1/24/2010

தூய்மனம்

புது இடம் என்றால் நித்திரை கொள்வதென்பது சிரமமான காரியம்தான். கூடவே, முகமறியாத பல உறவுகளோடு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுமான மகிழ்ச்சியானது நெஞ்சமெல்லாம் ஆக்கிரமித்துத் துள்ளாட்டம் போடுகையில் நித்திரை கொளவது இயலுமா?

இடது புறமும் வலது புறமுமாக மாறி மாறி ஒருக்களித்துப் படுக்கிறான். கண்ணைப் போர்வையால் மூடி முயற்சிக்கிறான். ஆனாலும் மனம் அடங்கி ஒடுங்கியாக வேண்டுமே? இப்படியாக அவனுக்கும், குதூகலத்தில் துள்ளாட்டம் ஆடிக்கொண்டிருந்த மனதுக்குமான போராட்டம் வெகுநேரம் நீடித்துக் கொண்டு இருந்தது.

ஒவ்வொரு யாமமும் மூன்று மணி நேரம் கொண்டது. முதலிரண்டு யாமங்களுக்குப் பின் வருவது அர்த்த யாமம்; நள்ளிரவு பனிரெண்டு முதல் மூன்று மணி வரையிலானது. இயல்பாகவே, காலை மூன்று மணிக்கும் ஐந்து மணிக்குமான இடைவெளியில், குறிப்பாக நான்கு மணி வாக்கில் எவரும் கண் அசந்து விடுவர். திருடர்கள் கன்னக்கோல் வைப்பதற்கான நேரமது.

எனவேதான் அர்த்த யாமத்துக்குப் பின் வருவதைத் திருட்டு யாமம் என வேடிக்கையாகக் குறிப்பிடுவர். அந்தத் திருட்டு யாமத்தில், இவனது மனமும் அடங்கி நித்திரைக்குள் அவனறியாது ஆழ்ந்து விட்டான்.

அந்த நித்திரையானது திருட்டு யாமம் முடிவதற்குள்ளாகவே கலைந்தும் விட்டது. மீண்டும் படுத்திருந்தவாறே ”இது கணனி யுகமாயிற்றே? முந்தைய நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் உலகறிந்திருக்குமே?? ” என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான்.

படுக்கை அறைக்கும் வெளியே நடக்கும், பேச்சுச் சத்தத்தைக் கேட்டு எழுந்து வெளியே சென்றான். நன்றாகக் கிழக்கு வெளுத்து இருந்தது. வீட்டுக் குழந்தையும் கண் விழித்து இருந்தாள். அவள் அவளது தமிழ்ப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், குழந்தையின் அருகே சென்று தரையில் அமர்ந்து கொண்டான் இவன்.

“எங்க சொல்லுங்க பார்க்கலாம், அது என்னன்னு?”

குழந்தை வெகு அனாயசமாகப் பதிலுரைத்து விட்டு, புத்தகத்தில் இருந்த மொத்தப் பாடத்தையும் அக்கு வேறு, ஆணி வேறாக பிய்த்தெறித்தாள்.

“இவ்ளோ நல்லாப் படிக்கிறீங்க, அப்புறம் ஏன் இங்கிலீசுலயே பேசுறீங்க?”

“ம்ம், இங்க எல்லாரும் அப்படித்தான் பேசுறாங்க! நான் மட்டும் எப்படி?”

“உங்க அப்பா உனக்கு தமிழ்ல பேசக் கத்துக் கொடுக்கலையா?”

“க்கும், அப்பா எங்க இருக்காரு? சண்டே மட்டுந்தான் வீட்ல இருக்காரு! மத்த நாள் எல்லாம் லேட்டா, லேட்டாதான் வருவாரு!”

பிள்ளை சமர்த்தாகப் பேசிக் கொண்டு இருப்பதை, வீட்டு முன்னறையில் இருந்த அவளது பாட்டியும், சமையலறையில் இருந்த தாயும் பெருமிதத்தோடு கவனித்தபடி இருந்தனர்.

“ஓ அப்படியா? அப்ப பாடமெல்லாம் யாரு சொல்லிக் கொடுப்பாங்க??”

“சம்டைம் அம்மா சொல்லிக் கொடுப்பாங்க, அப்பறம் நானே படிச்சுக்குவேன்!”

“எவ்ளோ நேரம் படிப்பீங்க?”

“கொஞ்ச நேரந்தான், அப்பறம் சைக்கிள் ஓட்ட வெளையாடப் போய்டுவேன்!”

“அப்படியா? யாரு கூட??”

“எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருக்காங்க!”

“உங்ககூடப் படிக்கிறாங்களா அவங்க?”

“இல்ல; எனக்கு சிக்சு இயர்சு ஆச்சு! அந்த அக்காவுக்கு டென் இயர்சு!!”

“ஓ, உங்களைவிடப் பெரியவங்களா?”

“ஆமா”

பின்னால் வருத்தப்படப் போவதைத் தெரிந்திருக்காத இவன், உரையாடலைத் தொடரும் பொருட்டு அந்தக் கேள்வியையும் கேட்டு வைத்தான்.

”அவங்க அப்பா என்ன செய்யறாங்க?”

குழந்தையின் முகத்தில் சட்டென சிறு வாட்டம் படரவும், கேட்ட கேள்விக்கு அவள் மறுமொழியவும் சரியாக இருந்தது.

“அவங்களுக்கு அப்பா இல்ல!”

குழந்தையின் முகத்தின் சலனத்தையும் அவள் உரைத்த பதிலையும் உள்வாங்கியதுதான் தாமதம், அதிர்வலைகள் உள்ளத்தில் பல ரிக்டர்களாகப் பதிந்தது. எனினும் குழந்தையிடம் சொன்னான்,

“sorryடா கண்ணு!”

“பரவாயில்ல! நான் அந்தக்காகிட்ட அந்தக்காவுக்கு அப்பா இல்லங்கிறதையே காமிச்சுக்க மாட்டேன்!!”

இந்த பதிலைக் கேட்டு மேலும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி, பேசுவதறியாது அமர்ந்திருந்தான் அவன். பின்னர் அமர்ந்தபடியே பின்நகர்ந்து அங்கிருந்த இருக்கையை கைப்பிடித்து எழுந்து, அவ்விருக்கையிலேயே தஞ்சம் புகுந்து கொண்டான்.

குழந்தை, அவனுள் இயல்புத்தன்மை இல்லாததை உணர்கிறாள். பின்னர் அவளும் சடக்கென எழுந்து, வெளியே சென்று அவளது மிதி வண்டியை உருட்ட ஆரம்பித்தாள்.

ஓரிரு நிமிடங்கள் கழித்து, குளியலறைக்குள் குளிக்கச் சென்று, முணுமுணுக்க ஆரம்பித்தான் அவன்; குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா? அதைத் தெரிந்து நடப்பது நம்கடமையல்லவா? பிஞ்சை நஞ்சாக்குவது நாமல்லவா?

20 comments:

sathishsangkavi.blogspot.com said...

//“பரவாயில்ல! நான் அந்தக்காகிட்ட அந்தக்காவுக்கு அப்பா இல்லங்கிறதையே காமிச்சுக்க மாட்டேன்!!”//

குழந்தையும் தெய்வமும் ஓன்னு தான்... இந்த மனசு யாருக்கு வரும்....

கண்ணகி said...

குழந்தைகள் நம்மைவிட நுட்பமானவர்கள். நாசுக்குத்தெரிந்தவர்கள்.

ஈரோடு கதிர் said...

//“அவங்களுக்கு அப்பா இல்ல!”//

இந்த வரியைப் படிக்கும் போது கலங்கிப் போனேன்..

சென்ற ஆண்டு இதே நாளன்று (25.1.2009) மாலைதான் அவர் விபத்தில் இறந்து போனார்.

தினமும் காலையில் அந்த குழந்தைகளைப் பார்ப்பேன். இன்று அவர்கள் வீடு நிசப்தமாய் கிடந்தது.
அந்த நிசப்தம் மனதை கனக்க வைத்தது.

ஈரோடு கதிர் said...

//சண்டே மட்டுந்தான் வீட்ல இருக்காரு! மத்த நாள் எல்லாம் லேட்டா, லேட்டாதான் வருவாரு!//

’நங்’னு தலையில குட்டுன மாதிரி இருக்குது...

தோப்புக் கரணம் போட்டுக்கறேன்

நன்றிங்க மாப்பு

Mahesh said...

ஈரோடு அனுபவமா? கலங்க வெச்சுட்டீங்க...

கோடவே கதிரண்ணனுக்கு ஒரு குட்டும்.... ம்ம்... நடக்கட்டும்...

ஆரூரன் விசுவநாதன் said...

இந்தக்கால குழந்தைகளின் உளப்பாங்கு வியக்க வைக்கிறது..... முதிர் அறிவும், பேச்சும், ,,அப்பப்பா.....

Unknown said...

வாழ்வின் சந்தடிகளோடு இயைந்து இயைந்து வாழ்ந்து இயல்பான வாழ்வையே மறந்து விட்டோம்.

அட அப்படியா? பாவம் அந்தக்கா. நீ பாரேன் அவர்களோடு எப்படி பழகணும் என்று தெரிந்து பழகுகிறாய். நீ நல்ல பெண் அம்மா. என்று இயல்பாய் சொல்லலாம்.

குற்ற உணர்ச்சி! ?

தாராபுரத்தான் said...

பிஞ்சை நஞ்சாக்குவது நாமல்லவா?

vasu balaji said...

இவங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறத விட நாம படிச்சிகிட்டா வாழ்க்கை நல்லாருக்கும்.

க.பாலாசி said...

//“பரவாயில்ல! நான் அந்தக்காகிட்ட அந்தக்காவுக்கு அப்பா இல்லங்கிறதையே காமிச்சுக்க மாட்டேன்!!”//

க்ரேட்... இள முதிர்ச்சி...

அருமையான இடுகை....

//ஈரோடு கதிர் said...
’நங்’னு தலையில குட்டுன மாதிரி இருக்குது...
தோப்புக் கரணம் போட்டுக்கறேன்//

அது சரி...

*இயற்கை ராஜி* said...

ஈரோடு கதிர் said...
//சண்டே மட்டுந்தான் வீட்ல இருக்காரு! மத்த நாள் எல்லாம் லேட்டா, லேட்டாதான் வருவாரு!//

’நங்’னு தலையில குட்டுன மாதிரி இருக்குது...

தோப்புக் கரணம் போட்டுக்கறேன்

//



தோப்புக்கரணம் போட்டு பிரயோசனம் இல்லங்னோவ்... அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோணும்

*இயற்கை ராஜி* said...

ம்ம்.. நல்ல குழந்தை.. நல்ல இடுகை

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அண்ணே, அருமையான இடுகை. அழகா சொல்லியிருக்கீங்க. உண்மை தான் நீங்க சொல்றது.

//சென்ற ஆண்டு இதே நாளன்று (25.1.2009) மாலைதான் அவர் விபத்தில் இறந்து போனார்.

தினமும் காலையில் அந்த குழந்தைகளைப் பார்ப்பேன். இன்று அவர்கள் வீடு நிசப்தமாய் கிடந்தது.
அந்த நிசப்தம் மனதை கனக்க வைத்தது//

:(

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆஹா... அண்ணா, நீங்களும் பின்னூட்டத்த மட்டறுக்கறீங்களா? :)

Unknown said...

//ஒவ்வொரு யாமமும் மூன்று மணி நேரம் கொண்டது. முதலிரண்டு யாமங்களுக்குப் பின் வருவது அர்த்த யாமம்; நள்ளிரவு பனிரெண்டு முதல் மூன்று மணி வரையிலானது. இயல்பாகவே, காலை மூன்று மணிக்கும் ஐந்து மணிக்குமான இடைவெளியில், குறிப்பாக நான்கு மணி வாக்கில் எவரும் கண் அசந்து விடுவர். திருடர்கள் கன்னக்கோல் வைப்பதற்கான நேரமது. //

நாங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.திருட்டு யாமத்திலியும்
ஜெட்லாக் இல்லாமல் கண் அசந்து தூங்கிவிடுவோம். இருந்தாலும் நண்பா
நெகிழ வைத்து விட்டீர்.
அன்புடன்
சந்துரு

Jerry Eshananda said...

படித்தேன்,நெகிழ்ந்தேன்.

கயல் said...

சில சமயம் சின்னவர்கள் இப்படித்தான் மனதால் பெரியவர்களாகி விடுகிறார்கள்! நாம் எப்போதும் அவர்களின் செய்கையில் தினமும் ஏதாவது வாழ்க்கைப் பாடம் படிப்பவர்களாகவே! நெகிழ்வாயிருந்தது!!

நசரேயன் said...

அண்ணே நீங்க எங்கையே போய்டீங்க

சரண் said...

நெகிழ வைக்கும் இடுகைங்க..
கண்டிப்பா இப்போதெல்லாம் குழந்தைகள் கிட்ட இருந்துதான் நாம் கத்துக்க வேணும்..

ஆனாலும் குழந்தைகளிடம் வலியத் திணிக்கப்படும் ஆங்கிலம் வருத்தம் தருகிறது.. அதுவும் பெரியவங்ககிட்ட இருந்து அவங்க கத்துக்கிட்ட கெட்ட பழக்கங்களில் ஒன்றாகத்தானிருக்கும்.

பழமைபேசி said...

@@Sangkavi
@@கண்ணகி

ஆமாங்கோ!

@@ஈரோடு கதிர்

மாப்பு, அன்னாருக்கு நமது அஞ்சலிகள்! நினைவுநாள்ச் செய்தியும் நான் எதிர்பாராததே!

//@@Mahesh said...
ஈரோடு அனுபவமா? கலங்க வெச்சுட்டீங்க...
//

ஆமாங்கண்ணா, பொண்ணு என்னைக் கலங்க வெச்சாளே?

//ஆரூரன் விசுவநாதன் said...
இந்தக்கால குழந்தைகளின் உளப்பாங்கு வியக்க வைக்கிறது..... முதிர் அறிவும், பேச்சும், ,,அப்பப்பா.....
//

ஆமாம் அன்பரே!

@@சுல்தான்

மிகவும் சரிங்க ஐயா! நான் அந்த நேரத்தில், குழந்தையின் முகம் பார்த்து கலங்கிப் போய் சொல்வதறியாது இருந்தேன் என்பதே உண்மை!! இதற்கான மேலதிக இடுகை விரைவில்!!!


// தாராபுரத்தான் said...
பிஞ்சை நஞ்சாக்குவது நாமல்லவா?
//

ஆமாம்!

//வானம்பாடிகள் //

ஆமாங்க பாலாண்ணே!


//க.பாலாசி//

மாப்பு தோப்புக்கரணம் போடுறதுல உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி! இஃகி!!

//இய‌ற்கை //

அதான!

//ச.செந்தில்வேலன் said...
ஆஹா... அண்ணா, நீங்களும் பின்னூட்டத்த மட்டறுக்கறீங்களா? :)
//

கொசுக்கடிதான் காரணம்! இஃகிஃகி!!
இதுல என்ன ஒளிமறைவு?!!


@@தாமோதர் சந்துரு
@@ஜெரி ஈசானந்தா

இஃகி, நன்றிங்க... நெகிழ வெச்சது மாப்பு வீட்ல இருக்குற சின்னம்மணி!!


@@கயல்

நன்றிங்க


@@நசரேயன்

எங்கயும் போகலை, உங்களுக்கு கீழ விரிஜீனியாவுலதான் இருக்கேன்.


@@சூர்யாவின் அப்பா

மெத்தச் சரிங்க தம்பி!