எரியும் நெருப்பின் சூட்டால்
பிரிந்தது இரண்டறக் கலந்த
நீர்; நெருப்பைப் பொசுக்கப்
பொங்கி எழுந்தது பால்!
*************************
ஆகா, வண்ண மலரென உவகையுடன்
அதைக் கைவிட்டுப் பறித்த அக்
கணத்தில் தன்கொடுக்கால் போட்டுத்
தள்ளியது மலரில் வாசங்கொண்ட தேனீ!
****************************
ஆவாரம்பூச் செடியின் நிழலில்
பாங்காய் கெளதாரி இட்ட முட்டைகள்,
அதைப் பதமாய்ப் பருக பவ்யமாய் பாம்பு;
சீறிநின்றது குறுக்கே கீரிப்பிள்ளை!
பிரிந்தது இரண்டறக் கலந்த
நீர்; நெருப்பைப் பொசுக்கப்
பொங்கி எழுந்தது பால்!
*************************
ஆகா, வண்ண மலரென உவகையுடன்
அதைக் கைவிட்டுப் பறித்த அக்
கணத்தில் தன்கொடுக்கால் போட்டுத்
தள்ளியது மலரில் வாசங்கொண்ட தேனீ!
****************************
ஆவாரம்பூச் செடியின் நிழலில்
பாங்காய் கெளதாரி இட்ட முட்டைகள்,
அதைப் பதமாய்ப் பருக பவ்யமாய் பாம்பு;
சீறிநின்றது குறுக்கே கீரிப்பிள்ளை!
ஆனால் இந்த நாதியத்த தமிழினத்துக்கு ஒரு தலைவன் உண்டா? தோழமை உண்டா?? பணம், பணமென்று பராரிகளாய் நம்மை விற்றுப் பிழைக்கும் அரசியல் விற்பன்னர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகள் பலருக்கும் மத்தியில், சாமான்யர்கள் நம்மால் என்ன செய்துவிட முடியும் மாப்பிள்ளை கதிர் அவர்களே?
உமது அந்த இடுகை கண்டேன். சொல்லவொன்னா வேதனை உற்றேன்! என்றென்றும் நாட்டை ஆள்வது எழுத்தாளர் வர்க்கம் மட்டுமே. மேடையில் பேச வேண்டுமா? தான் எழுதிய எழுத்தைப் படித்தோ, அல்லது யாரோ எழுதியதைப் படித்த, கேட்ட விபரங்களை வைத்தோதான் ஒருவன் பேசியாக வேண்டும்.
திரைப்படமா, நாடகமா, இசையா, ஊடகமா... எந்த ஒரு ஆக்கத்தையும் எழுதித்தான் படைத்திட முடியும். இப்படியாக, சமுதாயத்தை ஆட்டிப் படைப்பது எழுத்தாளன்.
அந்த எழுத்தாளன் படைக்கிற படைப்பில் தோழமையுணர்வு இருந்திடல் வேண்டும். நடந்தது, நடப்பது என்ன? பணம்! பணம்!! வெற்றி கொள்வதில் பணம், மக்களை எப்படியாவது ஈர்த்துப் பார்க்க வேண்டும் பணம். இப்படித்தானே வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது நாட்டில்?
மக்களே, இன்றைய பதிவர்கள் நாளைய எழுத்தாளர்கள்! நீங்களும் அந்த சங்கமத்தில் கலந்து, பணம் பார்க்கத்தான் செல்லப் போகிறீர்களா? அவலத்தைச் சுட்டிக் காட்டுவோம்; பதிவர்களாகவே தொடருங்கள், தோழமையோடே இருப்போம்... மனிதநேயம் வெல்லட்டும்!
8 comments:
பழமையின் ஆதங்கம், வருத்ததில் நானும் பங்குகொள்கிறேன்!!
ஓட்டும் போட்டாச்சு..
//மக்களே, இன்றைய பதிவர்கள் நாளைய எழுத்தாளர்கள்! நீங்களும் அந்த சங்கமத்தில் கலந்து, பணம் பார்க்கத்தான் செல்லப் போகிறீர்களா? அவலத்தைச் சுட்டிக் காட்டுவோம்; பதிவர்களாகவே தொடருங்கள், தோழமையோடே இருப்போம்... மனிதநேயம் வெல்லட்டும்!//
உண்மையான் ஆதங்கம்... நானும் வழிமொழிகின்றேன்
/மனிதநேயம் வெல்லட்டும்!//
இனியாவது.
பதிவர்களாகவே தொடருங்கள், தோழமையோடே இருப்போம்... மனிதநேயம் வெல்லட்டும்!
இதுதான் உண்மை.
அன்புடன்
ஆரூரன்
மாண்டவன் மாண்டான்
கொலைகாரனின் கொடுங்கரங்களில் தமிழ் சாதிக்காக - அதை
நம் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும்
கண்கள் பனிக்க.
வேறென்ன செய்ய - கையறு நிலை
மாற்றமென்பதெப்போது?
மனித நேயம் வெல்லட்டும்.
@@தேவன் மாயம் said...
@@ஆ.ஞானசேகரன்
@@வானம்பாடிகள்
@@ஆரூரன் விசுவநாதன்
நன்றிங்க....
@@சுல்தான்
வணக்கம் ஐயா! ஆமாம்!!
//அவலத்தைச் சுட்டிக் காட்டுவோம்//
தொடர்ந்து... தொடர்ந்து
நன்றிங்க மாப்ள
Post a Comment