேனும் இருப்பின் தயைசெய்து தொடர்பு கொள்ளவும்.

8 comments:

dondu(#11168674346665545885) said...

//கற்பிணிப் பெண்டிர் (சும்மா, கற்பிணிகள்னு போட முடியாது?!)//
சமீபத்தில் 1955-ல் வட இந்திய யாத்திரை என்னும் தலைப்பில் பகீரதன் அவர்கள் கல்கியில் ஒரு தொடர் எழுதினார். அதில் பரேலி என்னும் நகரில் பிரசவ ஆஸ்பத்திரியில் இவ்வாறு எழுதியிருந்தது (ஹிந்தியில்தான்) என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஆண்களும் பெண்களும் பிரசவிக்கும் இடம்”.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஓலை said...

Nice one. Added info to this is people in service pay a mandatory small amount as premium.

a said...

அண்ணே : ஒங்களோட புரிதல்கள் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.....

இராஜராஜேஸ்வரி said...

விரிவான த்கவல்கள்.நன்றி

vasu balaji said...

/நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்./

நோய் நாடி = எல்லா டெஸ்டும் செய்து
நோய் முதல் நாடி = எவ்வளவு கறக்கலாம்னு முடிவு செய்து
அது தணிக்கும் = சொத்தைக் குறைக்கும் விதமாக
வாய் நாடி = பயமுறுத்தி
வாய்ப்பச் செயல் = சம்மதிக்கவைத்தல்.

இங்கயும் மருத்துவமனையில 3 திட்டம் இருக்குங்க.

டிஸ்சார்ஜ் ஆகும்போது

கேஷா/இன்சூரன்ஸா/க்ரெடிட் கார்டா.

கேஷ்: உக்காருங்க கூப்புடுவோம் (குறைஞ்சபட்சம் ஒரு நாள் தங்கல் வாடகை கூடும்)
இன்சூரன்ஸ்: பார்மசில போய் வீட்டுக்கு தேவையானது எதுனா இருந்தா வாங்கிக்கிட்டு மெடிசின் பில்ல சேர்க்க சொல்லுங்க. (இளிச்சவாய் பிஸ்கோத்து, சோப்புன்னு வாங்கும். டாக்டர் ஃபீஸ், மருந்து,ரூம் ரெண்டெல்லாம் கன்னா பின்னான்னு போடுவாங்க)
க்ரெடிட் கார்ட்: சுமாரா போட்டுத்தாக்கு. அப்புறம் கட்டி எழவெடுக்கப்போறவன் அவந்தானே.

க.பாலாசி said...

//இன்சூரன்ஸ்: பார்மசில போய் வீட்டுக்கு தேவையானது எதுனா இருந்தா வாங்கிக்கிட்டு மெடிசின் பில்ல சேர்க்க சொல்லுங்க. (இளிச்சவாய் பிஸ்கோத்து, சோப்புன்னு வாங்கும். டாக்டர் ஃபீஸ், மருந்து,ரூம் ரெண்டெல்லாம் கன்னா பின்னான்னு போடுவாங்க)//

க்கும்.. இப்பல்லாம் இன்ச் இன்ச்சா எல்லா ரசீதையும் டாக்டர் வச்சே செக் பண்ணிதான் இன்சூரன்ஸ் க்ளைம் அமௌண்ட்க்கு செக் கொடுக்கறாங்க.. சும்மா சோப், சீப்புல்லாம் போட்டா சொந்தக்காசுக்கு சூனியம்தான்..

ஈரோடு கதிர் said...

ஓ...
இதுக்குத்தான் ஓலையார்ல பஞ்சாயத்தா!!!?

குறும்பன் said...

மெடிக்எய்டு, மெடிகேர் 65 வயசுக்கு அப்புறம் தான் பயன்படுமா? இப்ப கட்டுற காசெல்லாம் தண்டமா?