2/09/2010

மறுமொழிகள் வந்திருக்கா?!

பகலெல்லாம்
கடையடியில் வியாபாரம்!
இராவெல்லாம்
பொட்டியடியில் காலவிரயம்!!
என்ன ஏது என்று
கேட்டிருப்பேனா நானும்?
அந்நாளில் பார்க்காமல்
விட்டபாவி நானே!

கால்கடுக்க நடை நடந்து
கடைத்தெரு வந்திருக்கேன்
சின்னப்பயலே முருகேசா!
பார்த்துச் சொல்லடா
போயிச் சேந்த மவராசனவர்
இட்ட இடுகைகளுக்கு
மறுமொழிகள் வந்திருக்கா?!
மவராசனவர்
இட்ட இடுகைகளுக்கு
மறுமொழிகள் வந்திருக்கா?!

அமெரிக்க ஊடகவியலாளர், அமரர் Tim Russert அவர்களின் நினைவாக...

30 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இட்ட இடுகைகளுக்கு
மறுமொழிகள் வந்திருக்கா?! //

கொடுத்தாச்சு தல..,

Paleo God said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
//இட்ட இடுகைகளுக்கு
மறுமொழிகள் வந்திருக்கா?! //

கொடுத்தாச்சு தல..//

:)

நானும்..:)

Anonymous said...

ரெண்டாம் போணி நானு

sathishsangkavi.blogspot.com said...

//இட்ட இடுகைகளுக்கு
மறுமொழிகள் வந்திருக்கா?! //

இதோ நானும் வந்துட்டேன்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அண்ணே, ஏகத்துக்கு உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே :) வாரத்துக்கு ஒரு பதிவு போடற எனக்கே, "என்னையச் சொல்ற மாதிரி" தெரிஞ்சா மற்ற அன்பர்களுக்கு??

வருண் said...

தல, மறுமொழிகள் வரலைனா உங்க பதிவுவைப் பார்த்து மிரண்டு அப்படியே மெய்மறந்து போயிட்டாங்கனு அர்த்தமாம்! :)

எறும்பு said...

நானும்....
:)

vasu balaji said...

அங்க ஓட்டுப் பட்டியில்லையா? சை! மைனஸ் விழுந்திருக்கான்னு கேக்க முடியாத பதிவு எதுக்கு:))

பழமைபேசி said...

ஆகா.... வண்டி வேற பாதையில போற மாதிரி தெரியுதே? அவ்வ்...

காலமாகிப் போன தனது கணவரின் எழுத்துகளைச் சிலாகித்தும், மகிமையை உணர்ந்தும் அவரது வலைப்பூவை தினமும் படித்து வருகிறேன்னு சொல்லி ஒரு அம்மா கொடுத்த பேட்டியைத் தழுவி நான் கிறுக்கினதுங்க இது....இப்படிப் பாதை மாறிப் போவுதே?அவ்வ்வ்வ்....

க.பாலாசி said...

//காலமாகிப் போன தனது கணவரின் எழுத்துகளைச் சிலாகித்தும், மகிமையை உணர்ந்தும் அவரது வலைப்பூவை தினமும் படித்து வருகிறேன்னு சொல்லி ஒரு அம்மா கொடுத்த பேட்டியைத் தழுவி நான் கிறுக்கினதுங்க இது....இப்படிப் பாதை மாறிப் போவுதே?அவ்வ்வ்வ்....//

நல்லவேளை சொன்னீங்க...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

வந்திருக்கும் ...வந்திருக்கும் ...
மறக்காட்டி ...வந்திருக்கும் ...

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

எதையும் எதிர்பார்காமல் செய்தால்தான் நிம்மதியாவது கிடைக்கும்..

கபீஷ் said...

//ஆகா.... வண்டி வேற பாதையில போற மாதிரி தெரியுதே? அவ்வ்...//

நல்லா வேணும் உங்களுக்கு. இத பிகு போட்டு தெளிவா விளக்கியிருந்தா கொஞ்சம் செண்டி பின்னூஸ் வந்திருக்கும். இப்போ பாருங்க உங்களுக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

வந்திருக்கு தல

Anonymous said...

hi kabeesh,

how are you?


vijay

அன்புடன் அருணா said...

ஹாஹாஹா....அச்சோ இப்புடித் திசை திரும்பிருச்சே!

Unknown said...

//.. வண்டி வேற பாதையில போற மாதிரி தெரியுதே? அவ்வ்...//
நீங்க வலத்து மாட்ட இழுத்து புடிச்சு ஓடுனாத்தானே ஆகும்..

கபீஷ் said...

ஹாய் விஜய்,
நல்லாருக்கேன். நீங்க யாருன்னு தெரியலயே :-)

வில்லன் said...

//இட்ட இடுகைகளுக்கு
மறுமொழிகள் வந்திருக்கா?! //
கண்டிப்பா வரும் அப்படின்னு நம்புங்க தல....

கேட்க்காம போடுறது "பின்னுட்டம்"... கேட்டு போடுறது.... (அது என்னன்னு உங்களுக்கே தெரியும்... சொல்லி அசிங்கபடுத்த விரும்பல... ஹி ஹி ஹி)

குறும்பன் said...

ஆரம்ப காலத்தில பின்னூட்டம் வந்து இருக்கான்னு ஆவலா பார்ப்பேன். இப்பவெல்லாம் பார்க்கறதில்ல ஏன்னா என் எழுத்தின் வலிமை எனக்கு தெரிஞ்சி போச்சி இஃகிஃகி.

உங்களது அப்படியா? உருப்படியான இடுகைகளா அல்ல இருக்கு. பின்னூட்டம் போடலைன்னாலும் படிக்கிறது உண்டு.

\\அமரர் Tim Russert அவர்களின் நினைவாக\\ இப்படி நீங்க சொன்னாலும் மனசில பட்டத பின்னூட்டமா சொல்லியாச்சு இஃகிஃகி.

பழமைபேசி said...

என்ன சொல்றது? சொல்லியும் கேக்க மாட்டேங்குறாய்ங்களே??

சரிங்க மக்கா, எல்லாருக்கும் நன்றி!

பழமைபேசி said...

//கபீஷ் said...
ஹாய் விஜய்,
நல்லாருக்கேன். நீங்க யாருன்னு தெரியலயே :-)

February 10, 2010//

ஜெர்மன் விஜய்னு நினைக்குறேன்....

தாராபுரத்தான் said...

லேட்டா வந்தாலும்...லேட்டஸ்டா வந்துட்டோம்ன்னு.. சொல்லு முருகேசு சொல்லு..

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
ஆகா.... வண்டி வேற பாதையில போற மாதிரி தெரியுதே? அவ்வ்...
//

இது செம காமெடி...

காலையிலயே படிச்சேன்...இடுகையை படிச்சிட்டு மொத ரெண்டு பின்னூட்டத்தை பார்த்துட்டு....செம காமெடி போங்க...:0))))))

சுரேகா.. said...

ஆமாம்.
நாம் இல்லாமல் போனாலும், யாராவது படித்துவிட்டு மறுமொழி இட்டுக்கொண்டிருந்தால்.... மனையாளுக்கு ஏற்படும் வலி!...

அழகா சொல்லிருக்கீங்க!

டிஸ்கியையே யாரும் படிக்கலை போல! :)

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
என்ன சொல்றது? சொல்லியும் கேக்க மாட்டேங்குறாய்ங்களே??

சரிங்க மக்கா, எல்லாருக்கும் நன்றி!

//

நம்ம மக்கள்லா...அப்படித்தான் இருப்பாவோ...:0)))))

சீமாச்சு.. said...

படிக்கவே உருக்கமா இருக்கு..
எங்க வூட்டுக்காரம்மா என் பதிவுகளையேப் படிக்க மாட்டேங்குறாங்க..

பொறவு படிச்சிக்கலாம்னு நெனச்சிக்கிட்டிருக்காங்களாக்கும் :(

Unknown said...

தம்பி நம்ப ஊரு தான் ,,,,உங்க பதிவுகளை 10% தான் படித்தேன் கோவை பாஷை விளாசிட்டிப்பா ..அது கொட தமிழை யும் ஆறுவடை செய்துட்டு வருவது நல்ல தான் இருக்கு ..சித்ரம் // chitra..

துபாய் ராஜா said...

பொட்டியில உட்கார்ந்து போய் சேர்ந்த மவராசா... பொட்டியை பத்தி ஏதுமே தெரியாத மவராணி...

பழமைபேசி said...

@@தாராபுரத்தான்

இஃகி!

@@அது சரி

ஆமாங்க...இஃகிஃகி!!

@@சுரேகா..

புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க!

//Seemachu said...
படிக்கவே உருக்கமா இருக்கு..
எங்க வூட்டுக்காரம்மா என் பதிவுகளையேப் படிக்க மாட்டேங்குறாங்க..
//

அதான?!

@@Ramachandran

அவகாசம் வாய்க்கும் போது வந்து போங்க....

@@துபாய் ராஜா

நன்றிங்க!