2/13/2010

கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன்!


என்னவளே,

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நீ என் வாழ்வில் அமையப் பெற்ற ஒன்றும், நிதர்சனமும் என உணரும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, எனக்கு இனிமை கூட்டும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, என் அறியாமையையும் முட்டாள்ப் போக்கையும் அலட்சியம் செய்யும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நான் வீட்டைப் பற்றிய கவலைகளைக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, என் இளவல்களை உன் கருவிழிகளாய்ப் பார்க்கிறாய் என உணரும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, உன்முகத்தில் என்னைப் பற்றிய பெருமிதம் மிளிரும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நான் அறத்தைப் பற்றிக் கற்கும் போது அருகில் வரும் நீ, அறமாய்த் தோற்றம் அளிக்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, உன் வெகுளித்தனத்தின் விளைவாய் ஏற்பட்ட உன்னழுகை என்னுள் சிரிப்பை உண்டாக்கி, அது உன்னுள் மேலதிக அழுகையை உண்டாக்கி, அதுகண்டு நான் மேலும் வலுவாகச் சிரிக்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, உள்ளபடியே எனது காதல் அனுபவங்களைச் சொல்ல, நீ அதைக் காதல் பார்வையோடு காண்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நீ எனது தவறுகளைச் சரி செய்து அவற்றைக் கடந்து செல்லும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, சண்டை மூளும் போதெல்லாம் கோபமாய்ச் சென்ற நீ, மீண்டும் வாஞ்சையோடு திரும்பி வரும்போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, வெளியூரில் இருக்கும் ஒவ்வொரு பொழுதும் என் உயிரைப் பாதுகாப்பாய் உன்னுள் வைத்திருக்கும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, மற்ற பெண்களைப் பற்றிய விரும்பத்தகாத செய்திகள் காதில் விழும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, மிகச்சரியாய் நீ என்னைப் புரிந்து கொள்ளும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நான் ஏகடியம் செய்ய வாய்ப்பளிக்கும் பொருட்டு சமைத்த உணவில் உப்பைப் போட மறக்கும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நீ ஏமாந்து போய் என்னைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதை நினைக்கும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, என்னை நீ உத்தமனாய் எண்ணிக் கொண்டு இருப்பதை எண்ணும் போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, குறிப்பறிந்து உகந்த நேரத்தில் ”இந்தாங்க மாமாய் காப்பி!” என்று வளைய வரும்போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, மற்றவர் இடத்துப் பேசும்போதெல்லாம் என்னை நீ உயர்வாகப் பேசுவதை அறிய வரும்போது மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நான் இன்னும் உன்னைக் காதலிக்கிறேனோ என எண்ணிப்பார்க்கையில் மட்டும்!

எப்போதாவது ஒரு பொழுது கொஞ்சமாய்த்தான் காதலிக்கிறேன் உன்னை, நின்னை நினைந்து நினைந்து என்னுள் நினைவுகளை விரித்து, அதை எழுத்தாக மாற்றும் இந்த மணித்துளியைப் போன்ற நேரத்தில் மட்டும்!


மேலே சொன்ன ‘கொஞ்சங்களை’ எல்லாம் ஒன்று கூட்டிப் பார்த்து, ”ஒவ்வொரு மணித்துளியும் நான் உன்னைக் காதலிக்கிறேன்; நாளும் நாளும் மேலதிகமாய்க் காதலிக்கிறேன்” என உள்ளதை உணரும் இப்பொழுதிலும் காதலிக்கிறேன் உன்னை!

பணிவுடன்,
பழமைபேசி.


காதலே குருதியாய் ஓடும் நம்முள், அது மேலும் மேலும் மகத்தானதாய் உருவெடுத்துக் குதூகலம் பொங்கட்டும் என, என் காதலியுடன் இணைந்து, இந்தக் காதலர் தினநாளில் உங்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்!

24 comments:

Anonymous said...

unga tholai thanga mudiyillaiye..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

லாலாக்கு டோல் டப்பிம்மா..,

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

என்ன சொல்றதுனே தெரியலயே!!

தன் மனைவியைக் காதலிக்கும் எல்லாக் கணவன்மார்களுக்கும் பொருந்தும் வரிகள். வாழ்த்துகள் அண்ணே!!

Anonymous said...

udambu valaiyatha 8 maninera velai, atharkku mel oeru vinadi pani seithal atharkku yirandu madangu kooli, varathil nangu nattkal mattum velai, thangumidam martrum velaiyidathil midamana seyarkai thatpa veppam, gana nimida dhorathil cafe breakarea and Mc D'. vuyartara pathukappudan koodiya apartment or town house ll kudumbam marrum makkal. thodu dhoorathil bank, utility, online shopping, nanbarkal, movie, songs, games marrum pannattu tholaipesi through high speed internet yenum indiralogam. adivega rail, sogusana car, malivu vilaiyil petrol (gas), anaithu porutkalum nalla deal lil. ellavatrukkum mel sambadhikkum 1 dollarukku kurainthathu 45 rubai yindhiya madhippu (madam 8500 dollar sambalam padivulakukko ellai nanbarkalukko solla vendiya avasiyam ellai :-)).

piranthathu kongu Tamil nattin kukgiramam, tharpothu manaivi makkaludan vasippathu America yenum sorgapuri, Surplus nerathai selavida mattum TAMIL, TamilPadivu (Bothanai :-))

200 rubai erunthal nangu nattkal arai vayirrtudan kadanthuvida ninaikku Unmai Tamila (Truetamilans) un nilai enna? Dharapuratthan.. ethai kavanikka koodatho..


Nanum America thaan... sikako...

ஈரோடு கதிர் said...

))))):-

பழமைபேசி said...

// Anonymous said...
unga tholai thanga mudiyillaiye..//

சிகாகோ நண்பரே, என்னங்க இப்பட் சொல்லி போட்டீங்க? முடிஞ்சா அலைபேசில அழையுங்க....

pazamaipesi@gmail.com

vasu balaji said...

என்னடா மாப்பு இவ்வளவு குசும்பால்லாம் தங்கமணியப்பத்தி சொல்லுறாரேன்னு படிச்சிட்டே வந்தேன்.. கடோசில

/உள்ளதை உணரும் இப்பொழுதிலும் காதலிக்கிறேன் உன்னை!

பணிவுடன்,
பழமைபேசி. /

இப்புடி மெரட்டி எழுத வெச்சிட்டாங்களா:)))

சிநேகிதன் அக்பர் said...

மணியான வார்த்தைகள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

காதல்ல என்ன கொஞ்சம் , நிறைய

அனுபவிங்க காதல் உண்ர்வை முழுமையாய்...

Anonymous said...

:)

cheena (சீனா) said...

காதலர் தின - வித்தியாசமான வாழ்த்து - நல்வாழ்த்து பழமைபேசி

கயல் said...

அழ‌காயிருக்கு!

தாராபுரத்தான் said...

உன் கண்ணில் நீர்வழிந்தால்/ என்னெஞ்சில் உதிரங் கொட்டுதடி. இன்பக் கதைகளெல்லாம்/ உனனைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ? சீர் பெற்று வாழ்வதற்கே/உனனைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ? ஆ..கா பாரதிபேசி....

சீமாச்சு.. said...

அண்ணிகிட்ட்டே சொல்றேன்.. அக்காகிட்டே சொல்றேன் அப்படீன்னு மிரட்டிக்கிட்டிருக்குற மக்களெல்லா போயிச் சொல்லிடறதுக்கு முன்னால பெரிய சரணாகதி கடிதம்..

என்னமோ தெரியல.. “”ஜெயலலிதா முன்னால கேகேஎஸ் எஸ் ஆர் விழுந்து நமஸ்காரம் பண்ணற ஃபோட்டோ நினைவுக்கு வருது”.. அது ஏன் என்று கேக்காதீங்கையா... எனக்குச் சொல்லத்தெரியலை..

Unknown said...

கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு பதிவை நான் பதிய நான் நினைத்துக் கொண்டு உங்கள் வலைப்பூவைத் திறந்தால் நீங்கள் பதிந்து விட்டீர்கள்.

என் எண்ணத்தை திருடியதற்கு ஏதாவது காப்பி ரைட் சட்டம் இருக்கிறதா?

*இயற்கை ராஜி* said...

//பணிவுடன்,
பழமைபேசி.
//

anni kita antha bayam iruntha sari:-)

Paleo God said...

காதலேய்ய்.......


பணிவுடன்


சரணமப்பா...:)

பழமைபேசி said...

@@SUREஷ் (பழனியிலிருந்து)

நன்றிங்க மருத்துவர்!

@@ச.செந்தில்வேலன்

அதேதானுங்க தம்பி!

//Surplus nerathai selavida mattum TAMIL, TamilPadivu (Bothanai :-))
//

என்ன இப்பிச் சொல்லிப் போட்டீங்க? அடி வுழுந்தாலும் இடி வுழுந்தாலும் கத்துறது, “அய்யோ அம்மா”ன்னுதானே?

@@ஈரோடு கதிர்

நல்லா சிரிங்க மாப்பு!

@@வானம்பாடிகள்

உள்ளதைச் சொன்னா, நீங்க...? அவ்வ்வ்.......

@@அக்பர்

நன்றிங்க தம்பி!

@@Starjan ( ஸ்டார்ஜன் )

முழுமையாத்தனுங்க நண்பா!

@@சின்ன அம்மிணி

சிரிச்சுப்போட்டு, பழமை ஏதும் பேசாமயே போய்ட்டீங்களே?

@@cheena (சீனா)

நன்றிங்க ஐயா!

@@கயல்

கவிஞரே வந்து சொன்னதுல, மிக்க மகிழ்ச்சி!

@@தாராபுரத்தான்

நன்றிங்க தாராபுரத்து அண்ணா!

@@Seemachu

எதோ, இன்னைக்கு புதுசா சரண் அடைஞ்சுட்டதா நீங்க நினைச்சா எப்பிடி? இவ்வளவு வெள்ளந்தியாவா இருக்கிறது??

@@முகிலன்

ஆகா, அப்ப தினம் தினமும் நல்ல நல்லதா எண்ணுங்க... நாங்களும் பலன் அடைஞ்சுகுவம்ல??

@@இய‌ற்கை

ஆமா, ஆமாங்க!

ஆனாப் பணிவு வேறு; குனிவு வேறு அப்படிங்கிறதை நீங்க நல்லாப் புரிஞ்சுகணும்!!

@@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

ஆமாம்மப்பா!

கண்ணகி said...

அழகான சரணாகதி.

நிகழ்காலத்தில்... said...

காதல் என்ற வார்த்தையின் பொருளை உள்ளடக்கி எழுதிவிட்டீர்கள்

வாழ்த்துகள் பங்காளி..

பழமைபேசி said...

//கண்ணகி said...
அழகான சரணாகதி.
//

நன்றிங்க!

//நிகழ்காலத்தில்... said...
காதல் என்ற வார்த்தையின் பொருளை உள்ளடக்கி எழுதிவிட்டீர்கள்

வாழ்த்துகள் பங்காளி..
//

அப்பாட, பங்காளியாவது என்னோட பக்கம் சொல்றாரே?

க.பாலாசி said...

ஒவ்வொரு வரிகளிலும் கணவனாய் உண்மையை நிறைய சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

எனக்கு வாய்ப்பு கெடைக்குறப்பதான் தெரியும் கொஞ்சமா அல்லது நஞ்சமா என்று....

கபீஷ் said...

ரொம்ப நல்லாருக்கு. அண்ணிக்கு வாழ்த்துகள் :-)

பழமைபேசி said...

@@க.பாலாசி

இஃகிஃகி... நிச்சய்மா நிறைவாத்தான்!

//கபீஷ் said...
ரொம்ப நல்லாருக்கு.
//

அப்பாட, இதுக்குதான நாங்க கிடந்து தவிக்கிறோம்... மனசு நிறைஞ்சு போங்க!