8/31/2009

கனவில் கவி காளமேகம் - 16

நேற்றைக்கு இட்ட காணொளியப் பார்த்திட்டு, என்னுடைய 12 ஆண்டுகால நண்பர், வகுப்பறைத் தோழர், கனடாவில் இருக்கும் சண்டிலிப்பாய் சகோதரன் சதீசு எழுதி இருக்கிற கடிதம் பாருங்க மக்களே! சந்தடி சாக்குல jokerனு சொல்லிப் போட்டாரே? அவ்வ்வ்வ்வ்.............

இதுல வேற நான் உடம்பு போட்டுட்டன்னு சொல்லி... அடக் கடவுளே... நெசமாலுமே போட்டுட்டனா? அல்லது, அப்ப அவ்வளவு ஒல்லியா இருந்தனா?? நல்லா இருடாப்பா மகராசா....

************************************************
Hello Sir,

I was wondering how did you get this tremendous interest in Tamil and making poems, speaches and other research in Tamil. I saw you before like a joker, human, helper, friend etc .. but I did not imagine you have such potential and influence person on Tamil literacy and language. Once in a while I see your blog and read "palamoli" translations. Keep it up your work.

You have putup some weight it seems.

Thanks.
Sathis

************************************************

சரி, நாம விசயத்துக்கு வரலாம் வாங்க. இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி விமானத்துல இருந்து எறங்கி வந்தேன். பயணத்தின் போது வழக்கம் போல, ஏன் நம்ம பெரியவங்க தா, கொடு, அளி, ஈ, வீசு இப்படி பல சொற்களை ஒரே அர்த்தத்தைக் கொடுக்கிறதுக்கு வெச்சிருக்காங்கங்ற கேள்வி தோணிச்சு.

யோசனையால இருக்க இருக்கவே நித்திரை வந்திட்டுது. குறிப்பறிஞ்சு, நித்திரையில எண்ட அப்பிச்சி கவி காளமேகம் வந்திட்டாரென்ன? வந்து, ஏண்டாப்பா மண்டையிடியே? நாஞ்சொல்றன் உனக்கு விசியமண்டு, கதைக்க வெளிக்கிட்டாரென்ன?

நானுஞ் சொல்லிட்டுத்தான் போங்கோவனென்டு சொல்லைக்க, அவர் சொன்னவர், ”நாங்கள் காரண காரியமாத்தான் பிரிம்பா ஒன்டு ஒன்டுக்கும் ஒரு சொல் பாவிக்கக் கொடுத்து வெச்சம். நீங்கள்தான்டாப்பா, எல்லாத்தையும் ஒன்டாப் போட்டு குழப்பியடிச்சுப் பாவிக்கிறீங்கள் என்டு” சொன்னவர் அவர். பேந்து சொன்னார்,

”இந்த சொற்கள் அனைத்தும் இரத்தலுக்கு பாவிக்கும் சொற்கள். உயர்ந்தவன் இடத்தே இரப்பது ’ஈ’யென. ஒப்பானவன் இடத்தே இரப்பது (யாசிப்பது) ’தா’வென. வறியவன் இடத்தே யாசிப்பது ‘கொடு’வென. கொடையில் கருணையுடன் செயல்படுவது, ‘அளிப்பது’. கொடையில் கருணையற்றுச் செயல்படுவது ’வீசுதல்’”.

அவர் சொல்லைக்கே வடிவா விளங்கிட்டது, ஆனா விமானத்துல இருந்த பெட்டை கதைக்கவும் கனவு கலைஞ்சிட்டதென்ன? ஆனால்டப்பா, நாம இனி இந்த சொல்லுகளைப் பாத்து பாவிக்கணுமென்ன?? குடுங்கோவென்டெல்லாம் சொல்லப்படாதென்ன? தாங்கோ என்டு சொல்லப் பழகிக்கணும்.

அவர் சொன்ன பாட்டு இதுதான்:

தா கொடுஎனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி யாகிடன் உடைய!
அவற்றுள் யென் கிளவி இழிந்தோன் கூற்றே!
தாவென் கிளவி ஒப்போன் கூற்றே!
கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே!

சரி நான் வரட்டே, பேந்து நாளைக்கி வந்து வேற புதினம் எதன்டாலும் கதைப்பமென்ன? வாறன்ஞ் செரியே?!

25 comments:

Mahesh said...

மெத்தச் செரி !!!

//சண்டிலிப்பாய்// அதென்ன??

பழமைபேசி said...

//Mahesh said...
மெத்தச் செரி !!!

//சண்டிலிப்பாய்// அதென்ன??
//

வாங்க அண்ணே, அது ஊர்ப் பெயருங்க அண்ணே!! சண்டிலிப்பாய், கோப்பாய், மானிப்பாய், உரும்பிராய், தாவடி, தெல்லிப்பளை...அப்பிடியே போனா, மாங்குளம் வந்திரும்...

Anonymous said...

Demand பண்ணனும், Beg பண்ணக்கூடாதுன்னு சொல்றார்தானே

கதிர் - ஈரோடு said...

//like a joker//
இஃகிஃகி... மெய்யாலுமா மாப்பு?

//தா, கொடு, அளி, ஈ, வீசு//

நீங்கள் கொடுத்த மன்னிக்கவும் தந்த விளக்கம் (என்ன சரியா!!!???) அருமை மாப்பு

நிகழ்காலத்தில்... said...

கதிர் - ஈரோடு said...


//தா, கொடு, அளி, ஈ, வீசு//

நீங்கள் கொடுத்த மன்னிக்கவும் தந்த விளக்கம் (என்ன சரியா!!!???) அருமை மாப்பு\\

இல்லை கதிர், பங்காளி ’அளித்த’ விளக்கம், சந்தடி சாக்குல மாப்பிள்ளைய நீங்க கிண்டல் பண்ண உடமாட்டமில்ல :)))

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...
/அவர் சொல்லைக்கே வடிவா விளங்கிட்டது/

எங்களுக்கும் விளங்கிட்டது. அப்பச்சிக்கு சொல்லுங்கோ. இந்த மாதிரி கதைச்சாங்களெண்டால் அவங்களையும் புலியெண்டு சொல்லிப்போடுவன். நாடு கடத்துங்கோ எண்டு. இன்னொன்னும் விளங்கிட்டது. அப்பச்சிக்கு நல்ல தமிழ் கதைக்க நிறைய ஆட்கள் சேர்ந்துட்டாங்களெண்டு. பேந்து பாப்பம்.

ஆரூரன் விசுவநாதன் said...

அற்புதமான விளக்கங்கள். வேலைப்பளுவின் இடையிலும் தேடல்...... பதிவு.....பகிர்வு.....
தொடர்ந்து உங்களுக்கு வேலை தரப்போகிறேன். நிறைய சந்தேகங்கள் எனக்குண்டு. சில நேரங்களில் என் அறியாமை நினைத்து வெட்கப்படுவதுண்டு. இனி அந்த கவலையில்லை.
அன்புடன்
ஆரூரன்.

தமிழ் நாடன் said...

என்னவோ போங்க. அசராம அடிக்கறீங்க. நம்ம சிற்றறிவுக்கும் ஏறர மாதிரி நீங்க சொல்றதுதான் அதுல உச்சம்! நன்றிங்கண்ணா!

தங்கராசு நாகேந்திரன் said...

வழமை போல் பழமை(பேசி)யின் புலமை மிக மிக வளமை

க.பாலாஜி said...

//”இந்த சொற்கள் அனைத்தும் இரத்தலுக்கு பாவிக்கும் சொற்கள். உயர்ந்தவன் இடத்தே இரப்பது ’ஈ’யென. ஒப்பானவன் இடத்தே இரப்பது (யாசிப்பது) ’தா’வென. வறியவன் இடத்தே யாசிப்பது ‘கொடு’வென. கொடையில் கருணையுடன் செயல்படுவது, ‘அளிப்பது’. கொடையில் கருணையற்றுச் செயல்படுவது ’வீசுதல்’”.//

விளக்கங்கள் அனைத்தும் அருமை...

ஆமா எனக்கு நிறைய வார்த்தைகள் என்னன்னே புரியல...இது எந்த ஊரு பாசை அன்பரே....

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
Demand பண்ணனும், Beg பண்ணக்கூடாதுன்னு சொல்றார்தானே
//

பிடிச்சிட்டீங்க...ஆனா இடவலமாச் சொல்றீங்களே? இஃகி!

//கதிர் - ஈரோடு said...
//like a joker//
இஃகிஃகி... மெய்யாலுமா மாப்பு
//

என்ன மெய்யாலுமா? நீங்களும் சேந்து ஓட்ட ஆரம்பிச்சிட்டீங்களோ?? அவ்வ்வ்வ்.....

//நிகழ்காலத்தில்... said...
கதிர் - ஈரோடு said...
இல்லை கதிர், பங்காளி ’அளித்த’ விளக்கம், சந்தடி சாக்குல மாப்பிள்ளைய நீங்க கிண்டல் பண்ண உடமாட்டமில்ல :)))
//

அஃகஃகா...பின்றாங்கய்யா, பின்றாங்கய்யா....

கொடு, தா, அளி எதை வேணுமின்னாலும் பாவிக்கலாம்... ஆனா, அந்த செயலோட பண்பு மாறுபடும்...

அளித்தல்னு சொன்னதுல எனக்கு ஒரு கெளரவம்; தந்ததுன்னு சொல்லிச் சொன்னா, யதார்த்தம்; கொடுத்தல்ன்னா, அது வாங்குறவரோட தோரணை.... இஃகிஃகி!

@@வானம்பாடிகள்

ஓம் பாலா அண்ணை, பேந்து கதைக்கலாம் வாங்கோ!

//ஆரூரன் விசுவநாதன் said...
அற்புதமான விளக்கங்கள்.
//
நன்றிங்கோ!


// தமிழ் நாடன் said...
என்னவோ போங்க. அசராம அடிக்கறீங்க. நம்ம சிற்றறிவுக்கும் ஏறர மாதிரி நீங்க சொல்றதுதான் அதுல உச்சம்! நன்றிங்கண்ணா!
//

மக்கா, நாட்டுலதான் ஒரு ஒறவும் இல்லை; ஒட்டும் இல்லை... எல்லாம் பணம் பணமென்டு திரியறதாக் கேள்வி...

இங்க பாருங்கோவன், மாப்பிள்ளைக்கு மாப்பிள்ளை, அண்ணானுக்கு அண்ணன், பங்காளிக்குப் பங்காளி, தம்பிக்கு தம்பி, சகோதரத்துக்கு சகோதரம்... மகிழ்ச்சியா இருக்கு....


//தங்கராசு நாகேந்திரன் said...
வழமை போல் பழமை(பேசி)யின் புலமை மிக மிக வளமை
//

அண்ணாத்தே, புலமைன்னெல்லாம் சொல்லிக் கவுத்திப் போடாதீங்கோ... நன்றிங்கோ...வந்து போங்கோ....


// க.பாலாஜி said...
ஆமா எனக்கு நிறைய வார்த்தைகள் என்னன்னே புரியல...இது எந்த ஊரு பாசை அன்பரே....
//

முகவையாரே... எந்தா இது? செரிக்கு, இது ஒரு நாட்டுண்ட பாசை; மனசுல ஆயி? இது ஒரு வல்லிய மக்களெண்ட தமிழாணும்...

செரிக்கு, ஒரு நாடன் சம்சாரிக்கும் பாசையாணும்? ஈழம் ஈழமுண்டு ஒரு தேசம்... அறியோ? அந்த ஊர் பாசை கேட்டோ?

கதிர் - ஈரோடு said...

//நிகழ்காலத்தில்... said...
பங்காளி ’அளித்த’ விளக்கம், சந்தடி சாக்குல மாப்பிள்ளைய நீங்க கிண்டல் பண்ண உடமாட்டமில்ல//

சத்தீ.... ஓ மாப்புவோடா பங்காளியா நீங்க? அப்ப நம்புளுக்கும் மாப்புவா....

நீங்கள் வீசிய ... அட ச்சீ தப்பு தப்பு, நீங்கள் கொடுத்த ... அய்யோ மறுபடியும் தப்பு....

ம்ம்ம்ம்ம் நீங்கள் அளித்த கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்

சும்மா டமாசுக்குங்கோ

கதிர் - ஈரோடு said...

//மனசுல ஆயி? //

மாப்பு என்ன இது... ஆயி ஆயி னு அசிங்கரமா பேசிட்டு

இஃகிஃகிஃகி

எப்ப்ப்பூபூபூபூடிடீ...

ராசுக்குட்டி said...

அருமையான விளக்கங்கள் பழமை... தொடரட்டும் உங்கள் சேவை... நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கு முடியுதுங்க. நன்றி...

Thekkikattan|தெகா said...

பழம,

அருமை, நன்றி!

அடிக்கடி ஈழத் தமிழில் ஏதாவது எழுதுங்க, காதுக்குள் இசை இசைக்கிறது மாதிரியா இருக்கு :)

சூர்யா said...

அண்ணே.. புல்லரிச்சுப்போச்சுண்ணே!!

ங்கொக்கா மக்கா.. !!!
இலங்கைத்தமிழென்ன.. மலையாளமென்ன.. கொங்குத்தமிழென்ன.. இது மட்டுமில்லாம புராணத்தமிழென்ன..
எல்லாத்துலயும் இப்படி
பொளந்துகட்டறீங்களே..???

//அடிக்கடி ஈழத் தமிழில் ஏதாவது எழுதுங்க, காதுக்குள் இசை இசைக்கிறது மாதிரியா இருக்கு//

நெசமாத்தாஞ் சொல்றாரு நம்ம தெக்கிகாட்டாரு..

Venkatesan said...

//இதுல வேற நான் உடம்பு போட்டுட்டன்னு சொல்லி... அடக் கடவுளே... நெசமாலுமே போட்டுட்டனா?//

ஆமா சார் ..நீங்க கொஞ்சம் உடம்பு போட்டுடிங்க ...நாலு வருசத்துக்கு முன்ன இருந்ததுக்கு இப்போ கொஞ்சம் பூசின மாதிரி இருக்கிங்க..

மத்தபடி உங்க பேச்சு ..வழக்கம் போல சூப்பர்..

-வெங்கி

பூங்குன்றன் said...

வணக்கம்,
நல்ல பகிர்வு. உமது இடுகை படித்தவுடன் புறநானூற்றுப் பாடல் நினைவிற்கு வந்தது.
ஈயென இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று,
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று .

அது சரி said...

//
பயணத்தின் போது வழக்கம் போல, ஏன் நம்ம பெரியவங்க தா, கொடு, அளி, ஈ, வீசு இப்படி பல சொற்களை ஒரே அர்த்தத்தைக் கொடுக்கிறதுக்கு வெச்சிருக்காங்கங்ற கேள்வி தோணிச்சு..
//

ம்ம்ம்ம்...எனக்கும் தான் தோணுது...பொண்ணு ட்ரிங்க்ஸ் வேணுமான்னு கேக்குது....ரம், விஸ்கி, வைன், வோட்கா, பியர், ஜின், பிராண்டி இதுல எதை சொல்றது.....எதுக்கு இப்பிடி விதவிதமா பிரிச்சி வச்சிருக்காய்ங்க...எல்லாம் ஒரே போதை தான அப்பிடின்னு....

நானெல்லாம் வெளங்கறதுக்கா???

குடுகுடுப்பை said...

அடிச்சு ஆடுங்க. அப்படியே கொஞ்சம் உடம்பை ஏத்துங்க ரொம்ப ஒல்லியா இருக்குறீர்

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
அடிச்சு ஆடுங்க. அப்படியே கொஞ்சம் உடம்பை ஏத்துங்க ரொம்ப ஒல்லியா இருக்குறீர்

September 1, 2009 5:13 PM
//

வஞ்சப் புகழ்ச்சி அணியையும், இல்பொருள் உவமையணியையும் உதாரணத்துடன் விளக்குக :0)))

பழமைபேசி said...

// ராசுக்குட்டி said...
அருமையான விளக்கங்கள் பழமை... தொடரட்டும் உங்கள் சேவை... நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கு முடியுதுங்க. நன்றி...
//

வாங்க, வணக்கம்!

//Thekkikattan|தெகா said...
பழம,

அருமை, நன்றி!
//

வாங்க பிரபாண்ணே, அதனாலென்ன கதைச்சிட்டாப் போகுது...

//சூர்யா said...
அண்ணே.. புல்லரிச்சுப்போச்சுண்ணே!!

ங்கொக்கா மக்கா.. !!!
இலங்கைத்தமிழென்ன.. மலையாளமென்ன.. கொங்குத்தமிழென்ன.. இது மட்டுமில்லாம புராணத்தமிழென்ன..
எல்லாத்துலயும் இப்படி
பொளந்துகட்டறீங்களே..???
//

இஃகிஃகி! சூர்யா பங்காரம், பாக உண்ணாரா மீரு? இன்ட்லோ அந்த்தா எல்லா உண்ணாரு? ராவடம் அந்த்தா, மீகேகாதா பாபு?!

அய்த்தே ச்சாலா டைம் பெட்டுத்தாதி; பரல்லேது...ஆதம திருப்த்திகா உண்ணாதி, மீரு அந்த்தா சதவடம் சூடங்க சூடங்க, இங்க்கா ராயாலனி இண்ட்ரெசுடு பெருகுதானே உண்ணாதி.... அவ்னு இண்ட்லே அந்தா சேமமேகாதா?


//Venkatesan said...
ஆமா சார் ..நீங்க கொஞ்சம் உடம்பு போட்டுடிங்க ...நாலு வருசத்துக்கு முன்ன இருந்ததுக்கு இப்போ கொஞ்சம் பூசின மாதிரி இருக்கிங்க..
//

வாங்க வெங்கி, நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும்!

// பூங்குன்றன் said...
வணக்கம்,
//

வாங்க, வணக்கம். மேலதிகத்தகவலுக்கு நன்றிங்க!

//அது சரி said... //

அண்ணாச்சி தலையக் கண்டாவே, ஒரு குதூகலந்தான்!

//குடுகுடுப்பை said...
அடிச்சு ஆடுங்க. //

நன்றிங்க மாட்டுக்கார வேலரே!

//அப்படியே கொஞ்சம் உடம்பை ஏத்துங்க ரொம்ப ஒல்லியா இருக்குறீர்
//

ஏன்? ஏன்? ஏன் இப்படி???

//வஞ்சப் புகழ்ச்சி அணியையும், இல்பொருள் உவமையணியையும் உதாரணத்துடன் விளக்குக :0)))//

இது நல்லா இருக்குங்க அண்ணாச்சி!

சூர்யா said...

//இஃகிஃகி! சூர்யா பங்காரம், பாக உண்ணாரா மீரு? இன்ட்லோ அந்த்தா எல்லா உண்ணாரு? ராவடம் அந்த்தா, மீகேகாதா பாபு?!
அய்த்தே ச்சாலா டைம் பெட்டுத்தாதி; பரல்லேது...ஆதம திருப்த்திகா உண்ணாதி, மீரு அந்த்தா சதவடம் சூடங்க சூடங்க, இங்க்கா ராயாலனி இண்ட்ரெசுடு பெருகுதானே உண்ணாதி.... அவ்னு இண்ட்லே அந்தா சேமமேகாதா?//

தேனுங்க.. இப்ப என்ன சொல்லிப்போட்டேன்னு இப்படி கெட்ட கெட்ட வார்த்தையில திட்டறீங்க..?

ஓ.. இது குலுட்டி பேச்சா? எனக்கு ஒண்ணும் புரியலீங்களே.. குலுட்டி படமெல்லாம் ‘subtitle' -லோட தான் பாக்குறது.. அதனால இன்னொருக்கா நம்ம பேச்சுல சொன்னிங்கன்னா புண்ணியமா போகும் ராசா..

பழமைபேசி said...

//சூர்யா said...
தேனுங்க.. இப்ப என்ன சொல்லிப்போட்டேன்னு இப்படி கெட்ட கெட்ட வார்த்தையில திட்டறீங்க..?

ஓ.. இது குலுட்டி பேச்சா? எனக்கு ஒண்ணும் புரியலீங்களே.. குலுட்டி படமெல்லாம் ‘subtitle' -லோட தான் பாக்குறது.. அதனால இன்னொருக்கா நம்ம பேச்சுல சொன்னிங்கன்னா புண்ணியமா போகும் ராசா..
//

வாங்க மொடக்குறிச்சி மகராசா... எல்லாம் நல்ல பழமைதாங்கண்ணூ... ஊட்ல அல்லாரும் நல்லா இருக்காங்களா? நீங்க எல்லாம் குடுக்குற ஊக்கந்தான் எனைய எழுத வக்கிது...இப்படி...

சூர்யா said...

புரிஞ்சுபோச்சுங்கொவ்..

ஊட்ல எல்லாஞ் சுகந்தானுங்.. வாரிசொன்னு வந்ததுக்கப்புறம் வாழ்க்கையே அவனச்சுத்திதானுங்க ஓடுது..
இருந்தாலும் கொஞ்சூண்டு நேரங்கிடைக்கும்போதெல்லாம் நம்ம இடுகைகள விடாம படிச்சுடறேனுங்க..