மக்களே, எனக்கு சரியான இணைய வசதி இல்லாததால் பதிவுலகத்திற்கும் எனக்குமான இடைவெளி பெருகிக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஈரோடு ஆரவாரம் பற்றின இடுகைகளை வாசிக்கவில்லை.
எனினும் மாப்பு கதிர், அண்ணன் அப்துல்லா மற்றும் அமெரிக்க வாசகர் ஒருவரது அழைப்பின் வழியாக அறிந்து கொண்டேன். எனது சிற்றுரையைச் சிலாகித்தும் பாராட்டியும் சிலர் எழுதி இருக்கிறார்கள் என்றும் தெரியப்படுத்தினார்கள். எல்லாமும் ஈரோடு அன்பர்களுக்கே!
மகிழ்ச்சியாக இருந்தாலும் சிறிது வருத்தமும் இருக்கத்தான் செய்கிறது. ஆம், நிறைய நண்பர்களுடன் முழுமையாகப் பேசவில்லையோ என்கிற ஒரு உணர்வு மேலிடுவதே அது.
மேலும் நான் மற்றவர்களை படம் எடுத்துக் கொண்டேனே தவிர, நான் அவர்களுடன் இருக்கும்படியாக எடுக்கவும் தவறி விட்டேன். அந்த மகிழ்வான சூழலில், மனம் ஒருவிதமான குதூகலத்திலும் நிறைவான லயிப்பிலும் இருந்ததே காரணம்.
என்னிடம் இருந்த படங்களை எல்லாம் வலையேற்றி விட்டேன். அவற்றில் நிறைய நண்பர்கள் விடுபட்டு இருக்கிறார்கள். மன்னிக்கவும்! மேலும் பின்னூட்டங்களுக்கு மறுமொழியவும் முடியவில்லை. எனது சூழ்நிலை கருதி பொறுத்துக் கொள்வீராக!!
12/22/2009
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
அதனால என்னுங்க தம்பி ,,பரவாயில்ைலங்க,,
//ஆம், நிறைய நண்பர்களுடன் முழுமையாகப் பேசவில்லையோ என்கிற ஒரு உணர்வு மேலிடுவதே அது. //
அப்படி யாரும் வருத்தப்பட்டதாக தெரியவில்லையே. தாங்கள் கலந்துகொண்டதே எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
//என்னிடம் இருந்த படங்களை எல்லாம் வலையேற்றி விட்டேன்//
எங்கே ஐயா சென்று பார்க்க?
அன்புடன்
சிங்கை நாதன்
star of the show.
தொடரட்டும் சாதனைகள்.
பழமையண்ணா, கவலை வேண்டாம். உங்கள் பாணியில் இல்லாவிட்டாலும் ஓரளவு இடுகைகளை வெளியிட்டுள்ளோம்.
நிறைய பேச முடியாமல் போனதில் வருத்தம்தான்.. இருந்தாலும் உங்களை சந்திக்க முடிந்ததில் ரொம்ப சந்தோசம் நண்பரே..
/நான் அவர்களுடன் இருக்கும்படியாக எடுக்கவும் தவறி விட்டேன்./
ஆரூரனின் பள்ளியில் எடுத்த ஒரு புகைப்படம் அனுப்பியுள்ளேன் பழமை.:)
அண்ணே புரியுதுங்க.
உங்களின் பேச்சை அண்ணன் வானம்பாடிகள் வலைப்பூவில் கேட்டேன்.
அருமையான பேச்சு. வாழ்த்துகள்.
//
ஆம், நிறைய நண்பர்களுடன் முழுமையாகப் பேசவில்லையோ என்கிற ஒரு உணர்வு மேலிடுவதே அது.
//
ஆமாம் ஆமாம் எனக்கும் இந்த வருத்தம் இருக்கிறது:(
அடுத்த சந்திப்பில் எடுத்துட்டாப்போச்சு.........
விடுமுறையை கொண்டாடுங்கள்.. பதிவுலகை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
//SanjaiGandhi™ said...
விடுமுறையை கொண்டாடுங்கள்.. பதிவுலகை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
//
அட! சில நேரம் அறிவாவும் பேசுறியே மாப்ள!
நிறைவாக பேசுனீங்க மணீ அண்ணா.
சந்திக்கும் நாளை எண்ணி காத்துக்கொண்டு
இருக்கிறேன்.
நீங்க இங்கதான் இருந்தீங்க. எங்க ஊருக்குத்தான் போயிருக்கீங்க. எவ்வளவு அருகாமையான விசயங்கள் நடக்குதுங்க, ஆனாலும் நாம சந்திர்ச்சதே இல்லேங்கிறதுதான் வருத்தம். ம்ஜ்
ஆமா.......நீங்கள், பாலாண்ணே, கதிர்,பாலாசி, இப்படி ஒவ்வொருவரோடும் ஒரு படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால்................
சுருக்கமாகப் பேசினாலும் தெளிவாகவும் ,மிக அழகாகவும் இருந்தது உங்கள் பேச்சு.
வணக்கம் சார். இந்தியாவில் நல்லா என்ஜாய் பண்ணுரிங்க போல ..
Erode - பதிவர் சந்திப்புல கலக்கி இருக்குறீங்க. வலை எல்லாம் உங்க பேச்சுதான்...ரொம்ப சந்தோசம்.
Enjoy your stay.
-Venki
நீங்க நல்லா பேசுனதா பலர் எழுதிருக்காங்க. படங்கள் nallaa இருக்கு. யார் யாருன்னு எழுதிருக்கலாம்
தங்கள் வலைக்கு Follower ஆனேன். மீ தி 200 !
ஊருக்கு போனா என்ன நடக்கும்ன்னு எனக்கு தெரியும். இஃகிஃகி.
6 ஆண்டுகளுக்கு பின் ஊருக்கு போயும் டில்லி, ஈரோடுன்னு பல ஊர்களுக்கு போன உங்களை பாராட்டணும். கோவையிலிருந்து அவினாசி வரதுக்குள்ள தாவு தீர்ந்திடும். எப்ப இரண்டு வழி சாலை போட போறாங்களோ?
நேரம் கிடைக்கும் போது (கிடைச்சா) இடுகை போடுங்க.
Post a Comment