1/19/2010

சலனமில்லாமல்...

கோ.து.நாயுடு (G.D.Naidu), கோயம்பத்தூர்

கோ.து.நாயுடு அவர்கள், ஏழைகள் அனைவருக்கும் ஏராளமான வானொலிச் சாதனங்களைத் தயாரிச்சு வழங்கணும்னு பிரயத்தனப்பட்டு, தன்னோட U.M.S. Radio Factoryல நிறைய மின்மாற்றிகளை (transistors) தயாரிச்சு வெச்சி இருந்தாராம். அரசாங்கம் என்ன செய்துச்சு தெரியுங்களா, அதுகளுக்கு எக்கச்சக்கமா வரியப் போட்டு ஏழை எளியவங்க வாங்க முடியாதபடிக்கு செய்திட்டாங்களாம். இவர் உடனே, Construction for Destructionனு சொல்லி எழுதி வெச்சுட்டு, எல்லார்த்தையும் போட்டு உடைச்சிட்டாராமுங்க. அதான் இன்னும் அவரோட நிறுவனத்துல இருக்கிற அந்த வாசகம்.

இந்த நிறுவனத்துல ஒரு விழாவுக்கு, கோ.து.நாயுடு அவர்கள் அன்றைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களை தலைமை தாங்க அழைச்சு இருந்தாராம். விழா துவங்குற கால நேரமும் வந்துச்சி. 5 மணித்துளிகள் ஆச்சு, பத்து மணித்துளிகள் ஆச்சு, அமைச்சர் வந்தபாட்டைக் காணோம். சரின்னுட்டு, நாயுடு விழாவை ஆரம்பிக்கச் சொல்லவே, விழாவும் நல்லபடியா முடிஞ்சது.

போகும் போது பக்கத்துல இருந்த பணியாளரை அழைச்சு, கல்வெட்டுல இருந்த, "presided by Honorable Minister"ங்ற வாசகத்துல, presidedக்கு முன்னாடி notனு செதுக்கிடுங்கன்னு எந்த சலனமும் இல்லாமச் சொல்லிட்டு மத்த வேலை வெட்டியப் பார்க்கப் போயிட்டாராம். அதை எடுக்கச் சொல்லி எவ்வளவோ நிர்ப்பந்தம் வந்தும், அது இன்னும் வெச்ச இடத்துல வெச்சபடியே இருக்காமுங்க!

இது ஒரு சொகுசு வாகனம். இடது பக்கம் இருக்குற இருக்கைய விரிச்சுப் போட்டா, ரெண்டு பேர் தாராளமா நித்திரை கொள்ளலாம். குளுகுளு வசதி என்ன? காணொளி என்ன? நவீன பாட்டுப் பொட்டி என்ன? பானங்க வெச்சிக் குடிக்கிறதுக்கு தாங்கு பொட்டி என்ன? கலைஞர், துணை முதல்வர், முன்னாள் முதல்வர், மலையாள நடிகர் பிரித்விராஜ் வரிசையில இது 17வது வண்டியாமுங்க.

இடது பக்கம் இருக்குற இருக்கைகளையும் பின்னாடி விரிச்சுவிட்டு ரெண்டு பேர் நித்திரை கொள்ளலாமுங்க. பின்னாடி இருக்குறது ஒரு சின்ன அறை!

அந்த சின்ன அறைக்கு இடது புறம் கழிப்பிடம்; வலதுபுறம் நின்னுட்டே குளிக்கிற மாதிரி ஒரு அமைப்பு, கூடவே ஒரு நிலைக்கண்ணாடியும் இதர ஒப்பனை வசதியும்.

விலை ரொம்ப குறைச்சல்தாங்க, ஆமாங்க பதினேழு இலட்சம் ரூபாய், லிட்டருக்கு எட்டு கிலோ மீட்டராமுங்க. திருப்பதி போலாம்ன்னு உறவினர்கிட்ட இருந்து எடுத்துட்டு வந்தோம், வெடிஞ்சு பாத்தா தெலுங்கானாவுல வாண வேடிக்கை.... அப்புறம் என்ன? வன பத்திரகாளியம்மன் கோயிலோட முடிஞ்சு போச்சு நம்ம யாத்திரை.... அவ்வ்வ்......


22 comments:

Seemachu said...

ஐயா,
சொகுசு வண்டி சூப்பரா இருக்குங்கோவ்.. இங்கே அமெரிக்காவுல இல்லாத வண்டிங்களா? ஒண்ணு வாடகைக்கு எடுத்துடுவோமா?

என்ன.. திருப்பதிதான் பக்கத்துல இருக்காது..

:)

குடுகுடுப்பை said...

Seemachu said...
ஐயா,
சொகுசு வண்டி சூப்பரா இருக்குங்கோவ்.. இங்கே அமெரிக்காவுல இல்லாத வண்டிங்களா? ஒண்ணு வாடகைக்கு எடுத்துடுவோமா?

என்ன.. திருப்பதிதான் பக்கத்துல இருக்காது..

:)//

ஒரு இந்தியக்கடைல லட்டு மட்டும் வாங்குனா போதுமே அண்ணனுக்கு, திருப்பதி எதுக்கு:)

தாமோதர் சந்துரு said...

அண்ணா வண்டி சூப்பருங்கண்ணா

அரசூரான் said...

சார்லட்... வட கரோலினா... பழமைக்கு ஒரு லிங்கன் வித் டக்ஸிடோ ஓட்டுனர் பார்சல்.... வண்டி வெள்ளிக்கிழமை வீட்டுல இருக்கும்... ஒரு எட்டு பிட்ஸ்பர்க் போயி பகவான பார்த்துட்டு வந்திடுங்க.

Sangkavi said...

தோழரே சொகுசு வண்டி கும்முன்னு இருக்குது...

நாயுடுவைப் பற்றியான தகவல்கள் புதிது...

Anonymous said...

மொண்ணையாகாத ப்ளேடு ஜி.டி.நாயுடுவோட கண்டுபிடிப்புகள்ல முக்கியமான ஒண்ணு. அப்பா அடிக்கடி சொல்வாரு

Anonymous said...

முதல் தகவல் வியப்பையும் அவர் தைரியத்தையும் காட்டுகிறது...அடுத்தது என்னத்த சொல்ல......

அரசூரான் said...

நான் கோவையில் பணியாற்றிய போது ஜி.டி.நாயிடு நிறுவன பேருந்துகளில் பயணசீட்டு கொடுக்கும் முறையை பார்த்து வியந்தேன். சிங்கப்பூரில் அங்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டை பார்த்து 2000-ல் நம் கோவை விஞ்ஞானியை பற்றி பதிவிட்டேன்... ஜி.டி.த கிரேட்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜி.டி பத்திய தகவல்களுக்கு நன்றி..

ஈரோடு கதிர் said...

வியப்பு!

வானம்பாடிகள் said...

நாயுடு அய்யா பற்றி பல வியத்தகு தகவல்கள் உண்டு. இவை இரண்டும் சாதாரணம்.இஃகி

/விலை ரொம்ப குறைச்சல்தாங்க, ஆமாங்க பதினேழு இலட்சம் ரூபாய், லிட்டருக்கு எட்டு கிலோ மீட்டராமுங்க. /

யப்பே!

kannaki said...

நாயுடுவின் தைரியமே தைரியம்.

ஆரூரன் விசுவநாதன் said...

நிறைய தகவல்கள்..அனைத்தும் அருமை

நிகழ்காலத்தில்... said...

//இடது பக்கம் இருக்குற இருக்கைய விரிச்சுப் போட்டா, ரெண்டு பேர் தாராளமா நித்திரை கொள்ளலாம். குளுகுளு வசதி என்ன? காணொளி என்ன? நவீன பாட்டுப் பொட்டி என்ன? பானங்க வெச்சிக் குடிக்கிறதுக்கு தாங்கு பொட்டி என்ன?//

கற்பனைக் குதிரய கட்டி வைக்க வேண்டியதாப்போச்சுங்க பங்காளி...:))))))

க.பாலாசி said...

கோ.து.நாயுடப்பத்தின தகவல்கள் சுவாரசியமா இருந்துச்சு.

பழமைபேசி said...

@@Seemachu

அண்ணே, விடுப்பு வரட்டும்; போலாமுங்க!

@@குடுகுடுப்பை

இஃகி!

@@தாமோதர் சந்துரு

நன்றிங்க!

@@அரசூரான்

நன்றிங்க இராசா!

@@Sangkavi

ண்ணா, நல்லா இருக்கீங்களா?

@@சின்ன அம்மிணி

ஆமாங்க

@@தமிழரசி

இஃகி!

@@அரசூரான்

அதான!

@@முத்துலெட்சுமி/muthuletchumi

நன்றிங்க

@@ஈரோடு கதிர்

நட்சத்திரமே வருக!

@@வானம்பாடிகள்

இஃகி!

@@kannaki

ஆமாங்க!

@@ஆரூரன் விசுவநாதன்

வணக்கம்ணே!

@@நிகழ்காலத்தில்...

இஃகி!

@@க.பாலாசி

படங்களை ஊர்ல புடிச்சம்ல! இஃகி!!

ராஜ நடராஜன் said...

கோபால் பாக் அதிசயங்கள் நிறைய இருந்தாலும் உங்க ஊருக்கு பஸ் டிக்கட் எச்சி படாம ஒரு கிர்ர்ன்னு சுத்தி எடுப்பாரே நடத்துனர் அதனைக் கண்டு களித்தவர்களே ஏராளம்.

ராஜ நடராஜன் said...

//ஒரு இந்தியக்கடைல லட்டு மட்டும் வாங்குனா போதுமே அண்ணனுக்கு, திருப்பதி எதுக்கு:)//

இது லட்டு:)

கயல் said...

:-)

வில்லன் said...

/போகும் போது பக்கத்துல இருந்த பணியாளரை அழைச்சு, கல்வெட்டுல இருந்த, "presided by Honorable Minister"ங்ற வாசகத்துல, presidedக்கு முன்னாடி notனு செதுக்கிடுங்கன்னு எந்த சலனமும் இல்லாமச் சொல்லிட்டு மத்த வேலை வெட்டியப் பார்க்கப் போயிட்டாராம்.//

அவன் ஆம்பளை பா????? நம்மன்ன தலை நசரேயன் பாணில சொல்லனும்னா சொம்படிசுட்டு அல்ஞ்சிருப்போம் அந்த மினிஸ்டருக்கு...........

வில்லன் said...

//கலைஞர், துணை முதல்வர், முன்னாள் முதல்வர், மலையாள நடிகர் பிரித்விராஜ் வரிசையில இது 17வது வண்டியாமுங்க.//

அப்ப நீங்க அந்த வரிசைல 18வது ஆளா சேந்துடிங்கன்னு சொல்லுங்க.... வாழ்த்துக்கள் நக்கீரர்!!!!!!!!!!!!!!!!!!!!

ILA(@)இளா said...

//ஒண்ணு வாடகைக்கு எடுத்துடுவோமா//
எடுத்துக்குட்டு அப்படியே நம்ம வீட்டு பக்கமா வாங்க. ஓசியில் PA திருப்பதிக்கு போயிட்டு வந்துரலாம்.