8/11/2009

ஏன்டா நீ அரக்கப் பறக்க இதைச் செய்யுற?

//வானம்பாடிகள் said...

அரக்க பறக்க கிளம்புறீங்க. போய்ட்டு வந்து இதுக்கு விளக்கஞ்சொல்லுங்க! //


பாலாண்ணே, நாங்க காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு, இப்படி எந்த ஆண்டுத் தேர்வு முடிஞ்சி, பள்ளிக்கூடம் விடுப்பு விட்டாலும் சரி, பைக்கட்டுல அங்கராக்குக ரெண்டைப் போட்டுட்டு தெக்க எங்க சின்னம்மாவிக ஊருக்கு கிளம்பீருவம்ல?!

உடலப் (உடுமலை) பேட்டைக்குத் தெக்க ஏழு குளம் இருக்குதுங்க. அதனால அந்தப் பக்கத்தை ஏழு குளத்துப் பாசன பூமின்னுதேன் சொல்றதே! அதென்ன ஏழு குளம்ன்னு கேக்குறீங்களா? அதாவது, ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம், செட்டிக்குளம், தினைக்குளம், கரிசல்குளம், ஒடையகுளம்ன்னு ஏழு. அது போக அம்மாபட்டிக் குளம், மேட்டுக் குளம்ன்னு இதர குளங்கள் வேற.

நாம பிரதானமாச் சுத்துறது, எலையமுத்தூர்ப் பிரிவுக்குமு பள்ளபாளையத்துக்கும் ந்டுப்புல இருக்க்ற செங்குளத்துலயும் பெரிய குளத்துலயுமு. என்ன பெரிய வேலை? நீச்சல் அடிப்போம், தெள்ளு விளையாடுவோம், அப்பறம் குளத்தோரத்துல இருக்குற பத்தையில மாடு மேய்ப்போம்... அவ்வளவுதான்!

அப்ப, குளத்துல வாத்து மேய்க்க சனங்க வருவாங்க. கூடவே கருவேலமுள், வேலி முள்(டில்லி முள்) வெட்டுறதுக்கும் ஊர் சனங்க வருவாங்க. அப்ப அந்த அம்மணி சொல்லுச்சு அவங்க ஊட்டுப் பொன்னாங்கிட்ட, “டேய் இராசூ, அரக்கப் பறக்குறதுல கண்ணு பத்தரம்!”.

அதென்ன அரக்கப் பறக்குறது? வேலிமுள்க் கோல்களை வெட்டி, அதுல ஓரத்துல இருக்குற முள்ளுகளை நல்லா அரக்கோணும். அரக்குறதுன்னா, அரிவாளை வெச்சி, கோலோட பக்கவாட்டுல அழுத்தி உரசுறதுதான்!

இல்லாட்டி, முள்ளு கையில கால்ல ஏறீருமல்லோ? அப்படி வேக வேகமா அரக்கும் போது, சின்ன சின்னப் பிசிறுக எகுறிக் கண்ணுல விழுந்திரும்ன்னு அக்காகாரிக்கு ஒரு பயம். அதான், பொன்னானைப் பாத்துப் பதலமா அரக்கச் சொல்லுதாக்கூ!

இதுல இருந்து உங்களுக்கு என்ன தெரியுது? இப்படி அவசரமா, வேக வேகமாச் செய்யும் போது சொல்றதுதான் அரக்கப் பறக்கறதுன்னு. எங்கூர்ப் பழமையிகளைப் படிக்கறதுக்கு நெம்பப் பாடா இருக்குதா? மன்னிச்சுகோங்.. செரியா? இஃகிஃகி!

மேக்க மழை பேஞ்சா கிழக்கமின்னா வெள்ளம் வரும்!

11 comments:

vasu balaji said...

விளக்கத்துக்கு மிக்க நன்றி பழமை.
/எங்கூர்ப் பழமையிகளைப் படிக்கறதுக்கு நெம்பப் பாடா இருக்குதா? மன்னிச்சுகோங்.. செரியா? இஃகிஃகி!/
ஏனுங். பாலப்பட்டி(நாமக்கல்), ஈரோடு எல்லாம் உங்கூருல வராதுங்களா?நாமளும் அந்தூர்ல வளர்ந்தோம் கொஞ்ச வருசம். என்ன அப்போல்லாம் இப்படி பழமைன்னு ஹான்னு கவனிச்சதில்ல.

ஈரோடு கதிர் said...

மாப்பு...
அருமையான விளக்கங்க. ரம்ப சுளுவாக எல்லாத்தையும் புரிய வெக்றீங்க... ரம்ப நன்றிங்க்

நீங்கோ காத்தால கூப்டப்ப அரக்க பறக்க எந்திருச்சேனுங்க்ளா அதுனாலாதான உங் நெம்ப்ர பாக்கிலியா... அதுனாலாதானுங்க கொழப்ம்ங்க...

நீங்க் கூப்டலதுல ரம்ப சந்தோசங்க் மாப்ள...

ஆ.ஞானசேகரன் said...

அதுவும் சரிதான்

Unknown said...

//எங்கூர்ப் பழமையிகளைப் படிக்கறதுக்கு நெம்பப் பாடா இருக்குதா?//
ரொம்ப அருமையா இருக்குங்கறேன். மன்னிச்சுக்கோங்கிரியப்பா.

//ஒட்டுக்குளம்> பெரியகுளம்> செங்குளம்> செட்டிக்குளம்> தினைக்குளம்> கரிசல்குளம்> ஒடையகுளம்ன்னு ஏழு. அது போக அம்மாபட்டிக் குளம்> மேட்டுக் குளம்ன்னு இதர குளங்கள் வேற//
அதென்ன ஏழு கொளம். எஸ்ட்ரா ரெண்டு கொளம்.
ஒம்போது கொளம்ன்ட்டு போறதானே. :))

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

பாலாண்ணே நன்றி!

@@ஆ.ஞானசேகரன்

நன்றி!

@@கதிர் - ஈரோடு

நன்றிங்க மாப்பு!

//சுல்தான் said...
அதென்ன ஏழு கொளம். எஸ்ட்ரா ரெண்டு கொளம்.
ஒம்போது கொளம்ன்ட்டு போறதானே. :))//

வணக்கமுங்க ஐயா! அதுல ஒரு பிரத்தியேகமான சிறப்பு இருக்குதுங்க ஐயா!

திருமூர்த்தி அணைக்கட்டு கட்ட ஆயத்த வேலைகள் நடக்கும் போது, எங்க முப்பாட்டன் வெண்குடை சுப்பையா, இராகலபாவி, போடிபட்டி, தளி, மடத்தூர்ன்னு பல ஊர்ப் பெரியவர்களும் தங்களோட ஊர்க் குளங்களுக்கு வரும் தண்ணீர் வரத்து தடைபடும்ன்னு அறப் போராட்டம் நடத்த, அன்றைய அரசாங்கம் முதலில் அந்தத் தண்ணீருக்கு உரிய ஏழு குளங்கள்...அப்புறமாத்தான் புதுசா வர்ற அணைக்கட்டுக்குன்னு ஒரு மரபைக் கொண்டு வந்தாங்க... இஃகிஃகி!!

vanjimagal said...

நம்ம இங்கே எல்லா வேலையும் அறக்க பறக்க தானே செய்து கொண்டு உள்ளோம். நின்னு நிதானமா செஞ்சதான் நீண்ட நாள் வாழலாம்.
இதெப்படி?

Unknown said...

எல்லாம் புரிஞ்சது ..ஆனா ஒன்னு ...
தெள்ளு விளையாடுறதுன்னா என்ன சார்?
இதுக்கு தனி பதிவு போடனும்மோ ;-)


-வெங்கி

அது சரி(18185106603874041862) said...

நல்லாத்தானுங்க இருக்கு...

பழமைபேசி said...

//Pachai said...
இதெப்படி?
//

வாங்க அக்கா, வணக்கம்! நல்லாச் சொன்னீங்க!!

//Venkatesan said...
எல்லாம் புரிஞ்சது ..ஆனா ஒன்னு ...
தெள்ளு விளையாடுறதுன்னா என்ன சார்?
//

இஃகிஃகி, இடுகையிலதான் சொல்வோம்....

//அது சரி said...
நல்லாத்தானுங்க இருக்கு...
//

நன்றிங்க அண்ணாச்சி!

குறும்பன் said...

அரக்கபறக்க ஓடி வராட்டி என்ன என்று சொல்லுவதை கேட்டிருக்கிறேன். அரக்கபறக்கன்னா அவசரம்முன்னு தெரியும், ஆனா அதன் முழு பொருள் இப்போ தான் புரிந்தது.

பழமைபேசி said...

@@குறும்பன்

இஃகி, நஃன்றிங்க!