சர்க்யூட்அவுசு காம்பவுண்டுல ஆபீசு
ஸ்காலர்கள் ஸ்டே செய்றதுக்கு ரூமுக
கொடிசியா ஹாலுக்கு போற ரோடு
ஸ்காலர்கள் ஸ்டே செய்றதுக்கு ரூமுக
கொடிசியா ஹாலுக்கு போற ரோடு
த்ரீ மன்த்சுல ப்ரிட்ஜ் ரெடி ஆயிரும்
கெஸ்ட் ரிசீவிங் கமிட்டில அவரு மெம்பரு
நம்மாளு ஹெல்த் கமிட்டிப் பிரசிடெண்ட்
கெஸ்ட் ரிசீவிங் கமிட்டில அவரு மெம்பரு
நம்மாளு ஹெல்த் கமிட்டிப் பிரசிடெண்ட்
எல்லா காலேஜ் ஆசுடலும் ஹாலும் ப்ளாக் செய்தாச்சு
மாநாட்டு புக்ஸ்டால் கான்ட்ரேக்டுக்கு பேசணும்
பார்க்கிங் டெண்டர் பிக்சு ஆயிடிச்சி
தேர்டு டே ப்ரசென்ட்டேசன் நீ செய்யுற
ஆம், கோயம்பத்தூரில்
மாநாட்டு புக்ஸ்டால் கான்ட்ரேக்டுக்கு பேசணும்
பார்க்கிங் டெண்டர் பிக்சு ஆயிடிச்சி
தேர்டு டே ப்ரசென்ட்டேசன் நீ செய்யுற
ஆம், கோயம்பத்தூரில்
என்னைச் சுற்றிலும்
உலகத் தமிழ் செம்மொழி
மாநாடு வேலைகள்
துரித கதியில்!
உலகத் தமிழ் செம்மொழி
மாநாடு வேலைகள்
துரித கதியில்!
12 comments:
ம்கும். மக்களுக்கு புரியறா மாதிரி செந்தமிழ்ல பேசியிருப்பாங்க. ஒரு வேளை இதான் செந்தமிழோ?
இதெல்லாம் சகஜங்க... ரெட் தமிழ் யாரும் சொல்லாம இருக்காங்கன்னு சந்தோஷப்பட்டுக்கவேண்டியதுதான்...
பிரபாகர்.
டமிழ் வால்க....
சென்டமிழ் வால்க...
மாப்பு...
என்ன சிட்டி ஃபுல்லா ரவுண்ட் அடிச்சீங்களாக்கும்...
:-)))))))))
அன்பின் பழமை
ஆதங்கம் புரிகிறது - இது யதார்த்தம் - தமிழ் இப்படித்தான் இயல்பாகப் பேசப் படுகிறது. என்ன செய்வது .....
நல்வாழ்த்துகள்
யதார்த்தத்தை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.
வடமொழி கலந்துதானே தமிழ் பேசி வந்தோம். இப்போது வடமொழியை ஆங்கிலம் வென்றிருக்கிறது. காலம் மாறும். தமிழ் மீண்டும் புதுவளம் பெற்றுப் பேச்சு மொழியாக வரும்.
நாஞ்சில் பீற்றர்
நெற்றிப் பொட்டில் அறைந்த வரிகள். இதை மாற்றுவதற்குக் கூட உருப்படியாக தமிழ்மாநாட்டில் ஒரு முயற்சி எடுக்கப்படுமா என்றால் இருக்காது.
நன்றி - சொ.சங்கரபாண்டி
என்ன சொல்ல?!
தலை எழுத்து,,,வேறு என்ன செய்ய,,வேடிக்கை பாா்க்க வேண்டியது தான்,,
1956 தமிழ்நாடு என்று மொழிவாரி மாநிலமாக பிரிந்த ஆண்டு.
60 வயதுக்கும் மேலே பழுத்த பழம் போல.
செம்மொழி என்று தனியான கீரீடம் வேறு.
இதுவும் ஒரு ஆய்வுக்கட்டுரைக்கும், நூலகத்தில் தூசி படிந்து முனைவோர் பட்டம் வாங்குபவர்களுக்கும், பெருமையை பறைசாற்றிக்கொள்வதற்கும்.
தொல்லியல் சான்றுகளுக்கும், அதை காப்பதற்கு ஒரு அமைப்பு வேண்டும் என்றும் இப்போது கடிதம் எழுதி உள்ளோம்.
நடைமுறைக்கு வரும் போது நாம் நடைவண்டி பயணத்தை தொடங்கியிருப்போம். அப்புறம் நடந்து எழுந்து நிற்கும் போது?
எதார்த்தம் ஈ மொய்த்த பதார்த்தம் போல.
Post a Comment