1/16/2010

ஈரோடு ஆரவாரம் - செம சூடுங்க இராசா

நாம இருப்பிடம் திரும்பியாச்சுங்கோய்.... அதான் வந்த உடனே.... இஃகிஃகி!!

வரவேற்புரை



அறிமுகம் செய்துக்கிறாங்க மக்கள்!


எண்ணங்களைப் பகிர்தல்ங்க... இஃகி!

(இது செம சூடு மச்சி)




நன்றியுரை

இரவு உணவு

  • இட்லி
  • பரோட்டா
  • கோழிக்கறி
  • தயிர்சாதம்
  • பூக்கறி (cauliflower)
  • புலவுச் சோறு (fried rice)
  • காளான் குழம்பு
  • பாயாசம்
  • பழம்
  • பீடா
  • தோசை
  • முட்டை தோசை
  • பரப்பி முட்டை (Omelett)
  • அரைவேக்காட்டு முட்டை(Half Boil Egg)
  • தேநீர்

18 comments:

ILA (a) இளா said...

வெற்றியுடன் வெளிநாட்டுப்பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியிருக்கும் அண்ணன், சூராதி சூரர் பழமை அண்ணாச்சியை வருக வருக என வரவேற்கிறோம்.
.. ஷ் ஷ் அப்பப்பா ஜோடா குடுங்கப்பா

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அழகாக தொகுத்திருக்கிறீர்கள்....

பகிர்ந்தமைக்கு நன்றி

வாழ்த்துக்கள்

vasu balaji said...

ஆஹா. அருமை:)). நன்றி

பழமைபேசி said...

//hayyram said...//

தயவு கூர்ந்து இப்பிரச்சினையை மேலும் பேசி, நேரத்தை செலவழிக்க வேண்டாமே? இரு தரப்புமாகச் சேர்ந்து அமைதி பேணுவோம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

பழமைபேசி said...

@@ILA(@)இளா

ஆகா.... சீக்கிரம் அந்த சோடாத் தண்ணியக் குடீங்க இராசா!

//ஆரூரன் விசுவநாதன் said...
மிக அழகாக தொகுத்திருக்கிறீர்கள்....//

யார், நானா? அவ்வ்வ்வ்.... கோப்பு பெரிய அளவுல இருந்தங்காட்டி நானே வலையேத்த வேண்டியதாப் போச்சுங்க.... மன்னிக்கணும்! நன்றிங்க!!


//வானம்பாடிகள் said...
ஆஹா. அருமை:)). நன்றி
//

பாலாண்ணே, உங்க முன்னாடி இதெல்லாம்... சரி, சொல்றீங்க... கேட்டுக்குறேன்!

cheena (சீனா) said...

அன்பின் பழமைபேசி

பகிர்ந்தமைக்கு நன்றி

நல்ல சுவையுடன் இருந்த இரவு உணவின் பட்டியல் சூப்பர்

நல்வாழ்த்துகள் பழமைபேசி

hayyram said...
This comment has been removed by the author.
hayyram said...

என்ன அநியாயம் பழமை பேசி! என் பின்னூட்டத்தை நீங்கள் வெளியிடக்கூட இல்லை. நிதர்சனமாக கண்ணுக்குத் தெரிந்த உண்மையை விவாதிக்கக்கூட தயங்குகிறீர்கள். விஜய் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் இந்துக்களின் தாலி சம்பிரதாயத்தின் மீது கேள்விகள் எழுப்பி இந்து சம்பிரதாயங்களை வெளிப்படையாக அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் யாரும் முஸ்லீம் பெண்களுக்கு பர்தா வேண்டுமா என்பதைப் பற்றி ஒரு விவாதமும் நடத்துவதில்லை. சரி அதாவது வியாபாரம் என்று கொண்டாலும் நம் கண்முன்னே ஒருவர் தன் மத அடையாளத்தை பரப்புகிறார். அதை வெளியிடுவதற்கே தயங்கும் அளவிற்கு பயந்தவர்களாக அல்லது மத அடிமைகளாகி விட்டீர்களா?

உங்களிடம் முகம் காட்ட தயங்குபவர்கள் கூட்டத்திற்கு வரவேண்டிய அவசியம் என்ன என்பது ஞாயமான கேள்வி தானே. அதை சக மனிதராக எழுப்புவதற்கு கூட ஒரு மிகப்பெரிய கூட்டம் தயங்குவது ஏன்? அதைப் பற்றி பேசக்கூட கூடாது என்று ஒதுங்கிப் போவதேன். இவ்வளவுக்கும் பெரும்பாலானோர் இந்துக்கள். இதை மதப்பிரச்சனையாகக்கூட பார்க்க வேண்டாம். குறைந்த பட்சம் ஒரு சபை மரியாதையாகப் பார்க்க கூட நீங்கள் ஏன் தயாராக இல்லை. அந்த அளவிற்கு இஸ்லாத்தின் மீது பயம் கொண்டால் எப்படி?.

இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போதே இஸ்லாத்தின் மீது நீங்கள் பயம் கொண்டால் இன்னும் இருபது வருடங்களில் இஸ்லாமியர் மெஜாரிட்டி அதிகரித்தபின் உங்கள் சந்ததிகளை எப்படி காப்பீர்கள் என்று புரியவில்லை. இந்த பின்னூட்டத்தையாவது போடுவீர்களா? போடாவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். நட்புடன் விவாதிப்போம்

priyamudanprabu said...

பகிர்ந்தமைக்கு நன்றி

priyamudanprabu said...

ooஓட்டு போட்டாச்சு

பழமைபேசி said...

@@hayyram

வணக்கம்! நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவன் என்கிற முறையில் சிலவற்றைத் தெரியப்படுத்துகிறேன்.

தான் பேசுவதை ஒலியாகவோ, ஒளிக்காட்சியாகவோ ஊடகப்படுத்துவதை மறுப்பதற்கு எவருக்கும் உரிமை உண்டு. Off the record என்று சொல்லிவிட்டுப் பேசுவது வாடிக்கைதான்! அதைப் போலவே கலந்து கொண்ட பதிவரும், தன்னை புகைப்படமாகவோ அல்லது காணொளியிலோ காண்பிக்க வேண்டாம் என முறையாகக் கேட்டுக் கொண்டார். அதன்பின்னரும் அதை மீறுவது முறையாகாது.

தாங்கள் குறிப்பிடுவதற்கும், நிகழ்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனென்றால், நிகழ்ச்சி பற்றிய இடுகையில் இடம் பெற்ற வாசகமே சர்ச்சைக்குள்ளானது. அதைப் பற்றியதை அது குறித்த இடுகையில் மட்டுமே விவாதிக்க முடியும்.

எனவே, நிகழ்ச்சியைப் பற்றியோ அல்லது காணொளியில் இடம் பெற்றுள்ளவற்றை பற்றியோ நீங்கள் வினவினால், நட்புடன் விவாதிக்கத் தயாராகவே உள்ளேன்.

தாராபுரத்தான் said...

பின்னோட்டதான் சூப்பருங்க , நானும் எழத பழகிட்டனல்லங்க.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கு .அன்னிக்கு உங்க கூட அதிக நேரம் இருக்க முடியாது போய் விட்டது .மன்னிக்கவும்.

ஈரோடு கதிர் said...

மாப்பு...

வலையேற்றம் செய்ததற்கு நன்றிகள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பழமையண்ணே வணக்கம். நல்லபடியா ஊருக்குப் போய் சேர்ந்துட்டீங்கன்னு தெரியுது :))

காணொளிகளை வலையேற்றியதற்கு நன்றி!!

Unknown said...

நன்றிங்கண்ணா..

//.. இரவு உணவு ..//

இதெல்லாமா சொல்லுவிங்க..:-)

வில்லன் said...

//

இரவு உணவு

இட்லி
பரோட்டா
கோழிக்கறி
தயிர்சாதம்
பூக்கறி (cauliflower)
புலவுச் சோறு (fried rice)
காளான் குழம்பு
பாயாசம்
பழம்
பீடா
தோசை
முட்டை தோசை
பரப்பி முட்டை (Omelett)
அரைவேக்காட்டு முட்டை(Half Boil Egg)
தேநீர் //
இத்தனை சமாசாரம் சாப்புடிங்களா???????????? யப்பாடியோ..... அப்ப இங்க வந்தவுடனே ஜிம்ல(GYM) பத்துநாள் நிக்காம ஓடனும்.... இல்ல கொலஸ்ட்ரால் அதிகமாய்டும்.....

வில்லன் said...

//hayyram said...


என்ன அநியாயம் பழமை பேசி!!!!! ????//


ஆமா ஹய்ராம் நண்பரே!!!!!! இந்த பதிவுக்கும் உம்மோட பின்னுட்டதுக்கும் என்ன சம்பந்தம்..... "அம்மாசியும் அப்துல்காதரும் போல".......... அதான் "நக்கீரர்" பழமை உம்மோட பின்னுட்டத்த "காலி" பண்ணிட்டாரு.... கூளம் தெரியாம சாமியாட வேண்டாம்....