12/03/2009

அதிக ஓய்வு, அதிக வேதனை!

என்னே அனுபவ மொழி இது? இதன் மகத்துவத்தைப் புரியும் நாட்களும் வந்துதான் ஆகிவிட்டது இவனுக்கு! பணிச்சுமையானது உள்ளபடியே வேதனையற்ற தருணங்கள்தாம்!!

நுகர்வோரின் அழைப்புகளைத் தானியங்கு மின்பேசிகள் வாயிலாக உள்நுழைத்து, சரியான முகவருக்குத் திருப்பி விட்டு, பின் கட்டமைத்த நெறியாளு மென்பொருளின் ஊடாக நுகர்வோருக்கு உண்டான சேவையைச் செவ்வனே வழங்கும்படியான மென்பொருளைச் செயலாக்கத்தில் கொண்டு வரும் பணியில்தான் இவ்வளவு நாளும் இரவு பகல் எனப்பாராதும், கண் துஞ்சாதும் ஆழ்ந்தோம். எனவேதான் வலையுலக வாசத்தில் ஒரு தொய்வு மக்களே, ஒரு தொய்வு!

நேற்றைக்கு பின்இரவில்தான் வெள்ளோட்டமானது வெகு சிறப்பாக நடந்தேறியது. மிகவும் மகிழ்ச்சியாய், வானில் பறக்கும் இலவம்பஞ்சுத் திரளாய், இலகுவாய் இருக்கிறது மனம்.

அடுத்து? மூன்றாண்டு காலத்திற்குப் பிறகு, அன்னை மடியை நோக்கி, பிறந்த மண்ணை நோக்கி ஆவலாய் சிறகடித்துப் பறக்கிறது மனம். அப்படியொரு சூழலில்தான், மனதுக்கு இதமானவன் இடத்தில் இருந்து ஒரு அழைப்பும்! ஆம் மக்களே, ஈரோடு மாநகரில் 20ந்திகதி சந்திப்போம்!

சென்னையில் எதிர்வரும் 8ந்திக‌தி அதிகாலை ஒரு ம‌ணியில் இருந்து காலை ஆறும‌ணி வ‌ரைக்குமான‌ கால‌ இடைவெளியில் விமான நிலையத்திற்கு அன்ப‌ர்க‌ள் ஓரிருவ‌ர் வ‌ருவ‌தாக‌க் கூறி உள்ளார்க‌ள்; பின்ன‌ர் மீண்டும் 10, 11 திக‌திக‌ளில் டில்லி செல்ல‌ வேண்டி உள்ள‌து. அங்கே ஓரிரு த‌மிழ்ப் பெரிய‌வ‌ர்களைச் ச‌ந்திக்க‌ உள்ளேன்.

இப்போதைக்கு அவ்வ‌ள‌வே. வாரஈறில் மீண்டும் இடுகையின் வாயிலாகச் சந்திப்போம்!

அன்பு இருக்குமாயின், புளிய‌ம‌ர‌ இலையில் கூட‌ இருவ‌ர் உற‌ங்க‌லாம்!

24 comments:

கபீஷ் said...

அதிக ஓய்வு, அதிக வேதனை!

எப்போவாவது தானே இப்படி நடக்கும். அதுக்கேவா?

கபீஷ் said...

//அன்பு இருக்குமாயின், புளிய‌ம‌ர‌ இலையில் கூட‌ இருவ‌ர் உற‌ங்க‌லாம்!//

ஹி ஹி

கபீஷ் said...

//மூன்றாண்டு காலத்திற்குப் பிறகு, அன்னை மடியை நோக்கி, பிறந்த மண்ணை நோக்கி ஆவலாய் சிறகடித்துப் பறக்கிறது மனம்.//

ஓவர் ஃபீலிங்கு. :-)

இந்த ரெண்டுமே தமிழ் வார்த்தையாயிடுச்சி :-):-)

ஈரோடு கதிர் said...

வாங்க மாப்பு.... வாங்க

vasu balaji said...

வாங்க வாங்க பழமை!


/நுகர்வோரின் அழைப்புகளைத் தானியங்கு மின்பேசிகள் வாயிலாக உள்நுழைத்து, .... கண் துஞ்சாதும் ஆழ்ந்தோம்./

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா கண்ண கட்டுதே!

/நேற்றைக்கு பின்இரவில்தான் வெள்ளோட்டமானது வெகு சிறப்பாக நடந்தேறியது./

வாழ்த்துகள்.

மாப்பு இடுகையும் போட்டு செயல்லையும் காட்டுறாரு. பதிவர் கூடல். :))

பிரபாகர் said...

புது வேலையில் சேர்ந்திருப்பதால் உங்களை சந்திக்கும் வாய்ப்பை இழக்கிறேன் என்பது மிக வருத்தமாயிருக்கிறது. கதிர் மூலம் உங்களை செல்பேசியில் தொடர்பு கொள்கிறேன்!

உங்களின் பயணம் மிக இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

cheena (சீனா) said...

அன்பின் பழமை பேசி

வருக வருக தாயகத்திற்கு வருக

வருகை நல்வரவாகுக

20ம் திகதி - டிசம்பர்த் திங்கள் ஈரோட்டில் சந்திக்கலாம்

நல்வாழ்த்துக்ள் பழமைபேசி

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஈரோட்டில் தங்களை சந்திக்க முயல்கிறேன்.

செல்வநாயகி said...

பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துகள்.

ஈரோடு கதிர் said...

//நேற்றைக்கு பின்இரவில்தான் வெள்ளோட்டமானது வெகு சிறப்பாக நடந்தேறியது.//

ஓ.. பெரும் காரியத்தை முடிச்சிட்டுத்தான் ஊருக்க வர்றீங்களா...

வாங்க... வாங்க

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்லது பழமையண்ணே!!

இப்பொழுது தான் ஒரு ஊரிற்கு ஒரு வாரகால குறும்பயணத்தை முடித்தேன்.

மீண்டும் உடுமலைக்கு 19 முதல் ஜனவர் 2 வரை பயணம் செய்கிறேன். ஈரோட்டில் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்கிறேன்.

உங்களுக்கு நேரமிருந்தால் நம்மூரு புளியமர நிழலில் சந்திக்கலாம்.

Unknown said...

வாங்க வாங்க..

இராகவன் நைஜிரியா said...

அண்ணே பயணம் சுகமாக அமைய வாழ்த்துகள்.

Anonymous said...

பயணமும் சந்திப்புகளும் சிறக்க வாழ்த்துக்கள்

அப்பாவி முரு said...

வரும் வழியிலோ? இல்லை திரும்பும் வழியிலோ? சிங்கை இருக்கிறதா?

தாராபுரத்தான் said...

மிகவும் மகிழ்ச்சியாய்,

dondu(#11168674346665545885) said...

இந்தியாவில் இருக்கும்போது செல்பேசி ஒன்றை தயார்படுத்திக் கொண்டு அந்த எண்ணை இப்பதிவில் தரலாமே.

நேரில் பார்க்காவிட்டாலும் செல்பேசி மூலமாவது பேசுவோமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Kasi Arumugam said...

Welcome, Mani:)

ஆரூரன் விசுவநாதன் said...

வாருங்கள்.......வரவேற்கக் காத்திருக்கிறோம்......

அன்புடன்
ஆரூரன்

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் பழம

அன்புசிவம்(Anbusivam) said...

//எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!//

இது நல்லா இருக்கு

பெருசு said...

மணீ அண்ணா

நாமுளும் வர்ரோமுங்கோ.ஆனா 26ம் தேதிக்கு அப்பாலீங்கோ.

கோயந்த்தூர் பக்கம் எங்கியாச்சும் இருப்பிங்களா.

பழமைபேசி said...

Thank you All!

wow.... Peru brother is also coming.... I am so happy....
I will be at Ramnagar, Coimbatore most of the time till Jan 15th.


டோண்டு ராகவன் Sir,

Greetings! Sure sir! Here is my cell number:

9626233368

naanjil said...

தம்பி மணிவாசகம்

உங்கள் ஊர் பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள். தோழர் கு. இராமசாமி ஊரில்தான் இருக்கிறார். உங்கள் தொலைபேசி எண்ணை அவருக்குக் கொடுக்கிறேன். குடும்பாத்தாருடன் நிறைய நேரம் செலவிடுங்கள்.
அன்புடன்
அண்ணன் நாஞ்சில் பீற்றர்