2/12/2010

சமிக்கைகள்!

கதிரவன் கிழக்கில் ஒளிர
முன்கூட்டிய தகவலாக
வெளுப்பை அனுப்பியிருந்த
நேரமது!

நாலாபுறங்களில் இருந்தும்
ஒன்றாய் ஒருநேரத்தே
மகுடியோசைக்கு ஓடிவரும்
அரவங்கள் போலப்
பல ஒலிச்சமிக்கைகள்!!

மின்னாடலுக்காக ஒன்று!
அலைபேசியில் அழைப்புக்காக ஒன்று!
மின்னஞ்சலில் புதுவரவுக்காக ஒன்று!
அலைபேசியில் குறுந்தகவலுக்காக ஒன்று!
சிட்டாடல் தகவலுக்காக ஒன்று!
வலைப்பூவில் பின்னூட்டத்திற்காக ஒன்று!
குழும மடலாடலில் தகவலாக ஒன்று!

மனவானில் பறந்தன
வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்து!

வந்த சமிக்கைகள் நல்லவிதமாய்
ஒன்றே கூறின! நன்றே கூறின!!
அனுதினமும் உம்வலைப்பூவுக்கு
வருகிறோமடா எனப்பாங்காய்!
தம் எழுத்துக்கான அங்கீகாரமென

செருக்கு சுர்ர்...ரெனத்
தலைக்குள் ஏறியது!
மனவானில் பறந்தன
வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்து!!


பெருவேகம் எடுத்துப் பறந்த

வண்ணச்சிட்டுகள்
நிராதரவாய் நிலைகுலைந்து
சிறகொடிந்து போயின;
சமிக்கைகள் சொல்லியதின்
தொடர்ச்சியைக் கேட்டு!!

பெருவேகம் எடுத்துப் பறந்த
வண்ணச்சிட்டுகள்
நிராதரவாய் நிலைகுலைந்து
சிறகொடிந்து போயின;
சமிக்கைகள் சொல்லியதின்
தொடர்ச்சியைக் கேட்டு!!

இடுகையப் படிக்கிறமோ
இல்லையோ,
விழுற சுவையான
பின்னூட்டங்களைப் பார்க்கத்
தவறமாட்டோம்; அதுக்குதான்
வந்து போய்ட்டு இருக்கோம்
அனுதினமும்!!

20 comments:

நசரேயன் said...

யாருக்கு சமிக்கை செய்யுறீங்க ?

Viji said...

super

அன்புடன் நான் said...

பாராட்டுக்கள்... நற்றமிழ் தலைப்புக்காகவும்... கவிதைக்காகவும்.

தாராபுரத்தான் said...

vபுரிஞ்ச மாதிரி இருக்குது ஆனா புரிய மாட்டீங்கிது.தெரிஞ்ச மாதிரி இருக்குது ஆனா தெரியமாட்டீங்கிது.ஆனி, ஆடியிலே எங்க ஊருபக்கம் வந்தா தெரியும் நாத்தம் கொடல் ஏத்தம்.காத்திலே அம்மியே பறக்குமில்ல.காத்தை பார்க்கவே கூட்டம் கூட்டமா வருவாங்க.காலம் மாறிப் போச்சு. காற்றையே காணம் கண்ணு.உங்க ஊரிலேயே காத்தாடி மாட்டி காத்தை மறச்சுபட்டீங்கன்னு பேசிக்கிறாங்க.எனக்குஒண்ணும் தெரியாது சாமி.

Paleo God said...

ரைட்டு.. கிடைத்தபின் சமிக்கையின் நிறத்தையும் ஒரு பதிவிடுக.:)

பழமைபேசி said...

//
நசரேயன் said...
யாருக்கு சமிக்கை செய்யுறீங்க ?//

வண்டிய வேற வழிக்கு மாத்தி வுடுறதுலயே இருங்க...

@@Viji
@@சி. கருணாகரசு
@@ஷங்கர்..

நன்றிங்க!

பழமைபேசி said...

//தாராபுரத்தான் said...
vபுரிஞ்ச மாதிரி இருக்குது ஆனா புரிய மாட்டீங்கிது.தெரிஞ்ச மாதிரி இருக்குது ஆனா தெரியமாட்டீங்கிது.ஆனி, ஆடியிலே எங்க ஊருபக்கம் வந்தா தெரியும் நாத்தம் கொடல் ஏத்தம்.காத்திலே அம்மியே பறக்குமில்ல.காத்தை பார்க்கவே கூட்டம் கூட்டமா வருவாங்க.காலம் மாறிப் போச்சு. காற்றையே காணம் கண்ணு.உங்க ஊரிலேயே காத்தாடி மாட்டி காத்தை மறச்சுபட்டீங்கன்னு பேசிக்கிறாங்க.எனக்குஒண்ணும் தெரியாது //

அஃகஃகா, சிரிச்சி சிரிச்சி வவுறு நோவுதுங்க....

Unknown said...

//உமது வலைப்பூவில் விழும்
சுவைமிகு மறுமொழிகளைக்
காணாமலிருக்க முடிவதில்லை
அதனால் வருகிறோம்
அனுதினமும்!!
//

அனுதினமும் என் வலைப்பூவுக்கு வர்றதுக்கு நன்றிங்க்ணா

ஆர்வா said...

சூசகமா குறிப்பிட்டு இருக்கீங்க

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அடடா.. அழகுங்க.. சமிஞ்கைகளைக் கவனிக்கத் தவறவிடக் கூடாதுங்க.

க.பாலாசி said...

அட உண்மைய பூராவும் சொல்லிப்புட்டீங்களே...

vasu balaji said...

இதுல கும்மாங்குத்து எதுவுமில்லையே:))

sathishsangkavi.blogspot.com said...

அழகா சொல்லியிருக்கறீங்க...

Unknown said...

எப்பிடி பாஸ்

எங்களுக்கு சிக்னலே இல்ல

செந்திலான் said...

வணக்கம் அண்ணே நீண்ட நாளைக்கு அப்பறம் உங்கள படிக்கறேன் அது உண்மை தான் பின்னூட்டங்கள் நல்லா இருக்குது
ஒரு சந்தேகம் அது சமிக்கையா சமிக்ஞையா ?

Thamira said...

இந்தக்கவிதைக்கு பின்னூட்டம் போடாட்டா எப்படி? ஹிஹி..

பழமைபேசி said...

// செந்திலான் said...
வணக்கம் அண்ணே நீண்ட நாளைக்கு அப்பறம் உங்கள படிக்கறேன் அது உண்மை தான் பின்னூட்டங்கள் நல்லா இருக்குது
ஒரு சந்தேகம் அது சமிக்கையா சமிக்ஞையா ?
//


சமிஞ்ஞை camiññai : (page 1299)
குறிக்கவழங்கும் முதற்குறிப்பெழுத்து.
சமிஞ்ஞை camiññai
, n. < samjñā. 1. See சமிக்கை, 1. 2. Name, appellation; பெயர். (த. நி. போ. 25.)
சமித்தம் camittam
, n. cf. sam-iddha. Sacrificial hall;


நிறைய எழுத்தாளர்களே கூட ”சமிக்ஞை” என்று சரியாகத் தவறாக எழுதுகிறார்கள். ஆனால், அது சமிஞ்ஞை என்று வர வேண்டும், அல்லது சமிக்கை என்று வர வேண்டும் எனபதே சரி. அகரமுதலியின் சுட்டியையும் மேலே கொடுத்து இருக்கிறேன்.

Unknown said...

அண்ணா அம்பேல்லுங்கண்ணா. நானெல்லா பதிவு எழுதறதிலீங்ணா,வெரும் பின்னூட்டிதானுங்கோ. எப்படீங்ணா
அன்புடன்
சந்துரு

பழமைபேசி said...

@@முகிலன்

நன்றிங்க!

@@கவிதை காதலன்

இஃகி!

@@ச.செந்தில்வேலன்
நன்றிங்க தம்பி!

@@க.பாலாசி

கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வந்துதான ஆகணும்!

@@வானம்பாடிகள்

அப்பாட, தப்பிச்சோம்ங்குறீங்க...

@@Sangkavi

நன்றிங்க சங்கவி!

@@V.A.S.SANGAR

வரும் பாருங்க, தொடர்ந்து எழுதுங்க தம்பி!

//ஆதிமூலகிருஷ்ணன் said...
இந்தக்கவிதைக்கு பின்னூட்டம் போடாட்டா எப்படி? ஹிஹி..
//

இஃகிஃகி, நன்றிங்க!

@@தாமோதர் சந்துரு

நீங்கதான் ரொம்ப முக்கியம்.... இந்தக் கவிதையே உங்களை மாதிரி ஆட்களுக்கான அர்ப்பணிப்புதானுங்க!

பத்மா said...

அது சரி