என்ன? இடுகையே எழுதிட்டு இருந்தா, மண்டையில இருக்குற தொப்பியக் கழத்தி முன்னாடி வெச்சிட்டு தெருவுல உட்காரணும். அவங்ககூட மாரடிச்சா கொஞ்சமாப் பணங்கிடைக்கும்; இதையெல்லாம் நெனச்சிட்டே அறைக்கு வந்தா, நம்ம நாஞ்சில் பீற்றர் ஐயாவுங்க மின்னஞ்சல்...
Dear Thampi Manivasagam:
PaNam pathum seiyum. What are the TEN elements/events? Are there any references in our Tamil Illakkiyam? Please write a blog about paNam.
Regards
Peter Yeronimuse.
அண்ணே, ஒரு குடியானவன் தன்னோட மகளுக்கு ரொம்ப நாட்களா வரன் தேடிட்டு ஒரு வித சலிப்போட இருந்தானாம். அந்த நேரத்துல அந்த குடியானவனுக்கு வேண்டிய கெழுமிய நண்பன் ஒருத்தன் எதிர்ப்படவே, இவன் தன்னோட புலம்பலை எடுத்து விட்டிருக்கான்.
ஏன் உன்னோட மகளுக்கு, திருமணம் தள்ளிப் போய்கிட்டே இருக்குதுன்னு கேட்கவும், எங்கடா பத்தும் இருக்குற மாதிரி வரன் கிடைக்கவே மாட்டேங்குதேன்னு வருத்தப்பட்டான். அடப் போடாப் போடா, பணம் இருந்தாப் போதாதா? பணம் பத்தும் செய்யும்டா, அதான் அந்தப் பையனோட குடியில போதுமானதுக்கும் அதிகமாவே சொத்து இருக்கே, அப்புறம் என்னன்னு கேட்டானாம்.
ஆமாங்க, அதென்ன அந்த பத்து? நம்ம தொல்காப்பியர், மெய்ப்பாட்டியல் வரிசையில சொல்றாரு:
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோ
டுருவு நிறுத்த காமவாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே!
நல்பிறப்பு, பண்பாடு, ஆள்வினையுடைமை, வயது, அழகு, காமக் கிளர்ச்சி, மேன்மை, அருளுடைமை, உள்ளக் குறிப்பறிதல் மற்றும் தெய்வப் பொலிவு, இதாங்க அந்தப் பத்தும்.
நிச்சயமா, பணத்தால இந்த பத்தும் கிடைச்சிடாது. ஆனாலும் பணத்துக்குன்னு ஒரு வலிமை இருக்கத்தான செய்யுது? என்ன செய்ய??
இன்னைக்குத்தான் வெள்ளைச் சாமிகளோடவும், வெள்ளை அம்மாக்களோடவும் பொழுது முசுவாப் போச்சுதுங்களே?! அப்ப, Jeff Schreckன்னு ஒருத்தரோட மதியச் சாப்பாடு. அவங்கேட்டான், ‘பழமை, ஒருத்தனுக்கு வயசாயிடிச்சா, இல்லையான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது?’ன்னு கேட்டான்.
நான் சொன்னேன், ‘அய்ய, அதுக்கென்ன? ஆளைப் பார்த்தா தெரிஞ்சிடப் போகுது!’ன்னேன். அதுக்கு அவன்,
‘அது அப்படியில்லை. ஒருத்தன் முப்பது வயசுலயும் வயசாகிப் போலாம். அதே போல 90 வயசாகியும், வயசாகாம இருக்கலாம்’ன்னான். அதெப்பட்றான்னேன் நானு!
‘ஆமா பழமை, ஒருத்தன் எப்ப கடந்த காலத்தை நினைச்சு பெருமை அடிச்சுட்டு, தற்கால இளைஞர்களை குறை சொல்ல ஆரம்பிக்கறானோ, அப்ப அவனுக்கு முதுமை தட்டிடுச்சுன்னு நாம ஒரு கணக்குக்கு வந்திடலாம்’ன்னான். இஃகிஃகி!
கூடவே நம்ம நண்பர் நந்து சொன்ன, ஒரு நல்ல விபரத்தை உங்ககிட்ட பகிர்ந்துகிடலாம்ன்னு... ஆமாங்க!
”பிச்சைக்காரர்களுக்கு ஊட்ட மாட்டேன், ஏனென்றால் அவர்கள் பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொள்வார்கள். ஆனால், வீதிகளில் பசியோடு திரியும் இந்த மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ஊட்ட யார் இருக்கிறார்கள்?”
இப்படித் தன்னைத் தானே கேள்வி கேட்டுட்டு, ஐந்து நட்சத்திர விடுதியில பார்த்துட்டிருந்த நல்ல வேலையையும் விட்டுட்டு, முழு நேரப் பணியா, மதுரை வீதிகளில் இருக்கும் 400 மனவளர்ச்சி குன்றிய மக்களுக்கு தன் கையால, 365 நாளும், மூன்று வேளைகளிலும் ஊட்டிக் கொண்டு இருக்கும் கிருட்டிணன் மனிதர் அல்ல; மகான்!
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கமானது, இது போன்ற மனிதநேய மறவர்களை அழைத்து சிறப்புச் செய்யுமா? செய்ய வேண்டும்!
பசி வந்தாப் பத்தும் பறந்து போகும். அந்த பத்து?
12 comments:
//அதென்ன அந்த பத்து? நம்ம தொல்காப்பியர், மெய்ப்பாட்டியல் வரிசையில சொல்றாரு//
தாய்மொழியை சிறப்பாக கற்றுக்கொண்டாலே, பல துறைகளிலுல் பாண்டித்துவம் பெறலாம்.
//பிச்சைக்காரர்களுக்கு ஊட்ட மாட்டேன், ஏனென்றால் அவர்கள் பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொள்வார்கள். ஆனால், வீதிகளில் பசியோடு திரியும் இந்த மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ஊட்ட யார் இருக்கிறார்கள்?”//
என்ன சத்தியமான வார்த்தைகள். நாமாக இருந்தால் மனவளர்சி குன்றியோர் பக்கத்துல போகக்கூட பயப்படுவோம். 400 பேரையும் மூணு நேரமும் சாப்பிட வைக்கிறார் என்றால், பொருள் செலவுக்கு மேலும், அவரோட பொறுமையும், ஈடுபாடும் தலை வணங்க வைக்குது.
நல்ல செய்தியை அளித்த பழமைக்கு நன்றிகள்
நல்ல விளக்கம். நல்ல தகவல்கள். மேலதிகமாக கலியாணம்னா மொத நம்மாளுக பண்ணுற வேலை ஜாதகத்த தூக்கிக்கிட்டு பொருத்தம் பார்க்குறேன்னு போய் பத்துக்கு ஐந்து பழுதில்லை பண்ணலாம்னு பரிட்சை மார்க் மாதிரி வருவாங்கள்ள. அந்த பத்துப் பொருத்தமும் கூட இருக்கலாம். அவை தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மஹேந்திரப் பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதிப் பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் மற்றும் நாடிப் பொருத்தம். ஒரு வேளை குசும்பா பணம் கொடுத்தா ஜோசியர் பத்துப் பொருத்தமும் இருக்குன்னு சொல்லுவாரோ இருக்கிறார் போல் ஜாதகமும் எழுதுவாரோ அதைச் சொன்னாங்களோ?
//ஒருத்தன் எப்ப கடந்த காலத்தை நினைச்சு பெருமை அடிச்சுட்டு, தற்கால இளைஞர்களை குறை சொல்ல ஆரம்பிக்கறானோ, அப்ப அவனுக்கு முதுமை தட்டிடுச்சுன்னு//
சரியான வார்த்தைகள் மாப்பு
பத்தின் பட்டியல் நன்று
//கிருட்டிணன் மனிதர் அல்ல; மகான்!//
அவர் பற்றி அறிவேன். மிக அற்புதமான மனிதர் இவர்.
என்னைக்கோ ஓருநாள் வர்றேன்னு நினைக்காதீக.எல்லா நாளும்
வர்றேன்
படிக்கிறேன்
ஓடிப்போயிடுறேன்.
:))
ஆனால், வீதிகளில் பசியோடு திரியும் இந்த மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ஊட்ட யார் இருக்கிறார்கள்?”//
நல்ல தகவல் நண்பரே!!!
http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html
தங்கள் படைப்பு வந்துள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்
சூப்பரப்பு..
நாள் முச்சூடும் அந்த ஒரே அறையில உட்கார்ந்து வெள்ளையம்மாமாருக கூடவும், வெள்ளைச்சாமிகளோடவும் மாரடிச்சு மாரடிச்சு மண்டையெல்லாம் நோவுதுங்க. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, அடக் கடவுளே... ஒன்னைப் புரிய வைக்குறதுக்குள்ள பேசாம நாலு இடுகையே எழுதிடலாம் போல இருக்கு?!
என்ன? இடுகையே எழுதிட்டு இருந்தா, மண்டையில இருக்குற தொப்பியக் கழத்தி முன்னாடி வெச்சிட்டு தெருவுல உட்காரணும். அவங்ககூட மாரடிச்சா கொஞ்சமாப் பணங்கிடைக்கும்; //
நல்லாச்சொன்னீங்க சாமி
அன்னாடம் இதுதானங்ளே நம்ம பொழப்பு
@@அப்பாவி முரு
@@வானம்பாடிகள்
@@கதிர் - ஈரோடு
@@ எம்.எம்.அப்துல்லா
@@தேவன் மாயம்
@@valaivikadan
@@SanjaiGandhi
@@பெருசு
நன்றிங்க மக்களே, ஆனா யாரும், பசி வந்தா பத்தும் பறந்தும் போகும்ன்னு சொல்லுறதுல வர்ற பத்து என்னன்னு சொல்லவே இல்லையே?
பழமை, நான் நம்ம பழமொழி இல்ல முது மொழி சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட இடங்களில் தேடுவது உண்டு... அதில் ஒரு இடம் பிரபுவோட வலைதளம்...
http://rprabhu.blogspot.com/2005/10/16-and-10.html
@@அரசூரான்
இராசாக் கண்ணூ, நெம்ப நன்றிங்க! நல்ல பதிவு அது!!
Post a Comment