12/17/2009

ஈரோடு மாநகரில் பதிவுலக ஆரவாரம்: நான் புறப்பட்டாச்சு, நீங்க?

தமிழ்மணம் பரப்ப,பதிவுலகக் கட்டமைப்பு எழுச்சி பெற, நமது நண்பர்கள் ஒருங்கிணைந்து நடாத்தும் பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமத்துக்கு இன்னும் தயார் ஆகவில்லையா?வாருங்கள் நேருக்கு நேர் சந்திப்போம்! நேயம் வளர்ப்போம்!! எழுச்சி கொள்வோம்!!!

இலக்கியமா? சுவாரசியமா?? தமிழின உணர்வா?? நுட்பங்கள் அறிய வேண்டுமா??அப்படியானால், உடனே, உடனே தயாராகுவீர், ஈரோடு பதிவர் சங்கமம் நிகழ்ச்சிக்கு!

தாயகம் வந்திருக்கும் இந்நேரத்தில் நிகழ இருக்கும், இந்த சிறப்பான நிகழ்ச்சியைக் கண்ணுறப் போவதில் நான் மிகுந்த ஆவலாய் உள்ளேன். நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கும் தமிழ்மணம் திரட்டிக்கும் எமது உள்ளார்ந்த நன்றிகள்.

அழைத்த உடனேயே, கலந்து கொள்ள இசைவு தெரிவித்துக் கொண்ட அண்ணன், தமிழேந்தல் புதுகை எம்.எம்.அப்துல்லா அவர்கட்கும் நன்றி! வந்து கலந்து கொள்ளப் போகும் உங்களுக்கும் நன்றி!!சக நண்பர்களைக் கண்டு ஆர்ப்பரிக்க நான் புறப்பட்டாச்சு, நீங்க?

29 comments:

butterfly Surya said...

விழாவில் சந்திப்போம்.

ஈரோடு கதிர் said...

வாங்க... வாங்க

வானம்பாடிகள் said...

சந்திப்போம் ! அப்துல்லாவும் வராங்களா! அசத்துறாங்க ஈரோட்டுக்காரங்க. வாழ்த்துகள்.

பட்டிக்காட்டான்.. said...

//.. சக நண்பர்களைக் கண்டு ஆர்ப்பரிக்க நான் புறப்பட்டாச்சு, நீங்க? ..//

இதோ கிளம்பிட்டேன்..

க.பாலாசி said...

வருக..வருகவென வரவேற்கும்

க. பாலாசி.

ஆரூரன் விசுவநாதன் said...

சீக்கிரம் வாங்க......வேளைகள் எல்லாம் நிறைய இருக்கு.....?????????

தண்டோரா ...... said...

நானும் வர்றொனூங்கோ!

பிரியமுடன் பிரபு said...

ஆகட்டும்

ஈரோடு கதிர் said...

//வேளைகள் //

ஆரூரன் அண்ணனுக்கு ஒரு சிறப்பு ஆப்பு

SanjaiGandhi™ said...

எச்சுச்மீ பாஸ்.. வந்ததும் தெரியபடுத்தனும்னு தெரியாதா? மெயில்ல போன் நம்பர் அனுப்புங்க..

ஸ்ரீ said...

சந்திப்போம் நண்பரே.

வால்பையன் said...

உங்களை காணும் ஆவலில் இருக்கிறேன்!

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

அண்ணா, நானும் கிளம்பறேன் நாளைக்கு.. நாளை மறுநாள் கோவைக்குச் சென்றடைகிறேன். சந்திப்போம் நேரில் :)

காசி - Kasi Arumugam said...

பழமை, பதிவர் சந்திப்பு சந்தோசமாகக் கழிய வாழ்த்துகள். நேரில் பார்க்கலாம்:)

cheena (சீனா) said...

அன்பின் பழமைபேசி

சந்திப்போம் சங்கமத்தில்

நல்வாழ்த்துகள் மணி

அரசூரான் said...

பழமை...

பழமை-யென்ற பெயரோடு
புறப்பட்டாச்சா ஈரோடு?

வளரட்டும் பதிவர் நேயம்
குறையட்டும் மனதில் காயம்.

சந்திப்பில்...
கருத்துப்பேச்சி அடையட்டும் எழுச்சி
காழ்ப்புணர்ச்சி அடையட்டும் வீழ்ச்சி!

தமிழ் என்றும் இருக்கட்டும்
தங்க தேரோடு!!!

ஈரோடு பதிவர் சங்கம இனிதே நடந்தேர
அரசூரானின் வாழ்த்துக்கள்

Anonymous said...

நல்லா நடக்கட்டும் சந்திப்பு.

அப்பன் said...

அசத்தலாம் ,,நானும் வாரேன்,,

லதானந்த் said...

நேர்ல சந்திப்போம். என்னைய அடையாளம் கணுடுபுடிக்கிறீங்களானு பாப்பேன்.

குடுகுடுப்பை said...

வணக்கமுங்க, செல் போன் தொலைச்சு போட்டமுஙக அதான் தொலைபேச முடியலங்கோ.

நல்லா விழா கொண்டாடிட்டு,பழனி முருகனுக்கு ஒரு மொட்டைய போட்டுட்டு வாங்க. உங்கள தலையில தொப்பி இல்லாமா பாக்கோனும்.

ஆ.ஞானசேகரன் said...

//சக நண்பர்களைக் கண்டு ஆர்ப்பரிக்க நான் புறப்பட்டாச்சு, நீங்க?//

மகிழ்ச்சி பழம,... எல்லோரையும் கேட்டதாக சொல்லவும்

ஜெரி ஈசானந்தா. said...

உங்களைப்பார்க்க அமெரிக்கா வருவதாக இருந்தேன், இப்போ நீங்க ஈரோடு வருவதால் எடுத்த டிக்கெட்ட கான்செல் செய்துட்டேன்.

முனைவர்.இரா.குணசீலன் said...

நண்பர்களோடு சேர்ந்து நானும் தங்களை வருக வருக என வரவேற்கிறேன் நண்பரே..

புதுகைத் தென்றல் said...

anaivarukum en valthukkal

Sangkavi said...

வாங்க வாங்க நாங்களும் வருவமுள்ள............

பழமைபேசி said...

Thank you all; meet you soon!!

நிகழ்காலத்தில்... said...

//ஜெரி ஈசானந்தா. said...

உங்களைப்பார்க்க அமெரிக்கா வருவதாக இருந்தேன், இப்போ நீங்க ஈரோடு வருவதால் எடுத்த டிக்கெட்ட கான்செல் செய்துட்டேன்.//

சிரிப்பை அடக்க முடியல:)))

வரவேண்டும் என எண்ணத்தை போட்டு விட்டேன்..

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

சந்திப்புக்கு வாழ்த்துகள்.. நானும் மேலும் சில நண்பர்களும் கலந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன்.. இருக்கட்டும் - பதிவிடுங்கள் படித்து கொள்கிறோம்..

naanjil said...

ஈரோடு பதிவர் சங்கமம் நிகழ்ச்சிக்கு
வாழ்த்துக்கள் !
நாஞ்சில் பீற்றர்