8/25/2009

அமெரிக்கா: Flu உத்தேச உயிரிழப்பு எண்ணிக்கை 30000 - 90000

அமெரிக்காவில், வருகிற செப்டம்பர் மாதம் துவங்க இருக்கும் இலையுதிர் காலத்தில் Fluவானது தலையெடுத்து, சுமார் 30,000ல் இருந்து 90,000 வரையிலானோரின் உயிருக்கே கூட பாதிப்பு இருக்கும் என வெள்ளை மாளிகை மருத்துவக் குழு தெரிவித்து உள்ளது. இருபது இலட்சம் பேர் வரையிலும் மருத்துவமனைக்கு வரக்கூடுமெனவும் உத்தேசித்து இருக்கிறார்கள்.

இதற்கு முன்னர் பெருந்தொகையான அளவில், 1957ல் 70000 பேரும், 1968ல் 34000 பேரும் இந்த வகையான நோயால் உயிரிழப்புக்கு ஆளானார்கள் என்றும் தெரிகிறது. மக்கள் அனைவரும் முன்னெச்செரிக்கையாக இருந்திட அறிவுறுத்தப் பட்டு இருக்கிறார்கள்.

================================================

கட்டுரைகள், செய்திகள், கதைகள் என்பன பல்வேறு கருத்துகளைத் தாங்கி வரும். பிரபலங்கள் அவற்றை நன்றாக எழுதி இருப்பார்கள். ஆனாலும், அவற்றை பகுத்தறிந்து நுகர்வது வாசகனின் இன்றைய தேவை என்பதை வலியுறுத்திச் சொன்ன கதை இது.

அறிவியல் மாணவன் இட்ட கட்டளையை ஏற்றுச் செய்யும் தவளையை ஆய்வுக்கு உட்படுத்தி, நிகழ்ந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே, பிறழாமல் தவறாமல் ஆய்வுக் கட்டுரையும் எழுதி வந்தான். அதிலே அவன் குறிப்பிடுகிறான்,

“தாவு என்றேன், ஒரே பாய்ச்சலில் தாவியது பழக்கப்பட்ட அந்தத் தவளை. பிறகு முன்னங்கால்களில் இடது காலை எடுத்த பிறகு, கட்டளையிட்டேன். சிறு தாமதத்திற்குப் பிறகு எந்த இடையூறுமின்றித் தாவியது தவளை.

இப்படியாக, ஒவ்வொரு காலை எடுத்த பிறகும், தலைவன் இட்ட கட்டளைக்குச் செவி மடுத்துத் தாவியது அந்தத் தவளை. ஆனால், நான்கு கால்களை எடுத்த பிறகு அது தாவாமல் தரையில் படுத்தே கிடந்தது; ஆம், நான்கு கால்களையும் எடுத்தவுடன் அதற்கு காது கேட்கவில்லை, ஆதலால் படுத்தே கிடந்தது!”

தண்ணீர் வெந்நீரானாலும், அது நெருப்பை அவிக்கும்!

10 comments:

vasu balaji said...

வாங்க பழமை. நலமா? /ஆம், நான்கு கால்களையும் எடுத்தவுடன் அதற்கு காது கேட்கவில்லை, ஆதலால் படுத்தே கிடந்தது!”//. இதாஞ்செரி.

ஈரோடு கதிர் said...

//அவற்றை பகுத்தறிந்து நுகர்வது வாசகனின் இன்றைய தேவை//

அவசர உலகத்தில் ஆராய எங்கு நேரம் இருக்கிறது

//தண்ணீர் வெந்நீரானாலும், அது நெருப்பை அவிக்கும்//

இது அருமையொ அருமை மாப்பு

Mahesh said...

லட்சம் பேரா? :(

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

வணக்கம் பாலாண்ணே, நல்லா இருக்கேன்...நன்றி!

@@கதிர் - ஈரோடு

நன்றிங்க

@@Mahesh

காணாமல் போன அண்ணன், மீண்டு வந்ததில் மிக்க மகிழ்ச்சி!

Unknown said...

//உத்தேச உயிரிழப்பு எண்ணிக்கை 30000 - 90000"//
ஆஹா.. என்ன சார் இப்படி ஒரு குண்ட தூக்கி போடுறிங்க ?
கொஞ்சம் உஷாராதான் இருக்கணும்...பயல பால்வாடியில செப்டேம்பெர்ல விடலாமுன்னு இருந்தேன் ..இப்ப கொஞ்சம் யோசிக்கணும்..

தகவலுக்கு மிக்க நன்றி..

-வெங்கி

தென்னவன். said...

/* தண்ணீர் வெந்நீரானாலும், அது நெருப்பை அவிக்கும்! */

இது ரொம்ப நல்லா இருக்குங்க :)

அது சரி(18185106603874041862) said...

//
அமெரிக்காவில், வருகிற செப்டம்பர் மாதம் துவங்க இருக்கும் இலையுதிர் காலத்தில் Fluவானது தலையெடுத்து, சுமார் 30,000ல் இருந்து 90,000 வரையிலானோரின் உயிருக்கே கூட பாதிப்பு இருக்கும் என வெள்ளை மாளிகை மருத்துவக் குழு தெரிவித்து உள்ளது. இருபது இலட்சம் பேர் வரையிலும் மருத்துவமனைக்கு வரக்கூடுமெனவும் உத்தேசித்து இருக்கிறார்கள்.
//

பீதிய கெளப்புறதையே பிஸினஸா வச்சிருப்பாய்ங்க போலருக்கே.... :0))

ஆமா, ஏதோ வெட்டாப்புன்னு சொன்ன மாதிரி ஞாபகம்...முடிஞ்சிருச்சா??

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

Unknown said...

பதினஞ்சு வெள்ளி - மக்களே ஜாக்கிரதை.

சவின் ப்ளு - முச்சு பயற்சி முக்கியம். ஓடி ஆடி உடம்பை சிக்காக இருங்கள். சிக்காக இருந்தால் சீக்கு வராது.

Several tips said...

அருமையான பதிவு