2/01/2010

எதிர்த்திசை!

ஏமாந்தா கோமாளியாக்கிடுவாங்க
ஒரே புழுதியும் குப்பையும்
அவன் எப்பவும் அப்படித்தான்
அவன் ரொம்ப மோசம்
துரோகிக படுபாவிக
கழிசடைக கருமாந்தரம்
வெறியனுக, ஆதிக்க சக்திக
த்தூ, மனுசனுகளா அவங்க
அந்த நாடு பொழியுதாமே?
எல்லாம் சுடுகாடு ஆவுது
கடைஞ்செடுத்த அயோக்கியத்தனம்
நாஞ்சொன்னா யார் கேக்குறா?
சுரண்டல் மன்னனுக!
எல்லாம் காலக்கொடுமை!!
அழைப்பே இல்லாத
அலைபேசியில்,
என்னது உடனே வரணுமா?
இதோ வந்துட்டேன்!
ஆலாய்ப் பறந்தான்
எதிர்த்திசை நோக்கி!!

24 comments:

தாராபுரத்தான் said...

எல்லாம் காலக்கொடுமை!! என்னமோ இருக்குது.. என்னன்னு தான் தெரியமாட்டிங்கது...

குறும்பன் said...

சரியா சொன்னீங்க. நிறைய பேரோட (இதுல நாடு, மனிதன் எல்லோரும் அடக்கம்) எதிர்ப்பு இப்படி தான் இருக்கு.

அப்பாவி முரு said...

நானா????

ஓ...

நாமா...

கண்ணகி said...

எதிர்வினை எனக்குத் தெரிஞ்சுருச்சே....

அண்ணாமலையான் said...

கரெக்டா எழுதுனீங்க

Unknown said...

எதுக்காவது எதிர்வினையா??

நல்லா இருக்கு..

Mahesh said...

ஒண்ணும் புரியலையே... :(

ஈரோடு கதிர் said...

சில நாய்க கூட்டுக் களவானிக்கு போகும் போது... பொது ஜனங்க ஒற்றுமையா இருந்தா புடிக்குமா...

களவாட முடியாத நாய்க.. சிம்மே போடாத திருட்டு அலைபேசியில ஐஎஸ்டி கால் பேசுமாம்...

விடுங்க மாப்பு

sathishsangkavi.blogspot.com said...

//கடைஞ்செடுத்த அயோக்கியத்தனம்
நாஞ்சொன்னா யார் கேக்குறா?
சுரண்டல் மன்னனுக!
எல்லாம் காலக்கொடுமை!!//

நிச்சயம் காலக்கொடுமைதான்....

Sabarinathan Arthanari said...

புரிஞ்சிடுச்சி,

கேட்கணும், கேட்கணும், கேட்டு கிட்டே இருக்கணும் எல்லோருக்கும் பைத்தியம் பிடிக்கும் வரை. ?!!!

தல இதையும் சேர்த்திக்குங்க....
ஏகாதிபத்திய, பிற்போக்கு சமூகத்திய, இந்துத்துவ, இந்திய தேசிய, ஆதிக்க வெறிய 99% சதவீத மக்களால் தான் பிரச்சிணையே. எல்லோரும் அழிந்தால் சமத்துவம் நிலை நாட்டபடும். வாழ்க சம்த்துவம் :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

"Miles to go before I sleep"

நெடுந்தூரப் பயணத்தில் இது போன்ற சிலவற்றைச் சந்திப்பது இயல்பு தானே!!

vasu balaji said...

/ஆலாய்ப் பறந்தான்எதிர்த்திசை நோக்கி!!/

அதாஞ்செரி:)

ஆ.ஞானசேகரன் said...

//ஆலாய்ப் பறந்தான்
எதிர்த்திசை நோக்கி!!//


ம்ம்ம்ம்ம் அது சரி

க.பாலாசி said...

விசயம் தெரியமா படிச்சேன். இப்ப தெரிஞ்சிகிட்டேன். என்னத்த சொல்றது. விடுங்க...

ராஜ நடராஜன் said...

போன மாசத்த மேஞ்சு பார்த்தும் விடுகதை எனக்கு புரியல.ஆள விடுங்க.

Radhakrishnan said...

:) பழமையெனினும் புதுமையாகத்தான் இருக்கிறது ஒவ்வொருவரும் அதே செயலைச் செய்வதால்.

நசரேயன் said...

//என்னது உடனே வரணுமா?
இதோ வந்துட்டேன்!
//

சொல்லிட்டு வாங்க

வில்லன் said...

//ஏமாந்தா கோமாளியாக்கிடுவாங்க//

இல்ல "ஏமாந்தா இளிச்சவாயன் ஆக்கிடுவாங்க" தல..... திருத்திகுங்க.....

சரி MGR கூட தொப்பிய கலட்டுனாறு அமெரிக்கா வந்தப்ப..... நீங்க அமெரிக்காவுல இருந்துட்டு தொப்பிய காலத்தாம இருக்குறது நல்லால்ல...... எப்ப தொப்பி இல்லாம உங்க புகைப்படத காட்டுவிங்க தல.....ஏக்கத்துடன் வில்லன்.....

manjoorraja said...

என்னது இது????

வில்லன் said...

/அவன் ரொம்ப மோசம்
துரோகிக படுபாவிக
கழிசடைக கருமாந்தரம்
வெறியனுக, ஆதிக்க சக்திக
த்தூ, மனுசனுகளா அவங்க//

இப்படி "கீழ்த்தரமா அசிங்கமா" நசறேயனயும் குடுகுடுபையும் திட்ட வேண்டிய அவசியம் என்ன தல......எதாவது "உள்குத்து" வச்சுட்டாங்களா உங்களுக்கு....

வில்லன் said...

//இதோ வந்துட்டேன்!
ஆலாய்ப் பறந்தான்
எதிர்த்திசை நோக்கி!!//

யாரு நசரேயனா?????? அவரு எப்பவுமே இப்படிதான்...... சொல்லுறது ஒன்னு செய்யுறது ஒன்னு.......

LinuxAddict said...

!!Poramai!!

பழமைபேசி said...

@@தாராபுரத்தான்

இஃகி

@@குறும்பன்

எங்கங்க ஆளே காணோம்? நல்லா இருக்கீங்களா?

@@அப்பாவி முரு

ஆமாங்க

@@கண்ணகி

ஆகா

@@அண்ணாமலையான்

நன்றிங்க

@@முகிலன்
@@Mahesh

மன்னிக்கணும்!

@@ஈரோடு கதிர்

மாப்பு, அதான் எல்லாரும் பாக்குறாங்கள்ள? இஃகி!

@@Sangkavi

ஆமாங்க

@@Sabarinathan Arthanari

அதேதானுங்க!

@@ ச.செந்தில்வேலன்

ஆமாங்க தம்பி! நன்றி!!

@@வானம்பாடிகள்

பாலாண்ணே, நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்!

@@ஆ.ஞானசேகரன்

ஞானியார், வணக்கம்!

பழமைபேசி said...

//க.பாலாசி said...
விசயம் தெரியமா படிச்சேன். இப்ப தெரிஞ்சிகிட்டேன். என்னத்த சொல்றது. விடுங்க...
////
ராஜ நடராஜன் said...
போன மாசத்த மேஞ்சு பார்த்தும் விடுகதை எனக்கு புரியல.ஆள விடுங்க.
//


விட்டுட்டேன்!


@@ V.Radhakrishnan

நன்றிங்க


@@ நசரேயன்

இஃகி


@@வில்லன்

நீங்க சொன்னாச் சரி!


// மஞ்சூர் ராசா said...
என்னது இது????
//

வணக்கமுங்க! எதிர்மறையாவே பேசுற ஆள்கிட்ட பேசமுடியுமா? எதோ சாக்கு போக்கு சொல்லி அந்த ஆள்கிட்ட இருந்து தப்பிக்க வேண்டியதுதானுங்களே?


//LinuxAddict said...
!!Poramai!!
//

You are right buddy!